28 Jul 2014

கலர்த்திரவம்,,,,,

டீயும்அன்புமாகவேஇருக்கட்டும்,அதன்றிவேறொன்றும்வேண்டாம்
சகோதரரே, என்றுதான் பேச்சின் முதல்ப் புள்ளிதுவங்குகிறது.

”தோசை சூடா இருக்கு,வடை இருக்கு,,,,என்ற டீக்கடைக்காரிடம் நான் போய் டீக்கேட்ட பொழுது காலை ஒன்பது மணி/அன்றாடம் காலை ஆகி ற வேலை களில்அவரது டீக்கடையில் டீ சாப்பிடுவதும் ஒரு வேலையா யும்,கடமையாயும் /பின் என்னதான் செய்யச்சொல்லுங்கள்?எதிர்வரிசை யில் சற்றுத்தள்ளியிருக்கிற ஒயின்ஷாப்பிற்கு போகிறஅளவிற்கு இன் னு ம் நாவின்சுவையறும்புகள்பழகவில்லைஇன்னும்.அகவேடீ ஒன்றே போதும்என்கிறசொல்பதம்தாங்கிதினசரிகாலையும்,மாலையும்அங்கு நின்று விடுவதுண்டு.

இத்தனைக்கும்அன்றுஅலுவலகவிடுமுறைநாள்தான்.ஆயினும்கூட
ஏதோ முளைத்து நின்ற வேலையின் முனையை கிள்ளி எறிய விரும்பா மல்போய்விடுகிறேன்இருசக்கரவாகனம்ஏறி/ஆங்,,,அதுவேறொன்றுமில் லை ம னம்பிடித்தநண்பணின் மகன் திருமணம்,முதல் நாளே வந்துவிட வேண்டும் குடும்பத்தோடுஎன்றான்.என்னால்தான்போகமுடியவில்லை.

வழக்கமாக பத்திரிக்கை வைக்கிற எல்லோரும்சொல்கிறசொல்தானே இது என வைத்துக்கொண்ட போதும் கூடநண்பணின் சொல்லை அந்த வரிசையில்வைத் துப் பார்க்க முடியவில்லை.

மனம் கொண்ட நண்பன்.என்னில் அவனும் அவனில் நானுமாய் இன்னும் குடிகொண்டிருக்கிறஅளவுஉரிமையும்,பழக்கமும்உள்ளவர்கள்.நல்லமனமும்,நல்லகுணமும்கொண்டவனாக.அவதுமென்மையானநன்நடத்தைக்கே மனம் அடகு கொண்டு போகிறாதாக/

அதிகாலை 4.30 மணியின் மென் பதத்துக்கு ஊரே தூங்கிக் கொண்டிருக் கிறது .என்ன செய்ய,,,?விழிப்பு வந்து விட்டஇந்நே ரத்திற்குடீக்கடை கூட திறந்திருக்காது.

முகம் கழுவி தலை சீவி வெளியே வந்தமர்ந்த நேரம் அரை மணி அரை நிமிட மாய் கரைந்து போகிறது.எதிர்சாரி வீடுகளும்,அக்கம் பக்கங்களும் மௌனம் கொண்டிருக்க வீதி ஓடிக்கொண்டிருக்கிற ஒற்றை நாயை அடையாளம் காட்டி முத்திரை குத்தியதாய்/

ஊதா நிறத்தில் கோடு போட்ட சட்டை அணிய நன்றாக இருக்கிறதுதான். அதை அணிந்து கொண்டுதான் டீக்கடைக்குச்சென்றேன்.குடித்து முடித்த டீயின் தெம்புடன் குளியல்முடித்துமனைவி,மக்களிடம் சொல்லிக்கொ ண்டு வீட்டை விட்டு கடந்து விட்ட இந்த எட்டாவது கிலோ மீட்டரின் முடிவில் இங்கு ஒரு டீ சாப்பிடலாம் என தோணிய எண்ணத்தை கிள்ளி எறிய மனமில்லை.தவிர கிளம்பும் போது வீட்டில் டீ சாப்பிட்டு விட்டுதான் வந்திருந்தாலும் கூட அடங்க மாட்டேன்என்கிறதேநாவு. பழகிப்போனசுவைக்கு அடிமையாகிப்போன நாவின் சுவையறும்புகள் இப்படித்தான் செய்கிறது என்ன செய்ய?முதல் வேலையாய் சூடு வைக்க வேண்டும் நாக்கில்/என அவ்வப்போது எழுகிற எண்ணத்தை டீயின் சூடுதான் ஆற்றியிருக்கிறதே தவிர,,,,,,,,,,,/

மற்றபடிடீக்குடிக்கஆசைப்படுவதற்காகவெல்லாமாசூடுவைப்பார்கள்?சொல்வது தான் சும்மா பேச்சுக்காகவேனும். அதற்காக சொல்வதெல்லா ம்செய்யமுடியுமாஎன்ன?வேண்டாம்என்கிறஉயர்நவிற்சிமனோபான்மை யி ல்டீக் குடிப்பதே மேல் என என்றாடம் குடிப்பது போல இன்றும் அவரது கடைக்குப்போய்டீக்குடிக்கநிற்கையில்தான்இந்தப்பேச்சுதுளிர்விடுகிறது. 
டீயும்அன்புமாகமட்டுமேஇருக்கட்டும்தாங்கள்கொடுப்பது,தவிரவேறொன்றும் வேண்டாம் எனசொன்னகணம்டீக்கடைமுன்விரிந்துகாட்சிப் பட்ட தரையையும் சாலையையும்அதுகொண்டமனிதர்களையும்பார்க்கிறேன். 
டீயும்,அன்பும்,கூடவேமனம்கொண்டமனிதர்களின்இருப்பும்இருக்கட்டும்
என்னில் என சொல்லி முடித்தமறுகணம்டீவருகிறதுஎனது கைக்கு/

8 comments:

Unknown said...

வழக்கத்தைவிட கலர்த்திரவம் சிறிது குறைவுதான் ரசித்துக் குடித்தேன் !
த ம 1

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜீ சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

இனிப்பாக இருந்தது நண்பரே...
எனது பதிவு பாம்பனிலிருந்து... பாம்பாட்டி.

Unknown said...

அருமை.......(நமக்கும்)டீ குடித்த திருப்தி!

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சுரமணியன் யோகராசா சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிஙம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/