17 Sep 2014

கடைக்கண்,,,,,,,என்ன செய்வதென திகைத்து நின்ற வேளை எறிந்த கல் ஒன்று திசை தப்பியும் தடம் மாறியுமாய் வேலை செய்து கொண்டிருந்தஉன்மேல்விழாமல்உன்அருகில் குனிந்திருந்த அவள் மீது விழுகிறது.

ஒரு ஏக்கருக்கும் குறைவாய் பரந்து விரிந்திருந்த நஞ்சை நிலமது. கடலைச் செடிநட்டிரு
-ந்தார்கள். மண் பிளந்து, துளிர்த்து, வளர்ந்து, எங்களைப் பார்த்து மலர்ந்த  இலைகளை
அசைத்து சிரித்த நேரம்.

ஹாய்,,,ஹாய்/ஹலோ,,,,ஹலோ/எப்படியிருக்கிறாய் நலமெல்லாம் எந்த அளவிற்கு?என பரஸ்பரம்விசாரணைக்குட்பட்டநேரம் புகும்இனிமையாய்செடிகள்காற்றில்அசைவதை பார்க்க வும், தலையாட்டி நிற்பதை ரசிக்கவுமாய் நன்றாகத்தான் இருக்கிறது.அதைச் சுற்றியிருக்கிற களைகளை பார்க்காதவரை/

என்னென்ன வகைகளில் எப்படியெப்படியெல்லாம் முளைத்து நிற்கிறது களைகள்,,,,,?
ஒற்றையாய் கை தூக்கி நிற்கிற கோரைப்புல்லிலிருந்து,படர்ந்து அடர்ந்து கிடக்கிற செடிகள் வரை களைகளின் கணக்கில் சேர்ந்து விடுபவையாய்/

இப்படி ஒன்றுடன் ஒன்றாய் கைகோர்த்துக்கொண்டும்,தோளோடு தோள் உரசியும் நான் முந்தி, நீமுந்திஎனவளர்கிறஅவைகளைவெட்டகூலிக்குவந்தபத்துப்பேரில்ஒருத்தியாய்வேலை செய்து கொண்டிருந்த நீ மெரூன் கலர் தாவணியிலும்,அதை ஒட்டி வெளிர் கலரில் பாவடையும் சட்டையும் அணிந்திருக்கிறாய்.அதே கலரிலோ,அல்லது அதை ஒட்டிய கலரிலோஇன்னும் இரண்டொருவர் அணிந்திருந்த உடைகள் முதலில் அங்கு வேலை செய்து கொண்டிருப்பது நீதானா என்கிற குழப்பத்தைத் தந்தது என்னில்/

அள்ளி வாரி கட்டியிருந்த முடியும், பின்னி தளைய விடப்பட்டிருந்த பின்னலுமேஉன்னை யும்,மற்றவர்களையும்,கல்விழுந்தஅவளையும்வித்தியாசப்படுத்திக்காண்பிப்பதாய்அந்தநேரத் தின் மிகப்பெரிய ஆறுதலாய் அது மட்டுமே என்னில் முளைவிட்டு/

எந்த அவசரமானாலும் எவ்வளவு தலை போகிற காரியமாய்  இருந்த போதும் கூட தலையை அள்ளி முடிய மாட்டாய் நீ/அதுவே உன் சிறந்த அடையாளம்.ஆகவே உன்னை நோக்கி சிறிய கல்லெடுத்துவீசினேன்.அன்பாகவும்,பூப்போலவுமாகத்தான்/

நேற்று மாலை என் மனதில் உன்னைச்சுற்றிமுகாமிட்டிருந்தகோபம்சற்றேஅல்ல,சுத்தமாக விலகிப்போன காலை நேரம் அல்லவா இது?

பின் எப்படி இப்பொழுது எறிந்த கல்கோபம்கொண்டதாய்உருமாறித்தெரியும் என்கிறாய் நீ?அப்படியெல்லாம் எண்ணி விடாதே அன்பே.பின் நான் பிணக்கு கொள்கிற மனோ நிலைக்குச்செல்ல வேண்டியிருக்கும்.ஜாக்கிரதை.(ஜாக்கிரதையை நோக்கி கண்ணடித்
-தவனாய்,,,,)

தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த நீ,உன்னருகில் நின்று வேலை செய்து
கொண்டிருந்த மற்றொருத்தி ,அவளருகில் வேறொருத்தி,வேறொருத்தி,,,,,,,,என படர்ந்து நின்ற நீங்கள் பூப்பூத்த பயிர்களாயும்,முளைத்து தெரிந்த பூக்களாயும்நின்றுகொண்டி ருந்த கணத்தில்  உன்னை சரியாக அடையாளம் காணமாட்டாமல் எறிந்த கல் இப்படி தடம் மாறிப்போவது இயல்புத்தானே?

நல்ல வேளை,,,, வேப்பமரத்தின் கீழ் நீங்கள் நின்று வேலைசெய்து கொண்டிருந்ததால் விழுந்த கல்லை வேப்பங்காய் என நினைத்து விட்டாள் போலும்,தப்பித்தேன்.

பின் என்னதான் செய்யட்டும் நான்?சரியாகச்சொல்,பரந்துவிரிந்திருந்தநிலம்முளைத்து சிரிக்கிற செடிகள் வெளியெங்குமாய் பரந்தும் ,நிறைந்துமாய் நிற்கிற காற்றின் சுகந்தம்.

உன்னைப்போலவே நானும் தன் வெளி காட்டியும்,பயிர் காட்டியுமாய் விரிந்து ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில்ஒருஓரமாய்கிழிந்தகைலியைகட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தவனாக/

கைக்கும்வாய்க்கும் பத்தாத அரை குறை வாழ்க்கையில் நம் போன்றவர்களுக்கு வேலை பார்க்கிறஇடங்களேகாதலைஅரும்பச்செய்கிறஇடமாயும்,தூதுக்கள்நிறைந்தஅடையாள இடங்க ளாயும் ஆகிபோகிறது நம் போன்றவர்களுக்கு/என்கிற முன்னுரையுடனும்,முடிவுரையுடனு மாய் நான் எறிந்த கல் தவறி அவள் மீது விழுந்து விட்டது.

தவறாகநினைத்துவிடாதே.எரிந்தது கல் அல்ல.சொல்கட்டிஎனமனம்பிணைத்தனுப்பிய அம்பு. அதில் காதலை சேர்த்துக்கொள்வது உனது விருப்பம்/

அது கூட அப்புறமாய் பார்த்துக்கொள்ளலாம்.இதோ மறுமுறையும்,மறுமுறையுமாய் சொல் கட்டி அனுப்புகிறேன் கல்லில்,சற்றே நிமிர்ந்து பார்,அது போதும் எனக்கு/  

22 comments:

 1. எறிந்த ஒரு கல்லில் வடித்த இனிய கதை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகேந்திரன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/

   Delete
 2. அருமை சார், நான் முதலில் வயலின் முதலாளி தானோ என நினைத்தேன் கடைசியில் சாமானியனாக முடித்து அவர்களின் காதலையும் அழகாக வடித்துருக்கிறீர்கள். கூந்தல் உவமை மிகவும் சூப்பர் சார்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜெயசீலன் ,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. அண்ணா...

  எனது கதை வழியே சிங்கப்பூர் கிளிஷே இதழ் சென்றால் தொடர்பு முகவரி கிடைக்குமல்லவா?

  நானும் பார்க்கிறேன்... கிடைத்தால் அனுப்புகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா... இதுதான் சிங்கை மின்னஞ்சல் என்று இணைய இதழில் போட்டிருக்கிறார்கள்... தொடர்பு கொள்ளுங்கள்...

   singaporecliche@gmail.com

   நன்றி.

   Delete
  2. வணக்கம் சேக்குமார் அண்ணா,
   இதோ தொடர்பு கொண்டு விடுகிறேன்.

   Delete
 4. அருமையாக முடித்தீர்கள் நண்பரே... மதுரையில் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர் ஜி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. அருமையான கதை அண்ணா... சொல்கட்டி எறிந்த கல் ஒரு முறையேனும் சரியாக விழுந்ததா அந்தா கூந்தலை அள்ளி முடியாமல் உங்களை நெஞ்சில் முடிந்தவளிடம்...

  அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சே குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 7. அடுத்த முறையும் கோட்டை விட்டுவிடாதீர்கள்.
  நீங்கள் சரியாக எறியும்வரை எவ்வளவு நேரம் தான் அவளும் காத்திருப்பாள்.....))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அருணா செல்வம் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
   அடுத்தமுறை சரியாக எறிய
   வைத்துவிடுகிறேன் கதையின் நாயகனை/

   Delete
 8. அய்யா... எவ்ளோ பெரிய முழி? (எங்கிருந்தய்யா இந்த முழியப் புடுச்சீங்க?)
  “கண்ணு பட போகுதய்யா.. பேரளி விமலரே!..
  சுத்திப் போட வேணுமய்யா போராளி விமலரே! -உமக்கு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் முத்து நிலவன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
   சுத்திப்போடும் அளவிற்கு
   பெரிய ஆளா என்ன,,,,,,,,????

   Delete
  2. வணக்கம் முத்து நிலவன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
   சுத்திப்போடும் அளவிற்கு
   இன்னும் வளரவில்லை
   என நினைக்கிறேன்.

   Delete
 9. ரசித்தேன். அற்புதமான கதை. படம் கூட அழகாக இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சந்திர கௌரி சிவபாலன் மேடம்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 10. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete