31 Aug 2014

மணல் கப்பி,,,,



கப்பி மணல் தட்டியிருந்த அதே இடத்தில்தான் இன்றும் போய் நிற்கிறான், போன நேரம் மதியம் 12.15தாய் இருந்தது.

வீட்டிலேயே ஒருதடவை போய்விட்டான்,இப்பொழுதுஇங்குமாய்வருகிறது. கிளம்பும்போதேநினைத்துக் கொண்டு வந்ததுதான்.காலை ஆறரை மணிக்கு எழுந்ததிலிருந்துவீட்டைவிட்டுகிளம்புகிற11.45வரைநான்குமுறையாவதுடீ
சாப்பிட்டுருப்பான்.,இதுபோதாதுஎனஇடைஇடையே தண்ணீர் வேறு. காலை யில்எழுந்ததும்வழக்கமாய்குடிக்கிறஒருசெம்பு தண்ணீரும் இதில் சேர்த்தி/ 

காலையில்பல்விலக்கிக்கொண்டேவீட்டின்கொல்லைவெளியில்முளைத்துக் கிடந்தசெடிகளைபிடுங்கிக்கொண்டிருந்தான்,இவன்மனைவிகூடக்கேட்டாள்,

என்னசெய்கீறீர்கள்இப்பொழுது?ஒன்றுபல்லைவிளக்குங்கள்அல்லதுசெடியைப் பிடுங்குங்கள்,இப்படிரெண்டும்கெட்டான்தனமாய்,,,,,?வேண்டுமானால்பிள்ளை களைவரச்சொல்லட்டுமாகூடமாடஒத்தாசைக்கு என மனைவி கேட்கவும் சின்னமகள்வேண்டுமானால்ஒத்தாசைக்குவந்துநிற்பாள்.பெரியமகள்அசைய மாட்டாளே சோம்பேரி,என்னசெய்கிறாள் இப்பொழுதுகையில்டீடம்ளருடன் டீ.விபார்த்துகொண்டிருக்கிறாளா?சரிவிடுநம்பாடுநம்மோடு.அவளைரொம்பவும் தான்போட்டுவற்புறுத்தவேண்டாம்,நாம்சொல்வது யாவும் அவளுக்கு அறிவு ரையாகவோ அல்லது ஏதோ ஒன்றை வற்புறுத்தி திணிப்பது போல்தான் இருக்கும்,விடு இதுதானே அவளுக்கு படிப்பு கடைசி வருடம், முடிக்கட்டும் முடித்த கையோடு எங்காவது நல்ல இடமாய்ப் பார்த்து கட்டிக் கொடுத்து விடலாம்.போகிறஇடத்தில்புரிந்துகொள்வாள்,நாம் சொன்னதெல்லாம் நல்ல திற்கா,கெட்டதிற்காவென/

சரிவிடுங்கள்எத்தனைமுறைதான்இதையேதிரும்பத்திரும்பவுமாய்பேசிக்
கொண்டிருப்பீர்கள்/அவளுக்குகேட்டுவைக்கப்போகிறது.பின்அதற்கும் மூஞ்சி யைதூக்கிவைத்துக்கொண்டுதிரிவாள்.சரிவாருங்கள்சீக்கிரம்மிச்சவேலையை மாலைஅல்லதுஇன்னொருநாள்பார்த்துக்கொள்ளலாம்,வெயில்ஏறிக்கொண்டே போகிறதுஎன அவள் சொல்லிவிட்டு போனதற்குஅப்புறம்குளித்துசாப்பிட்டு கிளம்பி இங்கு பஜார் வந்த பின்னாய் வருகிற முன் பின் யோசனைகளி லும், மனப் பேச்சுக்களிலும் இதுவும் ஒன்றாய் இருக்கிறது.,

மேம்பாலத்தின் வழியாகத்தான் வந்தான் இரு சக்கரவாகனத்தில்,நாலாவது ரயில்வே கேட் வழியாகத்தான் பஜாருக்கு ச்செல்வது இவனது வழக்கமாய் இருந்தது. 

ஆனால் நேற்று இவனும் மனைவியுமாய் பலசரக்கு வாங்கி வரும்போது கேட் ரிப்பேர்எனமூடி வைத்திருந்தார்கள்.வேகமாகக்கூடஅல்ல மிதமாகவே வந்தபோதும்கூடகேட்ரிப்பேரினால்ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டது .சரிஎவ்வளவுநேரம்ஆகும் எனதெரியவில்லை,சரிசெய்வதற்குள்மேம்பாலம் வழியாகவோஅல்லதுஇரண்டாவதுகேட்தெரு வழியாகவோ போய்விடலாம் எனநினைத்தநேரம் சக்ஸஸ் என்கிற குரல் கேட்காமல் கேட் திறக்கப்பட்டு விடுகிறது, 

“போச்சா,ஆசையாய்வளர்த்துவைத்திருந்தஎண்ணத்தில்மண்ணா,,,,?மேம்பாலம் வழியாகப்போகிறசாக்கில்எங்காவதுஒருகடையில்சாப்பிட்டுவிட்டுப்போகலாம் என்கிறதானநினைப்பில்மண்,ரொம்பவும் வருடங்கள் ஆகிப்போனது, இப்படி மனைவியுடன்வெளியில்வருகிறதினங்களில்ஹோட்டலுக்குப்போய்,டீசாப்பிட எங்காவதுநின்றுஎன,,,,,/அப்படியேசாப்பிட்டு விட்டு வீட்டிலிருக்கிற இரண்டு கைக்குழந்தைகளுக்கும்(?) பார்சல்வாங்கிக்கொண்டுபோகலாம்என்கிறதாய் நினைப்பு.

ரிப்பேர்ப்பண்ணியவரை சபித்தானவனாய் நொந்து கொண்டு கிளம்புகிறான். மனைவியிடம்சொன்னபோதுசிரித்தாள்,நீங்களாவது,,,,,,,,,,
”கல்யாணம்முடிஞ்ச மறுநாளு ஒரு பழைய சோகப்படத்துக்கு கூட்டீட்டுப் போன ஆளுல்ல நீங்க,அன்னைக்கிசினிமாதியேட்டர்ல இருந்து நீந்திதான் வெளிய வர வேண்டி யிருந்துச்சு,ஏதோ நீச்சல் தெரிஞ்சதால் தப்பிச்சோம் அன்னைக்கி ரெண்டு பேரும். அவ்வளவு கண்ணீரு தியேட்டரு பூராம் என அவள்சொல்கிறதினங்களில்எல்லாம்சரி,சரி கம்பெனி சீக்ரெட்ட வெளியில சொல்லப்புடாது என்றவனாய்த் தான் சொல்லி மழுப்பி வந்திருக்கிறான்,
அதன்படியேஅன்றும்சொல்லிசமாளித்துக்கூட்டிவந்தான்.பலசரக்குவாங்கியாகி விட்டதுஇனிகாய்கறிவாங்கபோகவேண்டும்காலையில்.போகிறபோதுஅரிசிக் கடையில்பாக்கியைக்கொடுத்துவிட்டுஅரிசிக்குசொல்லிவிட்டுப்போகவேண்டும், சொல்லிவிட்டுப்போய்விட்டால்போதும்அவர்கள்வீட்டுக்குகொண்டுவந்து
விடுவார்கள்.எனஇவனும்மனைவியுமாய்நேற்று இரவு பேசிக் கொண்ட படி அரிசிக்கடையில்பணம்கொடுத்துவிட்டுஅரிசிக்குச்சொல்லிவிட்டு பஜாருக்கு காய்வாங்க வந்து நிற்கையில்தான் இம்மாதிரியாய் ஒன்று உருவெடுத்து முன் நிற்கிறது,

பஜார்போகிறநேரங்களிலெல்லாம்ஒண்ணுக்கெனவந்து விட்டால் அவசரம் கருதிஇவன்போகிறஇடம்இதுதான்.நேற்று இரவுஇங்கு பாத்ரூம் வந்த போது குவித்துக் காணப் பட்டகப்பிமணல்இப்போதும்.

ரோட்டோரமாய்இருந்தவெள்ளையடிக்கப்பட்டிருந்தசுவரைஒட்டிகுவிக்கப்பட்டி ருந்தகப்பிமணல்அரைலோடாவதுதேறும்,எவ்வளவுதான்சுவர்ஒட்டிகுவிக்கப்
பட்டிருந்த போதும் கூட அதன் ஓரத்தில் சைக்கிள் டயரின் தடமும், இரு சக்கர வாகனத்தின்தடமுமாய்காணப்பட்டது,

பாத்ரூமிற்குள்ளாய்போய் வரும்போது தான் பார்த்தான், வண்டியை எடுத்து நகட்டி உருட்டுகையில்தான் பாத்ரூம் இருந்ததெருவின் நுழைவாயிலில் வயதுமுதிர்ந்தயானை பாகனைச்சுமந்தவாறு வந்துகொண்டிருந்தது,

தெருவின் இடது புறமாய் இருக்கிற கோயிலில் புதிதாய் சிலை ஏதும் பிரதிஷ்டைசெய்திருந்தார்களா அல்லது வேறு ஏதேமாய் விஷேசமா எனத் தெரியவில்லை,பொங்கல்வைத்துவினியோகம் செய்து கொண்டிருந்தார்கள், பொங்கல்வாங்கவும் சாமி கும்பிடவுமாய் வந்து போய்க்கொண்டிருந்தவர்க ளோடுயானையும்போய்நின்றபோது இலையில் சுருட்டிய பொங்கலையும் வாழைப்பழத்தையும் தனித்தனியே கொடுத்த பூசாரி குனிந்து யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிகொண்டார்.

வலதுபுறமாய்இருந்தபெட்டிக்கடையில்இரண்டுவாழைப்பழங்களைவாங்கிக் கொண்டுயானைநகன்றுவந்தபோதுஇருசக்கரவாகனத்தைஎடுத்துக்கொண்டு கிளம்பிய இவன் நின்று விடுகிறான் யானை எதிர்பட/

பையினுள் விட்ட கையில் எவ்வளவுசிக்கியது எனத்தெரியவில்லை.எடுத்து
யானையின் கையில் கொடுக்க கைநீட்டியபோது யானை இவனுக்குப் பின்னால் இரண்டுபேர்கொடுத்த வாழைபழங்களை வாங்கியது,பின் இவன் நீட்டியகையிலிருந்தகாசைவாங்கிக்கொண்டு தும்பிகையால் இடது தோள்ப் பக்கமாய் ஒத்தி எடுத்தது கனமான முரட்டு தும்பிக்கை. அதன் தும்பிக்கை ரோமங்களையும்மூச்சுக்காற்றையும்இப்பொழுதான் இவ்வளவு நெருக்கமாக பார்க்கவும் உணரவும் செய்கிறான்,

யானைபோகவும்இவன்இருசக்கரவாகனத்தைஎடுத்துக்கொண்டுகிளம்பவுமான நிகழ்வுநடைபெற்றநேரம் திரும்பவுமாய் ஒரு முறை இவனை அறியாமல் கப்பிமணல்கொட்டிவைக்கப்பட்டிருந்தஇடத்திற்கு போய்வருகிறது விழிகள்.
விழிவழிவந்த செய்தி என்னவாய் இருந்தபோதிலும்கூடஇது மாதிரியான கப்பிமணலையும்,கட்டிடம்இடிக்கப்பட்டுரோட்டோரமாய்குவிக்கப்பட்டுக்
கிடக்கிறதைப்பார்க்கிறபோதும்பார்த்தகணத்தில்அப்படியேஅங்கேயேஅமர்ந்து இருகைகளாலும் மென்மையாய் அள்ளி சாக்கில் போட்டுகொண்டு தனது ஒருசக்கரவாகனத்தின்முன்னாய்வைத்துக்கொண்டுபோய்விடவேண்டும்
என்கிறஆவல்எழுகிறதுண்டு.கொஞ்சம்அதிகமாய்இருந்தால்வண்டி அல்லது ட்ராக்டர் வைத்து அள்ளிக் கொண்டு போய்விடலாம் என்கிறாய் மேலிடு கிறது எண்ணம், 

பெரும்பாலுமாய்ஆர்,எம்,ஆர்ரோட்டைகடக்கிற தருணங்களிலெல்லாம் இது மாதிரியானநினைப்பிற்குகொஞ்சம்பலம்கூடுவதுண்டு.

அந்தத்தெருவில் இருக்கிற வீடுகளில் தான் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்,வீட்டின்காம்பவுண்டுச்சுவரைஇடிக்க,திரும்பக்கட்ட,சுவர்களில்  இருக்கிறசிறுசிறு விரிசல்களை பூச,பின் வீட்டின் முன் இருக்கிற படிக்கட் டுகளைஇடித்து துப்புறவாய் துடைத்து எடுத்து விட்டு திரும்பவுமாய் கட்ட,, ,,,,,எனஏதாவது செய்து கொண்டிருப்பார்கள்.

அப்படியான நாட்களில் அங்கு விழும் கட்டிடம் இடிக்கப்பட மண், சலிக்கப் பட்ட கப்பி மணல் எல்லாம் அந்தத்தெருவில் இருக்கிற குப்பைக்கிடங்கின் அருகில் குவிக்கப்பட்டுக் கிடக்கும்.

அது மாதிரியானவைகளை அள்ளிக்கொண்டு வந்து இவனது வீட்டின் பக்க வாட்டில் இருக்கிற வெற்று வெளியில்போட்டுபரப்பிவிடலாம்என்கிறதாய் இவனது எண்ணம்/

கப்பியைப்போட்டால் நன்றாகத்தான் இருக்கும்,அதை விட கட்டிடம் இடித்த மண் என்றால் அது சுண்ணாம்பும் செங்கலுமாய் இருக்கும்.பரப்பி விட்டு திம்ஸ்க்கட்டை கொண்டு இருக்கி மேலே தண்ணீர் ஊற்றி அல்லது மழை பெய்துஇறுகி விட்டால் சிமிண்ட் தரை போலஇருக்கும்என்பார்கள்.ஆனால் பரப்பிய கட்டிட மண்ணை திம்ஸ் கட்டைகொண்டு குத்த சம்பளத்திற்கு ஆள் கூப்பிட வேண்டும்.

நிமிந்தாள் சம்பளம் நானூறு நெருங்கி வருகிறது.அது சரி எட்டு மணி நேரம் பேன் காற்றிலும்,ட்யூப் லைட் ஏசி சுகந்ததிலுமாய் அமர்ந்து வேலை பார்க்கிற அலுவலக ஊழியர்களின் சம்பளம் ஐந்து லகரங்களில் இருக்கிற போது எட்டு மணி நேரத்திற்கும் மேலாய் வியர்வை சிந்தி உழைக்கிற உடல் உழைப்பாளிகளின் சம்பளம் நானூறுக்கு அருகில் இருப்பதில் என்ன ஆச்சரியம்இருக்கமுடியும்?விற்கிறவிலைவாசி அப்படி,,,?என்பாள் மனைவி.
ஒரு டீ,ஒரு வடை எடுத்தால் ரூபாய் 11 ஆகிப்போகிறது.இதில் ஒரு டீபத்து ரூபாய்எனச்சொல்கிற கடைகளெல்லாம் இருக்கிறது.

இவன் பெரும்பாலுமாய் அந்தப்பக்கம் பத்து ரூபாய் கடைப்பக்கமாய் போக நேர்கிறகணங்களிலெல்லாம்கையில்காசிருந்தபோதும் கூட மறந்து போய்க் கூடஅந்தக்கடைக்குப்போனதில்லை.இதோ இந்த பாத்ரூம் இருக்கிற ஏரியா வில் உள்ள டீக்கடையில் சிம்பிளாக விலைக் குறைச்சலான டீக்குடித்து விட்டு கிளம்பிவிடுவான்,

இன்றுஅப்படியாய்கிளம்புகிறபொழுதுபாத்ரூமின்எதிர்புறமாய்வெள்ளைஅடிக்க
ப்பட்டிருந்தசுவரின்அருகாமையாய்குவிக்கப்பட்டிருந்தகப்பிமணலைப்பார்த்த வாறு கிளம்புகிறான்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

கதை நன்று அண்ணா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
நன்றி
தம 1

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/