பின்னாலிருந்த பாட்டிலின்
கவனத்திலேயே
எனது இரு சக்கர வாகனப்பயணம்.
ஐம்பத்தைந்து ரூபாய் பாட்டிலது.
வெயில் நேரத்திற்கும், வீட்டில்
குளிர்பான பாட்டில் ஒன்றிருந்தால்
தேவலாம் என்கிற நினைப்பிலுமாய்
வாங்கி வைத்தது.
வலது கையில் வாழைப்பழமும்,
இடது கையில் குளிர்பானமுமாய்
வைத்து குடிக்க பழகிவிட்ட கலாச்சாரம்
வீட்டில் தலை எடுத்து விட்ட பின்பு
தவிர்க்க இயலாமல்
மாதம் இரண்டோ அல்லது
மூன்றோ வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது.
வெயில் நேரம்,,,தாக சாந்திக்கு ,,,
உறவினர் மற்றும் நண்பர்களின் வருகையின் போது என்கிற மனச்சமாதானத்துடன்
நிரந்தரமாய் ஒரு குட்டிக் குழந்தையின்
உயரத்தில் வீட்டின் குளிர்பதனப் பெட்டியில்
நிரந்தரமாய் தங்கிப்போன குளிர்பானபாட்டிலை
காலியானதும் தூக்கியெறிய மனமின்றி
அலுவலகத்திற்கு தண்ணீர் கொண்டு
செல்கிறேன் அன்றாடம்.
இன்று மாலை பையில் மாதந்திர சாமான்கள்
தங்கிப் போனதால்
இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருக்கிற
கம்பிக்கும்,இருக்கைக்கும் இடைப்பட்ட
வெளியில் பாட்டிலை வைத்துக் கொண்டு ஓட்டி கொண்டிருக்கிறவனாக/
13 Jul 2014
தண்ணீர்க்குடுவை,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தண்ணீர்க் குடுவை பற்றிய இடுகை
எண்ணத்தில் என்றும் உலாவும்
மற்றவர்களுக்காக...
தண்ணீர்க்குடுவை பெயரே அசத்தல் நண்பரே..
எமது ஹிந்தமிழ் காண்க......
ரசிக்கக்கூடிய எழுத்து.
வணக்கம்
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் செல்லப்பா யாகசாமி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் Yarlpavanan Kasirajalingam சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை அண்ணா...
வணக்கம் சேகுமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment