23 Aug 2014

அடிநாதம்,,,,,,


பிறந்தகுழந்தைசாப்பிட வடை சுடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நீங்களோ நானோ,அவரோ ஏன்நம்மில்எவருமேகூடமுன்னெப்போதுமேகேள்விப்படாதஒன்றைசமீபகாலங்களாய்பார்த்தும், அனுபவித்தும் அறிகிறேன் நான்.
எங்களதுஅலுவலகத்திற்குவழக்கமாய்டீக் கொண்டு வருகிறவர்களின் கடையது. காலை, மாலை இருவேளையிலும்சூடாகவருகிறடீயில்களைப்பைப்போக்கிக்கொள்கிறஉத்தியைகற்றுவைத்திரு க்கிறஎங்களைப்போலவேஅவர்களும்டீயையும்,காபியையும்,உற்சாக பானமாய் தந்து ஊக்குவிப் பர்களாக/
ஏதோ ஒரு கம்பெனியின் பாக்கெட்ப் பால்,கொஞ்சம் தேயிலை,கொஞ்சம் சீனி மற்றும் கலந்து கட்டிய உணர்வு இவைகளுடன் அவ்வப்பொழுதும் எப்போதாவது மட்டுமாய் அந்த வடைகள் வருகை தருவதுண்டு டீயுடன் சேர்ந்து/
உள்ளங்கையின் நடுவே வைத்துப்பார்த்தால் ஒரு ரூபாய் அளவை விட சற்றே பெரிதாகக் காணப்படுகிற அவைகளை வீட்டிற்கு  வாங்கி வந்த ஒரு நாளில் என் மனைவி கேட்டாள்.எப்படி இந்த அளவை வடிவமைத்து பொறுமையாக சுட்டெடுக்கிறார்கள் என?
அவர்களுக்கு பிழைப்பே அதுதான் என ஆகிப்போன பின்பு சுட்டெடுக்காமல் என்ன செய்வார்கள் பாவம்.ஆண் துணையற்ற சனாதன விதவைப்பெண் பிழைப்பிற்கு வேறு என்ன செய்வாள்?.
கணவன் இருந்த போது நன்றாக ஓடிய கடையது.இட்லி, தோசை, மொச்சை,வடை என,,,,,அவர் ஒரு பிள்ளையையும் மனைவியையும் விட்டு விட்டுஅகாலத்தில் இறந்து போன பின்பு வேரந்த மரமாய் பிழைப்பிற்கு வழியற்று காற்றில் அல்லாடி நின்ற போது வேறென்னதான் செய்வார்கள் பாவம்/
டீக்கடையிலேயேவடைபோட்டு,இட்லிசுட்டு,மாவாட்டி,தோசைவார்த்து அடுப்புப்பாடு,குடும்பப் பாடு ,கடைப்பாடு என பார்த்தவர்கள் அவர் இல்லாமல் போய்விட்ட இந்த தினங்களில் வேறு என்னதான் செய்யத் துணிவார்கள் பாவம்? அல்லது அவர்கள் பிழைப்பிற்காய் வேறெந்த வழியை கைக்கொள்ள இயலும்?அவர்களும் முடிந்த வரை தங்கள்உழைப்பை கயிறாய் திரித்துக் கட்டிகடையை இழுத்துப்பார்த்தார்கள்,ம்கூம்,,அவர்களால்முடியவில்லை. கயிறின்  பிரி  பிரிந்து,  பிரிந்து  அறுந்து  ஒவ்வொரு நூலாய் தெரித்து விட்டுப்போன பரிதாபம் நிகழ்ந்த நாளில் அவர்கள் எடுத்த முடிவுதான் இந்த ஒரு ரூபாய் வடை போடுவது.
இறகு முளைக்காத பட்டாம் பூச்சிகளாய் பள்ளியின் வகுப்பறைகளுக்குள் தஞ்சம் புகுந்து பயில்கிற மாணவ,மாணவிகளுக்கு தினமும் காலையில் 50 வடையும் ,மாலையில் 50 வடையும் என சுட்டு உள்ளூர் பள்ளியின் பரந்து விரிந்த வளாகத்தில் ஒரு ரூபாய் வடேய்,,,,,, ஒருரூபாய் வடேய்,,,,,,,எனகூவிக்கூவிவிற்கிறவடைசாப்பிடுவதற்கும் சொல்வதற்கும் வெகு நன்றாகவே இருக்கிறது.
ஆகவேகொஞ்சம்கேலிகலந்துஅவர்கள்சுடுகிறவடையைஇப்படிசொல்ல வேண்டியிருக்கிறது.
பிறந்தகுழந்தைசாப்பிடவடைசுடுவதைகேள்விப்பட்டுள்ளீர்களாஎன?கேள்விப்படுங்கள் அந்த
கேள்விப்படுதலே அவர்களது வாழ்க்கையின் அடிநாதமாயும்,  ஆதாரசுருதியாயும்/

No comments:

Post a Comment