28 Sept 2014

கண்ணாடிக்கிளாஸ்,,,,,,

டீக்கடைகள் எப்போதுமே மனிதர்களை நெசவிட்டு வைத்திருக்கிறது அல்லது நூற்று வைத்திருக்கிறது.

பின்னதின் நீட்சிதான் முன்னது என்ற போதிலும்இரண்டும்வேறுபட்டு காட்சி யளிப்பைவையாயும் நூற்புக்கும்,நெசவுக்குமான நூலிழை வித்தியாசங்களை காண்பிப்பதாயும்/

பேமஸ்டீக்கடை.அவர்களாகவேஅப்படியெல்லாம்பெயர்வைத்துக்கொள்வார்க ளோ? நேற்று பின் மாலை 6.45 மணியளவில் அந்தக்கடையை கடக்கையில் சூழ்க்கொண்ட எண்ணத்தை சுமந்தவனாய் கடைக்குள் செல்கிறேன்.ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் போலத் தோன கல்லாவின் மேலிருந்த தட்டில் காண ப்பட்ட வடைகளில்கண் பதிகிறது.

பருப்பு வடைகள்,உளுந்த வடைகள்,பஜ்ஜிகள் என கலந்து கட்டிகாணப் பட்டவைகளில் ஒன்றை எடுத்துக்கடிக்கிறேன்.வடையை கையில் எடுக்கும் போதே தெரிந்த இறுக்கம் கடிக்கையில் உறுதிப்படுகிறது.யப்பா,,,,கொஞ்சம் அசந்தால்பல் போய் விடும் போலிருக்கிறதே/

உளுந்தவடை உடம்புக்கு நல்லது என்றார்கள். ஆனால்யார் உடம்புக்கு எனச் சொல்லவில்லை.வாங்குபவர்உடம்புக்கா, விற்பவர்உடம்புக்கா? அதைஉறுதி செய்பராய்டீப்பட்டரையில் நிற்பவர்தெரிகிறார்.களுக், மொளுக் என உருளைக் கட்டை உடம்போடு/

கடையின் உரிமையாளர் அவர்தானாம்.அண்ணன் தம்பிகள் மூவரும் காணாது என மூத்தவரின் மருமகனும் சேர்ந்து கவனித்துக்கொள்கிற கடையாய்/ நால் வருக்கும் இருக்கும் நான்கு விதமான குண வித்தியாசங்களையும் மனோ நிலைகளையும் கடைக்கு வருகிறவர்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்.

அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பணித்தவறில் லேசாக மனம் உழன்று போன மனதுக்கு ஏதாவது செய்தால் தேவலாம் போலத்தோணிய எண்ணம் உறுதிப் பட்டபோது இரவு மணி 9.00.அந்நேரம் கடை திறந்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

அலுவலகம் அமைந்திருந்த ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் இருட் டில் பயணித்து இங்கு ரோட்டை கடக்கையில் தோன்றிய நினைவின் உருவே வலது கையில் வடையும் ,இடது கையில் டீக்கிளாஸீம்/

சற்றே உற்றுப் பார்த்த போது உள்ளே கட்டிக்கிடந்த முக்கால் கிளாஸ் அளவு மென் திரவத்தைத்தாண்டி தெரிந்த தோழர் கடையும் எப்போதும் மனிதர்களை சுமந்தும், மனிதம் சுமந்துமாய்/

வலது புறமும் இடது புறமும் லாரி ஆபீசுகள் இருக்க இடையில் இருக்கிற சாலையோர திருப்பத்தின் ஓரமாய்அமைந்திருந்த சின்னக் கடையது. கடை என்னவோசின்னதுதான்,ஆனால்அவர்உருவம்பெருத்தவராயும், பெரிய மனது க்குச் சொந்தக்காராயும்/ வசதியுள்ள -வர்களும்,வொய்ட் அண்ட் வொயிட் பார்ட்டிகளும் அங்கு வந்து டீக்குடித்து நான் பார்த்ததில்லை. மூட்டை தூக்கு பவர்களும்,கூலிவேலைபார்ப்பவர்களும்என்னைப்போன்றமத்தியதரவர்க்கத்தி னர்  எப்போதாவதுவந்து போகிற கடையது.

போனமாதம்தான் என நினைக்கிறேன்.மாதம் தன் நடுவகிடைசற்றே ஒதுக்கிக் கொண்ட 18அல்லது 20ஆம் தேதி என்கிறதாய் நினைவு. மழை பெய்து ஓய்ந் திருந்தஒரு முன்னிரவு மாலை.ஊதக்காற்றும்,,பெய்து முடிந்திருந்த மழையி ன் சுவடுகளும்,வழக்கம் போலவே சாலை பூசியிருந்த சகதியுமாய் கை கோர்த்துக்கொண்டிருந்தவேளையில்தான்அவரதுகடைக்குச்செல்கிறவனாகிப் போகிறேன்.அடைபட்டதீப்பெட்டிக்குள்இருந்த குச்சிகளாய் கடைக்குள் போடப் பட்டிருந்தபெஞ்சில்நான்குபேர்அமர்ந்திருக்கிறார்கள்.ஒருவர்நின்றுகொண்டிரு
க்கிறார்.நின்றுகொண்டிருப்பவர்டீமாஸ்டராயும்,அமர்ந்துகொண்டிருப்பவர்கள் அவர் கொடுக்கிற டீயை குடிப்பவர்களாயும் காட்சிப்பட்டுத் தெரிகிறார்கள்.

நான்கு பேர் அமர்ந்திருக்கிற பெஞ்சில் நெருக்கி அமர்ந்தால் இன்னும் ஒருவர் சேர்த்து அமரலாம்.அவ்வளவுதான் அந்தக்கடையின் வசதியும், இடமும், டீப்பட்டரை, கல்லா, அதன்மேலிருந்தகடலைமிட்டாய் பாட்டில், முறுக்கு பாட்டில்டீக்கடைக்கேஅடையாளமான வடைத்தட்டு என காட்சிப்பட இடுப்பில் கைலிமடிப்பில் சொருகப்பட்டிருக்கிற மூடை தூக்குகுகிற ஊக்குகளோடு நின்ற இருவரைத்தாண்டி உள்ளே போவதும் அங்கு போய் அமர்வதும் சாத்தியமில்ல்லை என்பதை சொல்லி விட நான் டீக்கடைக்கு வெளியேயே நிறபவனாய்/

வலது கையில் ஹெல் மெட்டும்,இடதுதோளில் சாப்பாட்டுப்பையும் சுமந்து நின்ற என்னை அந்த இடம்இடைஞ்சல்என கருதி இருக்கலாம்.குடித்து முடித்த கிளாஸை கல்லாவின் ஓரமாய் வைத்து விட்டு உள்ளே அமர்ந்து கொஞ்சமாய் ஆசுவாசம் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் கடைக்குள் நுழைந்த சமயம் தோள்ப்பைதட்டி கல்லாவின் மேல் ஓரத்திலி -ருந்தகிளாஸ் உடைந்து சிதறி விடுகிறது.என்னஇதுபார்த்துப்போக வேண்டியதுதானே,,,,? என்கிற சப்தம் வந்து விடுகிறது கடைக்கு வெளியே நின்று டீக்குடித்து கொண்டிருந்தவரி ட மிருந்து/

உடைபட்டகிளாஸின்சில்லுகளைபொறுக்கியவாறும்,அதில்தென்பட்டஉருவச் சிதறல்களைபார்த்தவாறும்எனதுதவறுக்காய்வருத்தப்பட்டவாறுமாய்டீமாஸ்
டரை பரிதாபமாய் ஏறிட்ட கணம் வெளியே இருந்து வந்த சப்தம் முன் கை எடுத்து எனது தவறை உணர வைத்து விடுகிறது.அன்று உடைந்த கண்ணாடிக் கிளாஸின் சில்லுகள் மனதை அறுக்க இன்று வரை அந்தகடைப்பக்கம் போக தயக்கம் காட்டுகிறவனாகவே/

ஆனால் கந்தன்டீக்கடைக்குப்போகஅவ்வளவுதயக்கம்காட்டியதில்லை.ஐந்து ரூபாய்க்கு டீ,இரண்டு ரூபாய்க்கு வடை,பஜ்ஜி,இனிப்புபோண்டா என்றால் கசக்காதுதானே?அது மட்டுமில்லைகாரணம்.இன்னும்ஈரமும்வாஞ்சையுமாய் இருக்கிற மனிதர்.இப்படியான மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும்,அரிதாகவே/

பின் மாலைப்பொழுதின்ஒருநகர்வுநாளன்றுநான் வந்த இரு சக்கரவாகனத் தின் முன் டயர் பஞ்சராகி விட கூடவே சோர்ந்த மனதும் ஒர்க்‌ ஷாப் காரன் வந்து சக்கரம் கழட்டி பஞ்சர் ஒட்டக்கொண்டுபோனபோதுகொஞ்சம் தெம்பா கிப் போகிறது.

கருகருவென முன்காலெடுத்து வைத்து வேகமாய் சூழ்ந்துவருகிறஇருட்டும், ரோட்டில் இருசக்கரவாகனத்தில்போய் வருகிற ஓரிவர் தவிர்த்து தனிமையை தத்தெடுத்துக் கொண்டவனாய் நிற்கிறேன்.எனது இரு சக்கரவாகனத்தில் கையூன்றி/

வலது வலிக்க இடது,இடது வலிக்க வலது, என ஊன்றிய கையின் வலு வலி யாய் உருவெடுத்து/

வீட்டிற்குபோன்பண்ணிச்சொல்லலாமா?அல்லது நண்பர்கள்,தோழர்கள் யாரு டனாவதுபோன்பண்ணிப்பேசலாமா?எந்நேரம்வருவானேஒர்கஷாப்க்காரன்,
எப்போதுசெல்வோமோ வீட்டிற்கு?பஞ்சருக்கு எவ்வளவு ஆகும் எனத் தெரிய வில்லை.எனநினைத்த நேரம் ஆணும் பெண்ணுமாய் இருவர் இருசக்கர வாக னத்தில் சப்தமிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்.கணவன் மனை வியாக இருக்கவேண்டும்.வீட்டிற்குவீடுவாசப்படி/

பையில் காசும் இல்லை,ஒர்க்‌ஷாப்க் காரனைஎப்படி சமாளிப்பது எனத் தெரிய வில்லை. அந்நேரம் நினைவிலும் நனவிலும் வந்து நின்றவராய் கந்தன் நிற் கிறார்.

“ஏன் சார் தயங்குறீங்க இப்பிடி?இது ஒங்க கடை மாதிரி.எந்நேரமும்வந்துஎந்த உதவியும் தயங்காம கேளுங்க என நான் கேட்ட ரூபாய் நூறையும்,பத்து பஜ்ஜி களையும் கட்டித் தருகிறார்.

ரூபாயை ஒர்க் ஷாப்க்காரருக்கும்,பஜ்ஜியை வீட்டிற்குமாய் எடுத்துக்கொண்டு வந்த நாளன்று மனதில் பதிந்த கந்தன் டீக்கடையும்,தோழர் கடையும், பேமஸ் கையும் இன்னும் சில கடைகளும் எப்போதும் மனிதர்களை தன்னகத்தே தக்கவைத்துக்கொண்டும் நெச விட்டுக்கொண்டுமாய்/

11 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஈரமும் வாஞ்சையும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்
இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
தம 1

Yarlpavanan said...

தங்கள் எழுத்துநடை தனியழகு
கதை நகர்வும் நன்று
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிஙம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Anonymous said...

நல்ல ஒரு விவரிப்பு.
பல நாட்கள் கழித்து கருத்துகளிற்குப் பதிலிடும் போது.
கருத்திட்டவர்களிடம் விஜயம்.
இடைவெளிக்கு மன்னிப்புடன்.
ரசித்தேன் பதிவை. இனிய வாழ்த்து சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

J.Jeyaseelan said...

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் சார் இன்னும் இங்கே நல்லவையும் நடக்கின்றன, டீக்கடை மட்டுமல்ல ரெகுலராக எந்தக் கடைக்குச் சென்றாலும் அவர்களுள் சிலர் இப்படி நல்ல எண்ணத்துடன் இருக்கின்றனர்...

KILLERGEE Devakottai said...

உலகம் இன்னும் இயங்கி கொண்டிருப்பதே இந்த மாதிரியான மனிதர்களால்தான் நண்பரே...
எனது பதிவு My India By Devakottaiyan

'பரிவை' சே.குமார் said...

கதை நகர்வுக்கு ஏற்றார்போல் எழுத்து நடை உங்கள் அழகு...
அருமை அண்ணா...

vimalanperali said...

வணக்கம் கோவைக்கவி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/.

vimalanperali said...

வணக்கம் சே குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/