வெகுநேரமாய் நின்றதில்கால்வலிக்கிறது.
குதிங்கால் நரம்பிலிருந்துதான் புறப்படுகிறது
வலி/
இம்மாதிரியாய்வலிவரும்பொழுது,டாக்டரிம்
கேட்டால் சொல்கிறார், உடல் வீக்னெஸ்தான் வேறு ஒன்றுமில்லை.கூடவே வயதும் ஏறிக் கொண்டே
போகிறதுஎன்பதைநினைவில் கொள்ளுங்கள். வயதுக்குத்தகுந்தாற்ப் போல் மாற்றிக்கொள்ளுங்கள்உங்களதுஅன்றாட பழக்க வழக்கங்களை/டீ சர்ட்டும் ஜீன்ஸீம் அணிந்து கொண்டால் மட்டும் உங்களது
வயது திரும்பி விடாது. இவையெல்லாம் மனதிற்குத்தான் அன்றி உடலுக்கு இல்லை என்பார்.
காலைமாற்றிமாற்றிவைத்துப்பார்க்கிறான்,முதலில்வலது காலைதரையில் தரைஊன்றி இடதுகாலைதூக்கிஇவன்முன்னாய் நின்ற இரு சக்கர வாகனத் தின்மீதுமடக்கிவைக்கிறான்.ம்ஹூம்,,,அப்புறமாய்இடதுகாலைதரையில்ஊன்றி வலதுகாலைதூக்கிஇருசக்கரவாகனத்தின்இருக்கைமீதுவைத்துப்பார்க்கிறான், முடியவில்லை,எதுசெய்தும்குறையவில்லை
வலி/
அரைமணிநேரமாய் ஒரே இடத்தில் நின்றதில் கணம்
கொண்ட கால்கள் இரண்டும் உடல் ஒட்டாமல் அந்நியம் கொண்டு தெரிகிறதாய்/இவன்,இவன் முன்
நின்ற இரு சக்கர வாகனம் இவன் நின்றிருந்த பேருந்து நிறுத்தம், அங்கு வந்து நின்று போன
பேருந்துகள்,அதில் ஏறிய இறங்கிய மனிதர்கள் இவை தவிர்த்து அந்த இடத்தை அடையாளப்படுத்தியதாய் அக்றினையாய் நின்றகட்டிடங்களும்உயிரிணையாய்கட்டிடங்களுக்குள்ளாய்தெரிந்தமனிதர்க ளும். அவர்கள் முதலாளியாயும்,தொழிலாளியாயும், கடைச்சிப்பந்தியாயும், கல்லாக்கட்டுபவராயும்மாறிமாறித்தெரிந்தார்கள்.
இவர்களைஉள்வாங்கிதக்கவைத்துக்கொண்டிருந்தகட்டிடத்தைப்பார்த்தவாறு தாயும் மகனும்,தகப்பனும் மகளுமாக சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் சென்ற இரு சக்கர வாகனங்களை சைக்கிள்களை
மற்றும் நடை கொண்டுவேகம்காட்டியவர்களைபோக்குவரத்துபோலீஸ்க்காரர்களும்சிக்னல் விளக்குமாய்கட்டுப்படுத்தி
வழி காட்டிக்கொண்டிருந்தன.
சமீபமாய் வேலைக்கு எடுத்தவர்கள் ட்ரெனியினிங்
முடிந்து இப்பொழுதான் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்போலும்.
ஊர்முழுவதுமாய்எங்குபார்த்தாலும்பரவித்தெரிந்தார்கள்.சின்னவயதில்சீருடையின்
கச்சிதத்திலும்கல்லூரிமாணவர்கள்அணிந்துசெல்கிறதோள்ப்பையுடனுமாய்/
இதில்புரியாததாய்ஒன்றேமட்டும்தான்இருக்கிறது.இவர்களுக்கெல்லாம்வேலையில்சேர்ந்ததும்இருசக்கரவாகனம்கைவசப்பட்டு
விடுமோ?இவன்வேலைக்குச்சேர்ந்து25வருடங்கள்கழித்துத்தான் இரு சக்கர வாகனம் வாங்கினான்.அதுவும்
செகணெண்டில்/
இவன்நின்றிருந்த இடத்திற்கு நேர்ப்பின்னாடி
இவனது முதுகுக்குப் பின்னே ஒரு லேத்ப்பட்டரை இருந்தது.வலது கைப்பக்கம் ஆட்டோஸ்டாண்டும்
இடது கைப்பக்கம்லேத்ப் பட்டரையை விட்டு சற்றுத்தள்ளி சின்னதாய் ஒரு பெட்டிக் கடையும்
பெட்டிக் கடைக்கு அருகாமையிலாகவே பஸ் டாப் புமாய் இருந்தது. அந்த இடத்திலிருந்து விழி
கழட்டி அனுப்பினால் அது உருண்டோடிப் போய் பார்வைவிரித்து நிற்கிற இடம்சிக்னல் விளக்கு
அருகே இருக்கிற ஒயின் ஷாப்பாக இருக்கிறது,
கூட்டமானால்கூட்டம்அப்படியொரு கூட்டம்,மாசி
மகாமகத்திருவிழாவிற்கு வருகிறகூட்டத்தில்பாதிஅங்கேஇருக்கும்போலிருக்கிறது.
உள்ளபடிக்கு இது முருகண்ணனின் இடம்.இவன் போய்
அனாவசியமாக நின்று கொண்டு,,,,,,,?நீட்டாக தேய்த்து இன் பண்ணிய பேண்ட் சர்ட்டுடன் மாலை
ஆறு மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகி விடுவார்.
அங்கிருக்கிற ஒயின்ஷாப்தான் அவரதுகுறி என்ற போதிலும் பஸ்டாப்தான்
அதற்கு பிள்ளையார் சுழியிடும் இடமாக/
தெரிந்தவர்கள்தெருக்கார்கள்,நண்பர்கள்,தோழர்கள்,,,,,,,,,,யாரையும்விட்டு
வைப்பதில்லை.தெருக்கார்கள்யாராவதுஅவர்பஸ்டாப்பில்நின்றுகொண்டிருப் பதைப் பார்த்தால்சற்று தூரமாகவே
போய் விடுவார்கள் இவனைப் பார்க் காதது போல/
உடன்வேலைபார்ப்பவர்கள்யாரும்இவரைஒருபொருட்டாகவேமதிப்பதில்லை.
உறவுக்கார்கள், அவர்களது பிள்ளைகள், நண்பர்கள், தோழர்கள் யாரிடமும்
முருகண்ணனின்பாச்சாபலிப்பதில்லை.யாரைப்பார்த்தாலும்காசு,எப்பொழுது
பார்த்தாலும்காசு,எங்குபார்த்தாலும் காசு எதற்கெடுத்தாலும் காசு,,காசு, காசு, காசு, காசு,,,, அவரது
உலகமே காசுதான்.
தனியார் மில்லில் வேலைபார்க்கிறார்,நைட்,டே என மாறி மாறி வருகிற சிப்ட் தான்.இருந்தாலும் இவர் எந்த சிப்ட்டிற்கு தகுந்தாற்ப்போல்
எப்படி மாற்றி மாற்றி ஒயின் ஷாப்புகளில் முகம் காண்பிப்பது என்பதை மனப் பாடம் செய்து வைத்துக்கொள்வார்,
அப்பாவித்தனமான அவரது முகமும், அவரதுபேச்சும்
அவர் கடன் வாங்க ஒத்துழைத்தது,கெட்டிக்காரனின்பொய்யும்புரட்டும்,,,,,,,,போலஅவர்என்னதான்கரணம்
பாய்ந்து பார்த்தாலும் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.அவர்இதற்குத்தான் கடன் வாங்குகிறார்கள்
என/
என்னதான்தலைக்கு போதைஏறினாலும்கூடஒருஅடிதப்பாகபிரண்டு வைக்க மாட்டார்,அனாவசியமாய்ஒருபேச்சு,ஒருஅவச்சொல் சலம்பல்,,,,என
எதுவும் கிடையாது.அவ்வளவுபோதையிலும்அவருக்குகைகொடுப்பதுஅப்பாவியான அவரது முகமே/இலக்கற்று
பஸ்டாப்பில் நிற்கிறஅவர்திடீர் எனத் தோணிய எண்ணத்தை மனதில் முடிந்து கொண்டு அங்கு வந்து
நிற்கிற ஏதாவது ஊருக்குப்போகிற பஸ் ஒன்றிலாய் ஏறி விடுவார்.
கையில்இருக்கிற காசுக்கு தகுந்தவாறாய் திரும்பவருவதற்குமாய்கணக்கு ப்பார்த்துபக்கமாய்உள்ளஏதாவதுஊரில் இறங்கிவிடுவார், டவுன் பஸ்ஸென் றால்அடுத்த ஊர்,மொபசல் என்றால் அடுத்த ஊர்தான்.இதனாலேயேபாவம் அந்த பஸ்டாப்பில்பஸ்ஸைநிறுத்துகிற
டிரைவர் கண்டக்டர் அனைவரும் இவருக்கு பழக்கமாய்த்தான்இருந்தார்கள் கிட்டத் தட்ட/
உறவினராய்இருக்கிறஒன்றிரண்டுகண்டக்டர்
டிரைவர்களும்கூட சொன்னா ர்கள் வீட்டில் வந்து மனைவியிடம்/
“என்னசெய்யச்சொல்றீங்க,சின்னப்புள்ளையாஅவரு,சொல்லித்திருத்துறதுக்கு/
நானும் சொல்லாத சொல்லும் இல்ல,பேசாத பேச்சும்இல்ல,சரி,சரின்றாரே தவிர்த்துதிரும்பவுமாய்அந்தகுழிக்குள்ளதான்போயி விழுகுறாரு/ஒரு அளவு க்கு மேல சொல்றதுக்கு நானும் அருகதையத்தவளாப் போனேன்.
எங்களுக்குகல்யாணம் ஆகி ஒன்பது வருசத்துக்கு மேல ஆகுது.இன்னைய
வரைக்கும் ஏங் வயித்துல ஒரு புளுப்பூச்சி கூட இல்ல,இந்த வருத்தம் வேற அவருக்கு,. என்னதான்ஒருஆம்பளைதண்ணியக்குடிச்சிட்டுவெளியில
சுத்தீட்டுத் திரிஞ்சாக் கூட இந்த நெனைப்பு மனச அரிக்காமலா இருக்கும்? ஒரு வேளை இத சாக்கு
வச்சிதான் குடிக்கிறாரா மனுசன்?சாக்கு என்ன சாக்கு,,,,,இதுதான் முக்கியமான காரணமா இருக்கும்,அப்பறம்
தொத்துன பழக்கம்தொத்துவியாதி மாதிரி விட மாடேங்குது/ என்ன செய்யட்டும் நானு,இப்படித்தான்கத்திப்பாத்து அழுது பாத்துஓஞ்சிபோயி ஒக்காந்துர்ரேன். பேசாமாநாண்டுட்டுசெத்துப்போகலாம்ன்னுபாத்தாஅதுக்குமனசுவரல.எனக்கப்
புறம்இவருநாயாரோட்லஅலைஞ்சாலும் ஏன்னு கேக்க ஒரு ஆளும்
இல்ல. அவுங்க அம்மாவும் போயிசேந்துட்டாங்க, அப்பாஎங்க கல்யாணத்துக்கு முன்னாடியேயெறந்துட்டாரு/அப்பறம்
அவருக்கு ன்னுஇப்பஇருக்குறதுநான் ஒருஆளுதான்,அவுங்ககூடப்பொறந்தவுங்கஎன்னன்னுகூட கேக்க
மாட்டேங் குறாங்க,பேசாம எங்கயாவது ஒறவுக்குள்ளபுள்ளையதத்துஎடுக்கலாம்ன்னு நெனைச்சாக்கூட
இப்படி இருக்குற மனுசன நம்பி யாரு தத்துக்குடுப்பா புள்ளைய,இவரு மட்டும் ஒழுங்கா இருந்தா
இந்நேரம் ஏங்கூடப்பொறந்த வுங்களலயிருந்தோ இல்ல அவரு கூடப்பொறந்தவுங்கள்ல இருந்தோ ஒரு
புள்ளைய தத்து எடுத்துருக்கலாம்.நானுசின்னகொழந்தமொகம் பாத்து சந்தோஷப்பட்டுருப்பேன்.இப்ப
அதுக்கும் வழியில்லாமப்போச்சு/
இவர நம்பியும் இவரு சம்பாத்தியத்த நம்பியும்நான்
இல்ல,எனக்கு பருப்பு மில்லுவேலைஇருக்கு,என்னத்தையோரெண்டுதுணிதச்சிக்கிறேன்,ஓடுது
பொழப்பு,
இல்லைன்னா கஷ்டப்பட்டு ஓட்டிக்கிறேன்.முடிஞ்ச வரைக்கும் ஓட வேண்டியதுதான்,முடியாதப்ப
இப்பிடி அனாதையா ரோட்டுல செத்துக் கெடந்தாவந்துதூக்கிப்போட்டுடுப்போங்க அவ்வளவுதான்
சொல்ல முடியும். இதுக்கு மேலஏங்கிட்டபேசுறதுக்குதெம்பு இல்ல.
இப்பதைக்குஎனக்குஇருக்குறஒரேஆறுதலுஆத்தூர்லஇருக்குறஎங்கஅக்காவும் அக்கா புள்ளைங்களும்தான். ரொம்ப மனசு தாளாத நேரத்துல அங்க போயி
இருந்துட்டு வருவேன் ஒரு ரெண்டு நாளு/எனச்சொல்கிற அவளின் சொல் முருகண்ணனுக்கு எட்டுவதில்லை.
முக்குரோட்டில்வந்துநிற்கிறேன்எனச்சொன்னமணியண்ணனை கூப்பிட்டுக் கொண்டுதொழிற்பேட்டை வரைக்குமாய் போக வேண்டும். இவருக்காக சற்றுமுன்பேகிளம்பிவந்திருந்தான்வீட்டிலிருந்து.இல்லையென்றால் தொலைக்காட்சியில்ஒலிப்பரப்பாகியபாடல்களைகேட்டுவிட்டாவதுவந்திருக் கலாம். முழுதாக/
எல்லாம் முழுக்க,முழுக்க ராஜாவின் பாடல்கள்,மனதை
உருக்கி ஊற்றிய மெலடிகள்,மனமில்லாமல்தான் எழுந்து வந்தான்.
வந்துகொண்டிருக்கிறேன்அருகில்எனச்சொன்னவர்இன்னும்வந்துகொண்டிருக்
கிறார்.
ஏழு மணிக்குள்ளாய்ப் போனால்தான் கொஞ்சமாவது நன்றாக இருக்கும்.
தெரிந்தவர் வீட்டு விஷேசம், காலையில் போகமுடியவில்லை அதனால்.
கண்டிப்பாகப்போகவேண்டும்இப்பொழுதாவதுஎனஅவர்தான்போன் பண்ணிச் சொன்னார் மதிய நேரமாய் இவன் அலுவலகத்தில் இருக்கும் போது/இவன்
அலுவலகம் விட்டு வந்து வீட்டிற்குப்போய் குளித்து விட்டு வந்த பின்னும் கூட இவ்வளவு
நேரமா அவர் வர?,,,,,
கிரகப்பவேச வீட்டுக்காரர் இருட்டும்வரை மட்டும்தான்
அங்கு இருப்பேன். அதற்கப்புறமாய் போய் விடுவேன் கிளம்பி என்றிருந்தார்.சென்ற வாரம்
வரை சாலையை அகலப்படுத்துவதற்காய் சாலையின் இருபக்கமுமாய் தோண்டி ஜல்லி போட்டிருந்தார்கள்.
இப்பொழுது சாலை அகலப்பட்டு ஒரே நேரத்தில்
என் மேனிமீதாய்நான்கு பஸ்கள் ஓடவிடலாம் எனக் காட்டிச் சென்றது. கிரகப்பிரவேச வீட்டுக்காரர்
முன்பு வாடகைக்கு குடியிருந்த பழைய வீட்லிருந்து
இன்று கிரகப்பிரவே சம் நடந்த வீடு வரை சாலையை அகலப்படுத்தி புதிதாய் போட்டிருந்தார் கள்.
புத்தம்புது ஆடைஅணிந்தஜொலிப்புடன்காணப்பட்டசாலைபுதுவீடுஇருக்கும் ஏரியாவரை போடப்பட்டிருந்ததுதற்செயல் ஒற்றுமையாஅல்லது சொல்லிப்
போடப்பட்டிருந்ததா?என சிரிப்பும் பேச்சுமாய்அவரிடம்போனில் பேசிய போது சிரித்தார்
அவர்,அது ஆயிற்று தோண்டிப்போட்டு ஒண்ணரை மாதங் களுக்குமேலாயும்/ஏதோநாங்கள் எங்களதுஇயக்கத்திலிருந்து
மாறி மாறிப் போய்ச் சொன்னதாலும் கொடுத்த அழுத்தத்தால் மட்டும்தான் இந்த வேலைநடந்திருக்கிறது.என்னஎனதுவீட்டின்கிரகப்பிரவேசம்நடக்கவிருக்கிற
முதல்நாள்சாலைபோடப்பட்டதால்
ஒரு தற்செயல் ஒற்றுமை இங்கு படம் பிடிக்கப்பட்டு விட்டது, இருக்கட்டுமே அதனால் என்ன
நல்லதென ஒன்று நடந்தால் சரி என்றார் பலத்த சிரிப்பினூடாக/
மணியண்ணன் வருகிறபோது அருப்புக்கோட்டையில் இறங்கி சுகருக்கான
மாத்திரைகள்வாங்கிவரவேண்டும்எனச்சொன்னார்.தலைவலி,காய்ச்சல்
என்றால்உடனடியாகமருந்து
மாத்திரை,மருத்துவர் என செல்கிற ரகம் இல்லை அவர்.
வெங்காயம்அரைத்துபத்துப்போடுவார்.முட்டையைஉடைத்துஏதோசெய்வார். யோகா,உடற்பயிற்சி,நடைப்பயிற்சிஇதில்ஏதாவது ஒன்றில் சரியாகிப்
போய் விடக்கூடும் என்பார்.
ஓயாமல்மருந்துமாத்திரை உட்க்கொள்ளக்கூடாது
என்பதுஅவரதுஆழமான கருத்து.
அருப்புக்கோட்டையில் வாங்குகிற மருந்தைஇங்கு
வாங்கிக்கொள்ளலாமே எனக் கேட்டபோதுஇல்லைவழக்கமாக நான் வாங்கிற கடை.தவிர அது சித்த மருந்து
,என் முகம் பார்த்தே எனக்கான தேவை என்ன என கண்டு பிடிக்கிறஅரியகுணம் அந்தக்கடைக்காரரிடம்
உண்டு. அவரே அரை வைத்தி யர் மாதிரி,என்பார்.
முன்னேறியமருத்துவவிஞ்ஞான,அட்வான்ஸ்மெடிசன்ஸ்,சம்டைம்ஸ்பெட்டர் ,,,,,,,,,,என்கிறவார்த்தைகளையெல்லாம்பின்தள்ளிவிடுவார்.தவிரஅம்மாதிரியான வார்த்தைகளும் செல்லாது அவரிடம்,விரட்டியும் விட்டு விடுவார் அண்ட விடாமல்/
இப்பொழுதுஅதுசம்பந்தமாய்எங்காவதுயாரிடமாவதுபேசிக்கொண்டிருப்பார்
அல்லது அது சம்பந்தமான நினவு சுமந்து வந்து கொண்டிருப்பார்.அதுதான் அவரின் இந்தத்தாமதற்குக்
காரணம் போலும்.
வெகு நேரமாய் நின்றதில்கால்வலிக்கிறது.உள்ளபடிக்குஇதுமுருகண்ணன் நிற்க வேண்டிய இடம்.
7 comments:
""வெகு நேரமாய் நின்றதில்கால்வலிக்கிறது.உள்ளபடிக்குஇதுமுருகண்ணன் நிற்க வேண்டிய இடம்.""
ஒரே கதையில் வெகுஜன வாழ்க்கையைப் பற்றியும் காத்திருப்பை பற்றியும் குண்நலன்களைப் பற்றியும் வித்தியாசமான நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சார்.....
வணக்கம் காசி ராஜன் சார்,
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ஜெயசீலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சிறந்த கதை அதன் நடையழகு அருமை.
வணக்கம் கில்லர்ஜி/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை
அருமை
நண்பரே
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment