பெற்று வளர்த்த தாயை கண் முன்னே பிணமாகப் பார்க்கிற சோகம் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்துவிடக்கூடாது என்றே மனமாரவும், வாய் விட்டு மா ய் சொல்லத் தோனுகிறது.
முகம்கோண,வாய்இழுக்க,கண்கள்கலங்க அழுதே விடுகிறான் அவன். திரும ணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பின்பும் கூட அவனுள்ளிருந்த மென்மனது அப்படியே குடிகொண்டிருந்தது.
முகம்கோண,வாய்இழுக்க,கண்கள்கலங்க அழுதே விடுகிறான் அவன். திரும ணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பின்பும் கூட அவனுள்ளிருந்த மென்மனது அப்படியே குடிகொண்டிருந்தது.
போலீஸ் உடை தரித்திருந்த முரட்டு உடலினுள் இப்படி ஒரு மென்மை பூத்த மனது அமர்ந்திருப்பது மிகவும் ஆச்சரியமாகவே.லத்தி முனையில் கசிந்து நிற்கிற கண்ணீர் துளியின் முழு உருவினனாய் அவன் நின்றான்.ஐந்தரை அடி உயரத்தில்/
தோளில் அவனது இரண்டாவது பையன். அருகில் அவனது முதல் பெண். அல ங்கரிக்கப்பட்டதேரில்பூத்திருந்தபூக்களும்,செண்ட்அடிக்கப்பட்ட வாசனையும்/
தட்டுஎடுப்பதற்கு,நீர்மாலைக்குஎனநேற்றுஇரவுஅவனதுதாய்இறந்துபோனதிலி ருந்து அனைத்து வேலைகளுக்கும்,அனைத்துயோசனைகளுக்கும் ஆளாகி அத்தனையையும்தாங்கிசெயல்பட்டதிலும்கல்மனதினனாய்அலைந்தஅவன்சுற்றங்களின் சொல்லுக்கும்,ஆணைக்கும்அவர்கள்பிறப்பித்தஉத்தரவிற்கும்அவர்களதுஅபிலாஷைக்கும் அலைந்து,அலைந்து சலித்த மனது இப்போது அவிழ்ந்திருப்பதாய் தோனியது.
அவிழ்ந்திருப்பதைஅள்ளிமுடியபிரியமில்லாமல்அப்படியேவிட்டுவிட்டு நிற்கிறான்.
கண்களில்பெருகியநீரின்உப்பு முகமிறங்கி உடல் நனைத்து கீழிறங்கிய போது அவனது தாயைதேரில் அமர்த்தி நாடிக்கட்டை சரிசெய்வதிலிருந்து பிற விஷ ய ங்கள் வரை செய்து கொண்டிருந்தார்கள்.
சிலதப்படிகளுக்கு முன்பாகவே இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போதிலும் அவனது கண்ணுக்கு அலசலாக காட்சிப்படுகிற அளவுதான் இருந்தது.
இறந்து போனவர் எனது தூரத்து உறவு (சகோதரி முறை) என்பதை விடவும் அவனுக்கு தாய் என்பதே மிகவும் பொறுத்தமாய் இருக்கும்.
சிறு வயதிலிருந்து அவனை தோளிலும்,மார்பிலுமாய் அடைகாத்து இந்த 38 வயது வரைஇந்த சமூகத்தில் ஒரு கௌரவம் மிக்க இடத்தில் நிற்க வைத்தி ருக்கிறாள்.
நேற்று இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அவள் இறந்து போன தகவல் தெரி ந்தது. அந்நேரம் நான் குடியிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிற அவர்களது வீட்டிற்கு போகமுடியவில்லை.
இன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு அங்கு போய் மாலை யுடன் நின்ற கணங்களும்,அதன் பின்பு அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டு துக்க வீட்டில் இருந்த கணத்திலும் முழுவதுமாய் என் மனதை ஆக்ர மித்திருந்த உறவுக்காரை எனது சகோதரி என சொல்வதை விடவும் அவனது தாய் என சொல்வதே மிகவும் பொருத்தமாய் இருக்கும்.
கிட்டத்தட்டஆறுமாதங்களாகவேஉடல்நலமில்லாமல்ஆஸ்பத்திரி,மருத்துவம்,மருந்து வாசனைஎனஇரவு,பகல்,காலை,மாலைஎனஎதுவுமற்றுஆட்டோக்களிலும்,பஸ்களிலுமாய் மருத்துவமனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நேரம்.
எதற்கும் அடைபடாமல் ஒன்றை விட ஒன்று நல்லது என மருத்துவமனை மாற்றி மருத்துவமனை, மருத்துவர் மாற்றி மருத்துவர் இடையில் நாட்டு வைத்தியத்திற்கும்,மந்திரிக்கிறவர்களுக்குமாய் இல்லை என்று சொல்லாமல் ஒரு தலையசைவு/
நோய்க்கும் பாதி,பேய்க்கும் பாதி என பசப்பி பூசப்பட்ட நீண்ட சொற்களுடனும் வார்த்தைகளுடனும்,மனசமானத்துடனுமாய்அள்ளி,அள்ளிஇரைத்துப்பார்த்தவைத்தியம்
பலன் தராமலும்,கைகூடாமலும் போனபோது வந்த வருத்தம் பெரியதாகவே இருந்தது அவனில்/
இந்த ஆறு மாதங்களில் மட்டும் என இல்லை.அதற்கு முன்பாக இப்படித்தான் மருந்து மாத்திரைகளின் துணையுடனும்,குறையாத சர்க்கரை வியாதியுடனு மாய் இருந்தாள்.
வலது கால் பாதத்தினருகே கணுக்கால் முட்டியில் இருந்த எப்போது கட்டுப் போட்ட புண்ணுடமாய் வற்றாத மனவைராக்கியத்துடனுமாய் இத்தனை நாட் கள் ஊயிரைதக்க வைத்துக் கொண்டும், இறுக்கிப் பிடித்துக்கொண்டும் இந்த குடும்பத்தின் சகலமுமாய் இருந்து,இந்த குடும்பத்தின் பெருமையை அணை யாத தீபமாக பத்திரமாய் பொத்தி பாதுகாத்து வைத்து விட்டு பிரிந்து சென்று விட்ட தாயை கண்முன்னால் பிணமாகப் பார்க்கிற சோகம் யாருக்கும் எளிதில் வாய்த்துவிடக்கூடாது என மனமாரவும், வாய்விட்டுமாய் சொல்லத் தோணு கிறது.
7 comments:
தானே மாற்றிக் கொள்ள... தேற்றிக் கொள்ள நினைத்தாலும் மாறாத சோகம்...
தாயின் ஆன்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம்
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்
வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தாயின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும்
தம 3
தாயின் பிரிவை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது...
படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன...
வணக்கம் சே குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment