10 Jul 2014

அம்புக்குறி,,,,,,,,,              
மறைத்தது மரத்திலைகளா இல்லை கண்பார்வையா என்பது சற்றே குழப் பம்விழைவிப்பதாக.மரத்திலைகள்என்றால்பரவாயில்லை. கண்பார்வை என் றால்,,,,,,,,கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவே/

கடந்துவந்த வீதி தலைமைதபால் நிலையம்,அதன்எதிர்த்தாறபோல்இருந்த பெட்ரோல் பங்க்,அரசு மருத்துவமனை,திருமண மண்டபம்அதன்வாயிலில் தெளித்துவைத்திருந்தமஞ்சள்நிறத்தண்ணீர்,அதன்மென்கசிவு,அழகு விரிந்து நீண்டிருந்தசாலை,சாலையின் இருபக்கமுமான மண் படர்வு எனக் காட்சிப் பட்டதாய் தெரிகிறது. 

தலைமை தபால் நிலையத்திற்கு எதிர்த்தாற்போல் இப்பொழுது இருக்கிற பெட்ரோல்பங்க் இருக்கும் இடத்தில் தான்பங்களாஇருந்தது, இப்பொழுது உள் ள அரசு மருத்துவமனை ஒரு காலத்தில் காட்டாஸ்பத்திரி என பெயர் கொண்டிருந்த நேரங்களில் அதை விட்டு அரைபர்லாங் தூரத்தில் தனியே இருந்த பங்களா அது எனச் சொன்னார்கள். முன்பு எப்படி இருந்தது,என்ன மாதிரி இருந்தது,அங்கு மனிதர்கள் குடியிருந்தார்களா அல்லது ரெஸ்ட் ஹவுஸா,எனச்சரிவரத்தெரியவில்லை.இவனுக்கு/

ஆனால் அந்த பங்களாவின் சொந்தக்காரர் மலையாளி எனச்சொல்லி கேள் விப்பட்டிருக்கிறான்.. மலையாளிகள் தைரியமானவர்கள்தான், இல்லையெ ன்றால் இப்படி அனாதரவான காட்டுக்குள்ளே பங்களாக் கட்டி தங்குவார் களா என்ன,என்பான் இவனது நண்பன்.முன்பெல்லாம்/ 

ஊரிலிருக்கிறபோது கூடச்சொல்வார்கள்.:பேய் கூட அண்ட பயப்படும் இடம் அது,அங்கு போய் எப்படி,,,,,,? என விதைக்கப்பட்ட ஆச்சரியம் இவன் இங்கு குடிவந்த புதிதில் பெரியதாய் அவிழ்ந்து போனது ஆச்சரியமாகவே. காரணம் இவனில் பேய் பூதம் என்கிற நம்பிக்கை எதுவும் அப்போது இல் லை. தவிர மனிதர்கள் குடியிருந்த வீடாக அது அல்லாமல் அவ்வப்போது வந்து போகிற விருந்தாளிகள் தங்குற பங்களாவாக இருந்திருக்கிறது. அப்படி விருந்தாளிகள் வந்து தங்குகிற நாட்களில் புடை சூழ காவலுக்கு ஆட்கள் நிற்பார்களாம்.அப்போ என்ன பயமிருக்கப்போகிறது.சொல்லுங்கள். என்று வரையறுத்திருக்கிறான் மனதிற்குள்ளாகவே/அந்த வரையறுப்புக்குப் பின்னான நாட்களில் திருமணமாகி இந்த ஏரியாவிற்கு  குடிவந்தபின்பாய் நல்ல தண்ணீர் எடுக்கஅங்குதான்போக வேண்டியிருந்தது,

அப்போதெல்லாம் இப்பொழுதைப் போல ட்ராக்டர் தண்ணீர் கிடையாது. தெருக்குழாய் தண்ணீர் வராத நாட்களில் சிரமாகிப்போகும்.எங்கு அடிகுழா ய் இருக்கிறது எனதேடிப்போக வேண்டும்.தெரிந்தவர் ஒருவர் கூடச் சொ ல்லு வார்,சைக்கிள்ல கொடத்தக்கட்டிக்கிட்டு போக வேண்டியதுதா,ஜனங்க எந்தப்பக்கம் போறாங்களோ அந்தப்பக்கமா அவுங்க பின்னாடி போயிக்கிற வேண்டியதுதான் என்பார்.சமயா சமயங்களில்மட்டுமல்ல,பல நேரங்களில் இப்படித்தான் இவனுக்கு நிகழ்ந்ததுண்டுஇல்லையென்றால் யாராவது தெரிந்த வீட்டில்அல்லதுநல்லதான சொந்தக்காரர்கள் என இருந்தால் அங்கு போயும் பிடித்துக்கொள்ளலாம்.இது ஏதுமற்றவர்கள் பாடு வெகு திண்டாட்டமாகிப்போகும்,

இவனுக்கு பேராலி ரோட்டில் பட்டாளம் அண்ணன் வீடு இருந்தது,ஓரிரு முறை அங்கு போய் வந்தான்.அது ஒரு மாதிரிசங்கடமாகவும் உறுத்தலாக வுமாய் ஆகிப்போக என்ன செய்ய குடிதண்ணீருக்கு?என யோசித்த போது சுளியிட்டதாய் வந்து விழுந்ததுதான் அந்த பங்களாவாய் இருந்தது.

பேத்தாயூபங்களாஎன்றார்கள்அதை.கிட்டத்தட்டஇரண்டுஏக்கராவதுஇருக்கும். ஊரில் வீடுகட்டச்சொன்னால் வீட்டில் ஒரு சின்ன ஊரை அடக்கி வைத்தி ருந்தது மாதிரி இருந்தது. ஊருக்குள்ளாய் வீடா,வீட்டுக்குள்ளாய் ஊரா என அவரது வீட்டைப்பார்க்கிற கணங்கள் தோறுமாய் இவனுக்குள்ளாய் ஒரு மென் சந்தேகம் எழுந்து மறைவதுண்டுதான் அவ்வபொழுதாக/

அப்படிஎழுந்துமறைகிற நாட்களின் நகர்வுகளில்தான் இவன் அங்கு தண்ணீ ருக்காகவும்போய்நிற்க வேண்டி வந்ததது,இரு குடம் தண்ணீர் ஓரு ரூபாய். ஒருவருக்கு ஒரு நாளைக்கு இரண்டுகுடங்களேஅனுமதி.வீட்டில் போய் ஊற்றி விட்டு திரும்ப தண்ணீர் பிடிக்க வருகிறவர்களை கண்டறிய ஒரு ஆளை நிப்பாட்டியிருந்தார் தனியாக.அவர் கையில் கத்தி கபடா இல்லை அவ்வளவுதான்.வானாளவிய அவரது அதிகாரத்தை தண்ணீர் பிடிக்க வரு பவர்கள்சகித்துக்கொள்ளத்தான்வேண்டியிருந்தது,இல்லாவிட்டால்கிடைக்கிற இரண்டு அல்லது ஒரு குடம் தண்ணீருக்கும் வேட்டு வந்து விடும். பிறகு ரயில்வேஸ்டேசனுக்குத்தான்குடங்களைத்தூக்கிக்கொண்டுபோக வேண்டும்.

ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புகிற குழாய்கள் இந்த ஊர் ரயில் நிலையத்தி ல் இருந்தது,ரயில் வந்துநிற்கவும் ரயிலுக்காய் நிரப்பப்படுகிற தண்ணீரை ஜனங்கள்பிடிப்பார்கள்.சமயத்தில்ரயிலுக் குள்ளாய்போய்கழி வறையிலெல் லாம்ஜனங்கள் குடங்களைவைத்துப்பிடித்ததை இவன் பார்த்ததிருக்கிறது ண்டு. ரயில்வேபோலீஸ்காரர்கள் இவர்களை ஒன்றுமே சொல்வதில்லை, ஸ்டேசன் மாஸ்டரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.அவர் அவ்வப் பொழுதாய் சப்தம் போட இவன் கண்டதுண்டு.பெரிதாக ஒன்றும் இல்லை, சீக்கிரம் தண்ணிய புடிச்சிட்டுக்கெளம்புங்க,ரொம்பயும் லேட்டானா நாங்க ளும் வண்டிய கெளப்பறாதுல சிக்கலாகிப்போகுமுல்ல என்பார். 

இப்படித்தான் ஒருநாள் ஜனங்கள் வழக்கமாய் தண்ணீர் பிடித்துக் கொண் டிருக்கும் போதுரயிலின்சைரனைஒலிக்கச்செய்து விட்டார் டிரைவர். ஸ்டே சன் மாஸ்டர் அவரைக்கூப்பிட்டு தனது அறையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின் ரயிலை எடுக்குமாறு சொன்னார். 

வழக்கத்தைவிடகொஞ்சம் அதிகமாக தண்ணீர் பிடிக்கக்காத்திருந்தார்கள் ஜனங்கள்.அந்தப்பக்கம்மிருக்கிறகோயிலில்திருவிழாவாம்,காளியம்மன் கோயிலில் பொங்கல் என்றார்கள்.

இப்படித்தான்பேத்தாயூபங்களாஇவனுக்குஅதிகபழக்கமில்லாதநாட்களிலும், அங்கு இம்மாதிரியாய் தண்ணீர் வரும் எனஇவன் அறியாத நாட்களிலு மாய்ராதாடாக்கீஸீக்கு எதிர்த்தாற் போல்ரோட்டுக்கு இந்தப்பக்கமாய் இருக் கிறதெருக்குழாயில்சும்மாபோய்க்கொண்டிருக்கிறதண்ணீரைப்பிடித்துவிட்டா ன்.பிடித்துகொண்டிருக்கும்குடத்தில்நீர்நிறைந்துகொண்டிருக்கையில்இவனுக்குத்தெரியாதுஇப்போது. நிறைந்து கொண்டிருக்கிற நீரால் ஆபத்து வரப் போகிறது என/ .நீர், குடம் அதில்குவிந்துகொண்டிந்தஇவன்பார்வைஎன்கிறமுப்பரிமாணவிகிதகண்ணோ
ட்டம்நடந்து கொண்டிருக்கிற வேளையில் வேகமாக வந்த ஒருவன் குடம் நீரை தூக்கி கீழே ஊற்றி விட்டான். கேட்டதற்கு அவனது ஏரியா கண்ட் ரோலில் இருக்கிற குழாய் என்று சொன் னான்.அவன் கீழே ஊற்றிய குடத்தைஎடுத்துதிரும்பவுமாய் தண்ணீர்க் குழாய்க்கு கீழே வைத்து பிடித்த போது கோபமாக முறைத்துப்பார்த்துவிட்டு வேகமாய் போய்விட்டான்./

போனவன்சிறிது நேரத்தில் இன்னொருவனுடன் திரும்பி வந்தான். இவனு க்கானால் உள்ளூற உதறல்.ஆனால் அவன் கூட வந்தவன் தூரத்தில் வரு ம் போதே”லேய் கிறுக்கா,சார் நம்ம சாருடா,அவர்ட்ட போயி,சார் இனிமே தெருக்கொழாயில தண்ணி வரும் போதெல்லாம் தவறாம வந்து ரெண்டு கொடம் புடிச்சிக்கங்க சார்,என்ன புடிக்கிறதுக்கு முன்னால நம்ம கிட்ட ஒருவார்த்த சொல்லீருங்க,ஏன்னா இது நம்ம கண்ட்ரோல்ல இருக்கிற கொழாயி.அப்பறம் அதது கேக்காம தண்ணி புடிக்க ஆரம்பிச் சிருச்சின்னா இங்கனநம்மகெத்துப்போயிருமில்ல/”அதான் என இழுத்தவனிடம் சிரித்து தெரியும் அதெல்லாம், தெரிஞ்சிதான் வந்தேன்,ஆனா,,,,என குடத்திலிருந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு வெற்றுக்குடத்துடன்வந்தான்.வீட்டிற்கு/

இவன்வீட்டுக்குவந்தசிறிதுநேரத்தில் இரண்டு குடங்களில் தண்ணீர் வந்தது, அண்ணேகுடுத்துவிட்டாருஎனஒருசிறுவன் சைக்கிளில் வந்து இறக்கினான். மறுநாட்களில் தெருக்குழாய் நம்ம கண்ட்ரோலில் எனச்சொன்னவனைப் பார்த்துகேட்கும்போதுசார்ஆள்கநிதானம்தெரியாமசொல்லீட்டான்அன்னைக்கி ஏங்கூடவந்தவன்.எனச்சிரித்தஅவனுடன்எதிர்சாரிக்கடையில் டீக்குடி த்த போதுரோட்டில்போகிறவர் வருகிறவர் மட்டுமல்ல,டீக்கடைக்காரரே ஆச்சரி யமாகப் பார்த்தார், அப்புறம் தான் சொன்னார்கள் அவன் இந்த ஏரியாவின் ரவுடி என/ 

அந்த ரவுடிதான்  பின்னாட்களில் நல்ல பழக்கமாகிப்போனான் இவனுக்கு, அப்படி நன்றாகபழக்கமாகிப்போன பின்புதான் தெரிந்தது,அவன் ஒரு சிரிப்பு ரவுடி என.என்ன கூடவே ஓங்குதாங்கான ஒரு ரிட்டையர்ட் ரவுடி துணைக் கிருந்தார்,அவர் தோளின் மீது ஏறிக்கொண்டு இவனும் முரட்டுப் பார்வை வீசி கோலாச்சினான்.அப்படி அவன் பழக்கமாகிப்போன நாட்களில் இவன் பேத்தாயூ பங்களாவில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்திருந்தான்.

அதிகாலையின் வாக்கிங்கில் இவையெல்லாம் தென்படுகிற காட்சிகளாய் விழிப்படர்வில் விரிவடைகிற நேரம் ஒன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறுமணியாய் இருக்கும்.அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து உடல் சோர் வு போகவும் அழுக்குப்போகவுமாய் குளித்துமுடித்துநான்கரை மணிக் கெல் லாம் இரு சக்கரவாகனத்தை எடுத்துக் கிளம்பினால் சாத்தூர் பைபாஸ் வரை அல்லது இங்கிட்டு கள்ளிக்குடியை எட்டத்தொட்டு விட்டு திரும்பும் போது அன்றைய தினம் மிகவும் புத்துணர்வு மிக்கதாய் அமைந்து போகிற மந்திரம் இவனுக்குபிடித்திருந்ததைப் போலவே இவனது மகளுக்கும் பிடித் திருந்தது. 

“வயசுப்புள்ளையஇந்நேரம்எழுப்பிஎங்க கூட்டிக்கிட்டுபோறீங்க, ஒங்க அழிச் சாட்டியமெல்லாம் ஒங்களோட வச்சிக்கங்க,என்னமோ வெள்ளன நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கிறாங்களாம்,அப்பிடியே எழுந்திரிச்ச கையோட குளிச்சிமுடிச்சி வெளியில ஒரு சுத்து போயிட்டு வந்தா அன்னைக்கி பொ ழுது நல்லா இருக்குதாம், எங்கஅந்தநல்லா இருக்குற பொழுத வீட்ல வேலசெஞ்சுகழிங்கபாப்போம்.அதுமாட்டீங்களே,சரி அதெல்லாம் கூட போக ட்டும்எப்படியோ, எப்பிடியோ நாளைக்கி இன்னொருத்தன் வீட்டுக்கு போற புள்ள அது,அதப்போயி அங்கிட்டு இங்ட்டின்னு இழுத்திட்டு திரியாதிங்க ஆமாம்,”என்ற மனைவியின் பேச்சையும் தாண்டி இரண்டு மூன்று ஞாயிக ளின் விடுமுறை நாட்களில் அப்படியாய் கூட்டிக்கொண்டு போய் வந்த பொழுது மிகவும்தான் உற்சாகமாகிப் போனாள் மகள்.அந்த உற்சாகமே இப்பொழுதுவரைஅவளிடம்குடி கொண்டிருப்பதாக/ இப்பொழுது அவளைத் தான்பஜாருக்குகூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறான்காய்கறிவாங்க/
“அதென்னது அவ என்ன ஆம்பளப்புள்ளையா, எங்க போனாலும் கூடயே கூட்டிக்கிட்டுபோய்க்கிட்டு?காய்கறி வாங்கக் கூட பொம்பளப்புள்ளைய கூட் டீட்டு போகாட்டி என்னாவாம்.கேட்டா அவளும் நாலு விஷயங்கள தெரிஞ் சிக்கட்டும்ங்குறீங்க,அதெல்லாம் தெரிஞ்சிக்கிருவா நாளைக்கி ஒருத்தன் வீட்டுக்கு போன பிற்பாடு,இப்பயே போட்டு நம்ம அதப்போட்டு உருப் போட்டு தராட்டி என்னவாம் என்பாள்.மகளை ஒவ்வொரு முறையுமாய் வெளியில்கூட்டிக்கொண்டுபோகும் போதும்/

இவனின் எண்ணம் இந்த விஷயத்தை பொருத்தமட்டில் வேறொன்றாக ஆசை கொள்கிறதாயும்,நேர்மாறானதாகவுமாய் இருக்கிறது.மூத்தது பைய னாவும்,இளையது பெண்ணாகவும்பிறந்திருந்தால்நன்றாக இருந்திருக்கும். இன்னும்கொஞ்சம்.இவனுக்கு வயது 51 ஐ எட்டித்தொடப் போகிறது. என்ன தான்இழுத்துப்பிடித்து ஒட்டவைத்துப்பார்த்தாலும் ஒத்துழைக்காத  மூப்பு சுமந்த அடையாளமாய் மாறிப்போன உடல்.இதை இழுத்துக்கொண்டுதான் திரிய வேண்டி இருக்கிறது,தலை முங்கிப்போகிற வேலைகளை சுமந்து கொண்டு நாள்தோறுமாய் வீடு வரும்  மாலைவேளை உடல் மிதமிஞ்சிய அலுப்புக் கொண்டு விடுகிறதுதான்,என்ன செய்ய தேவைக்காகவாவது ஓடித்தான் ஆகவேண்டியிருக்கிறது,ஓடுவதற்குப்பதிலாய்இரு சக்கர வாகன த்தில் போகிறான்,

அரசுஅருங்காட்சியக சாலையில் திரும்பும்போதுதான்விழிப்படர்வில் பட்டு  விரிகிறதாய் அந்தக்காட்சி,

சற்றே உற்றுப்பார்த்த பொழுது தெரிந்த ரயில்வே கேட் மூடியிருக்கிறதா அல்லது திறந்திருக்கிறதா என நிர்மாணிக்க இயவில்லை சரியாக,தவிர அதைசரிவர பார்க்க முடியாமல் மறைத்தது மரத்திலைகளா அல்லது கண் பார்வையா என சரியாக நிர்ணயிக்கவும் முடியவில்லை.

10 comments:

 1. வணக்கம்
  கதை மிக அருமையாக உள்ளது அண்ணா பகிர்வுக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. தங்களின் எழுத்துநடை யாதார்த்தமாக செல்கிறது சிறப்பு நன்றி.
  தற்போது எனதுபதிவு ''எனக்குள் ஒருவன்''

  ReplyDelete
 3. வணக்கம் கில்லர்ஜி சார்,
  நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. அருமை! அந்த ஸ்டேசன் மாஸ்டர் இரக்க மனதுள்ளவர் என்று தெரிகிறது!

  ReplyDelete
 5. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
  நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. அருமை அண்ணா...
  உங்களது எழுத்து நடைதான் கதையை உள்வாங்கச் சொல்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சே குமார் சார்.
   நன்றி வருகைகும்,கருத்துரைக்குமாக/

   Delete
 7. கதை அருமையாக இருக்கிறது . வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சந்திர கௌரி சிவபாலன் மேடம்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete