27 Aug 2014

ஏணிப்படி,,,,,



பஸ்ஸின்இடப்புறமாய்நீண்டிருந்தபக்கவாட்டுக்கண்ணாடியில்சாலையின்வலதுபுறம்
அமர்ந்திருந்த காட்சிப் பட்டு பிரதிபலிக்கிறது.
வேயப்பட்டிருந்தகடையின்கூரையும்,கூரைதாங்கிநின்றகுச்சிகளும், குச்சிகளினுள் பொதிந்து தெரிந்த கடையும் கலர் காண்பித்து தெரிந்ததாய்/
கல்லூரிக்குஎதிர்த்தாற்ப்போல் இருக்கிற கடை.வேறென்ன சுமந்து காட்சிப்பட்டுத் தெரியும்? டீயும்,சிகரெட்டும்,வாழைப்பழங்களும்,மிட்டாய் வகைகளுமாகவே/
நல்லகடை,மாணவர்களுக்கென அடைக்கலம் தருகிற இது மாதிரியான கல்லூரிக் கடைகள்மாணவிகளுக்குஇடமளிக்க மறுப்பது ஏன் எனத்தெரியவில்லை, அவச ஆத்தரத்திற்கோஒருசின்ன தாகத்திற்கோ அல்லது ஆசைக்கோ கூட ஒரு கடலை மிட்டாயையோ அல்லது டீயையோ வாங்கி குடித்து விட முடியாத நிலைமை காட்டியே/

நிற்க வேண்டிய நிறுத்தம் வந்ததுமாய் பஸ் நிற்கிறது இறங்க வேண்டியவர்கள் இறக்கம் கொள்ள வேண்டி/அவர்களும் இறங்குகிறார்கள்.கட்டாயம் இறங்கித்தான் ஆக வேண்டுமோ? என்கிற கேள்வி சுமந்தவர்களாய்.

அதுஇருபாலர்படிக்கும்கல்லூரி.ஆஙகிலத்தில்அதைகோ,அஜிகேஷன்என்கிறார்கள்.எஜிகே ஷனில்கோவைவிதைத்தவர்கள்சிந்தனைகளில்விதைத்திருக்கிறார்களாஎனத்
தெரியவில்லை.அல்லதுஅப்படிஅதுகாட்சிப்பட்டுத்தெரிகிறதாஎன்பதுவும் கேள்விக் குறியாகவே?

அதுவரைஅமளிதுமளிப்பட்டக்கொண்டிருந்தபஸ்அவர்கள்அனைவரும்இறங்கியது ம்என்னையும்சேர்த்துஎண்ணிபத்துப்பேரைமட்டுமேசுமந்துகொண்டுதனதுஓட்டத்தி ன் நீட்சியை நீட்டித்துத்  தொடர்கிறதாய்.

இந்தநேரத்துலவேறபஸ்ஒண்ணுஎக்ஸ்ட்ராவிட்டாத்தான்என்னவாம்,இப்படி காலே ஜ் ஸ்டூடண்ட்மட்டும்ஏறிகிட்டாபாஸஞ்சர்ஸ்நாங்க எங்க போறது?நாங்க பயணிக் கிறது எப்பிடி என்கிற கேள்வியுடனும்,முனுமுனுப்புடனுமாயும் தர்க்கரீதியான வாதப்பிரதிவாதங்களுடனுமாய்செல்போன்பாட்டுக்களுடனும்துளிர்த்துமுளைக்கிற சேட்டைகளுடனுமாய் ஊர்ந்த பஸ்ஸில் டிக்கெட் போடுவதற்குள்ளாக கண்டக்டர் எவரெஸ்ட் சிகரம் தொட்ட அலுப்பு கொள்கிறார்.

ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,,,,,,,,,எனகாட்சிப்பட்டுத்தெரிந்தமாணவ,மாணவிகளில் அந்தபஸ்நிறுத்ததில்இறங்கியவர்கள்குறைத்து40அல்லது50பேருக்கும்குறைவில்லாமல் இருக்கலாம்.அவர்கள்அனைவருமேஇளமைசுமந்தும்,பட்டுத்தெரித்ததுள்ளலுடனுமாய்/

அவரகள்யாவரும்ஒருவரைப்போலஒருவர்இருக்கவில்லை.அவர்களில்ஒருவர்அணிந்தி
ருந்த ஆடையைமற்றொருவர்உடல்சுமந்திருக்கவில்லை.ஆணிலும்,பெண்ணிலும் அப்படியேயாயும்வசதிப்பட்டும்,ஏழ்மைமிகுந்துமாய்காட்சிப்பட்டஅவர்கள்ஒவ்வொரு வராய் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள் கல்லூரியின் வாயிலை நோக்கி கூட்ட-மாயும்,ஒன்றன் பின் ஒன்றாயும், கலைந்து தெரிந்தவர்களாயும்/
கிட்டத்தட்டஎல்லோருமாய்பஸ்ஸை விட்டு இறங்கிவிட்ட நிலையில்கடைசியாக தனது சக மாணவனின் தோளை பிடித்துக்கொண்டு இறங்கிய மாணவனின் வலது கால் சற்றே வளைந்து காணப்படுவதாய்/

உடல்நடுங்கி,கால்தாங்கிசிறு,சிறு அடிகளாய் எட்டெடுத்துவைக்கிற அவனை தாங் கிச் சென்றசகமாணவன்அந்நேரம்அவன்பாரம் தாங்குகிறவனாயும் தோள்தாங்கிய உற்றதோழனாயும்இருக்கிறான்எனநினைத்தவாறுபஸ்சினுள்மிச்சமிருந்தபயணிகளில் நானும் ஒருவனாய் பயணிக்கிறேன்.

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

இரசிக்கவைக்கும் கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

உற்ற தோழனுக்கு உதவும் தோழமை ..சிறப்பு.!

Anonymous said...

அருமையான பதிவு. இவ்வுலகமே தோள்கொடுக்கும் தோழமை இருக்கும் வரை தான் இருக்கும். வழக்கம்போல் உங்கள் எழுத்து நடை டச்சிங் சார்...

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன் ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை...
கடைசிப் பாராவில் தோள் கொடுக்கும் தோழமையைக் காட்டியது சிறப்பு.

விச்சு said...

நண்பன் மட்டுமே அனைத்து விதங்களிலும் உதவி செய்யமுடியும்.

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த எண்ணப்பதிவு

தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/