வாங்கியதக்காளியில்இருந்தஅழுகியபழங்கள்இரண்டைதூக்கிஎறியஎத்தனிக் கையில்கடைக்காரர்சொல்கிறார்.”அதஎதுக்குதூக்கிப்போடுறீங்க,இந்தாயெடது ஓரமாகடைநடையஒட்டிஇருக்குபாருங்கஅந்தத்தட்டுலபோடுங்க,யாராவது ஆடு குட்டி வளக்குறவுங்க வந்துமொத்தமாஅள்ளீட்டுப்போவாங்க” என்றார்.
கடைக்காரரின்வார்த்தைக்குக்கட்டுப்பட்டவனாக
கையிலிருந்த தக்காளிகள் இரண்டைஅவர்சுட்டிக்காட்டியக்கூடையில்போடும்போதுதான்கவனிக்கிறான். மூங்கில்நாரால்பின்னப்பட்டிருந்தஅந்தக்கூட்டையில்அழுகியதக்காளிகள், உடைந்த
தக்காளிகள் சூத்தைக் கத்திரிக்காய் என கலந்து கிடந்தது.
இப்போதெல்லாம்
இது மாதிரியான மூங்கில் கூடைகளைப்பார்க்க முடியவி ல்லை. நம் அதிர்ஷ்டத்தைப்பொறுத்து
பஜாரில் எங்காவதுஅகஸ்த்மாத்தாய் பார்த்தால்தான் உண்டு.பஜார் கடைசியில்இருக்கிறநாட்டுமருந்துக்கடையி ல் பார்க்கக்கிடைக்கிறது,அதையாராவதுவாங்குவார்களாஇல்லையாதெரியவில் லை.தூசி
அடைந்து போய் இருந்தது,கடைக்காரரிடம் கேட்டால் ”எங்க சார் இதோடஅருமையாருக்குப்புரியுதுஎன்றார்.யாராவது டீவியில வந்து இல்லை யின்னாபேப்பர்லஇந்தக்கூடைய பெழங்குனாஒடம்புக்கு
நல்லதுன்னு பேட்டி குடுத்தாஇல்லைபேப்பர்ல செய்தி ஏதாவது போட்டா விக்கிமோ என்னவோ தெரியலசார்,அப்பிடித் தான ஆகிப்போச்சி இப்ப,நம்ம கையில இருக்குற பொ ருள,இல்லைன்னா நம்ம காட்டுல
நம்ம தோட்டத்துல வெளையிற தானி யதவசிகளோட நன்மையப்பத்தி யாராவது வந்து சொன்னா வாங்குறாங்க
அது எவ்வளவு கூடுன வெலையில வித்தாலும் சரின்னு,அது மாதிரிதான் இதுவும் ஆகும் போலத்தெரியுது”
என்பார்.
ஆனால்
தெப்பம் வடக்குப்படித்துறைக்கு எதிர்த்தாற்ப்போல் இருக்கிற வெங் காயக்கடைக்காரர்விற்கிறமூங்கில்கூடைகள்அப்படியாய்இருக்கவில்லை,அவர் அப்படியான தகவல் ஒன்றையும் சொல்லவில்லை.
”நம்மகிட்டஎப்பயும்போல வித்திக்கிட்டுதான்இருக்குசார்.என்ன மாரியம்மன் கோயில்திருவிழாப்பகூடக்கொஞ்சம்போகும்.மத்ததினங்கள்ல
எப்பயும் போல ஒண்ணுரெண்டுன்னு,,,,,,,,,இதவாங்குறதுக்குன்னுஇப்பயும்ஆள்கஇருக்கத்தான்
செய்யிறாங்க சார்,இப்பயும்கம்பு,கேப்பை கேட்டு கடை கடையா ஏறி யெறங் குறஆள்க இருக்கத்தான்
செய்யிறாங்க சார்,இன்னும்ரோட்டுலஅம்பாஸிடர் கார் ஓடத்தான் செய்யிது சார்,பிரிண்டிங்
லைன்ல இன்னும் ட்ரெடில், ஸ்கி ரீன் பிரிண்டிங்க் இருக்கத்தான் செய்யிது சார்.அது போல
பழமை மாறாத சிலது இன்னும் ஓடிக்கிட்டுதான் இருக்கு சார்.என்ன இதெல்லாம் காலத்தின் தேவைக்கு
ஏத்தாப்புலமறுஉருவாயிருது.அதுபோல உணவையும் தேவைக்கு இல்லைன்னா மருந்து மாதிரின்னு சொன்னா
மட்டும்சாப்புடுற பழக்கம் வந் துரிச்சி நம்மகிட்ட.இது காலத்தோட கட்டாயமா, இல்ல திணிக்கப்பட்ட
ஒண் ணான்னு தெரியல,சார்”என்பார் வெங்காயக் கடைகாரர்/
கால்கிலோமட்டும்பழமாகவும்மிச்சம் முக்கால்கிலோவிற்கு கால் வெட்டாக போடச்சொல்லியிருந்தான்.இவன்சொல்லா
விட்டாலும்கூடவழக்கமாக அந்த வேலையை செய்து விடுவார்/காய்கறிக்கடைக்காரர்/ இன்று ஏன்
இதைச் செய்யவில்லை.
ஆளே
ஒரு மாதிரியாய் கம்மென இருந் தார் வழக்கமான கலகலப்பை கழ ட்டி கீழே வைத்துவிட்டு/
தெப்பத்தை
சுற்றியிருந்த கிழக்குச்சுவரோரமாய் அவர் கடை போட்டிருந்த போது அவரது பேச்சுக்காகவே
கடையில் ஆட்கள் கூடும்.
“மனசுல
என்ன கவல இருந்தாலும் அவரு கடைக்கிப்போயி அவரோட நாலு பேச்சுபேசீட்டோம்ன்னாபோதும்மனசுலேசாயிரும்ல,காயிவாங்
காட்டிக் கூட பரவாயில்ல,சும்மாவாவது அவரு கடைக்கி போயிட்டு வரணும்” என்பார்கள் அவரைப்பற்றி
நன்றாகத் தெரிந்தவர்களும்,அவரது கடைக்கு வாடிக்கையாக போய்வருகிறவர்களும்/
”சரிதான்வுடு,ஒவ்வொருத்தணுக்குள்லயும்ஒருதெறமஇருக்குறமாதிரிஅவனு க்குள்ள அப்படி ஒரு தெறம
,என்னதான் பேச்சு பேச்சா இருந்தாலும் காரியத் துலகண்ணா இருப்பான்ல,இல்லைண்ணா இந்த பஜார்ல
நின்னு யேவாரம் பண்ண முடியுமா?ஆளு முழுசா நிக்கையில தலைய மட்டும் தனியாகழட்டி கையில்
எடுத்துட்டுப்போயிற மாட்டாங்க. ஏயப்பா எப்படி யாப்பட்ட யெடம் அது.அங்கயும் நின்னு யேவாரம்
பாத்து ஆள்களப்பழகி சமாளிச்சி ஜெயிச்சு நிக்கிறதுன்னாசும்மாவா,?
”நல்லாவந்துக்கிட்டிருந்தான்.காலையிலயிருந்துராத்திரிஏழுமணி வரைக்கும்
யேவாரம்பண்ணுறஅவன் மேல யாரோ கண்ணு பட்ட மாதிரி அவன் பொழ ப்புல மண்ணு விழுந்துருச்சி,ஹைவேஸ்
ரைடுன்னு அங்கஇருந்தகடைகள எடுத்தப்ப இவன்
கடையும் காலியாகிருச்சி” என்பார்கள் பேச்சினூடாக/
இப்போது
மச்சினன் கடைக்கு அருகிலேயே அவரும் கடை வைத்திருந்தார். உயரமான வெடவெடத்த உடலும், ஒட்டிப்
போன கறுத்த நிறமும் கட்டம் போட்ட கைலியும் வெள்ளை பனியனும் அவருக்கும் நன்றாகவே இருந்தது.
கூடையில்தக்காளியைபோட்டு
விட்டு நிமிர்ந்த சிறிதுநேரத்தில்கூடையில் கிடந்ததக்காளியையும் கத்திரிக்காய்களையும்
ஒருவர் அள்ளிக்கொண்டு போ னார்.இவரைஎங்கேயோபார்த்ததுபோல்இருக்கிறதே,ஆகாஇவர்அவர் இல்லை, சென்றமூன்று
மாதங்களுக்கு முன்பாய் காய்கறி வாங்கிக்கொண்டிருந்த ஒரு மதிய வேளையில் தலை நிறைந்த
போதையுடன் அந்த இடத்தையே அலசிக்கொண்டிருந்தவரல்லவாஇவர்.இப்பொழுதுசாந்தசொரூபியாக,,,எப்படி
முடிகிறது இப்படியெல்லாம் இருக்க,,,,ஏயப்பா இதற்கு ஒரு தனி பயிற்சி வேண்டியதிருக்கும்
போலிருக்கிறதே?
ஆனால்
அங்கிருக்கிற கடைக்கார்களுக்கு இது பழகி விட்டது போலும். அன் றைக்குக்கூட காய்கறிக்கடைக்கார்தான்
சொன்னார்.
“சார்சும்மாநில்லுங்கநீங்கபாட்டுக்கு,இந்தா இருக்குல்ல இந்த எல்லக் கோட்ட த்தாண்டிஅவரு
வர மாட்டாரு,சும்மா ஆத்த மாட்டாஎன்னத்தையோசத்தம் போட்டுக்கிட்டு இருக்காரு பாவம்
,என்னபலபேருபேருவார,போறயெடத்துல நின்னு சலம்புறதால கெட்ட மனுசனா தெரியிறாரு, உண்மையிலே ரொம்ப நல்லவர்சார் அவரு.என்னத்தையோ ஒடம்பு வலிக்கு ஆத்தமாட்டாம வாரத் துலஒருநாஇப்பிடி,,,இன்னும்கொஞ்சநேரத்துலவீட்டுக்குப்போயிருவாரு, வீட்ல கறி வெந்துட்டு இருக்கும்.வெறும்
வயித்தோட ரொம்ப நேரம் சத்தம் போட முடியாதுல்லசார்.போன மாசம்ன்னா ஒரு நாஇப்பிடித்
தான் சத்தம் இருந்த வரு படக்குன்னு மயங்கி விழுந்துட்டாரு,என்ன செய்ய
பின்ன,பாத்துக் கிட்டும் இருக்க முடியல,மனசு கேக்கலஅங்கஇருக்குறடீக்கடைக்காரவுங்க
நாங்க எல்லா ருமா சேந்து ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு அனுப்பிச்சி வச்சோம்”.
காய்கறிக்காரர்
சொன்னஅன்றிலிருந்து மறுமுறையாக அவரைஇன்றுதான் பார்க்கிறான்.
கூடையில்கிடந்தகத்திரிக்காய்களையும்,தக்காளியையும்அவர்கொண்டு வந்தி ருந்த வயர்கூடையில்அள்ளிப்போட்டவர்இவனைநோக்கி வந்து தலை குனிந் தவராய் அருகில் நின்றார்,
இவனுக்கானால்என்னவெனக்கேட்க பயம்.ஏதாவதுஎசக்கேடாகபேசி
விட்டார் என்றால்,,,,,,,,மானம் போய்விடும், பதிலுக்குப் பேசுவது,சத்தம் போடு வது என்பதெல்லாம்
ஒரு புறம் இருந்தாலும் கூட,,,,,,, உடனடியாக எதிர் வினை செய்ய வேண்டுமே? அதற்கு பேசாமல்
இருந்து விடலாம் அல்லது காய்கறி பொறுக்குவது போல தலை குனிந்து கொண்டே இருந்து விடலாம்.
எவ்வளவு
நேரம்தான் அவரும் பக்கத்தில் நின்று தலை குனிந்து
மௌனி யாகஇருப்பார்?
”சார்அன்னிக்குதண்ணியப்போட்டுட்டு
தராதரமில்லாம பேசிட்டேன், மறுநா காய்கறிக்கடைக்காரஅண்ணன்கூடச்சொன்னாரு,நீங்கவருத்தப்பட்டதா,நல்லா
உழைக்கிற ஒடல் உழைப்பாளி ஏன் இப்பிடி தண்ணியப்போட்டுட்டு கெட்டு போறாருன்னு,,,,தவிரகெட்டபேருவேறஅதுஎதுக்குன்னு?வாஸ்தவந்தான்னு தோணுச்சி நீங்கசொன்னது,வருத்தப்பட்டதுஎல்லாமும்/ நாங்கஎன்ன செய்ய ஒடம்புவலிக்குஆத்த மாட்டாம இப்பிடி,,,,,,,,மறக்கணும்ன்னு
நெனைச்சாலும் கூடரோட்டோரமாஇருக்குறகடைவந்துகண்ணுலபட்டுருது.பின்னஎன்னசெய்ய நாங்க,,,,பொறங்ககைய நக்குனவன் நெலையா ஆகிப்போகுது எங்க கதை, என்னசெய்யச்சொல்றீங்கஎன்னையுவும்என்னயபோலானவுங்களயும?”
”இப்பிடித்தான்தண்ணியப்போட்டுட்டுரோட்டுலசலம்பிக்கிட்டுத்திரியிறம்.நீங்க
சொன்னதுக்கப்பறம் காய்கறிக்கடைக்கார அண்ணன் கூட சொல்லி வருத்தப் பட்டாரு,அன்னிக்குச்சொன்னேன்
இனிம இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு இதுவரைக்கும்அது மாதிரிரோட்டுலசலம்பலரொம்பஆசையா இருந்தா ஞாயி த்துக்கெழமவீட்டுக்குஒருகுவார்டர் வாங்கீட்டுப்போயி தண்ணி கலந்து
அடிச் சிட்டுபேசாமபடுத்துக்கிருவேன்.வீட்ல ஏங் பொண்டாட்டிய தவுர யாருக்கும் தெரியாது
இது,புள்ளைங்க பெசல்கிளாஸ்ன்னுபோயிட்டப்பெறகுகாலையில பத்துமணிக்குஅப்பால குடிச்சிட்டு பேசாம
படுத்துருவேன்,அப்பறமா புள்ளை ங்க கிளாஸ்ல இருந்து வந்தப்பெறகு அவுகசாப்புட காத்துக்கிட்டு
இருந்துட்டு அவுங்கசாப்புட்டுட்டுபோனபெறகு நானும் ஏங்பொண்டாட்டி யுமாசாப்புட்டுட் டு
தூக்கம் வராட்டிக் கூட பேசாம படுத்துருவேன்.”
”பெரியவவயசுக்குவந்துநிக்குறா,சின்னவன்எட்டாப்புக்குப்போறான்,பொண்டாட் டிக்கு தீராத யெளைப்பு இருக்கு, ஒடம்புக்கு நல்லா இருக்கும் போது பருப்பு
மில்லுக்கு வேலைக்குப் போவா, கொஞ்சம் சொனங்குன அன்னைக்கு லீவு போட்டுருவா,மில்லு மொதலாளி
கூட சத்தம் போடுவாரு அப்பப்ப,ஒழுங்கா வேலைக்கு வந்தா வா,இல்லைன்னா வீட்லயே இருந்துருன்னு.,,,அப்புறமா
நாந்தான் போயி மில்லு மொதலாளி கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சி பேசிசரிக்கட்ட வேண்டியிருக்கும்.
இத்தன ஓடிக்கிட்டிருக்கும் போது எனக்கு நித்தம் வேல கெடைக்குமா கெடைக்காதாங்குற கவல
வேற/என்ன செய்ய எங்களுக்குன்னுதெரிஞ்சஒரேமாத்துமருந்துஅந்தபாலாப்போனதண்ணிதான்,
குடிச்சிதான்ஆக வேண்டியிருக்கு, குடிக்கிறேன்.மத்தபடி மனசுல ஒண்ணும் இல்லை சார்,” என்றவாறுநகன்று
போன அவரை வெகு நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கூடையில்
தூக்கிப்போட்ட அழுகியதக்காளிகளுக்குப் பதிலாய் வேறுநல்ல பழங்கள் இரண்டை எடுத்து கையில் கொடுத்தார்
கடைக்காரர்/
11 comments:
அருமையான விவரிப்பு! வாழ்த்துக்கள்!
எளிமையான நடையில் நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கில்லர்ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அலாதியான நடையில் அருமை நண்பரே
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஒரு சிறிய அதிர்வில் தொடங்கி
கேட்போரை மகிழ்விக்கும் சங்கீதமாய்
ஒரு சிறு நிகழ்வில் தொடங்கி விரியும்
தங்கள் சொற்சித்திரம் வெகு வெகு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
நன்றி வாக்களிப்பிற்கு சார்
அழகான விவரிப்பு
வணக்கம் வேல்முருகன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment