18 Jul 2014

ஒற்றைவரி,,,,,,,,


ஒற்றை ஆளுக்கு எத்தனை தேவையாய் இருந்து விட முடியும்?அதிகாலை 5 மணிக்கெல்லாம் அலாரமில்லாமல் எழுந்திரிக்கிற அவர் செய்கிற முதல் வேலை வீட்டின்பின் புற வெளியில் இருக்கிற அடுப்பை பற்ற வைப்பதுதான்.
கரி படிந்த அலுமினியச் சட்டியில் தண்ணீரை ஊற்றி அடுப் பில்ஏற்றிய கையோடு பிரஷ்சை எடுத்துகொண்டு பல் வில க்கப் போய் விடுவார்.
புகழ் பெற்ற கம்பெனியின் டூத்பேஸ்ட்,அதே கம்பெனியின் பிரஷ்,இடுப்பில் கட்டிய கைலி. வெற்றுடம்பில் போர்த்திய வெள்ளைத் துண்டுடன்அவர்பல்தேய்த்துமுடிக்கவும் அடுப் பில் இருந்த தண்ணீர் சுடவும் நேரம் சரியாய் இருக்கும்.
அதை வைத்துதான் வாய் கொப்பளிப்பார்.பின்அதே அடுப் பில்எரிந்துகொண்டிருக்கிறதனலையும்,தீயையும் சரிபார்த் த வாறே டீப் போடுவார்.
அது கொதித்து கொண்டிருக்கிற இடைவெளியில் பாத்ரூம் போய் குளித்து முடித்து விட்டு வந்து விடுவார்.
கட்டியியிருந்தகைலியையும்,துண்டையும்துவைத்ததண்ணீர் வழிய பிழிந்து கொண்டே வருகிற அவர் அதைகொடியில் போட்டுவிட்டு மாற்றாக வேறு கைலியையும்,வேறு ஒரு துண்டையும் மேலில் போர்த்திவாறு டீயை ஆற்றிக்கொண் டேகால் மேல்கால் போட்டவாறு அங்கிருக்கிற கல்லில் அமர்ந்து டீக்குடித்தவாறே விடிகிற பொழுதை வரவேற்க ஆரம்பித்து விடுகிறார்.
டீக் குடித்து முடிந்தவுடன் அவருக்கென்றே வைத்திருக்கிற சின்னசைக்கிளில் ஏறி கடைக்குப் போக,தேவையானதை வாங்கி வர,அவரைப்போல் உள்ள அவரது நண்பர்களைப் பார்க்க என கிளம்பி விடுகிறார்.
வாழ்நாட்களின் நகர்தலில் சிறிதும் பிசகின்றி நடக்கிற இந்த செயல்களுடன்தான் அவரது காலை விடிகிறது அன் றாடம், அவரும் நகர்த்திக் கொண்டிருக்கிறார் தனது நாட்க ளை மாதாந்திர பென்சனின் துணையுடன்/
மனைவியை இழந்த அவருடன் கணிணியில் பேசிக் கொள் கிறார்கள்.வெளிநாட்டில் இருக்கிற பிள்ளைகளும், பேரன்க ளும் மாதமொருமுறை/  

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய வாழ்வியல் யதார்த்தம்

திண்டுக்கல் தனபாலன் said...

நிம்மதி...

KILLERGEE Devakottai said...

கடைசிவரிகள் மனதை பிழிந்தது மட்டுமல்ல,, என்னுள் ஒருவித பயத்தையும் உண்டாக்கி விட்டது நண்பரே.

ஹிஷாலி said...

நல்ல ஒற்றைவரிகள் பாராட்டுக்கள் அண்ணா

இளமதி said...

ஒற்றைவரி இதயத்தின் உள்ளே சென்று
கற்றை கற்றையாகக் கூறுகிறது ஏராளமே!...

அருமை சகோ!
மீண்டும் குறும்படமொன்று பார்த்த நிறைவு!

வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வண்க்கம் சகோதரி இளமதி அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹி்ஷாலி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/