16 Sep 2014

காய்ச்ச மாத்திரை,,,       
உடல்,பொருள் ஆவி என்றும் இன்னும்,இன்னுமாகவும் மட்டுமே அமைந்து போனது இந்த இரண்டு நாட்களுமாய்/

மனைவி சொன்னாள் அலுவலகம் விட்டு வந்தவுடன், சோர்ந்திருந்தவனைப்பார்த்து/ “ரொம்ப ஒருமாதிரியா இருந்தாபோயி டாக்டர் பாத்துட்டு வந்துருங்க,அப்புறம் சாமத்துல எந்திரிச்சிட்டு குய்யோ, முறையோன்னு,,,, கத்தீட்டு ஒடம்பு இப்பிடி செய்யுது,அப்பிடி செய்யுது,,கையையும் காலையும் கழட்டி தனியா வைக்கணும் போல இருக்குன்னு நீங்களும் தூங்காம,எங்களையும் தூங்க விடாம தொந்தரவு பண்ணாதீங்க ஆமாம்என் றாள்.

சரிதான்அவள் சொல்வதும்முந்தையநாட்களில்இப்படிசொன்னதையும், நடு இரவுகளில் ஆஸ்பத்திரி டாக்டர் என அலைந்த தின்ங்களிகளின் நினைவுகளைச் சுமந்தும் அப்படிச் சொல்கிறாள் போலும்.

அவளது பேச்சைப் புரட்டிப்பார்க்கையில் அதன் பக்கங்களும் ஞாயமில்லாமல் இல்லை. கூடையில் கட்டிகொண்டு சுமந்தது போல ஆட்டோவில் கட்டி அலைந்திருக்கிற அலைச் சல் கொஞ்சம் நஞ்சமாய் இல்லை.

உடல் உபாதையின் அடையாளங்கள் என்னை தூங்கச்செய்ய விடமாட்டேன் என்கிறது, எனவும் இன்னுமான சங்கடங்ளைச்சொல்லி எழுப்பிய நடு இரவின்  அடையாளங்களை மனதில் சுமந்துதான் இப்படியெல்லாம் சொல்கிறாள். அவளது பாடு அவளுக்கு/

கொஞ்சமாவது தூங்கி எழுந்தால்தான் மறுநாள் வீட்டின் இயக்கத்தை சுற்ற முடியும். ”எல்லாம் சரிதான் எனச்சொல்கிற அவள் ஒரு நா ஒரு பொழுதாவது சமையல்ல எனக்கு உதவி பண்ணுறீங்களாஎன்கிற அவளின் ஆதங்கப் பேச்சுக்கு மறு பேச்சு அவனிடம் இருந்ததில்லை பலசமயங்களில்,சிரித்து மழுப்பி விடுவான்.அந்த மழுப்பல் அவனிடம் அவளைஎரிச்சல்கொள்ளச்செய்தபோதுகூடஅவனதுசெய்கைஅப்படித்தான் இருக்கிறது. ”என்ன செய்ய வாக்கப்பட்டாக்கி விட்டது,இன்னும் போயி ,,,,,,,,,,,,என்பாள்.

இப்படித்தான்  வீட்டின் இயக்கத்தை சுற்றும் அவள் உடலில் சத்துகெட்டுப்போயிருந்த நாட்களில்சம்பாத்தியத்தில்பாதிஆஸ்பத்திரிக்கும்,நடைபாதையின்வரைபடம்வீட்டிலிருந்து  ஆஸ்பத்திரிநோக்கிவரையப்பட்டும்,நேர்கோடுஇழுக்கப்பட்டுக்காணப் பட்டதாயும்/

சாமுவேல் டாக்டர்தான் என நினைக்கிறான்.கொஞ்சம் உயரம் சராசரியை விட மெலிந்து மாநிறமாய் இருந்த அவர்தான் சொன்னார் என நினைவு.

கிருஷ்ணமூர்த்தி ரோட்டில் இருக்கிற அந்த ஆஸ்பத்திரி அவனுக்கு மிகவும் நெருக்கம் எனவெல்லாம் சொல்லி விட முடியாது.ஆனால் நெருக்கம் போலான ஒரு உணர்வை இவனில் விதைத்திருந்தது சமீப நாட்களில்/
அந்த ரோடு ரயில்வே கேட்,கேட்டை ஒட்டி உள்ள டீக்கடை அங்கு வருகிற மனிதர்கள் அந்தப்பகுதி என யாரையும் மறந்து விட முடியாது.

அப்படியான ஒரு சிறப்பு கவனம் ஈர்க்கிறபகுதிதான்மில்தொழிலாளர்களான மனோகரன் குடும்பத்தையும், அன்றாடம் காய்ச்சிகளான சுமதியாக்கா குடும்பத்தையும்  தன்னில் சுமந்து கொண்டிருந்தது தன்னில் அடைகாத்து/

சுமதியக்காவின் மகளும்,மனோகரனின் மகளும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள்,இரண்டாம் வகுப்புபிரிவு,உயர்ந்த  காம்பவுண்ட் சுவரை தன்னில் வரைந்து கட்டிக்கொண்டிருந்த முனிசிபல் பள்ளி அது. வீட்டிலிருந்து இருவரும் எட்டு மணிக்கெல்லாம்  கிளம்பி விட்டு விடுவார்கள்,தெரு முக்கிலிருக்கிற சுமதியக்காவின் வீடு தெருவின் நடுவிலிருந்துவருகிறமனோகரனின்பையனுடன்அவளதுபெண்ணைச்சேர்த்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும், ஊதாப்  பாவாடையும்  வெள்ளைச்  சட்டையும், காக்கி டரவுசரும்,வெள்ளைச்சட்டையும் அணிந்த பூக்களாகஇருவரும்ரோட்டில் நடந்து நகர்கையில் பார்க்க இரண்டு கண்கள் போதாது  என்பார்கள்,சின்ன பூக்கள் இரண்டு மணம் வீசிச்செல்கிறது பாருங்கள் சாலையின் இவ்வளவு கூட்டத்திலும் எனவுமாய் சொல்லத்தோன்றும்.

அந்த டீக்கடையில் டீக்குடிக்கிற நாட்களொன்றொன்றின் நகர்வில்தான் சுமதியக்கா பழக்கமாகிறாள்  அவனுக்கு. ”உங்களுடன் வேலை பார்க்கிற மனோகரன் வீட்டில் ஏதோ பிரச்சனைப்போல இருக்கிறது, வாருங்கள் வீடே இரண்டு பட்டுக்கொண்டிருக்கிறது உங்களதுவருகைஅவசியம்அங்கு”,என்கிறசொல்லைஅவனில்கட்டிஇழுத்துப் போனவள் அவள்,

அவன் மனோகரன் வீட்டில் நுழைந்த நேரம் மிகவும் சரியாக இருந்தது,அரிவாளை தூக்கிக்கொண்டு நின்றவன் அவனைப்பார்த்ததும் கொஞ்சம் ருத்திரம் அடங்கியவனாக/

அன்று பூத்த நட்பு  சுமதியக்கா வீடு,மனோகரனின் வீடு அவர்களது அக்கம் பக்கம் என்கிற நட்பை அவனில் படர விட்டிருந்தது.

அவன்கிருஷ்ணமூர்த்திரோட்டில்பயணப்படுகிற போதும்,டீக்கடையில்நிற்கிற நேரங்கள் யாவும் அவனில் இவர்களின் முகங்களும் மென்மைபூத்த மனங்களும்  பிரதிபலிக்கும்.

அப்படியானவர்களைசுமந்திருந்தபகுதியில்இருந்தசாமுவேல்டாக்டர்தான் அவர்களு க்கு கடவுள் போலவும்,ஆஸ்பத்திரியே  கோயில்போலவும் அவர்களுக்கு/

அவர்தான் சொன்னார் என நினைக்கிறான்.மனைவியை ஆஸ்ப்பத்திரியில் சேர்த்திருந்த நாட்களில்/ “என்ன அவுங்களுக்கு ஒடம்பு சரியில்லைன்னு சொன்னதும் ஒடனே ஒங்களுக்கு காய்ச்சல் வந்திருச்சா”,

முதல் நாளிரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு சைக்கிளில் போனபோது உடல் லேசாக நடுங்கியது.டாக்டர்இல்லைஆஸ்பத்திரியில்என நர்ஸ்கொடுத்தமாத்திரை பலனலிக்க வில்லை. இரவே குளிர் காய்ச்சல் வந்துவிட்டது.காலைவரைநீடித்தகாய்ச்சலுக்கு டாக்டர் வந்து மாத்திரை கொடுக்கும் போதுதான் இந்தப்பேச்சு, அந்தப் பேச்சுகள் இப்பொழுது ஞாபகம் வர கிருஷ்ணமூர்த்தி ரோடும், மனோகரனும், சுமதியக்காவும் டீக்கடையும் சுமதியக்காவின் மகள் திருமணத்திற்கு சென்ற மாதம் சென்ற விட்டு வந்த நினைவுச் சுவடும் நாளை மனோகரனை சந்தித்து விட்டு  சாமுவேல் டாகடரிடம் சென்று விட்டு வரவேண்டும் என்கிற நினைப்புடன் சொட்டரையும், குல்லாயையும் போட்டுக்கொண்டு போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்குகிறான்.

No comments:

Post a Comment