12 Sept 2014

இளமை இதோ, இதோ,,,,,,,,


அதுதான்காதலா,சொல்லத்தெரியவில்லைசரியாக/முன்பின்காதலித்தறியாஅனுபவம் காதல் மயக்கத்தில்,சொற்ச்சிலம்பத்தில் பொய்பேசிஅறியாதன்மை.மருந்துக்கும்கூடமனம்கட்டுண்டு கிடக்காதநாட்கள் என இருந்துபழகிவிட்டதில்காதலைப்பற்றி ஒன்றும் தெரியாத ஜீரோவாக.


சரிதலைவரிடம்கேட்டுவைப்போம் இதைப்பற்றி,காதலின் மேன்மைபற்றியும், புனிதம் பற்றி யுமாய்பேசுகிற,சொல்லிச்செல்கிறநல்லஉள்ளங்களில்தெரிவுபட்டுத்தெரிகிறவராய்/
 
எனக்கு நினைவு தெரிந்த நாளிருந்து அவர் அப்படித்தான் காட்சிப்பட்டு தெரிவதாக உணர்கி றேன்.நாங்கள்கூட்டமாகவோஅல்லதுநான்கைதுபேரோஅமர்ந்துஉரையாடிக்கொண்டிருக்கிறத
னிமையில்அவர் அப்படித்தான் பதிவு செயவார் அவரது இருப்பை/ 

காதலின்முதற்சொல்,,,,என ஆரம்பித்து நீளும் அவரது உரையில் நாங்கள் கொஞ்சம் அசிரத் தை காட்டினால்அவரதுபேண்ட்டில்அவரதுபெயரையும்அவரதுகாதலியின் பெயரையுமாய் எழுத ஆரம்பித்து விடுவார்.அந்த அளவில்தான் எனக்கு காதலைப் பற்றித்தெரியுமே தவிர நேரடி அனுபவம் வாயக்கப்பெறாத அபாக்கியவானக நான்.

மாலை ஆறு அல்லது ஆறரையின் அந்தி சாய்வில் நான் மற்றும் எனது சக்கடா இரு சக்கரவாகனமுமாய்.அதன் மீது நான் அமர்ந்து வருகிறேனா அல்லது என்மீதுஅது அமர்ந்து பயணிக்கிறதாஎனபிரித்தறிய முடியா தன்மையில் வந்து கொண்டிருந்த நான்மெயின் ரோடு தாண்டி உள்ளே வீதியில்  நுழைகையில் உன் மீது என் பார்வை/ 

பாலக்காரரிடம் பால்வாங்கிக்கொண்டிருக்கிறாய்நீ.50 வயதின் மூப்பை உடம்பில் காட்டி/
சிவப்புக்கலரில் பெரிது பெரிதாய் வெள்ளைப்பூக்கள் பூத்திருந்த  சேலை.ஆரஞ்சு வர்ணத் தில் மேட்சாக சட்டை.நன்றாகவே இருக்கிறது,

அவைகளைவிற்றகடையும்,வாங்கியஇடமும் அப்பு அண்ணன் கடையாக இருந்த போதிலும் அதைநெய்த கைகள்,நூலெடுத்து,பாவு முக்கி பதம் பார்த்து மீட்டெடுத்து உயிரூட்டிய மனித ர்கள்எவர்,எங்கிருக்கிறார்கள் அவர்கள், அவர்களது நிலைஎன்ன?ஏதுசெய்யஅவர்கள்விதிக்கப் பட்டிருக்கிறார்கள்,தொழில்கருகிப்போய்நிற்கிறஇந்நேரம்,,,,,,,?என்கிறகேள்வியும்,கிடைக்காத பதிலு மாய் உன்னை ஏறிட்டவாறுநான்ஊர்ந்து வந்து கொண்டிருந்த அந்திசற்றேசற்றே கண் அயர்ந்ததாயய் காட்சிப்பட்டவேளை /

தன்னில்ஊர்ந்துகொண்டிருந்தஎறும்புகளையும்,பூச்சிகளையும்,வண்டுகளையும்இன்னமும்பிற, பிறஜீவராசிகளின்நடமாட்டத்தையும்தன்னில்தாங்கிபடரவிட்டிருக்கிறதாய்இருந்த பூ மலர்கிற வேலையில் மண்விரிந்து சிரித்த முகம் கொள்ளா சிரிப்புடன் கைகோர்த்தவாறாய் வந்து கொண்டிருக்கிறேன்.

என்னஇதுஅந்திசாய்கிறவேளையாய் செவியில் வந்து விழுகிற குயிலின் சப்தம். கூவிட்டுத் தான்போகட்டுமே?தன்குரலைசங்கீதமாய் வெளிப்படுத்தஅதற்கு ஏதுநேரம்காலம் ?நேரமற்று, காலமற்றுஓடோடித்திரிகிற உழைப்பின் மனிதர்களை  தன்வயப்படுத்தி மனசாந்தி கொள்ளச் செய்கிற குரலாய்/

என் வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருந்த மரங்கள் வெட்டப்பட்டபின்புஅதுஇருந்த இடம் இப்போது பசுமையை மாற்றி இருந்த வெற்றிடமாய்/வேப்பமரங்கள்இரண்டு,பன்னீர்மரங்கள் மூன்று என அவைகள் அனைத்திலுமாய் பாரபட்சமின்றி கூடு கட்டி குடிகொண்டிருந்த பறவைகள் இப்போது,,,,,,,,,,,?அவைகளில்ஒன்றுதான்இந்தக்குயில் சப்தம் என நினைக்கிறேன்.

வெறுமை பூத்த வெற்று வெளிகளிலில் இருக்கப்பிடிக்காமல் தன் ஒற்றைக்குரல் உயர்த்தி எதிரும், இசைவுமாய் தன்குரலைபதிவு செய்யும் எதிர்ப்பு  அது. இப்போது ”ஐவாண்ட்ட்ரீ ”ஐவாண்ட்ட்ரீ,,,,,,,,எனஇந்தவெளியெங்கிலும்இன்னும்இன்னமுமானபூமியின்பரப்பெங்கும் பரந்து திரிந்து ஓங்கி ஒலிக்கும் தன் குரலை பதிவு செய்த அந்த குரல் வந்த திசை நோக்கி பார்வைகழட்டிஅனுப்பிவிட்டுபயணத்தைதொடர்கிறேன் பயணித்துசென்ற பார்வை குயிலை பார்த்து விட்டு வந்த பின்பாய்/ 

தொடர்ந்த பார்வை,மண்,மரத்தின் சுவடுகளற்ற வெற்றிடம் இவை எல்லாம்தாண்டி வீடுகள் முளைத்துகிடந்தவீதிகளில்நம்வீடுநோக்கிவருகையில்கண்டகாட்சிதான்என்னைஇப்படியெல்லா முமாய் பேசவும்,கேட்கவுமாய் வைத்திருக்கிறது.இந்த50திலும் எப்படி இப்படி இளைமை போர்த்தித்திரிகிறாய் என?

இளமைஉன் உடலிலா,மனதிலா,,,?அகத்தின் அழகு முகத்தில்தெரியும்என்றார்கள். தெரிந்து விட்டுப் போகடுமே,அதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இருந்து விடமுடியாது. சிலரானால்அதில்அபிப்ராய பேதம் கொள்கிறார்கள்.அகத்தின் அழகு அகத்திலும்,முகத்தின் அழகுமுகத்திலுமாய்தெரிவுபட்டுத்தெரிந்து விட்டுத்தான் போகட்டுமே, ஏன் இப்படி தோற்றப் பிழை கொள்ளச் செய்கிறீர்கள்,,,, என்கிற சொல் உதிர்ந்த சொல்லை மனம் கட்டி வந்து  கொண்டிருந்த  வேளை விழியில் பட்டு இதயம்படர்ந்த நீ பாவித் தெரிகிற அந்தியில் அந்த 50 லும் இளமை போர்த்தித் தெரிகிறவளாய்/

4 comments:

J.Jeyaseelan said...

ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டேன், அவ்வளவு நுட்பமான எழுத்துகள், முதல் மூரை படிக்கும் போது புரியவில்லை, இரண்டாம் முறை பிடித்துக் கொண்டேன். இது தான் எழுத்தின் வெற்றி. மரங்களின் அழிவு, பறவைகளின் வாழ்வு, நெசவாளர்களின் நிலமை என சிறு கதையில் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறீர்கள். மிகவும் அருமை சார்...

'பரிவை' சே.குமார் said...

அஹா... மிகவும் அருமையாய் கதை நகர்த்தியிருக்கிறீர்கள் அண்ணா...
மரங்கள், பறவைகள், மனிதர்கள் என எல்லாம் தொட்டு நகர்கிற கதை...

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/