முதலில்இனிப்பு.பின்தான்மற்றதெல்லாம்என்கிறமுடிவுடனும்,மனம்பாவியஎண்ணங்களடனுமாய்பேண்ட் சட்டையினுள் நுழைந்து மனைவியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிய போது காலை மணி 11 இருக்கலாம்.
தந்துவிடுகிறேன்இன்றுகண்டிப்பாகஎனச்சொன்னஇரண்டு புத்தகங்களை நண்பரிடம் சேர்த்து விட வேண்டும்.வட கடைசியை வேலைபார்க்கும்இடமாகவும்,தென்கடைசியை குடியிருக்கு ம் பகுதியாகவும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டுள்ள நண்பரை பஜாரில் நான் இருந்து கோண்டு வரச்சொல்லியோ,அல்லது அவரை தேடிப்போயோ கொடுத்து விட்டு வர வேண்டும்.
அறிவியல்புத்தகங்கள்அது.பேராசிரியர்,,,,,,,,அவர்கள்எழுதியது.,,,,,,சார்எனஎன் போன்றவர்
-களால் பிரியமாயும்,அன்பு நிறைந்துமாய் அழைக்கப்பட்ட அன்பின் மனிதர்.தான் எழுதிய இரண்டு புத்தகங்கள் மூலம் எங்களிடம்உரையாடிகொண்டும்,மனம்பகிர்ந்து கொண்டுமாய்/
வாழ்நாளின் நகர்வுகளில் அன்றாடம் இரண்டு முறையாவது பார்த்துக்கொள்ள முடிந்த அருகாமையில் இருந்தவர் இப்போது பார்க்க வாய்க்காத எட்ட தூரத்தில் இருக்கிறார்.
140 ரூபாய் இனிப்பு,160 ரூபாய் காரம் என்கிறார்கள் .எப்போதும்காரத்தைவிடஇனிப்பேகூடுதல் விலைசொல்லும்.இந்ததடவை என்னவோகாரம் கைதூக்கிநிற்கிறது, நிற்கட்டும்,நிற்கட்டும்,,,,,, கால்வலிக்கிறவரை.
ஒண்ணரைக்கிலோலட்டு,அரைக்கிலோபாதுஷா,,,,,,,,வாங்கியபின் “போதுமா,இவைகள்,போது மா இவைகள் மட்டும்,,,” என மூன்று தடவைக்கும் மேலாக கேட்டும் தெளிவாக என்னைப் பார்த்துமாய் இனிப்புநிறைந்தபையை தந்த கடைக்காரர் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்ட
போது காரத்தில் மிக்சர் மட்டும் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது,
நான் வாங்க நினைக்கிற மிக்சர் இந்த நிறை பஜாரில் வேறெங்கும் கிடைக்காது.ராமசாமி ரோட்டிலிருக்கிறஅற்புதசாமிகடையில்தான்கிடைக்கும்.”தடிமிக்சர்”எனஅதற்குஎங்களது
குடும்பமே பெயர் வைத்திருந்தோம்.
இவ்வாறாய் இரண்டு கிலோ இனிப்பும்,ஒரு கிலோ காரமுமாய் (மிக்சர்)வாங்கிய கடைகள் இரண்டும்கிறிஸ்டின்பெயரைதாங்கியிருந்ததுதற்செயல் ஒற்றுமையாய்/
இனிப்புப்பையைதாங்கிக்கொண்டுபாண்டிதோழர்கடையில்அமர்ந்துடீக்குடித்துக்கொண்டிருந்த வேளை “டீ யேவாரம் முன்ன மாதிரி இல்ல தோழர்,இப்பயெல்லாம்
பிராந்திக் கடைப் பக்கம்போயிர்றாங்க,முன்னயெல்லாம்நாலஞ்சுபேருசேர்ந்துடீக்குடிக்கவருவாங்க தோழர்.இப்ப அப்பிடி சேர்ற நாலஞ்சு பேர்ல யாராவது ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் மத்தவுங்கள தண்ணி ஆச காண்பிச்சி கூட்டீட்டு போயிறாங்க .நுகர்வோர் எண்ணிக்கை கூடிப்போச்சு தோழர்.இந்நேரம் போயி உக்காந்து குடிக்க ,அப்பிடியே அங்கேயே கொஞ்சநேரம்பேசிக்கிட்டு இருந்துக்கிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிறன்னு இருக்காங்க.இதுல அடிபடுறது எங்கள மாதிரி டீக்கடைகள் தான்தோழர்.”எ னச்சொல்லிக் கொண்டிருந்தவரின் பேச்சுக்குகாதுகொடுத்துக்கொண்டிருந்தவேளையில்வந்தநண்பரிடம் புத்தகங்களைக்கொடுத்து விட்டு இருவருக்குமாய் தீவாவளி நல் வாழ்த்துக்கள்
சொல்லிக் கொண்டு பிரிகிறேன் அவசரமாக/
இன்னும்வெடிவாங்கவேண்டும்.வழக்கமாகவெங்காயமும்,தேங்காயும்விற்கிறகடையில்தான் வெடி விற்றார்கள்.
ரூ,300 க்கு கிப்ட் பார்சல் பெட்டி ஒன்றும் உதிரியாய் சில வெடி பொருட்களும் வாங்கிக் கொண்டு கிளம்பலாம் என்றிருந்த வேளையில் ஆட்டோவில் தனது மகனுடன் வந்து இறங் கிய பெண் கடையை உண்டு இல்லை என பண்ணிக்கொண்டிருந்தாள்.
16இஞ்ச்ராகெட்பாக்ஸ்,அதுலமல்டிக்கலர்,மேலேபோய்வெடிக்கிறவெடி,,,இந்தக்கம்பெனிகேரண்டி யா,,,,,,,,,,,,,எனநிறைய,நிறையபேசிகொண்டும்,சரக்குகளை எடுத்துப்பிரித்துக்காண்பிக்கச் சொல் லியும்,விலையைகேட்டுக்கொண்டும்காண்பித்தஐயிட்டங்களில்ஒவ்வொருபெட்டியாகவாங்கிப் போட்டுக்கொண்டும் இரண்டாயிரத்துச்சொச்சங்களைதந்து விட்டு போன பின்பு அதுவரை என்னை கைமர்த்தி அமருமாறு சொன்ன “டேவிட் என்கிற கடைக்காரர்”வெடிகள் அடங்கிய பார்சலையும்,நான் கைகாட்டிய வேட்டுக்கள் சிலவற்றை உதிரியாய் தந்துவிட்டும் ரூ400 என சைகையால் விரல் காட்டி கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்.
இனிப்பு,வெடிகள்,காரம்,மற்றும் காய்கறிகள் என்கிற வரிசையில் இனி வாங்க வேண்டியது காய்கறிகளும்,காரமும் மட்டுமே.
காரம் வாங்கினால் காய்கறிக்கு பணம் இருக்காது,காய்கறி வாங்கினால் காரத்திற்கு பணம் பத்தாது என்கிற எண்ணத்தில் காய்கறியை பின்னுக்கு தள்ளிவிட்டு காரத்திற்கே முன்னுரி மைஎனநகைக்கடைகளின்முன்பும்,காய்கறிக்கடைகளின்முன்பாகவும் பஜாரில் கூடியிருந்த கூட்டத்தைவிலக்கிவிட்டும்,ஊர்ந்தும்,நகர்ந்துமாய்வந்துதியேட்டர்முன்பிருந்த டீக்கடையில் நின்றபோது வாங்கிய இனிப்பும்,காரமும் பையினுள் குடிகொண்டிருந்த வேட்டுகளும் தீபாவளி கொண்டாட்டாத்திற்கு உருவெடுத்து நின்றவையாய் சிரித்த முகம் காட்டி/
( சற்றே முன்னதாகவே,,,,/)
No comments:
Post a Comment