6 Sep 2014

கரண்டுக்காத்து,,,,,நிச்சலனப்பட்டுத்தெரிகிறதாய் வானம்,நேற்றுமாலை வரும்போது இப்படியெல்லாம் காட்சிப்பட்டுத்தெரியவில்லை.

இறகு கோர்த்துப் பறந்த இரண்டு பறவைகள் கிழக்கிலிருந்து மேற்கா யும்,மேற்கிலிருந்துகிழக்காய் கூட்டம் காட்டி பறந்த சிறுசிறு பறவை களையும் காட்சிப் படுத்திய வான் வெளி வெண்பஞ்சு மேகம் படர்ந்து தெரிந்ததாய்.

கருநிறம்கொண்டுதிரண்டுநின்றமேகங்கள்இரண்டுஅருகருகாய்நின்று கொஞ்சிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் மனித உருக்காட்டி யும், அது அல்லாத வேறு உருக்காட்டியுமாய்/

.சென்றவாரம்என்பதாகத்தான் நினைவு.இந்த இடத்தை அனுசரித்து வரும் போதுதான் இருசக்கரவாகனத்தின்டயர்பஞ்சர்ஆகிப்போனது.

நண்பனுடன்கூடவரும்போதுதான்இப்படியாய்ஆகிப்போனது.அவன்
சார்ந்திருந்தஇயக்கத்தின்களசெயற்பாட்டாளனாய்/.அவன் இயக்கம் சார்ந்த வேலையாய்ச் சென்ற ஒரு பொழுதில்தான் இவனையும் அழைத்துச் சென்றிருந்தான். மிகச் சரியாகஒன்று, இரண்டு மூன்று,,, ,,,  என்கிற எண் விகித வித்தியாசம் கொண்ட மனதின் தின அசைவுக- -ளுக்குள்ளான பொழுதின் மதிய வேளை என்கிறாதாய் நினைவு.

இவன்இருசக்கரவாகனத்தின்பின்னே,நண்பன்வண்டியைஓட்டிச்
செல்பவனாய்.நல்லதொருசடுதிவேகம்.எடுத்தவேலையைமுடிக்கிற முடிவுவேகத்தில்தெரிகிறது.வேகம்கூடக் கூட செல்கிறதாய் வண்டி  எடுத்த வேலையின் தடம் பற்றி/

இருவருமாய் பயணிக்க, பயணிக்க தாகம்கொண்டநதிகள் இரண்டு ஓரிடத்தில் நின்று தண்ணீர் பருகிக் கொண்ட கதையாய் ஆகிப் போகி றது. டப்,,,,மெலிதான ஒரு சப்தத்துடன் இழுபட்டவாறு வண்டி நின்று விடுகிறது. அதற்கப்புறமும் விடவில்லை அவன். அங்கிருக்கிற டூ வீலர் ஒர்க் ஷாப்க்கார்களுக்கு தகவல் சொல்லிவரச்சொல்லி விட்டு இவன் நண்பன் போய் விடுகிறான் நடந்து முன்னெடுத்த வேலையை முடிப்பதற்காக.இவன் பஸ்ஸேறி வந்து விடுகி றான் அப்படியே/

இறகுகோர்த்துப்பறந்தஇரண்டுபறவைகள்கிழக்கிலிருந்துமேற்காயும், மேற்கிலிருந்து கிழக்காய்கூட்டம்காட்டிபறந்தசிறுசிறுபறவைகளை யும்காட்சிப் படுத்திய வான் வெளி வெண்பஞ்சு மேகம் படர்ந்து தெரிந் ததாய்.

கருநிறம் கொண்டு திரண்டு நின்ற மேகங்கள் இரண்டு அருகருகாய் நின்று கொஞ்சிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் மனித உருக் காட்டியும்,அது அல்லாத வேறு உருக்காட்டியுமாய்/

இவனும் மணியண்ணனுமாய்த்தான் வந்தார்கள்.

மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும் போது மணி ஐந்தாவது இருக்கலாம். சீக்கிரம்வீடு செல்வதற்காய் எழுதி வைத்த பெர்மிஷன் லெட்டர்அர்த்தமில்லா மல் போனது.

இப்பொழுதெல்லாம் தேவைக்காய் விடுப்பு எடுத்தது போய் விடுப்புக் கிடக்கிற நேரமாய் தேவையை மாறிக்கொள்ளவேண்டியதாய் ஆகிப் போனது.

சீக்கிரம்போய்தாஸைப்பார்க்கவேண்டும்.இன்றைக்குஅவன்ஒன்றும் அப்பாயிண் மெண்ட்எல்லாம் கொடுத்திருக்கவில்லை இவனுக்கு. இருந்தாலும் அவனைப் பார்க்க கண் அரிக்கிறது. ஆவல்கொண்ட விழிகள் இரண்டுமாய் தேக்கி வைத்த பார்வையில் மீனென நீந்தி மறுபடியுமாய் கண்களில் வந்து ஒட்டிக்கொள்ளநேரம்ரொம்பவுமாய் ஆகிவிடவில்லை,தேடி அலுத்துப்போன ஜோடிவிழிகள்இரண்டிலும் கோடி விழிகளின் எதிர்பார்ப்பை உள்ளடக்கி தாஸை தேடிப் போக ஆவல் கொள்கிறது.

அவனதுவீடுகருமாதி மடம் அருகில் இருக்கிற தெருவில்தான் இருக் கிறது.அங்குதான் இருப்பான்,டீக்கடைஏதாவதுஒன்றில்/வழக்கமாய் அவன்அதிகமாய் டீ சாப்பிடுகிறடீக்கடைஇரண்டுதான்.வேறுஎங்கும் அவனைக் காணவில்லையானாலும் நிச்சயம் அங்கு இருப்பான் என அறுதியிட்டுச் சொல்லிவிடலாம்.

பெரிதாகஒன்றும்இல்லை.சின்னதாய்ஒருடீ,கூடவேகண்டிப்பாகஒரு வடை/ இதைத்தாண்டி வசதிப்படுகிற நேரங்களில் ஒரு சிகரெட்,அது எப்பொழுதாவது தான்,எப்பொழுதுமென இல்லை.அதிலும் இவன் போய் விட்டால் குடிக்க மறந்த சிகரெட்டை எங்காவது காற்றி லிருந்து தேடி எடுத்து வம்படியாக குடிப்பான். அவன் மனம் பிடித்துப் போன இடங்களிலும், மனம் பிடித்துப்போன மனிதர்களுடன் இருக் கிற போதெல்லாம் இப்படித்தான் ஆகிப்போகிறான் என்கிறார்கள். அதுவும்சமீபகாலமாய்அதிகமாகிப்போனதாய்வேறுசொல்கிறார்கள்.

அவனிடம் கேட்டால் அப்படியெல்லாம்இல்லை/சமயாசமயங்களில் மனம்மையம்கொண்டுவிடுகிறபித்துத்தனங்களில்இதுவும்ஒன்றாய் இருக்கிறது.நானென்னவேலைக்கு போகாமல் வெட்டித்தனமாய் ஊர் சுற்றிக் கொண்டும், தண்ணிஅடித்துக்கொண்டுமாய்திரிகிறேன், ஒரு ஆம்பிளைக்கு இது கூட சுதந்திரம் இல்லையா,,,,,,?என்ன என்னால் சொந்தம்,பந்தம், கல்யாணம், காதுகுத்து,சடங்குவீடு, பந்திச்சாப்பாடு எக்ஸட்ரா,எக்ஸட்ரா,,,,,,என்கிறவகைகளுக்குள்ளாய்மட்டுமாய்இருந் துவிட முடியாது,நண்பர்களின் தோழர்களின் அருகாமையை நான் நேசிக்கிறேன்,ஆகவே,,,,,,,,,என்கிறான்,/

விடுங்களேன்இருந்துவிட்டுத்தான்போகட்டுமேஅவன்இப்படியேஎன அவன் மனைவியிடமும்,தாயிடமுமாய் கொஞ்சம் சரிக்கட்டி பேசி விட்டு வர வேண்டி இருக்கும் சமயத்தில்.

அவனது அம்மா அவன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளிகுடியிருந் தாள்.அப்பாஇல்லை,ஒத்தைஆளுக்கு எவ்வளவு தேவைப்படப் போகி றதென ஒரு கை போட்டு பொங்குவாள்,அதிலும் சோறு குளம்பு என மிச்சம் வைத்து மகன் வீட்டுக் கொண்டுபோய்க்கொடுப்பாள்,

பருப்பு மில்லில் வேலை என நேற்று வேலைக்குப்போன மருமகள் வீட்டிற்கு வந்து விட்டாள்.முன் போல இப்பொழுதெல்லாம் மில்லில் வேலை இருப்பதில்லை.கொஞ்சம் பேர் நின்று விட்டார்கள்.முப்பது பேர் வேலை பார்த்த இடத்தில் இப்பொழுது 15 பேர்தான் வேலை பார்க்கிறார்கள்.முதலாளியிடம் கேட்டால் சொல்கிறார், ஞாயப்படி பாத்தா இங்க இருக்குற வேலைக்கு தினமும் அஞ்சு பேர் வந்தா மட்டுமே போதுமானது .நாந்தான் சரி ஒங்க எல்லோருக்கும் பகுந்து கெடைக்கட்டுமேன்னுஒங்க எல்லாரையும் வரச் சொல்றேன் மில்லு க்கு என்கிறார்.அதனாலேயே தினமும் இரண்டு மணி நேரம் தான் வேலை இருக்கிறது.

மருமகள்வேலைபார்க்கிற பருப்பு மில்லில்தான் அவளும் வேலை பார்த்தாள். வீட்டுக்காரர் இறந்து போனதிலிருந்து தாஸிடம் வந்து விட்டாள்.அதற்கு முன் கிராமத்தில் இருந்தார்கள்.

தாஸின்அம்மாவுக்குசர்க்கரைநோய்க்கு மருந்து வாங்கவும், அல்சரு க்கு பார்க்கவும் டவுனுக்கு வந்து போவார்கள் அம்மாவும், அப்பாவும்/ இவுகளுக்கு இப்பத்தான் கல்யாணமான புது ஜோடின்னு நெனப்பு போல,கைகோர்த்துட்டு டவுனு பூரா முல்லதிரியிறாங்க, என்பார்கள், அம்மா அப்பாவின்முன்பாகவே. அதற்கு சிரிப்பொன்றே பதிலாய் இருக்கும் இருவரிடமிருந்துமாய்.மீறினால் இப்பஎன்னநீயும், ஓன் புருசன கூட்டீட்டுதிரி,யாரு வேணாம்ண்ணா,,,,,, என்பார்கள் கேலி பண்ணிச் சிரித்த பெண்களை நோக்கி/

ஆமா நாங்க கூட்டிட்டு அலைய வேண்டியதுதா,தலைக்கு மேல வளந்த பொம்பளப்புள்ளய வச்சிக்கிட்டு என்பார்கள் கேலி பேசியவ ர்கள்,

இப்ப என்னம்மா தலைக்கி மேல பொம்பளப்புள்ள இருந்தா அத்தா போச்சு, மனசு,இல்ல மனச மூடி போட்டு மூடிருறதா சொல்லு என் பார்கள்.

இப்படிஒரே சிரிப்பு பேச்சுமாய் இருந்த நாட்கள் தாஸினது அப்பா மறைவுக்குப் பின்னால் காணாமல் போக ஒத்தையாயும் தாங்க மாட் டாமலுமாய் வந்து விடுகிறாள் தாஸின் வீடு நோக்கி.

தாஸ்இருந்தவீடுபுருசன் பொண்டாட்டி இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாய்இருந்தது.இதில்அம்மாவந்தாள்,,,,,?எப்படிசமாளிக்க,,?
இதில் பாத்ரூம் பிரச்சனை வேறு இருக்கிறது.என்கிற நினைப்பில் இருந்த போதுதான் இவர்கள் குடியிருக்கிற தெருவிலேயே இருக்கிற ஒரு வீடு கிடைக்கிறது வாடகைக்கு. வீட்டின் ஓனர் தாஸின் குணத் திற்காகவீட்டைவாடகைக்குத்தருவதாகச் சொன்னார்.அவர் குடியிரு ந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு போகும் முடிவிலிருக்கும் போது தாஸின் மனைவி வந்து சொன்னதைச் சொன்னார்.

தாஸின் அம்மா குடியேறிய வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீட்டில்டீக்கடைகளுக்குப்போடவென மொத்தமாக வடை போட்டார் கள்,ரகத்திற்கு ஒன்றெல்லாம் இல்லை.உளுந்த வடை மட்டுமே/ஒரு நாளைக்கு காலையும் மாலையுமாக சேர்த்து இருநூறு வடையாவது போடுவார்கள்.நாலு பேர் வரை யாவது வேலைசெய்தார்கள் இந்த இருநூறு வடையைச் சுட்டெடுக்க/ தாஸின் அம்மாவுக்கு இது தெரிந்த வேலை,பிடித்தமான வேலை கூட/

தாஸின்அம்மாஇங்கு குடிவந்த புதிதில் வடை சுடுகிற வீட்டிற்கு போய்நேரடியாக கேட்டுவிட்டு வந்தாள்,ஆள் மூலமாகவும் சொல்லி விட்டாள், ஒன்றும் பிரயோஜனமில்லை.

வீட்டில்ஒருநாளன்றின்சாயங்காலவேளையாய்அகலமான குழம்புக் கரண்டியில்உளுந்தவடைகளைசுட்டுக்கொண்டிருக்கும்பொழுதுஅந்த வீட்டைக் கடந்த 200 வடைக்காரர் அப்படியே நின்றுவிட்டார் சிறிது நேரம் தாஸினது அம்மாவின் வீட்டின் முன்பாக/

மறு நாள் ஆள் மூலமாய் சொல்லி விட்டு தாஸின் அம்மாவை வரச் சொல்லி விட்டு அவருக்கென ஒரு அடுப்பும் கூட உதவிக்கும், ஒத்தா சைக்குமாய் ஒரு கையாளும் கொடுத்து விட்டார்.

தாஸின்அம்மாவடைசுடஆரம்பித்தநாளிலிருந்துடீக்கடைகளுக்கான ஆர்டர் கொஞ்சம் கூடி விட்டதாகச் சொன்னார்கள்.

இவனும் ஊடுமாடாய் டீக்கடைகளூக்குப்போகிறநேரமாய்தாஸினது அம்மா சுட்ட வடைகளைச் சாப்பிட்டிருக்கிறான், அதற்குக்கூட
வைவாள்தாஸின்அம்மா,நீயிஎதுக்குபோயிகடைகள்லசாப்டுற,வடை சாப்புட ஆசை இருந்தா நேரா ஏங்கிட்ட வந்துற வேண்டியதுதான்,நா சுட்டுக்குடுப்பேன்ல்ல ஒனக்கு என்பாள்.தாஸின் அம்மாவுக்கு இவன் மீது தனி பிரியம் இருந்ததுண்டு,

எவ்வளவுபெரியவீட்டுப்புள்ளஅம்மா,அம்மான்னு,,,,,சுத்திச்சுத்திவருது என்பார்,

அந்தஅன்பையும்,வாஞ்சையையும்,பிரியத்தையும்25வருடங்களுக்கு முன்பாக திருமணமாகாஒற்றைஆளாய்நின்றிருக்கிறபோது உணர் ந்தான். உடன் வேலை பார்த்தவரிடமிருந்து/ அலுவலகம் முடிந்த ஒருநாளில்விட்டேத்தியாய்அமர்ந்திருந்தவேளையில்வர்ரியாஎனது  ஊருக்கு என கூட்டிப்போய் விட்டார்.

காரை உதிர்ந்த சின்ன குடிசை வீடுதான்.இவன் போனபோது அவரின் அம்மாஅடுப்பின்முன்னாய்அமர்ந்திருந்தார்கள்,இவர்போய்விசயத்தைச் சொன்னதும் சரி கண்மாய்ப்பக்கம் போயி குளிச்சிட்டு வாங்க,,,,என்று சொன்னவர் அன்று அவர் சுட்டுக்கொடுத்த கரண்டி உளுந்த வடை மிகவும் ருசியாக இருந்தது. அதே ருசியையும் கைமணத்தையும் இப்பொழுது தாஸினது அம்மாவிடம் பார்க்க முடிகிறது.

பார்க்கநினைத்த தாஸை அவன் வழக்கமாய் அமர்ந்துடீசாப்புடுகிற கடையில் பார்க்க முடியா சோகத்துடன் அவன் துணையல்லாது அவன் அருகில் அமர்ந்திருப்பதாய் நினைத்து டீ சாப்பிட்டு விட்டுக் கிளம்புகிறான்.

நிச்சலனப்பட்டுத் தெரிகிறதாய் வானம்/

9 comments:

 1. நான் இதுவரை கேள்விப்பட்டிராத பலவார்த்தைகளை அழகாய்க் கையாண்டு இருக்கிறீர்கள் சார்,கதை நடையும் அருமை, மற்றபடி உங்கள் சிறுகதை எப்போதுமே சூப்பர் தான்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜெயசீலன் சார் ,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக./

   Delete
  2. வணக்கம் ஜெயசீலன் சார்,
   கேள்விப்பட்டிராத வார்த்தைகள் அல்ல
   எல்லாம் நம் சமூகத்தில் புழங்குகிற
   வார்த்தைகள்தான்,இன்னும் இன்னுமாய்
   நிறைய இருக்கிறது.
   நாம் கேள்விபட்டிறாத
   வார்த்தைகள் மட்டுமல்ல,
   நாம் பார்த்தறியாத
   வாழ்க்கை முறையைச்சுமந்தவர்களே
   நிறைய இருக்கிறார்கள் இச்சமூகத்தில்
   விளிம்பு நிலை மக்களாய்,
   அவர்களின் வாழ்வும் வலியும்
   மிகவும் வலியது.வறியதும் கூட/
   நன்றி வணக்கம்.

   Delete
 2. வழக்கம் போல் அருமையான நடை
  நன்றி நண்பரே
  தம 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
  2. நன்றி சார் வாக்களிப்பிற்காக/

   Delete
  3. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
   பொதுவாகவே,பேசப்படுகிற
   சொல்லிச்செல்லப்படுகிற,
   எழுதப்படுகிற,விவாதப்படுத்தப்படுகிற
   யாவும் எழுத்து உட்பட விளிம்பு நிலை
   மனிதர்களின், நிஜமானவர்களின்,
   சாதனைகொண்டவர்களின்
   வாழ்க்கையாய் இருக்கும் போது
   படைப்பு இன்னும் கொஞ்சம் மெருகும்
   உண்மைத்தன்மையும் கொள்கிறது.
   அது உங்கள் போன்ற நல் உள்ளங்களால்
   பாராட்ட அல்லது சீர்தூக்கிப்பார்க்கப்படும்
   பொழுது இன்னும் நன்றாக எழுத வேண்டும்
   என்கிற உணர்வை தூண்டுகிறது,
   நன்றி வணக்கம்.

   Delete
 3. அருமை நண்பரே... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர் ஜி/
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete