29 Aug 2014

இச்சி மரம் சொன்ன கதை,,,,,,,


தூர்கள் பருத்த இச்சி மரங்கள் தன் தன் ஆளுமை காட்டியும்,ஆகுருதி காட்டி யும்,கிளைவிரித்தும்,இலைகளும்,பூவும் கனியுமாக/

இடமும்வலமுமாய்சேர்த்துமொத்தம்எத்தனைஎனச்சரியாகச்சொல்லமுடியா விட்டாலும் பத்து அல்லது பதினோரு மரங்களுக்குக்குறையாமல் இருக்க லாம்.எண்ணிப்பார்க்கவில்ல்லைஅல்லதுஎண்ணநேரமிருந்திருக்கவில்லை.

அன்றாடங்களின்யந்திரகதியில்இதெல்லாம்எங்கிட்டுஎன்பதுகூடஒருபக்கமா ய் இருந்தாலும் அதை கவனிக்க மனமற்ற தன்மையே இதற்கு முக்கிய காரண மாய் அமைந்துள்ளது

இவனுக்கு நினைவுதெரிந்துஎப்பொழுதுஅப்படிப்பார்த்தான்மரங்களை என்பது சரியாக ஞாபகமில்லை.ஆனால் நிச்சயம் அந்த மரங்களின் வயது ஐம்பதுக்குக் குறையாமல்இருக்கும்.அதன்கிளைகளும்,இலைகளும்,காய்களும்,,பழங்களும் அதன் தோற்றமும் பார்க்க நன்றாகவும் திகட்டாமலுமாய் இருந்திருக்கிறது இன்னும் இவனுள்ளாய்/

மண்பிளந்துதுளிர்த்துவளர்ந்து கிளை பரப்பி இலைகளும் பூவும் பிஞ்சும் காயும் கனிகளுமாய் காட்சிப்படுகிற மரத்தின் வரைவை இங்கு வரிசையாகவும் அது தப்பியுமாய் நட்டி தளிர்க்க விட்டது யாராக இருக்க முடியும் எனத்தெரியவில் லை ஊரன்றி வேறு யாராக இருக்க முடியும் என பலதடவைகளில் இவனுள் ளாய் சொல்லிக்கொண்ட போது கூட/

முதன்முதலாய்வண்டிக்காரநடராஜனுடன்வண்டியிலேறிவரும்போதுபார்த்து வியந்திருக்கிறான்.அதன் பருமனும் உயரமும் கண்டு

டவுனுக்குவந்திருந்தார்அன்றுஅவர்.கமிஷன்கடையில்பருத்திமூடைஇறக்கு
வதற்காக. மூடைகளை கமிசன் கடையில்இறக்கிவிட்டுமாடுகளைஅவிழ்த்து பொட்டலில்போட்டிருந்த போது இவன் பார்த்து விட்டான்.நடராஜன் டீக் கடை யில்நின்றிருந்தார் டீ கேட்டு அல்ல.கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த மண் பானையில் தண்ணீர் குடிப்பதற்காக

கடையின் வெளியில் அதன் வலது பக்கமாய் வைக்கப்பட்டிந்த மண் குடம் மிகவும்நன்றாகவேஇருக்கும்,சிவப்பான கலர் கொண்ட குடத்தின் மீது சிவப்புப் பெயிண்டைஅடித்துவைத்திருப்பார்கடையின்முதலாளி.பார்க்கநன்றாகஇருக்கு
ம்.நடராஜன்எப்போதுடவுனுக்கு வண்டியுடன் வந்தாலும் அந்தக்கடைக்கு வரா மல் போக மாட்டார்.

நடராஜன்இந்தஊர்இன்னார் எனத் தெரிந்ததில் இருந்து நடராஜன் தண்ணீர் குடித்துவிட்டுசற்றுஇளைப்பாறிப்போகலாம்என்கிறநினைப்பில்வருகிறநேரங்க ளில் எல்லாம்அந்தக்கடையின் முதலாளி நடராஜனுக்குஒரு மொச்சையும் வடையும் ஒரு ரத்தப்பொறிய லுமாய்தந்துவிடுவார். ”ஏய் சாப்புடப்பா சும்மா, ஒழைப்பாளிங்கவயித்தக்காயப்போடக்கூடாது,காசநான்ஓன்மொதலாளிகிட்ட வாங்கிக்கிடுறேன் என்பார்

அவர்மொதலாளிஎனச்சொன்னதுசின்னப்பாவை/சின்னப்பாவின்தோட்டத்திலும், தொழுவிலும்நடராஜன்வேலை பார்க்கிறார்.நடராஜனுடன்சேர்ந்து சின்னப்பா வும் மண்வெட்டி எடுத்து வெட்டிக்கொண்டிருப்பார். நடராஜன் தொழுவத்தில் வேலைசெய்துகொண்டிருக்கும்போதுசின்னப்பாதொழுவத்தில்மாட்டைகுளிப் பாட்டிக்கொண்டிருப்பார்.பெரும்பாலுமாய்நடராஜன்வேலைசெய்கிறதருணங்க
ளிலெல்லாம்சின்னப்பாவின்கரமும்சேர்ந்தே இருக்கும் அவருடன். இருவருக் குமான உழைப்பில் வேகமும்,இருவருக்குமான வேர்வையில் உழைப்பின் வரைவும் ஒன்றாய் சேர்ந்தே இருக்கும்.

மறு நாள் விடுமுறைதினமாய் இருந்தஒரு பள்ளி நாளுக்கு முன் தினமாய் பள்ளி விட்டு வருகையில் பார்த்து விடுகிறான் நடராஜனை.வழக்கம் போல் மாடுகளைஅவிழ்த்துப் போட்டுஅவர் இழைப்பாறிக் கொண்டிருந்த பொழுதொ ன்றில்/

வேரிக்கவிறுவிறுக்கவீட்டிற்குப்போய் புத்தகப் பையை எறிந்து விட்டு அப்படி யேவந்தவன்தான்வண்டியேறிவந்துவிட்டான்நடராஜனுடன் ஊருக்கு. அவன் அங்குவீட்டில்காணப்படாதலீவுநாட்களில் ஊருக்குத்தான் போயிருக் கூடும் என அவனது அம்மா யூகித்துக்கொள்வாள்.

அப்படிவந்தஅன்று முதன் முதலாய் பார்த்தமரங்கள்இத்தனையையும் அவன் மனதில் துளிர்க்கச்செய்வதாய்

வளைந்து செதுக்கப்பட்டிருந்த கூனனின் முதுகுபோல வண்டித்தடம் சுமந்து காணப்பட்ட பாதையின் வலது புறம் பரந்து விரிந்த கண்மாயும்,இடது புறம் பச்சை சுமந்த வயல் வெளிகளுமாய்.

வயல் வெளிகளில் நெற்பயிர் விளைந்து கிடக்கிற நாட்கள் தவிர்த்து கண்மா யில் தண்ணீர் கிடந்தால்வயல்வெளியெங்குமாய் பருத்தியும்,ஊடு பயிராய் தட்டாம் பயிரும்,தம்பட்டவரங்காய்ச்செடியும் கட்டம் கட்டியது போல் கத்திரிச் செடிகளையும் சிலரானால் வருவது வரட்டும் என மறுபடியுமாய் நெல்லை யும் விதைத்தார்கள். அதுவும் விளைந்து வரும் தனக்கு எதிர்ப்புறமாய் இருக் கிற கண்மாய்த் தண்ணீரின் ஈரவாடை குடித்து.

கண்மாயின்மடைநீரைத்திறந்துவிடுபவராகநடராஜனேஇருந்தார்.மடைக்குள் இறங்குவதற்கு முன் நடராஜன் கண்மாயில் ஒரு முங்கு,போட்டு விட்டு ஈர உடம்போடுதான் கால் வைப்பார்/

ஒரு மழை நாளின் மதியமாய் மடை இறங்கி தண்ணீர் திறந்து விடும் போது மடையின் வாயிலில் ஏதோ அடைப்பு இருப்பது போலத் தெரிய அவர் எப்போ தும் மடைக்குள்ளாய்சாத்திவைத்திருக்கும் நீளக்கம்பு கொண்டு மடையின் வாயிலைக்குத்திப்பார்த்திருக்கிறார்,கம்புவம்புபண்ணியிருக்கிறது,குத்துநழுவி பக்கவாட்டாகவே போயிருக்கிறது.இரண்டு மூன்று முறை குத்திப் பார்த்தும் ம்ஹூம்,,,, ஒன்றும்பிரயோஜனமில்லை

அப்பொழுதுதான்தண்ணீருக்குள்நின்றிருந்தஅவரது வலதுகாலைத் தொட்டுக் கொண்டுதலைமுடிபோன்றுஏதோஒன்றுபோயிருக்கிறதைஉணர்ந்திருக்கிறார். டக்கென கையிலிருந்த லாந்தரை இறக்கி காலை ஊனியிருந்த தண்ணீர் வெளியில்பார்க்கிறார்.காலைத்தொட்டுபோனமுடியைத்தொடர்ந்துஇன்னொரு ன்றுமாய் நீநீநீ,,,,ளம்காட்டிவருகிறது. காலைத்தொட்ட முடி லேசாய் ஓடிய தண்ணீரில்கடந்துபோகும்முன்னாய் அதைகையிலெடுத்து பார்த்திருக்கிறார். அப்பொழுதான்உணர்ந்திருக்கிறார்.இதுஒருஇளம்பெண்ணின்இளவயதுடைய முடி.இதுஎப்படிஎனமனம்பதைத்தவராகவும்,”அடசண்டாளத்தனமேமோசமாய் ஏதும்நடந்துவிட்டிருக்கக்கூடாதுஎனவுமாய்மனம்பதைக்க மடைச் சுவற்றின் மேலேறி வருகிறார்.

வந்தவர்நேராய்மடைவாயிலுக்குச்சென்று குனிகிறார்,குனிந்த மறு நிமிடம் தூக்கி எறியப்பட்டவர் போல் மன்ம் பதறி பின் வாங்குகிறார்,

”அடநம்மகோவிந்தையாவின்இளையமகள்.எப்படிஇதுநிறைந்தமழைமாதத்தில் இப்படியானஇடி மின்னல் பொழுதில் வெட்டுக்கிடங்கு நிறைந்த இடத்தில் குளிக்கவந்திருப்பாளோ?சண்டாளத்தனமேநல்லாநீச்சல்தெரிஞ்சபுள்ளைக்கே  இப்பிடின்னா”,,,,,,?

பின்நாளில்தான்சொன்னார்கள்,கூட்டாளிகளுடன்சேர்ந்துவீட்டுக்குத்தெரியா
மல் குளிக்கவந்தவள்குளித்து முடித்துவிட்டு கிளம்பும் போது துவைத்து வைத்ததுணிகளைபிளிந்துஎடுத்துவருகிறேன்.கிளம்புங்கள்எனகூடவந்தவர்களை அனுப்பிவிட்டு மனம் நிரம்பிய ஆசையுடன் திரும்பவும் ஒருமுறை நீந்தி வந்திருக்கிறாள் கண்மாயின் பரப்பெங்குமாய்/

கட்டாமல்விடப்பட்டநீளமான தலைமுடி மடைக்குழிஅருகில்வந்துநீச்சலடி த்துத் திரும்பும் போதுமடைக்குள் நோக்கி உள்ளிழுக்க நீச்சலின்வேகத்தில் ஒருமுறை மடைக்குழியைகடந்துவிட்டாள்,மறுமுறையும்கடந்துவிட்டாள். மூன்றாவதுமுறைமடையருகேவரும்போதுதான்மொத்ததலைமுடியும்மடைக்
குழிக்குள்ளேஇழுக்கப்பட்டு,இழுக்கப்பட்டதலைமுடிஅங்கிருந்தமடைக்குழிக்கு முன்னாலும்,மடைவாயிலுக்குநடுவிலாய்நடப்பட்டிருந்தஇரண்டரைஅடிஉயரக் கல்லில்சிக்கிசுத்திக்கொள்கிறது.

தப்பிக்கமுடியாதஅவள்கைகாலைஅசைத்துப்பார்த்தும்,முக்குளித்து,முக்குளித்து எழுந்தும் மூச்சடிக்கிப்பார்த்தும்,பயமாயும், பதட்டமாயும் எவ்வளவு பலமாய் சப்தமெழுப்பிப்பார்த்தும் கூடமுடியாமல்போனமுயற்சிஅவளை தண்ணீருக் குள்ளாய் மூழ்கடித்து விடுகிறது,தண்ணீருக்குள்ளாய் மீன் குஞ்சுபோல் நீந்திதிரிந்தஅவள் இதுவரைஇவ்வளவுசங்கடாமாயும் பயமாயும்உணர்ந்ததி ல்லை.

பயமென்றுகூடஅவளுக்குஅறிச்சித்தட்டவில்லை. அவளுக்கு சாகப் போகிற கணம் வரை/

ஆனால்இறந்துவிட்டாள்.உயிர்தப்பிக்கஅவள்செய்தஎந்தபிரம்மபகீரதமுயற்சி
யும் அவளுக்கு கைகொடுக்கவில்லை. உயிரற்ற உடலாய்மடைக் குழியின் வாயிலுக்கு முன்னால் இருக்கிற இரண்டரை அடிக் கல்லில் தலை தட்டி ஆடி நிற்கிறதாய் காட்சிப்படுகிறது நடராஜனுக்கும், அவளது வீட்டாருக்கு மாய்/

அவளைசுடுகாட்டுக்குக்கொண்டுபோகும்முன்பாக அவளது தலை முடியை மட்டும்கத்தரித்துஎடுத்துவீட்டில்வைத்துக்கொண்டாள்அவளதுஅம்மா.அவளது அம்மாஅவளைஎப்படிபாதுகாத்துவந்தாளோஅதை விடவும்மிகவும் கண்ணும் கருத்துமாய் அவளது தலை முடியை பாதுகாத்து வந்தாள்.ஊர் பெண்களே பொறாமைப்படும் முடி அவளது கூந்தல்.தொடைக்கும் கீழ் வரைக்குமாய் தொங்கும் அவளதுகூந்தல்போல அந்த ஊரில் இருக்கிற வயசுப் பெண்கள் யாருக்கும்இருந்தததில்லை.கடைசியில்அவளதுமுடியேஅவளுக்கு எமனாய் வந்துவாய்த்ததுவிதியின்பலனா,அல்லதுஅவளதுதலைஎழுத்தா?தெரியவில்
லை என்றார்கள்.

வாரத்திற்குஇருமுறைசீகக்காய்போட்டுகுளுப்பாட்டியும்,சாம்பிராணிபோட்டு பாதுகாத்துமாய் வந்த முடி அவளது வீட்டில் அவளது அம்மாவால் துணிப் பையில் போட்டு வைக்கப்பட்டு/

அவள்இறந்து போனமூன்றாம் மாதத்தின் ஒரு நிறைஅமாவாசைஇரவன்று தெருவில்இறங்கிபித்துப்பிடித்தது போல்ஓடிய அவளதுஅம்மாவை.மறுநாள் மதியம்கலுங்குக்காட்டைதாண்டிஇருக்கிறவன்னிவேலாமரக்கல்லுக்கிடங்கில் இறந்து கிடக்கிறாள் எனசொன்னார்கள்.

மிகச்சரியாகஅவள்மகளைகண்மாயிலிருந்துஉயிரற்றஉடலாய்தூக்கிவந்தஅதே மத்தியான வேளையில்தான் தூக்கி வந்தார்கள். 

வீட்டிற்குக்கொண்டுவரவில்லை.கல்லுக்கிடங்கிலிருந்தேசுடுகாட்டுக்குதூக்கிப் போய்விட்டார்கள்.சுடுகாட்டில்படுக்கவைத்துஎரிக்கும்போதுதான்பார்த்திருக்கிறார்கள் அவளது மகளின் வெட்டப்பட்டகூந்தலை இடுப்பிலேயே வைத்து கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்.

கிட்டத்தட்டஅவள் அம்மாதிரியாய்பித்துப்பிடித்துஓடுவதற்குஒருவாரம் முன் பிலிருந்துஇப்படித்தான்மகளின்வெட்டப்பட்டகூந்தலைசேலைக்குள்ளாய்
வைத்து மடியிலும்,இடுப்பிலுமாய் கட்டிக்கொண்டு இருந்திருக்கிறாள் என சுடுகாட்டில் அவளது உடல் எரியும்போதுஅவளதுகணவர்கோவிந்தைய்யா போட்டகூச்சல்அங்கிருந்தஅனைவரின் மனதையும் நெகிழ்வுற செய்ததாய் இருந்தது. 

தாகம்கொண்டுதலையாட்டிக்கொண்டிருக்கும்நெற்பயிரையும்,பருத்தி,வெண்டைதட்டான்பயிரையும் கத்தரிச்செடிகளையும்குளிர்ந்த மேகம் கொண்டிருக்கிற மென் காற்றையும், மெளிர்மிளிர்வையும் கடந்து பறந்து வருகிற பறவைகள்இச்சிமரஇலைகள் கடந்துஅவற்றினூடாய்கனிந்துநிற்கிற சிவப்புப்பழங்களைத் தின்ன ஓடோடி வருவதாய்/

இறகுதிர்க்கிறபறவைகள்தன் சிறகு விரித்து வந்தமர்கிற வேளை அதற்குத் தெரிவதில்லைஅதன்வளர்ச்சியும் ஆகுருதியும்/முரட்டுத்தன வெண்மையில் பட்டைஉதிர்ந்தும்,முரட்டு இலைகள் காட்டியுமாய்நிற்கிறஅவைகள் மேற்கு நோக்கி ஓடுகிற வண்டிப்பாதையை தார் ரோடாய் மாற்றிய முகத்துடன் காட்சிப்பட்டஅதன்இடமும்,வலமுமாய் அளவெடுத்து ஒட்டவைக்கப்பட்டது போல்/

ஊருக்குள்ளிருந்து கரையின் மேடேறினால்தெரிகிற நீளரோட்டில் வலதும் இடதுமாய்இருக்கிறமரங்களில்மடைஇருக்கிற மூன்றாவது இச்சி மரத்தின் கீழ்தான்அவள் நின்றிருந்தாள் தக்காளிக்கூடையோடு அந்தமழைமாதத்தில் காலை வேளையாக ஒரு நாள்/

”சீக்கிரம்போய்தக்காளிக்கூடைகளைமார்க்கெட்டில்சேர்க்கவேண்டும்.இல்லை யென்றால்விலை போகாமல் நின்று விடுகிறஆபத்துஉண்டு”.எனச்சொன்ன அவள் இவனுக்கு அத்தை முறை வேண்டும்,பக்கத்து வீட்டு மதினியிடம் இவள் எப்படி எனக்கு அத்தை முறை வேண்டுமெனக் கேட்டதற்கு ”ஆமா,,, அவஅத்தைமொறஇல்லாட்டிஎன்னகொறஞ்சு போச்சாம் இப்ப,,? அவளுக்கு என்ன மொறா வேண்டிக்கெடக்கு மொற ஊரு,,,,,,,,,,,,,,ஆமா நீயி எதுக்கு திடீர்ன்னு அவளப்பத்தி கேக்குற,ஒழுக்கமா இருக்கப்பாரு”,எனச்சொன்ன மதினியிடம் சும்மாதான் தெரிஞ்சிக்கிறதுக்காகக்கேட்டேன்.என்றான், 

“நம்மளமாதிரிபொழப்பு தேடிபூர்வீகம்விட்டுவேரறுத்து வந்த வேத்து ஜாதி ஆள்களுக்குள்ளஆதரவானஒருபழக்கத்த முடிஞ்சி வச்சிருக்குது ஊரு. அது எப்பவந்ததுன்னுதெரியலஅந்தமாதிரியானஒறவுகள்லஅவஒனக்குஅத்தை. அவ்வளவுதான்,

”இன்னைக்குதக்காளிக்கூடையோடநின்னவஒன்னையகூட்டிட்டுபோனாலும் போயிருவாசைஸா.பாத்துஇரு,என்னத்தையோஅவபுருசன்பழக்கத்துக்காவும்,  அவபுள்ளமொகத்துக்காவும்தான்இன்னும் அவ வண்டி ஓடிக்கிட்டு இருக்கு/” என முடித்தாள்.

அவளதுமகளுக்கு19வயதுஇருக்கலாம்.அவளுக்கு இவன் மேல் எப்போதுமே ஒரு தனிப்பிரியம் இருந்ததுண்டு/

தோட்டத்தில்விளைந்துநின்றகம்மங்கதிரினூடாக பண்ணரிவாளுடன் அவள் நின்றிருந்தபொழுதுகருதுவாங்குவதற்காய்இவன் சாக்கோடு அவள் எதிரில் போய் நின்ற தினங்கள் இப்பொழுதும் மறக்கமுடியாதவை.

காலையில்ஆறரைமணிக்கெல்லாம்தோட்டத்திற்கு போய் விட்டான் இவன். அதற்குமுன்பாகவேவந்துவிட்டிருப்பாள் போலும் அவள். அரைக் குறுக்கம் தோட்டத்தில்விளைந்துநின்றகம்மங்கதிர்கள்தலையாட்ட கதிர்களை பிளந்து ஊடாடி வந்த குரலாய் அவளது பாட்டுச்சத்தம் இருந்தது.

சினிமாப்பாடல்அல்லாதஒருநாட்டுப்புறபாடல்அது.ரத்தமும்சதையும் உயிர்ப் புமாய்அதுகாற்றில்மிதந்துவரவர பாடலை இவன் நெருங்கினானா அல்லது பாடல்இவனை நெருங்குகிறதா என்பதுதெரியாமலேயேபோய்க்கொண்டிரு ந்தான்.

மோட்டார் ரூம்,கிணறு, கத்திரி நாத்து பாவிய இடம் ,மிளகாய்ச்செடி என எல்லாம்தாண்டிப்போனபோது கம்மங்கதிர் விளைந்து நின்றஅரைக்குறுக்க மண்ணின்வாசலின்வாய்க்கால்கரையில்அமர்ந்துபாடிக் கொண்டிருந்தாள்.  மெய்மறந்து.

பாடலின்ஊடாக அவளே வாயால் இசையையும்வாசித்துக் கொண்டாள். கைக்கட்டிநின்றவாறுஇவனும்பாடலைகேட்டவாறுஇருக்க ஆளரவம் கேட்ட அவள் எழுந்து ஓடிவிட்டாள் முகத்தை மூடிக்கொண்டவாறு/

ஆமாம் என்னாடி இது ஒன்னைய கம்மங்கதிரு அறுக்கக் கூப்புட்டாங்களா இல்ல,,,,,, என இவன் பின்னாடியே வந்த சின்னக்கா சித்தியும் மூக்கமக்காவும் சேர்த்து சப்தம் போட்டபோதுஏய்,,,,,சும்மாஇருங்கடி பெரிய இவள்களாட்டம்,, ”வீட்ல அவுக அம்மா புடுங்குக்கு ஆத்தமாட்டாமத்தான் இந்த மாதிரி வேலைக்கு வர்ர யெடங்கள்ல பாடி அவ மனச ஆத்திக்கிறா,அது ஒங்களுக்குப் பொறுக் கலை யா?” என்றாள் நாகம்மா அத்தை.

அன்று அவர்கள் போட்ட சத்ததிற்கும் ,கேலிக்கும் நடுவாய் வேலை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு பேச்சு வந்தது.

இந்தப்பாட்டுக்காரி மட்டும் தம்பியோட ஆள்களா இருந்தா நாமளே போயி சம்பந்தம் பேசி இவுக ரெண்டு பேரையும் புருசன் பொஞ்சாதி ஆக்கிப்புடலாம். ஹிம் எங்க நம்ம ஒண்ணு நெனைச்சா அது ஒண்ணு நடக்குது,எந்தெந்த கம்மங் காட்டுல இப்பிடி எத்தன ஜீவன்க மனசுல ஆசைய வளத்து வச்சிக்கிட்டு அலையுதுகளோ பாவம்.”என அன்று காட்டில் நிலவிய பேச்சு தோள் அளவுக்கு மகள் வளர்ந்து நிற்கிற இந்த நாட்களிலும் எப்போதாவது வருவதாக/
அப்படியான ஞாபங்களைச்சுமக்கிறநாட்களிலும்இன்றும்  தூர்கள் பருத்த இச்சி மரங்கள்தன்ஆளுமைகாட்டியும்,ஆகுருதிகாட்டியும்,கிளைவிரித்தும்,இலைகளும், பூவும் காயும்,கனியுமாய் உயிர்ப்புடன்/

8 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.
இறுதியில் சொல்லி முடித்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம 1

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

மடை திறந்துவிடுவது, அதில் நீச்சல் அடிக்கும் கிராமத்துப்பெண்கள், இறந்த பெண்ணின் தாயார் பைத்தியம் ஆவது என வாழ்வியல் நடைமுறைகளை அழகாக எழுதியுள்ளீர்கள்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக./

கோமதி அரசு said...

கதை மனதை கனக்க வைத்து விட்டது.