30 Jun 2014

டீத்தரட்டுமா கொஞ்சமாக,,,,,



டீத்தரட்டுமாகொஞ்சமாகஎனக்கேட்டமனைவியிடம்கொஞ்சமெல்லாம்வேண் டாம்சற்றுநிறையவேகொடு,குடித்துக்கொள்கிறேன்,கூடவேகொஞ்சம்சந்தோ ஷமும்பட்டுக்கொள்கிறேன்.

எங்கேஇப்பொழுதுசற்றைக்கு முன்னாய் வெளியில் போனபோது குடித்த ஆத்த மாட்டாத டீஒன்றும்சரியாய் தெரியவில்லை.திருப்தியும் இல்லை அதில் என்கி றான் இவன்/

மாலை அலுவலகத்திலிருந்து வரும் போதெல்லாம் ஒன்றும் பெரிதாய் எடுத்த முடிவில்லை அது.இரு சக்கர வாகனமும் இவனும்,இவனும் இரு சக்கர வாக னமுமாய்அலுவலகம்வீற்றிருக்கிற தொலைவிலிருந்து பள்ளம், மேடு, குண்டு குழி நொடி என தாண்டி வந்த போது திசை தாண்டி வீசிய மென் காற்று முகத் தில் பட்டு அறைய அவன் நின்ற இடம்பாண்டியனின்டீக்கடையாய்இருக்கிறது.

ஆம்அப்படித்தான்ஆகிப் போகிறது, ஒன்றல்ல இரண்டல்ல மீண்டும் மீண்டு மானதடவைகளில்ஏற்படுகிற இனிய விபத்தாய்/ காலையிலிருந்து மாலை வரை கம்ப்யூட்டரே கதி எனக்கிடந்து கை நடுங்க மனம் அவசரப்பட்டு வேலை செய்து வரும் போது ஆ,,,,வென ஆகிப் போகிறதுதான். எதையாவது தின்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல்தோன்றி விட தண்ணீருக்குப் பதிலாகடீயும்ஏதாவதானதின்பண்டத்தின்இடத்தில்வடையும்,அல்லதுஎண்ணெ ய் நிறைந்த பஜ்ஜியுமாய் ஆக்ரமித்துக்கொள்ள ஆக்ரமித்த மனதின் ஆசையை அள்ளி முடிய மனமில்லாமல் ஒரு கடி,ஒரு குடி என பஜ்ஜி ஒரு கையில் டீ க்கிளாஸ் மறு கையில் என்கிற ஸ்டைலில் குடித்துவிட்டு அவ்விடம் விட்டு நகரும் பொழுது நிறைவு கொள்கிறது மனது.அல்லது நிறைவு கொண்டதாய் கணக்கிட்டுக்கொள்கிறது.கூடவே வீட்டிற்கு ஒரு மினி பார்சல் வாங்கிக் கொண்டால் இன்னும் கொஞ்சம் விரிவாய் நிறைவடைந்து தெரிவதாக. பார்சல் வாங்குகிற இம்முறை நிறைவு கொள்வது கடைக்காரரின் மன தாய் இருக்கும்.

அப்படித்தான் காய்ந்து போன மனதை ஈரமாக்கிக் கொண்டு ஐந்து ஐந்துமாய் பத்துகிலோமீட்டர் தாண்டி வந்த போது உருபட்டஇடம் இவனது வீடு உருக் கொண்ட ஏரியாவாய் இருக்கிறது, ஆஸ்பத்திரி முக்கு, அதுதாண்டி தொந்தி வைத்தவரின் சேவுக்கடை,பேக்கரி முருகேச ன்னின்வீடுடெய்லர் கடை,,,,,இத் தியாதி,இத்தியாதிஎல்லாம்தாண்டிவீடுதிரும்பஎத்தனிக்கையில்தென்படுகிற சலூனில்தான்முடிவெட்டிக்கொள்வது இவனது வழக்கம், சலூனையும் டெய் லரையும் அடிக்கடி மாற்றக்கூடாது என்பார் மருது.

அன்றும்அதுபோலநேரும் என நினைக்கவில்லை இவன்.முடிவெட்டி விட்டு வீட்டுக்கு போகலாம் என்றிருந்த எண்ணத்திற்கு தூபம் போட்டது போல் கடையில் ஆளற்று இருந்தது ரொம்பவுமே சௌகரியமாக இருந்தது.சரி வீட் டிற்குப்போய் ஒரு தேத் தண்ணியை போட்டு விட்டு வரலாம் சாவாதன மாய் என நினைத்து வீட்டுப்போய் வந்தது வம்பாகித் தான் போனது இப்போது, வீட் டில் போய் கைலி கட்டி,டீசர்ட் மாறி வரும் இடைப்பட்ட நேரத்தில் கடைக் காரர் காணக்கிடைக்காமல் போய் விட்டார்.கேப்பில் கெடாய் வெட்டுவது என்பது இதுதானோ?கொஞ்ச நேரம் பேப்பர் படித்தான், எவ்வளவுநேரம்தான் நடிப்பது படிப்பதுபோல,அதுமாணவ,மாணவிகளின்உலகத்திற்கேசொந்தமானவிஷயம், நாம்போய் அதில் தலையிடுவது அநாகரீகம், ஆமாம் என ஒலித்த அசரீரிக்கு உட்பட்டு எழுந்து போய்விடுகிறான்,

சரிஅருகாமையிலாய்இருக்கிறகடையில்ஒருடீசாப்பிட்டுவிட்டுவரலாம், அந்த கேப்பில் ஆள் வந்து விட்டால் ஒரு வேலை முடிந்த திருப்தியில் வீடுபோக லாம் என நினைத்து டீக்குடித்த வேளை மாலைகவிழ்ந்து இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக.

”தலையில அப்பிடி என்ன முடி இருக்குன்னு ஓடி ஓடிப்போயி வெட்டு றீங்க என்பான் இவனது இளைய மகன்,அவனுடன் சேர்ந்து கொள் கிற மூத்த மகள் எதிர்த்த வீட்டு அங்கிளைப்பாருங்கள் தலை நிறைய முடிவைத்துக் கொண்டு இன்னும் காலேஜ் பையனைப்போல நடமாடுகிறார்.விட்டால் பங்க் வைத்துக் கொள்வார் போலிருக்கிறது. அவரது பையனுக்கு அடுத்து வருகிற மாதங்களில் திருமணம் என பேசிக் கொள்கிறார்கள்.அவரே அப்படி இருக்கும் போது,,,,, நீங்க ள் என்ன வென்றால் தலையில் ஒரு முடி நீளமாய் காண அனுமதிக்க மாட் டேன் என்கிறீர்களே,தினமும் டேப் வைத்து அளப் பீர்களோ,,,,,, என்பதாய் ஒவ் வொரு முறையுமாய் பதிவாகிற பிள்ளைகளின் எதிர்ப்புக் குரலையும் மனை வியின் ஆதரவுக்குரலையும் மீறி வீதி அளந்து கடையேறிமுடி வெட்டிக் கொள் வனாய்ஆகிப்போகிறான். ஒவ்வொரு முறையுமான தடவைகளில்/

அப்படியாய்இம்முறைமுடிவெட்டிகொள்ளவந்தநேரத்தில்கண்காணாது போய் விட்டகடைக்காரரைதேடிஅலையாமல்அப்புரானியானஒரு கடையில் டீக் குடித் து விட்டு வீடு வந்த வேளையில்டீத்தரட்டுமா கொஞ் சமாகஎனக் கேட்ட மனைவியிடம்சொல்கிறான்,கொஞ்சமாகஅல்லநிறையவேகொடுகுடிக்கிறேன், ஏதோ ஆத்தமாட்டாமல் இப்பொழுதான் குடித்து விட்டு வந்த டீக்கு அது கொஞ் சம் மாற்றாக இருக்கட்டும்.

கொடு உன் நிறை மனது போல நிறைவாய் ஊற்றி/என மகஜர் எழுதாமல் சொல்லிவிட்டு தரையில் சம்மணமிட்டு அமர்கிறான்.

9 comments:

Avargal Unmaigal said...

எழுத்துகளின் அளவை குறைக்கவும் படிக்க கஷ்டமாக இருக்கிறது

vimalanperali said...

வணக்கம் அவர்கள் உண்மைகள் சார்.
நன்றி வருகைக்கு,
எழுத்துக்களின் அளவு கணிணி
டிஸ்பிளேயில் ஏற்பட்டுள்ள
ஒரு சின்னத்தவறு.
கூடிய விரைவில்
சரி செய்து விடுவேன்,
அப்புறமாய் எழுத்துக்கள்
இயல்புக்கு திரும்பிவிடும்.
நன்றி வணக்கம்/

Yaathoramani.blogspot.com said...

படிப்பவரும் மன இயல்பை
உணரும்படியான அற்புதமான எழுத்து
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

கரந்தை ஜெயக்குமார் said...

தேநீர் என்று வந்துவிட்டாலே
தங்கள் எழுத்தின் சுவை கூடிக் கொண்டே
செல்கிறது நண்பரே
தம 2

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... சுவைத்தேன்...