சமீப நாட்களாய் நடு இரவில்
வீட்டின் கதவை பிராண்டுகிற
பூனை கருச்சாம்பல் கலரில்முறைத்துப்பார்த்து நிற்கிறது.விரட்டும் போது போய்விடுவதும்திரும்ப வந்து நடு இரவில்கதவை பிராண்டுவதுமாய்இருக்கிற அது தனித்து இருக்கிறதாஅல்லது அதற்கு ஜோடி உண்டாதெரியவில்லை.அதன் வேலையே நடு இரவில்வந்து கதவைப்பிராண்டுவதும்விரட்டியதும் ஓடுவதுதானா?வேறேதும் தனித்த திறமைகள்அதனிடம் உள்ளனவா தெரியவில்லை.எதாக இருந்தாலும் அதன் அந்நேரத்தையதேவை வேறென்னவாய் இருக்கப்போகிறது.இறுகிமூடப்பட்ட உள்ளங்கையில்வைக்கப்பட்டிருக்கிறஒருகவளம் உணவைத் தவிர/
12 comments:
உணவும் ஒரு காரணம் இன்னொன்று உங்கள் தூக்கத்தை கலைப்பதாகவும் இருக்கலாம்... ஹா ஹா.. நல்ல பகிர்வுக்கு நன்றி சார்...
வணக்கம் ஜெயசீலன் ,
தூக்கத்தை கலைக்கிற போது கிடைத்த
கவிதையின் மென்மை நன்றாக
அமைய எழுதி விடுகிற பொழுதுகள்
இம்மாதிரியாய் அமைந்து போகின்றன/
அன்பு நண்பரே வணக்கம்
விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
வருகை தாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html
விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/
பூனை அழகு ... அதன் கவிதையும் அழகு..
கவிதை அழகு...
சிறந்த பகிர்வு
இனிதே தொடருங்கள்
வணக்கம் காசிராஜன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் க்ரந்தை ஜெயக்குமார் சார்,
விருது அளித்தமைக்கு.விருதுகள்
பொறுப்பைக்கூட்டும்,
வணக்கம் விவாதக்கலை அவர்களே,
நன்றி என்னை விவாதக்கலை வலைப்பூவிற்கு அழைத்ததற்கு./
Post a Comment