போட்ட கையெழுத்தை
விட அது போடப்பட்ட தருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப்போகிறது.
சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது காலை மணி 11ஐ எட்டி த்தொட போ கிற நேரம்.எட்டித்தொட்டு தோளில் கைபோட்டு உரசி மகிழ்ந்து அடுத்த நேரம்11ன்னே என கறாராக அறிவிக்கப்போகிற வேளை. கணிணியின் முன்ன மர்ந்து தேனீர் அருந்திக் கொண்டும் ஒரு மேட்டரை டைசெய்தவாறுமாய் அம்ர்ந்திருக்கிறான்.ஹாலின் ஜன்ன ---லோரமாக இருந்த கணிணியின்
மீது வெயிலின் வெளிச்சம் பட்டும் அது சுமந்திருந்த மரஇலைகள்,மரத்தின் உரு, கம்யூட்டரின் நிழல் ஆகியவைளை மொத்தம் கூட்டி இவன் மீதும் கம்ப்யூட்டர் டேபிள் மீதும் சிதறியுமாய்/
மூடி வைத்திருந்த
ஜன்னலைத் திறந்தது யார் இப்போது?என்ற கேள்வி இவ னுள் முளைவிட்டதைமனைவிசுட்டதோசையின் சப்தம் அமுக்கியது.அடுப்ப டியின் புகையும், வெக்கையும் வெளியேறுவதற்காக திறந்து விட்டிருக்க வேண்டும்.
அவளும் இந்த வீட்டிற்கு
குடி வந்த இந்த பத்து வருடங்களாய் கேட்டு கொண் டுதான் இருக்கிறாள்,சமைலறையில் ஒரு பேன் மாட்டவேண்டும் என/ஏனோ அது இன்று வரை கைவரப்பெறவில்லை.
ஊதாக்கலர் சேலையிலும்,கருப்புக்கலர்ச்சட்டையிலுமாய் பாந்தமாகத்தெரிகி றாள். காட்டன்புடவைஅது.MPPRகடையில் எடுத்தது.வெறென்ன தவணையில் தான். கடைக் காரர் சொன்னார் புடவை எடுக்கும்
போது. இன்னோன்னு சேத்து எடுத்துக்குங்கசார்.இதெல்லாம்சீசன்லவர்றதுதான்.எனச்சொன்னஅவரதுவார்த்தைக்கு ஆட்படாமலு
ம்ஆசைபட்டுவிடாமலுமாய்தனித்துஒற்றையாய்எடுத்த புடவை அது.இந்த வீடெங்கும், கொடியிலும்,பீரோவிலுமய் நிரம்பிக்கிடக்கிற அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற துணிகள் எல்லாம் இப்படி எடுத்ததுதான். கடைக்கார்க ளின் விசால மனதும் இவன் மாதிரியா னவர்கள் மனைவி மக்களுக்கு
பேண்ட் சர்ட்டும்,சேலையும்,சுடிதாருமாய்எடுக்கஉதவியிருக்கிறது.கிட்டத்தட்டலட்சம் வரை தொட்டிருக்கலாம் இவன் அந்தக்கடையில் எடுத்திருந்த ஜவுளியின் மதிப்பு.இவனும் மனைவியும்
தூக்கம் வராத இரவுகளில் திண்னையில்
அமர்ந்து பேசிகொண்டிந்த நாட்களில் அரைபடும் சொற்கட்டுகளாக/ அது மாதி ரியான சமயங்களில்
பேசப்பட்ட சொற்கட்டுகளிலும், துணைச்சொற்கட்டுக ளிலுமாய் உருவெடுத்த
புடவை இப்போது ஊதாக்கலர்காட்டி/
ஜன்னலின் கம்பி வழிவெளித்தெரிந்த கொல்லைப்புற
மரங்களையும், அதை ஒட்டிய வெற்று வெளியையும் அது தாண்டியிருந்த வீடுகளையும்
ரோட்டை யும், அது தழுவிக் கொண்டிருந்த
மனிதர்களையும் படம் பிடித்துச் சொல்லி யதாய்.
வளர்ந்திருந்த பூ மரத்தில்எக்குப்போட்டவாறுஆடு ஒன்று தன் பசி தீர்க்கும் முயற்சியில்/
மரத்தின் மீது மலர்ந் -திருந்த சிவப்பு நிற பூக்கள் தன் கையை அகல விரித்து அலகு காட்டியதாய்/
சாம்பல் பூத்திருந்தது மரப்பட்டையாயும்,பச்சை நிறம் காட்டியது இலைகளா யும்,சிவப்புநிறம்பூக்களாயும்எனதன்மேனியின்மொத்தகலர்காட்டிசிரித்தஅழகு
மரங்களாயும், பச்சையும்,
மெரூனும்,இன்னும்,இன்னுமாய் கலர் காண்பித்த வீடுகள் அதனுள் குடி கொண்டிருந்த மனிதர்களின்
மன நிலையையும்
தொ ட்டுச் சொல்லிச் சென்றதாய்/
உயரப்பறந்து சென்ற பறவை ஒன்று காற்றின் திசையில் சொல்லிச்சென்ற சேதி என்ன வென்று தெரியவில்லையாயினும் கூட சங்கரிடம் சொல்ல ஒரு சேதி இருந்தது. ”எண்ணன்னே,எங்க இருக்கீங்க?நல்லாயிக்கீங்களா? கவர் மெண்ட்
ஆஸ்பத்திரிகிட்ட நிக்கிறோம்,நம்மவேலைபாக்குற நிறுவனத்துல வேலைக்கு சேர வந்தவருக்கு இன்னை -க்கிரெக்காடுவெரிபி கேஷன், திண்டி வனத்துல இருந்து வந்தவரு மெடிக்கல்,
பிட்னெஸ் வாங்காம வந்துட்டாரு. இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம யாரையாவது
கௌவர்மெண்ட் டாக்டரப் பாத்து சர்டிபிகேட்
வாங்கிக் குடுக்கணும்”என்றார்.
சங்கர் சொல்லி முடித்த மறுகணம் சட்டென மனதில் தங்கி வந்து நின்றவர் தோழர் நம்பியாகத்தான் இருக்கிறார்.நம்பிக்கு டாக்டர்கள்
வட்டாரத்தில் கொஞ்சம் பழக்கம் அதிகம்.அவர் சார்ந்து நிற்கிற இயக்கமும்,அவரின் நன் நடத்தையுமே அம்மாதிரியான பழக்கங்களில் அவரை வழிகாட்டி
வைத்தி ருக்கிறது எனலாம்.
இப்போது அவரிடம் பேசலாம்,ஆனால் அவரது நம்பர் இல்லை கைவசம், இன்னொரு தோழரான முத்துக்கிருஷ்ணனிடம் கேட்கலாம்.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.ஓடிக்கொண்டே
இருக்கிறவர்,அதனால் என்ன ”ஓடுகிற ஓட்டத்தின் மத்தியில் சற்றே நின்று போன் நம்பர் மட்டும் சொல்லிவிட்டு ஊங்களது ஓட்டத்தை தொடருங்கள்”
எனச்சொன்னால் முடிந் தது
விஷயம்.
செல்போன் நம்பர் வாங்கியே விட்டான் தோழர் முத்துக்கிருஷ்ணனின் ஓட்டத்தை நிறுத்தி.
சேலத்திலிருந்துவந்து கொண்டிருந்தநம்பி ஒரு மருத்துவரின் பெயரைச் சொ ல்லி”அவர் அவசரவார்டில் இருக்கிறாரா பாருங்கள்,இருந்தால்
நான் அவரு டன் போனில் பேசி விடுகிறேன்
நீங்கள் வந்த வேலை எளிதாகிவிடும்” என்கிறார்.
இவன் வீட்டை விட்டு கிளம்பும்
முன்பாக சங்கரிடம்
சொல்லிவிட்டு ”அங் கேயே இருங்கள்.
இதோவந்து விடுகிறேன்,
ஐந்து நிமிட நேரத்தில்” எனக் கிளம் புகிறான்.
அவர்களைஅவசரவார்ட்அருகேநிற்கச்சொல்லிவிட்டுஅங்குபோனபின்தான்
தெரிந்தது. தோழர் சொன்ன டாகடர் ஒரு கேஸை அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருந்தார் என/
என்ன செய்யலாம்
இப்பொழுது?வேறு யாராவது தெரிந்த டாக்டர் ,,,,என அரிச்சலாய் தூசிதுடைத்துப்பார்த்தபோது ஒன்னொரு டாக்டர் பாரதி சுப்ர மணியம் தென்படுகிறார். டாக்டர் என்றால் அவர் வெறும் டாக்டர் மட்டும் இல்லை. அவர் கிளினிக் வைத்திருந்த ஏரியாவின்
அதி முக்கிய அடை யாளங்களில் ஒன்றாய்த்
திகழ்ந்தவர்.இரண்டு ரூபாய் க்கு மருத்துவம் பார்த்து தன் மருத்துவ வாழ்க்கையை துவங்கியவர்.இன்று அசைக்க முடியாத நன்நம்பிக்க்கை முனையாக/
அவர் இந்நேரம் இருப்பாரா அல்லது டூட்டி முடிந்து போயிருப்பாரா? எனத் தெரிய வில்லை.முன்னால் ஓ.பி பார்க்கிற
இடத்தில் கேட்டதில்
அவர் ஆபரேஷன் தியேட்டர் போய்விட்டதாய்ச் சொன்னாள் நர்ஸ் ஒருத்தி. ஆபரேஷன் தியேட்டரினுள் இருக்கிற வரை எப்படிப்போய் பார்ப்பது என்கிற யோசனையும்
தயக்கமுமாய் இருந்தவன்
சங்ரையும் உடன் வந்திருந்த வரையும் நிற்கச்சொல்லி விட்டு எதற்குமொரு ரவுண்ட் போய்விட்டு வரு வோம் என டாக்டர்கள்
அமர்ந்திருக்கிற அறை நோக்கியும் அது அல்லாத துமாய் யாராவது ஒரு தெரிந்த டாக்டர் அல்லது பாரதி சுப்ரமணியமே
தென் --பட்டு விடமாட்டாரா என்கிற ஆவலுடன் உந்துதலுடனுமாய் நகர்கிறான்.
நீண்டுவிரிந்திருந்தது ஆஸ்பத்திரி.தடுத்துக்கட்டப்பட்டிருக்கிற அறைகளை ஒவ்வொன் றாக தாண்டி வந்த போது ஐந்தாவது அறையில் காட்சிப்பட்டவராக மருதம்மாள் டாக்டர் இருந்தார்.வயிற்றுவலி
என வந்த சிறுவனுக்கு பக்கு வமாய்
மருந்து கொடுத்துக்
கொண்டிருந்தார்.
இவனுக்கு குடல் இறக்க ஆபரேஷன் பண்ணியவர். குரல் அவர்தான் எனக் காட்டிக் கொடுத்தது.பின் பக்கமாகத்தெரிந்த அவரை முன் பக்கமாகப்போய் பார்த்து பழக்க தோசத்தில்
“நல்லாயிருக்கீங்களா”எனக்கேட்டு
விட்டான்.
சிமிண்ட் பூசப்பட்டிருக்கிற தரையின் நான்கு மூலைகளிலும்
மடக்கி சிவப்புக் கலர் சாயம் பூசியிருந்தார்கள்.வெள்ளைப்பூக்களைச்சுற்றி மலர்ந்து சதுரம் காட்டி நிற்கிற சிவப்பு நிற மலர்களைப்போல,பார்க்க நன்றாகவே இருந்தது.
பழக்க தோஷத்தில்
எல்லோரையும் கேட்பது போல மருத்துவரையும் கேட்பது உசிதமல்ல,அதுவும் மருத்துவமனையில் வைத்து,,,,,,,,,அவர்கள் கேட்க வேண் டிய கேள்வியை இவன் கேட்டால்,,,,,,,அவரும் சிரித்துக்கொண்டே நன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்.”தனது பெயரின் முத்திரையை கிளினிக்கிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன் என்றும்,ஆபரேஷன் தியேட்டரில்
இருக்கிற பாரதி சுப்ரமணியன் சாருக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன்
அவரிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள்” என அவரிடம் சம்மதம் கேட்டு வாங்கிக் கொண்டு அனுப்புகிறார்.
சங்கருடன் வந்தவர் கார்மேகம் என இவ்வளவு அலைச்சலுக்குப்பின்தான் அறிந்து கொள்ள முடிந்தது.அப்போதுதான் நேரமும் இருந்தது.
திண்டிவனம் அருகே இருக்கிற குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவர்அவரது கிராமத்திலேயே முதன் முதலாய் அரசு வேலைக்கு வந்தவராம். கலங்கிப்போய் நின்றார்.அவரது மனம் முழுக்க மெடிக்கல்,பிட்னெஸ் சர்டிபிகேட்டே/அதுஇல்லாதுபோனால்வேலைக்குவேண்டாம் எனச் சொல்லி விடுவார்களோ,வாழ்க்கை வீணாகிப் போய்விடுமோ என்கிற அவரது உள் மன பிம்பம் வார்த்தைகளிலும், பேச்சிலுமாய்/ கண்கள் கலங்கித்தெரிந்தது. அதற்கு ள்ளாக
டாக்டரம்மா கூப்பிட்டனுப்பி விட்டார். டாக்டர்பாரதிசுப்ரமணியனி டம்நான்சொல்லிவிட்டேன்,நீங்கள்போய்பார்த்துவிடுங்கள் என/
சங்கரின் இருசக்கர வாகனத்தின் பின்னால்தான் கார்மேகம் அமர்ந்து வந்தார். கருப்புக்கலர்,நன்றாகயிருந்ததுபார்ப்பதற்கு.இவனுக்குத்தெரிந்துபத்துவருடங் களாக
அந்த வண்டியைத்தான் வைத்திருக்கிறார்.
செடிகள் வரிசை கட்டி நின்ற இடத்தின் ஓரமாகத்தான்
வண்டியை நிறுத்தி னார்கள். கம்பி வேலி கட்டம் கட்டி நின்றது.வெள்ளியில் உருக்கி ஊற்றியது போல நன்றாக இருந்தது பின்னலுடன் பார்க்கிற
போது.
இரண்டு பேரிடம் வழி கேட்டதில்
சரியாகச்சொன்னார் ஒருவர் ஆபரேஷன் தியேட்டர்
எங்கே இருக்கிறது
என/
ஆஸ்க்கலர் பேண்ட்,பச்சைக்கலரில் வெள்ளைக்கோடுகள் ஓடிய டீசர்ட் இவனுக்குநன்றாகத்தெரிந்தது.கார்மேகமும்,சங்கரும்அவரவர்களுக்குபிடித்த கலர்களில் என இல்லையானாலும் கூட கிடைத்த கலர்களில்
உடைகள் உடுத்தியிருந்தார்கள்.கருப்புவெள்ளைகாம்பினேஷ்னும்,கோடுபோட்டசட்டை
யும், அடர்கலரில்
பேண்டுமாய் அணி கிற தன்மை இன்னும் புழக்கத்தில்/
வெள்ளைக்கலரில் ஊதாக்கலரில்
ஊதாக்கோடுகள் ஓடியசட்டையும், கருஞ் சாந்துக் கலரில் பேண்டுமாய் கார்மேகமும்,பிஸ்கட் கலரில் டீசர்ட்டும்,ஆப் வொயிட் கலரில் பேண்டுமாய் நின்றார் சங்கர்.
ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட்
சுவர் தாண்டி உள் நுழைந்ததிலிருந்து வரிசை யாகவும் அது தப்பியுமாய்
வளர்ந்து நின்ற மரங்கள் இலைகளையும், கிளை களையும் ,பூக்களை யும் காட்டிச்சிரித்தது. அதுதாண்டி ஆபரேஷன் தியேட்டர்
வாசலில் நின்ற பொழுது தியேட்டரின்
முன் வெளியில் ஐந்து பேர் வரை நின்றிருந்தார்கள்.அதில் தெரிந்த இரண்டு ஆண்கள் மிகவும் கசலையாக/ அதில் ஒருவரின் மனைவிக்கு
ஆபரேஷன், சிசேரியன்,”என்ன குழந்தையாய்
இருக்கும் என்பது அவரது யோசனையின்
பிரதான இடமாக இருந்திருக்கும்.
நல்லஎண்ணமும்,நல்லசிந்தனையும் கொண்டவள்தான் அவரது மனைவி. ஆனால் உடல் கொஞ்சம் பூஞ்சை”என்கிற வாதையும் அவரிடம் இல்லாமல் இல்லை.பதட்டமும்,மென்வாதையுமாய்தெரிந்தஅவர்களின்முகங்கள்எதிர்பார்
ப்பைத் தேக்கி/
அவ்வளவு வலியிலும்,ரத்தப்போக்கிலும், கழிவிலுமாய்
பிறக்கப்போகிற குழந் தை என்னவாக இருக்கும்
என்பதே அவரது பிரதான கேள்வியாய்
இருக்கும் என்பதைவெளிச்சொல்லிவிளக்கவேண்டியதில்லை.வேகமாகநகர்ந்த நிமிடங் களும்,நொடிகளும்,இவனுக்கும்,சங்கருக்கும்,கார்மேகத்திற்கும்மிக மெதுவாய் நகன்றோடியதாக/கண்முன்னேகாட்சிப்பட்டஅத்தனையும்அவசரம் காட்டியும், மெதுவாயும் நகர்கிறதான
பிரமை/ வாங்கி விடலாமா சர்டிபிகேட்?
என்கிற யோசையுடனும்அவஸ்தையுமாயும் இருந்த பொழுதுதியேட்டரினுள் இருந்து வந்தநர்ஸ் ஒருத்திசொல்லியிருக்கிறேன் டாக்டரிடம் நீங்கள் வந்திருக்கிற விஷயத்தை என்று சொன்ன நேரம் வந்துவிட்டார் டாக்ட ரும்.
வெளியில் கிடந்த செருப்புகளை ஒரம் தள்ளியும்,அதன் மேல் மிதித்தவாறு மாய் டாக்ட ரின் கூப்பிட குரலுக்கு தியேட்டரினுள் செல்கிறார் கார்மேகம்.
இவனுக்கானால் ஒரே வாதிப்பு.தெரிந்த முகம்,இனிய பழக்கம்,சொன்னவுடன்
தியேட் டரிலிருந்து
வந்து விட்டாரே ஆபரேஷனை அட்டெண்ட்
பண்ணிக் கொண்டிருந்தவர். என்கிற யோசனையும், காத்திருப்புமாய் இருந்த பொழுது கரைந்த நிமிடங்களில் தியேட்டரின்
கதவைத்திறந்து கையில் குழந்தையை ஏந்தியவாறு
நர்ஸ் வருகிறாள்.
குழந்தையின் உடம்பில் சுற்றப்பட்டிருந்த துண்டில் சிவப்பு நிறப்பூக்கள் குழந்தையின் மேனியில் படர்ந்து தெரிந்ததாய்/
குழந்தைக்கொண்டு வந்த நர்ஸின் பின்னாலேயே
கார்மேகமும் வந்து விட்டார் கையில் சர்டிபிகேட்டோடு/
நர்ஸ்கொண்டுவந்தகுழந்தையின்பிஞ்சுமேனிமீதுடாக்டர்பாரதி சுப்ரமணியன்
ஆபரேஷன் செய்து எடுத்த தடயமும்,கார்மேகம் கொண்டு வந்த சர்டிபிகேட் டில் டாக் டர் பாரதி சுப்ரமணியனின் கையெழுத்தும்/
No comments:
Post a Comment