ஆறுகைகள்,மூன்றுபேர்கொஞ்சம்அதிகமாய்நெசவிடபட்டிருந்தஉழைப்பு.
அந்த இரவு எட்டு மண்ணிப்பொழுதில்மிகவும்நன்றாகவேஇருக்கிறது.தோழர் முத்துக்குமார், தோழர்ஜே,ஜே,எஸ் நான்எனமூவருமாய்
D.Cயில்
கூடியிருந் தோம்.
ஆகஸ்ட்15விடுதலைத்திருநாளைபுத்தகங்களைக்கொண்டாடுவோம்,புத்தக ங்களைபரிசளிப்போம்.என்கிறவாசகங்களைமனம்தாங்கி.அதேவாசகங்களை யும்இன்னும்பிறவைகளையும்தன்மேதமையாலும்,தன்திறமையாலும், தனது தனித் திறனாலும் நோட்டீஸில் வடிவமைத்துக்கொடுத்த தோழர் ஜே,ஜே எஸ் அவர்கள் அப்பொழுதான் பிறந்த ரத்தமும் சதையுமான சின்னக்குழந்தையை உச்சி முகர்ந்து தூக்கி வந்தது போல் எங்களிடம் கொண்டு வந்து அச்சுக் குலை யாமல் காட்டிய நாளன்றிலிருந்து தொற்றிக் கொண்ட உற்சாகம் ஆகஸ்ட் 15 சுதந்திரதினபுத்தகசந்தை அமைப்பதற்காய் பற்றிக் கொண்ட பணியாய் மாறிப் போகிறது.
ஆமாம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும்,பாரதி புத்தகாலயமும் இணைந்து வருடா,வருடம் ஆகஸ்ட் 15 ஐ புத்தகங்களோடு கொண்டாடி மகிழ்ந்தும் புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாயும் தமிழகம் முழுவதுமாய் புத்தகச்சந்தை நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாய் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற இருந்த புத்தகசந்தைக்கான முன் ஏற்பாடாய் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களைவரிசைப்படுத்தியும்,சீர்செய்து அடுக்கியும் அதனை பதிவு செய்து பெட்டியில் அடுக்கியும் ஒழுங்கு படுத்துவதற்கான வேலையை செய்வ தற்காகக் கூடியிருந்தோம் நாங்கள் மூவருமாய்/
அதென்னவோ தெரியவில்லை, கூடுகிற கூட்டத்தை விட சேர்ந்து விடுகிற கொஞ்சமான எண்ணிக்கையிலான தோழர்களாய் காட்சிப்பட்டு காணப்பட்ட நாங்கள் அடுக்கி ஒழுங்கு செய்த புத்தகங்களில் சத்தியஜித்ரே இருந்தார், சதத்ஹசன் மண்டே காணப்பட்டார், உதயசங்கர் அவர்கள் கதை சொன்னா ர்கள், கு,அழகிரிசாமி அவர்கள் மற்றும் மற்றும் என இன்னும்,இன்னுமாய் கதை,கவிதை,சிறுவர்இலக்கியம்,தத்துவம், வாழ்வியல், மார்க்சியம்,,,,,, என இன்னும்,இன்னுமாய் நிறைய உட்பொதிந்திருந்தது.
இப்படியாய் உட்பொதிந்திருந்த
புத்தகங்களையும் எங்கள் மூவரையும் காத் துக் கொண்டிருந்த அந்த அலுவலகம் எங்கள் அனைவராலும் D Cஎன அன்புட னும்,உரிமையுடனுமாய் அடையாளமிடப்பட்டும்,அம்புக்குறியிடப்பட்டுமாய்/
அப்படிஅம்புக்குறியிடப்பட்டஇடத்தில்மிகச்சரியாகஇரவுஎட்டுமணிக்குக்கூடியநாங்கள்மூவருமாய்அப்பணியைமுடிக்க 10.30ஆகிப்போகிற து .கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் மூன்று நபர்களின் ஆறுகைகளுக்கு ஊடாய் நெசவிடப்பட்ட உழைப்பின் முடிவு சற்றே களைப்புற்றிருக்கிறீர்கள் நீங்கள் என அறிவுறுத்திச்செல்கிறது.
அந்த அறிவுறுத்தலை உணர்ந்தவராகவோ என்னவோ,எங்களது பணியின் ஊடாக தன்னையும் ஒருவராய் பதிவுசெய்து கொண்டு உதவியதோழர் பரத் எங்கள் மூவருக்குமாய்கடுன்டீ கொண்டு வந்து தருகிறார்.
கொஞ்சம் தேயிலையும், கொஞ்சம் சீனியும் கலந்து சில்வர் டம்ளரில் நிரம் பியிருந்த அந்தபிர்வ்ன் கலர் திரவத்தை குடித்து முடிக்கவும் சற்றே ஆசுவாசம் தந்ததாய் இருந்தது.இருக்கட்டும் இப்படி ஒரு ஆசுவாசமும் ,வாஞ்சை கலந்த அன்பின் படர்வும்/
உழைத்து முடித்த கலைப்பின் அயர்வைபோக்கிய அந்த கலர் திரவம்,அது தந்த உற்சாகம் மறு நாள் சுதந்திரதின புத்தகசந்தையை நடத்தி முடித்த பின்னுமாய் சில மணித்துளிகள் கழித்து நினைவின் சுழியில் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்வதாய்/
அதனால் என்ன ஒட்டிக்கொண்டு விட்டுத்தான் போகட்டுமே,அன்பின் மனிதர் தோழர் பரத்தின் கையால் இன்னொரு டீக்குடிக்கிறநாள்வரை/
தோழர் பரத் இதோ வருகிறோம்,உங்களதுகையால்ஒரு கடுன்டீக்குடிக்
கவும், மனிதகுல வாழ்வி யலை தன்னுள்ளேகதைகளாய், கவிதைகளாய், கட்டுரை களாய் இன்னும், இன்னுமானபல தத்துவயியல்களைதன்னுள்ளாய்பொதித்து வைத்துள்ள புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்லவுமாய்,இன்னொரு புத்தகச் சந்தைக்கு திட்டமிடவுமாய்/
12 comments:
வணக்கம்
கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புத்தகச்சந்தை நடத்தி புத்தகத்தைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நல்ல விசயம்தான்.
புத்தகச் சந்தை அவசியமானதொண்டு.
ரொம்ப சந்தோசமா இருக்கு
நம்ம ஊர் பேச்ச கேட்டு
நெறய நாளாச்சு
வாழ்த்துக்கள்
வணக்கம் பிரவுராம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
எந்த ஊர் சார் நீங்கள் ,எங்கு இருக்கிறீர்கள்?
வணக்கம் ஆத்மா சார் ,ரொம்ப நாளா ஆளைக்காணோமே எனப்பார்த்தேன்/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துர்ரைக்குமாக/
வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
புத்தகச் சந்தை அவசியம்வேண்டும்
அருமை
தம 1
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு சார்.
Post a Comment