10 Aug 2014

அடையாளம்,,,,,



நகரின் நெரிசலான  நாற்ச் சந்திப்பு சாலை அது.
அதன் இடது முனைதிருப்பத்தில்இருக்கிறது அந்தபெட்டிக்கடை.அதில் இல்லா த  வியாபாரம் கம்மிதான்.
பீடி, சிகரெட், கடலை மிட்டாய்,வாழைப் பழம் என ஒரு பெட்டிக்கடையை அடையாளப் படுத்தும் வகைகளுடன் சேர்த்து தினசரி பேப்பர்களும் குமுதம், ஆனந்த விகடன் இப்படியான வாராந்திர,மாதாந்திர ஏடுகளும் கிடைத்தன.
 நகரில் எங்கும் கிடைக்காத சார்மினார் சிகரெட்டை எனது நண்பர் அங்குதான் வாங்குவார்.
 இருபத்தைந்து வருடங்களாக அங்கு அமர்ந்திருக்கும் அந்தக்கடையை 'அக்கா கடை' என்றார்கள்.  

 அக்கா கடை என்கிற பெயர்தான் நிலைத்துவிட்டதே, இனி நாம் எதற்கு? என அந்த வீட்டின் ஆண்களும் கடை வியாபாரத்தில் நிற்பது அரிதாகிப் போனது.
கடையைஒரு பெண்தான் நிர்வகித்தார். "என்ன வேணும்"என்கிற அவரது அதட் டலான கட்டை குரலே அந்தக் கடையின் சுழலை தூரத்திலிருந்து அறிமுகப் படுத்தும்.அவர்கள் திருநெல்வேலியிலிருந்துஇந்த ஊருக்கு வந் து பிழைக்க கதியற்று நின்றபோது இந்த பெட்டிக் கடைதான் அவர்களுக்கு கை கொடுத் திருக்கிறது.
 இருபத்தைந்து வருட வாழ்க்கையின் தளும்புகள் சுவடுகளாக அவர்க ளுள்.
 எத்தனைவிதமானமனிதர்கள்,எத்தனை விதமானசூழல்கள், எத்தனை விதமான சகிப்புத்தன்மைகள் என இன்னும் இன்னுமான அத்தனை விதமா ன சமூக சீண் டல்களுக்கும்,தீண்டல்களுக்கும்மத்தியில் குடும்பத்தை இழுத்து வாழ்க்கை யின்  அத்தனைக்கும்ஈடு கொடுத்து  நிலைத்து  நின்று தனது மகளுக்கும், மகனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்."வெற்றிலை போட்டு குதப்பியவாயும் ,கட்டைக் குரலுமே" அவரது அடையாளமாகிப் போகிறது இந்த இருபத்தைந்து வருடங் களில்.
கடந்தநாட்களில்தன்னைஇப்படியெல்லாமுமாகஅறிமுகப்படுத்திக்கொண்டவர் ,இன்று தனது மகனுக்கு மணம் முடித்த மருமகளை கடையில் நிறுத்தியுள் ளார்.
 மருமகளாக வந்த அவள் அந்தக் கடையில்எத்தனைநாட்களாகநிற்கிறாள்  என சரியாகத் தெரியவில்லை.ஆனால் நான் ஆறுமாதத்திற்குமு ன்பார்த்த அதே தோற் றத்திற்கு நேர் எதிர் இன்று.
சொக்கவைக்கும் அழகு இல்லைஎன்றாலும் கூட கழுத்தில்,காதில் தங்கத் துடன் பார்ப்பதற்கு பளிச்சென்று முகலட்சணமாய் இருந்தாள்.
மென்மையானபேச்சுக்குசொந்தக்காரியாகவும்இருந்தஅவளைஇரண்டு
 நாட்களுக்கு முன்தான் பார்த்தேன்.
 கழுத்திலும், காதிலும் ஒட்டிக் கொண்டிருந்த தங்கம் மட்டுமல்ல. அவளது முழு தோற்றமே மிஸ்ஸிங்.
அவளின் மாமியாரைப் போலவே கட்டைக் குரலும், வெற்றிலைபோட்டு குதப் பிய வாயுமாய், காவியேறிய பற்களுடன், முகலட்சணமேமாறிப் போயிருந்தாள்.
அன்று மட்டும் என இல்லை.நான் அவளைப் பாக்க நேர்கிற அடுத்தடுத்த நாட்க ளிலெல்லாம் அப்படித்தான் காட்சியளித்தாள்.
இந்த இடத்தில் இயல்பாகவே எழும் மெகாசைஸ் கேள்வியை தவிர்க்க இயல வில்லை.
 கடந்த இருபத்தைந்து வருடங்களாக கடையிலிருந்த பெண்ணும் சரி, கடந்த ஒரு  வருடத்திற்குள்ளாக கடையில் இருக்கும் பெண்ணும் சரி, இவர்களிருவருக்கும் வெற்றிலை(சமயங்களில் குட்கா புகையிலை) போடும் பழக்கம் ஏன் வந்தது?அவர்கள்ஏன் அந்த பழக்கத்தை பழக வேண்டும்? காபி, டீயைப் போலத் தான் அதுவும் என்றால் தன்னை யே வருத்தி தனது முகத் தோற்றத்தை யே மாற்றிக் காட்டுகிற அளவிற்கா அந்தப் பழக்கத்தை அவர்கள் கை கொள்ள வேண்டும்?
அப்படியெல்லாம் அவர்கள் ஏன் போகிறார்கள்? தனது அழகையும் யவ்வனத் தையும் சிதைத்துக்கொள்கிறஅளவிற்கான நிலைமைகளை அவர் களாக விரும் பி ஏற்றுக் கொண்டார்களா?
அல்லதுவலியதிணிக்கப்பட்டசமூக நிர்பந்தத்தில் அப்படி தங்களைத் தோற் றத்திற்கு மாற்றிக்கொண்டார்களா,,,?என்பது இன்றும் புரியாத புதிரா கவே/

 தினமும் கடைக்குப் போகிற நான் இதைப் பற்றிஇதுநாள்வரைஅவளிடம் கேட்டதும் இல்லை,அவளும் சொன்னதில்லை. அடுத்து போகும் போது கேட்க வேண்டும் கட்டாயமாக./

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கு கதை பகிர்வுக்கு நன்றி..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

சில மனிதர்களின் இயல்பான பழக்க்கங்கள் அவை. அவற்றை கேட்க நமக்கும் தோணுவது இல்லை. அருமை..

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைக்கும் எழுத்து நடை....
அருமை அண்ணா...

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

J.Jeyaseelan said...

மிகவும் ரசிக்க வைத்த சிறுகதை ஐயா ! உங்கள் வலைப்பக்கம் அருமை ! இனி தொடருவேன் ! இது என்னுடைய வலைப்பக்கம் ! நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!!

http://pudhukaiseelan.blogspot.com/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/