ஆயிரம்,500
,நூறு 50,20,10,5,2,1 என வகை வாரியாய் எழுதப்பட்டிருந்த பேப்பரில் இன்னும், இன்னுமுமாய்
நிறைய எண்களும் எழுத்துக்களுமாய் எழுதிக் காணப்பட்டிருந்தது.
எல்லாம்இவனால்எழுதப்பட்டிருந்தஎழுத்துக்கள்.இவனுக்கும்ஒருகாலத்தில்அப்படியானதொரு ஆசை இருந்ததுண்டு.குண்டுகுண்டாய்அழகாகஎழுதவேண்டும்.
எழுத்தைஅழகான முறையில் பதிப்பிக்க வேண்டும்.பேப்பரில்நோட்டில்,சுவரெழுத்துக்களில், தட்டிபோர்டில்எனநிறையநிறையகனவுகண்டிருக்கிறான்.அப்படிமனதில் சுமந்து கட்டிக் கொண் டிருந்தகனவு
பஞ்சுப் பொதியாய்கலைந்துபோனமேகம் போல காணாமல்
போய்விட ஆசை கொண்டநினைப்பும்விருப்பமும்பள்ளிப்பருவத்திலிருந்துஇன்றுவரைநிறைவேறவும்
கைவரப் பெறவும்இல்லாமலேயே/
இவனுக்குநினைவுதெரிந்து சிலரை சொல்வதுபோலஅலுவலகநண்பர்கே.வி.கேவின்எழுத்தை தீர்மானமான
எழுத்து எனச்சொல்வான்.அச்சடிக்கப்பட்டது போல் இல்லாவிட்டாலும் கூட எந்த நேரத்தில் எந்த
மனோநிலையில் எழுதினாலும் கூட ஒரே மாதிரியாகவே காணப்பட்ட அவரது எழுத்து.(தூக்கத்தில்
எழுப்பிஎழுதச் சொன் னாலும் இப்படித்தான் எழுதுவாரோ தெரியவில்லை இவன்அறிந்தவரை அவர்
தூக்கத்தில் விழித்தோஎழுந்தோபார்த்ததில்லை.)
நணபர்K K Sஎழுத்தும்,டாக்டரின் எழுத்தும் அவ்வளவு பிரமாதமாய் இருக்கும். இது போல இவனை ஆக்ரமித்த தொழிற்சங்க தலைவரின்
எழுத்து மற்றுமான வேறு சிலரின் எழுத்து என இன்னும் பலபேரின் எழுத்து இவன்மனதை ஆக்ரமித்த
போதும், இவனை ஆட் கொண்டு இவனுள் ஆறாத ஆசையாய் முளைகொண்ட எழுத்து இன்று வரை இவனு க் கு கைவரப்பெறாதது
குறித்து இருந்த வருத்தம்முன்புபோலஇப்போது இல்லை.அது குறித்து கவலை கொள்ளவும் இவனுக்கு
நேரமும் இல்லை.
ஆளைஅமுக்குகிற
வேலைப்பளுவின் முன் அதெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை என்கிற நினைப்பும்அதெல்லாம் இரண்டாம்
பட்சமே என்பதான சொல்லாடலும் கூடிப்போன பின் ஏன் அது குறித்த அனாவசிய மனக்கவலை எனத்தோணிப்
போகிறதுதான்.
சுற்றிலுமாய்வலைக்கம்பிகட்டப்பட்டிருந்த சின்னதான ஒரு கவுண்டர்,அந்த வழியாகத்தான் அன்றாடம்லட்சங்களிலும்
ஆயிரங்களிலுமாய்பட்டுவாடாவும் பணம்வாங்குவதுமாய்
நடந்து கொண்டிருக்கிறது.
கையிருப்பு
பணத்டை கணக்கில் கட்ட,தேவைபடுவோர் கணக்கிலிருந்து எடுக்க ,நகைக்கடன் வாங்க,மற்ற கடன்
பெற என அன்றாடங்களில் மலர்ந்துபூத்த மனித முகங்களும், வாடிப் போன உள்ளங்களுமாய் நிறைந்து
குடிகொண்டு வருகிற இடமா யும் பண வரவு செலவு நடக்கிற தனியார் நிறுவனமாயும்/பணம் சுமந்து
நிறைந்து காணப்படுகிற இந்த நிதி நிறுவன த்திற்குவருகிறவர்களில் முக்கியமாய் இவன் உட்பட
அந்த நிறுவன ஊழியர்களால் அறியப் பட்டவர் லட்சுமிப்பாட்டிதான். லட்சுமிப் பாட்டி, லட்சுமிப்பாட்டி,லட்சுமிப்பாட்டி
என அவளை மூன்றுதடவைக்கு மேல்கூப்பிடவேண்டும்அவள் இங்கு வருகிற நாளன்றின் போதெல்லாம்/ மாதம்
ஒருமுறை பணம் எடுக்க வருவாள்.அது அவளுக்கென அவளது மகன் இங்கு போட்டு வைத்துள்ள பணம்.அதிலிருந்து
மாதா மாதம் இவ்வளவு என்கிற அளவு மீறாத கணக்கில்எடுத்துக்கொளவாள்.அளவுமீறியும் எடுக்கமாட்டாள்.எடுக்கவும்முடியாது. கணக்கில் அளவாகத்தான்பணம்இருக்கும்.தேவையானநேரங்களில்
வந்து கணக்கில்பணம் கட்டிவிட்டுப் போவார்நகரத்தில்
இருக்கிற மகன்.மகனுக்கும் லட்சுமிப் பாட்டிக்கும்மட்டுமில்லை, மருமக ளுக்கும் அவளுக்கும் கூட ஆகாது. அவள் ஒரு போங்கு என்பார்கள்.
மகன்நகரத்தில்சின்னதானதொழிற்சாலைஒன்றுவைத்திருக்கிறார்.ஏதோஇன்ஜினியரிங்ஒர்க்ஸ் எனச்சொன்னதாய்
ஞாபகம்.மாதம்ஒருமுறைஅவளதுஅம்மாவைப்பார்க்கவருவார். விருப்பப் பட்டால் உடன் வருவாள் மருமகளும்/
மருமகள்
வந்த தடயம் தெரிந்து கொள்ள அவள் அணிந்திருக்கும் நகைகளே சாட்சி சொல் லும்.பாட்டி சொல்வாள்,பாருப்பா
இப்பிடித் திரிஞ்சா,,,,,,,,நகைக கெடந்தா வீட்ல வச்சிகிட்டு வரவேண்டியதுதான இப்பிடிப்போட்டு
அளப்பீட்டுவராட்டி என்ன? என/ அவள்வந்து போகிற
ஒவ்வொருமுறையும் பாட்டியின் இந்த ஆதங்கத்திற்கு அர்த்தம்இல்லாமல்இல்லை.இப்பிடி நகைமாட்டுற
ஸடாண்டு மாதிரி வந்துநின்னாமாமியாள சரியா கவனிக் காம நகையப் போட்டுட்டு மினிக்கீட்டுதிரியிறான்னு லேசா பேசிக்கிறமாட்டாங்களா ஊருக்குள்ள. இப்பயே
அப்பிடித்தான் ஏங்காதுல பட்டும்,படாமயும் பேசிக்கிட்டு திரியிறாங்க/ என்பாள்.
காலையில்
அலுவலகம் திறந்தவுடன் முதல் ஆளாக வந்து நிற்பாள். சமயங்களில் அலுவ லகம் திறப்பதற்கு
முன்பாகவே வந்திருப்பாள்,கேட்டால் அரைமணி முன்பாகவே வந்து விட்டதாகச்சொல்வாள்.என்னஅப்படிஅவசரம்என்றால் ஆமாம் சம்பளம் போடுங்க,ஏங் மகன் எனக்கு குடுத்துருக்குற சம்பளப்பணத்த
எடுக்க நாயா வந்து நிக்கிறேன் என்பாள்இவனிடம்.
இவனிடம்எப்பொழுதுமேபிரியமாகவும், அன்பாகவும் பேசுகிறபாட்டிஎன்னப்பா இன்னைக்கு என்ன சாப்பாடு
சாப்ட்ட காலையில, காலையில் வீட்ல சாப்ட்டயா இல்ல இனிமேதான் கடைக்குப்போயி சாப்ட்டு வருவியா, நீஎங்கயாயாவதுபெரிய ஓட்டலா இல்ல போயி சாப்பு டுவ
என்கிற அவள் இந்தக்கெளவியவும் அப்பிடியே ஓட்டலுக்கு
கூட்டிக்கிட்டு போவியா என்பாள்.
வருகிறதினங்கள் தோறுமாய் அவளது பேச்சு பெருமாபாலுமாய் சாப்பாடு பற்றிதான் இருந் திருக்கிறது.காலைச்சாப்பாட்டைஅலுவலகத்திற்குகொண்டுவந்து கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டுக்கிற
நேரமாகிப்பொன நாட்களில் லட்சுமிப் பாட்டி வந்திருந்தால் டிபன் பாக்ஸை எட்டிப்பார்க்க
மறக்கமாட்டாள் மதியம் என்ன சாப்பாடு என கையோடு கேட்டும் வைப்பாள். அவள் வந்தவேளைமுடிந்துபோவதற்குள்ளாய்
எப்படியும் மற்ற பேச்சின் ஊடாக சாப்பாடு பற்றியபேச்சைபத்துமுறையாவதுபேசியிருப்பாள்.இல்லையெனில் அந்தப் பேச்சே பிரதானப் பட்டு நின்றிருக்கும்.
வலதுபக்கமாய்இருக்கிறகம்பூட்டர்.இடது பக்கமாய் தன் இருப்புகாட்டிஅமர்ந்திருக்கிறரூபாய் எண்ணுகிற
மெஷின்,மற்றும் ஸ்டாம்ப் பேட், சீல், பேனா, பென்சில், வெகுமுக்கியமாய் அழி ரப்பர்,,,,,என
மற்றும் மற்றுமான பொருட்கள் ஆக்ரமித்திருந்த சின்னோண்டான கவுண்டரில் இதற்கெல்லாம் இடம்
போக இவனது இருப்பும், வேலையுமாயும்/
பெருக்கல்
குறி போட்டது போல மூன்றுபக்கமுமாய் அலுமினிய கம்பி வலைகள் அடித் திருக்க மேலே மூடப்பட்டிருந்த
மரப்பலகையின் ஒருபக்கமாய் நின்றிருந்த சுவர் இவன் அமர்ந்திருந்த இடத்தை நான்கு பக்கமுமாய்
அடைப்புக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த உணர்வைத் தந்ததாக/
இவனுக்கு
பின்பக்கமாய் முதுகைத்தொட்டவாறு இருந்த சுவரில் காணப்பட்ட கப் போர்டில் என்னஇருக்கிறது
என இவனும் இந்த இரண்டு வருடங்களாய் தெரிந்து கொள்ளவிரும்பிய தில்லை.அதை திறந்தும் பார்த்ததில்லை,அது
போல மரக்கப் போர் டுகள் இந்த கட்டிடத்தில் 7 இருந்தது.ஏழிலும் என்ன இருக்கும் என சரியாகச்
சொல்லத் தெரியாவிட்டாலும் கூட அலுவலகப்பொருட்கள்தானிருக்கும் என மிக உறுதியாகச் சொல்லிவிடமுடியும்.
நெடித்து
உயர்ந்தகட்டிடமாய்அது.சொல்வார்கள் இந்தவீட்டைகட்டுகையில் பர்மா தேக்கை இழைத்துக்கட்டினார்கள்
என.
சுத்தமாக
12 அடி உயரம் இருக்கிற கட்டிடத்தில் இவன் அமர்ந்திருந்த கவுண்டரின் பின்பக்க மாய்தான்
கழிப்பறையும் ,பாத்ரூமும் இருந்தது. பாத்ரூமில் நெருக்கிப்படுத்தால் பத்து பேர் படுக்கலாம்
போல அவ்வளவு விசாலமாய் இருந்தது.
பாத்ரூம்
,கழிப்பறை அதை ஓட்டி அமைந்திருந்த விசாலமான ரூம்,ரூமிலிருந்தே புறப்பட்டு மேல் சென்ற
ஏணிப்படிகள்,,,என இன்னும் இன்னுமாய் இருந்த வீடு அலுவலகம் இருந்த இடத்தின்பரப்பையும்
சேர்த்து ஆயிரம் சதுரடிகளாவது இருக்கலாம்.ஆனாலும் ஆபீஸ் இடம் காணவில்லை.
வருகிற
கூட்டத்திற்கும், நடக்கிற வேலைக்குமாய் இடம் காணாமல் போய்விடுகிறது. ஒருவேளைகட்டிடத்தை இப்போது இருக்கிற பொஷிசனிலிருந்து அப்படியே மாற்றி
திருப்பி வைத்தால் சரியாகிப் போகுமா இடம் எனத்தெரியவில்லை.அப்படி மாற்றி வைக்கலாமா,
சம்மதிப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?என்பது கேள்விக்குறியாகவே/ இருந்தாலும் யோசிக் கலாம்,
மாற்றி வைப்பதுபற்றி.
81ன்னும்,54
கும் 33 றும் 26 மாய் எண்கள் இருந்த பேப்பரில்
1000 மும் 500றும்,,,, இன்னும் பிறவுமாய் கூட்டுச்சேர்ந்து கொண்ட சங்கமத்தின் மீது
வைத்துதான் மதியம் சாப்பிடுவடு வதற்காய் டிபன்பாக்ஸைதிறந்தான்.
மதியச்சாப்பாடு
இன்று என்னவாய் இருக்கும் தெரியவில்லை. காலையில் கிளம்பும் போதே மனைவி சொன்னாள்.இவன்
தான் ஏதோ ஞாபகத்தில் அவளது சொல்லை காதில் போட்டு கொள்ளவில்லை.அதுதானே நடக்கிறதுபெரும்பாலுமாய்என்கிறதெல்லாம்இல்லாவிட்டாலும் கூட எப்பொழுதாவது ஒருமுறை இப்படிநடந்து போகிறது. அது
சகஜமாகவும் ஆகிபோனது அண்மைகளில்/
மதியச்
சாப்பாட்டுக்குதொட்டுக்கொள்ளஎதுவும்வைத்திருக்கவில்லை.வடைஅல்லது ஏதாவது வாங்கிக்கொள்ளுங்கள் எனச்சொன்னதாய்
ஞாபகம்.வருகிற அவசரத்திலோ அல்லது ஞாபகப் பிசகோ வாங்காமல் வந்துவிட்டான்.
வழக்கம்
போல சாத்தின் மீது குழம்பு ஊற்றி வைத்திருந்தாள்.தயிர் பிளாஸ்டிக் டப்பாவில் தனியாக/பலசரக்கு
வாங்குகையில் வேறு ஏதோ பொருள் வாங்கியசின்ன டப்பா அது இப்பொழுது தயிர்டப்பா ஆகிப்போனது.இவன் வைத்திருக்கிற தண்ணீர் பாட்டிலும்
அப்படித் தான். ஒண்ணரை லிட்டர் கலர் பாட்டில் அது.வாங்கிய கலர் காலியா னதும் பாட்டிலை
கீழே போட மனம் வராமல் தண்ணீர் கொண்டு வருகிற பாட்டிலாக உருமாற்றி விட்டான்.
ஒருவேளைஅவள் எப்பொழுதும் சொல்வது போல் வடை வாங்கிகொள்ளச் சொல்லியிருக் கலாம்.சரி இபோது இங்கு
ஒன்றும் கிடைக்காது. மாரிக்கண்ணு கடைக்குப் போனால் ஆம்ப்ளேட் வாங்கி வரலாம்.அல்லது
போன்பண்ணினால்கொண்டு வரலாம்.அதில்எப்படியும் கால்மணிநேரம் ஆகிப்போகும்.அந்த நேரத்தில்
சாப்பிட்டு முடித்து விடலாம்.என குழம்பின் மணத்தையும் காரத்தையும் துணைக்குவைத்துக்கொண்டே
முதல் கவளம் எடுத்து வாயில் வைக்கப்போகிற நேரம் டீக்கடைக்கார அம்மாள் வந்து விட்டாள்
வடை எதுவும் வேணுமா எனக்கேட்டு/
அவள்
உடுத்தியிருந்த சாயும் போன கலரில் இருந்த சேலை அவளில் ஒட்டாமல். ஏனோ அவளைப் பார்க்க
நேர்கிற கனங்கள் தோறும் மனம் கனத்துப்போவதாய்/
அவள்அப்படித்தான்மதிய வேளை ஸ்கூல்பிள்ளைகளுக்கு விற்பதற்காய் வடை போடுவாள். வடை என்றால்
உள்ளங்கை அளவிற்கெல்லாம் இல்லை.சின்னதாய் பிறந்த குழந்தைக்கூட சாப்பிடுகிற சைஸிற்கு
போட்டு முடித்துவிடுவாள்.
நடராஜன்
அண்ணன் போட்ட அதே சைஸ்வடைதான்.அப்போது இண்னரை ரூபாய் தான். என்ன இப்போது வடைக்கு கொஞ்சம்
ருசி கூடியிருந்தது.மாவு ஆட்டுகிற கையும், வடை சுடுகிற பக்குவமும், எடுத்துக் கொடுக்கிற
மனதும் சேர்ந்தே இது மாதிரி ஆகிப்போனதாக/
நடராஜன்
இருக்கும் போது இட்லி,தோசை,மொச்சை,வடை சமயங்களில் பூரி எனக் கடை களைகட்டும், அங்கு
சாப்பிட வருகிறவர்களும் தன்னைஏதோஒருவிதத்தில்திருப்திபடுத்திக் கொள்பர்களாகவேவந்திருக்கிறார்கள்.அவர்கள்அப்படிதிருப்திப் பட்டுக்கண்டது பண்டங்களின் ருசியாலா அல்லதுநடராஜனின் பேச்சாலா என்பது
தெரியாமலேயே/
சாப்பிட்டதற்குபணம்கேட்டால்கடன் சொல்லிப்போனவர்களே அந்தக்கடையின் வாடிக்கையா ளர்களாக நிறைந்து தெரிந்த
போதும் கூட கடை நஷ்டப்பட்டுக்கொண்டதாகஅவர்போதை நிறைந்தபொழுதுகளில் கூட தன்னை மறந்து
சொன்னதில்ல.
போதை,போதை,போதை,மாலை
வேளையாகிபோனால் அவரது தினசரி பொழுது போக்கு இதுதான்.பக்கத்து ஊரில் இருக்கிற ஒயின்
ஷாப்புக்கு சென்று விடுவார். கருப்பண்ணன்தான் துணை அவருக்கு,போதை தலைக்கேறி கீழேசாய்ந்து
விட்டால்தூக்கிவருவதற்கு இல்லை.
அவர் அவ்வளவுக்கெல்லாம் போகவும் மாட்டார். மூடியைமோந்துபாக்குறகேஸீஎன்பார்கள் அவரை ஊருக்குள் சக குடிகாரகள்.அவரது செய் கையும் அப்படித்தான்
இருக்கும்.ஆனால் பேச்சு சுத்தமாக இருக்கும் எவ்வளவு போதையிலும் கூட யாரிடம் எப்படி
பேச வேண்டும் என்கிற நிதானம் கடை பிடிப்பவராக/ பின் கருப்பண்ணன்,,,,,,,,??? ஒரு சப்போட்டுக்காகத் தான்.தனியாகப்போகிற
நினைப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக/
ஆனால்அவரது திடீரான இறப்பு நாட்களின் நகர்வுகளில் டீக்கடையையும் அவரது மனைவி யையும்தனிமைப்படுத்திவிட்டுப்போய்விட்டது.அதிகம் குடித்ததால் கல்லீரல்
கெட்டுப் போய் விட்டது, மருத்துவம் பார்ப்பதில் இனி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால்
அவரை வீட்டுக்குகூட்டிப்போங்கள்என மருத்துவர்கள்சொன்ன தினத்தன்றிலிருந்துவீட்டுக்குகொண்டு வந்த இரண்டாம் நாள் இறந்து போனார்.
ஓயாத
குடியினால் வந்த வினை என்கிற பேச்சுடன் அவர் இது நாள்வரை அடையாளம் சுமந்துநின்றகடையில்
டீக்காரம்மா என அவரது மனைவி நிற்கவேண்டியதாகிப் போகிறது. அந்த நிற்றலே அவளை இரண்டரை ரூபாய்க்கு
வடை போட வைத்திருக்கிறது.
அவள்
விற்கும் இரண்டரை ரூபாய்க்கு இந்த சைஸே அதிகம் என்கிறார்கள். ஆனா லும் ஸ்கூல்ப்பிள்ளைகளைமனதில் தக்க வைத்துசெய்யும் போது இப்படித்தான் செய்ய வேண்டி யிருக்கிறது என்கிற அவளது
சொல்லுடன் வடையைகொண்டு வரச்சொல்லிவிட்டு கையில் அள்ளிய இரண்டாம் கவளம் சாப்பாட்டை
சாப்பிடான்.
1000, 500, 100, 50, 20,10,5,2,1
என எழுதப்பட்டிருந்த பேப்பரில் 81,54,66, 33,,,,,,,,,,,,,, என இன்னும், இன்னமுமான எண்களும்,எழுத்துக்களுமாய்கைகோர்த்துக்
கொண்டு/
7 comments:
இனிய வணக்கம் .நண்பரே.....
மனம் கனக்கச் செய்யும் அற்புதமான ...கதை....
வணக்கம் மகேந்திரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வாழ்க்கையோட்டத்தை பிரதிபலிப்பதாய் அமையும் தங்கள் கதைகளில் மற்றுமொரு முத்து... அருமை அண்ணா...
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
மனதைக் கனக்கச் செய்யும் கதை நண்பரே
வணக்கம் காசிராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சே.குமார் அண்ணா/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment