21 Sep 2014

கைத்துட்டு,,,,,                  
எந்தப்பக்கம் கையை விட்ட போதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால் எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது.

வலது பக்கம் கையை விடுகிறார். மடித்துக் கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கி யை மீறி வெளித்தெரிந்தஅண்டர்வேர்பாக்கெட்டிலிருந்துரூபாயைஎடுக்கிறார். இடது பக்கம்  கையை விடுகிறார்.மேல்ச்சட்டைப்பையிலிருந்து நோட்டுக்களாய் எடுத்துப் போடுகிறார். அது போலவே சட்டையின் உள் பை,அண்டர் வேர்பாக்கெட்டின்இடது பை,கட்டியிருந்த  லுங்கியின் சுருட்டிய மடிப்பிலிருந்து,,,,,,,என எல்லாப்பக்கமிருந்து ம் எடுகிறார்.எல்லாம் மூன்றாய்,இரண்டாய் மடிக்கப்பட்டிருந்த பத்து ரூபாய்,இருபது ரூபாய்,ஐந்து ரூபாய்  நோட்டுக்கள் கசலையாய்/

நான் மற்றும் எனது சக ஊழியர் இருவருமாய் அலுவலகம் விட்டு வந்து கொண் டிருந்த நேரமது ,நேற்று இரவு கண் மூடிக்கொண்ட மின் வெட்டினால் சரியாக தூங்காத தூக்கம் இப்போது வந்து இமைகளை இழுக்க ”தூக்கமுன் கண்களை தழுவட்டுமே”என அசரீரி ஒலிக்கிறது.அல்லது ஒலிப்பத்தாய் படுகிறது.

ஆகா இதெல்லாம் சரிப்படாது.இரு சக்கர வாகனத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது எப்படி தூக்கம் கப்ப வண்டியை ஓட்டுவது சரியாகஇருக்கும்?உடலும் மனமும்,புத்தியும் ஒரு சேர  மிகவும் கவனமாக பயணிக் கா விட்டாலும் கூட ஏதோ ஓரளவு பயணித்து ஆக வேண்டுமே என்கிற உயர்ரக எண்ணத்தில் தற்சமயம் தூக்கம் விலக்க ஒரு டீசாப்பிட்டலாம் என்கிற முடிவில் தேநீர் கடை முன்பு நிற்கிறோம். வழக்கமாகடீசாப்புடுகிற கடைதான் அது. சக்தி தாசன் கடை.காலை,மாலைஇருவேளையும்  பெரும்பாலும் அங்குதான் டீ சாப்பிடு வேன் நேரமிருக்கிற தினங்களில்/

டீக்கடைகள் எப்போதும் ஏழைகளையும், அன்றாடர்களையும் தன்னுள் தக்க வைத்துக் கொண்டும்உள்ளிழுத்துக் கொள்கிறதுமானஉயிர் உருவாய்த் தெரிகிறது. கோயில்களுக்குஅடையாளாய்இருக்கிறகோபுரம் போல டீக்கடைகளுக்கு அடையா ளமாய் பாய்லரும், பால்ச்சட்டியும்,டிக்காக்ஷன் பையும் போலும்/

நாங்கள் சென்ற நேரம் சூடாக வடையும் ,பஜ்ஜியும் இருந்தது.வேறு வழியில்லை .அந்த விலைக்கு அப்படித்தான் சுட்டுத்தரமுடியும்.ஏதோஒருமாவை பிசைந்து உள் ளே நறுக்கிய வெங்காய துண்டுகளையும்,மிளகாய்த் துண்டுகளையும் வைத்து சுட்டெடுத்த வடையும், பஜ்ஜியும் பார்க்க செந்நிறக் கலர் கொண்டு எண்ணெய் பூசி மாலை வெயிலில் மின்னும். இரண்டு ரூபாய்க்கு பின்எப்படித்தர முடியும் அவர் களால்கேட்கமுடிகிற போதும் கூட இங்கு இவ்வளவுதான் விற்க முடியும்,அதற்கு மேலானால் விற்க முடியாது.வாங்கவும் மாட்டார்கள்.ஸ்கூல்போகிறபிள்ளைகளு க்கும்,கூலிவேலையில்சம்பாரிக்கிறவர்களுக்கும்இதுதான்லாயக்கு.இரண்டுஅல்லது
மூன்று வடை,அல்லதுபஜ்ஜிகளைபிய்த்துப் போட்டு  தண்ணீரான சட்னியும், சாம்பாரும்விட்டுச்சாப்பிட்டால்அந்நேரம்வயிறுநிறைந்த திருப்தி  என டீக்கடை உரிமையாளர் சொன்ன போது தஞ்சாவூரில் ஒரு திரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு டீ 88 ரூபாய்க்கு குடித்த ஞாபகம் வருகிறது.(வேண்டாம்,வேண்டாம் எனச்சொல்ல அலுவலக மேலாளர் கொடுத்த பார்ட்டியில் நடந்த விபத்து அது.)அம்மாதிரியான கொடுமையான விபத்துக்கு இது மிகவும் தேவலாம்.

நானும் என்  உடன் வேலை பார்ப்பவருமாய் சென்றமாலைப்பொழுதுக்குடீயும் ,வடையும்ரெடியாகஇருந்தது.நான்ஒருகடி,ஒருகுடிஎன்கிறவகையில்இயங்கிக்கொண்
டிருந்தபோதுஉடன்வந்தவர்எதுவும்வேண்டாம் எனச்சொல்லி விட்டார்.(உடம்பைப் பேணுகிறாராமாம்)குடித்தடீக்கும்,கடித்த  வடைக்குமாய் கொடுக்க காசுதேடியபோது பையில் சில்லறைகள்  தவிர்த்துநூறுரூபாயாய்தட்டு பட்டது.”சில்லறை இல்லண் ணே,என்றவாறுமுழுத்தாளாய்க்கொடுத்தபோதுஎங்களுக்குமிச்சச்சில்லறை கொடு க்க எத்தனித்தபோதுதான்இப்படி.  

எண்ணன்னே  இப்படி என்ற போது அவர் சொல்கிறார். பலச்சரக்குக்கு, பாலுக்கு, திடீர்ன்னு சீனி வாங்க,,,,,,,,இப்பிடி எல்லாத்துக்கும் தனித்தனி சார்.ஒங்கள மாதிரி எல்லாரும் குடுக்குற போது அதத அங்கங்க வச்சிருவேன் சார் என்கிறார்.

அவரது உடம்பில்  எந்தப்பக்கம் கைவிட்ட போதிலும் பணம் வருகிறது.விட்டால் எட்டு திசையிலிருந்தும் பணம் எடுப்பாரோ?

6 comments:


 1. அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள் சார், இன்று பெரிய ஹோட்டல்களில் 40 50 ரூபாய்க்கு போடப்படும் டீயை விட சிறு கடைகளில் 7 ரூபாய்க்கு ருசியான டீ கிடைக்கிறது...

  ReplyDelete
 2. வணக்கம் ஜெயசீலன் ,
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. ஆஹா... எந்தப்பக்கம் கைவிட்டாலும் காசு வருவதை ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. அருமையான கதை நண்பரே..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகேந்திரன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete