19 Sept 2014

கட்பீஸ்,,,,,,,


முப்பத்தியெட்டிற்கும்,நாற்பதிற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு அரை இஞ்ச் லூசாக இருக்கும்,கொண்டு செல்லுங்கள் எல்லாம் சரியாகிப் போகும்மாமாஎன அழுத்தம் கொடுத்த கடைக்காரரின் பேச்சு மிகவும் நன்றாக யிருந்தது கையில் வைத்திருந்த சட்டையை விட/
    
சரக்கை விட விற்பரும்,அவரின் பேச்சுமே முறுக்காகிப்போகிற  விளைகிற பேச்சின்விளைச்சளாய் அது. “சும்மாகொண்டுபோங்கமாமா,காணலைன்னா கொண்டுவாங்க,மாத்திக்கிடுவோம்.மஞ்சள்,கிஞ்சள்வைச்சிடாமமட்டும் பாத்துக்கங்க.

இல்லைன்னா ஒண்ணு செய்யிங்க மாமா.ரொம்ப லூசா இருந்தா நீங்க போட்டுக்கங்க மாமாஒங்கநெறத்துக்குஎடுப்பா இருக்கும் மாமாஎன்கிறார் கடைக்காரர்அவர்கொடுத்தசட்டையைகையில்வைத்துக்கொண்டுதயங்கிநின்ற போது/

சட்டையப்போட்டாநல்லாயிருக்கோ இல்லையோ மாமா,ஸ்கூல் சட்டைய போட்டுட்டுஅலைஞ்சாஸ்கூலுக்குபோகச்சொல்றீருவாங்கமாமா.தாடியையும்,
மீசையையும்வச்சிக்கிட்டு இனிம போயி புத்தகங்ளையும்,நோட்டையும் தூக் கிட்டு பெஞ்சு மேல ஏறி நின்னா நல்லா இருக்குமா மாமா?”-நான்.

அப்பிடி சொல்றீங்களா மாமா,நீங்க இப்பிடி சொல்றீங்க மாமா,எங்க வீட்டுப் பக்கத்துலஒருத்தர்இருக்காருமாமாஅம்பத்தஞ்சுவயசாவதுஇருக்கும்.கௌவர்
மெண்ட்ஆபீசுலதான் வேலை அவருக்கு,

அவருவேலைக்குபோய்வர்ரநேரம்தவிர்த்துஎந்நேரமும்புத்தகமும் கையுமாத் தான்இருப்பாரு.அப்பிடிஎன்னத்தத்தான்படிப்பாரோஎன்னமோ தெரியல, வீடு நெறைய  புத்தகங்கள அடுக்கிவச்சிருக்காருமாமா,அப்பிடி அவரு என்னதான் படிச்சிஎன்னதான்தெரிஞ்சிக்கிட்டாருன்னு தெரியல.ஆனாரொம்ப தெளிவான ஆளு மாமா,ஒரு வாட்டி எங்கதெருக்காரன்ஒருத்தன்பக்கத்து தெருவுல போ யி நொரண்டு இழுத்துட்டான்.எல்லாம் வயசு வேகம்தான்.அவுங்க ஒருபத்து பேரோடவந்துட்டாங்க,ராத்திரி பதினோரு மணி இருக்கும்.எல்லாரும் தூங்கிப் போன வேளை.வந்தவுங்க வீடு நொழஞ்சி அவன வெளிய தூக்கிட்டு வந்துட் டாங்க,என்னான்னுவிசாரிச்சாஅதுபொம்பளப்புள்ளமேட்டரு. லவ்வுன்னாங்க, தொலஞ்சிச்சிடா இனைக்கின்னு நாங்க எல்லாரும் கைய பெசஞ்சிட்டு நிக்கையில, ஒரே ரகளையும் கூச்சலுமா பையன பொலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டீட்டுபோயிட்டாங்க.இவருதான்போயிபையனகூட்டீடுவந்தாரு.ஸ்டேசன்
லயிருந்து.”
  அங்கபோயிஎன்னசெஞ்சாருஎன்னபேசுனாருன்னுதெரியல,அவருகூடப்போனவுங்கதான்சொன்னாங்க. அவருக்கிறுக்குறஅறிவுத்தெளிவுக்குஎங்கவேணும்ன்னாலும்போயிஜெயிட்டு வந்துருவாருன்னும்,அவ்வளவுநுட்பமும்,தெளிவும்,தைரியமும்அவருபேச்சுல இருக்குன்னாங்க.”

 தலைய தொங்கப்போட்டுக்கிடு அப்புராணியா திரிவாரு மாமா.அவரா இந்த வேலைய செஞ்சாருன்னு ஆச்சரியமா இருக்கு மாமா.”

ஆமா தெருக்களுக்குள்ள இருக்குற மொறப்ப சரி பண்ணி போலீஸ் ஸ்டேசன் போயி அந்தப் பையனவும் கூட்டிக்கிட்டு வந்தது எப்பிடின்னு கேட்டதுக்கு அமைதியா சிரிக்கிறாரு மாமா,எல்லாம் அவருக்குள்ள இருக்குற அறிவுத் தெளிவு மாமா,அத கத்துக் குடுத்தது அவரு படிக்கிற புத்தகங்கள்தான் போலயி ருக்கு. முடிஞ்சா நானும் படிக்கணும் மாமா,பள்ளிகூடத்துல படிச்சத விட வெளி வாழ்க்கையில படிக்க வேண்டியதுதான் நெறைய இருக்கு மாமா.அவரு அளவுக்கு இல்லாட்டிக் கூட ஏதாவது ஒரு துளியாவது கத்துக்கிறணும்மாமா, படிப்புக்கு வயசில்லைன்றாங்க. முடிஞ்சளவு,முடிஞ்சத கத்துக்கிறுவம்மாமா எனச் சொன்ன அவரு க்கு 40 தை எட்டித்தொட்டிருக்கலாம் வயது.

தேனம்மாள்ஸ்டோர்போய்சாமான்கள்வாங்கிக்கொண்டுரெடிமேட்ஸ்டோரில் வந்துயூனிபார்மும்,டையும்எடுப்பதாகத்தான்திட்டம்.வழியில்பார்த்தநண்பனால் திட்டத்தில் லேசான தடம் புரலல்.

டீக்கடை,பேச்சு,பழையது,புதுசு என நிறையச் சொன்னான்.எனது காதுகளிரண் டையும் கழட்டிஅவனிடம்கொடுத்து விட்டு அவனது பேச்சுக்கு தலையாட்டி நின்றேன்,பேச்சின் ஊடாகஇன்னொரு டீ சாப்பிடுவோமா,இன்னொரு டீ சாப்பிடு வோமாஎன நான்கு டீ சாப்பிட்டு விட்டான்.எவ்வளவு தவிர்த்தும் கூட நான் இரண்டு தடவை டீ சாப்பிட வேண்டியதாகிப்போய் விட்டது.நல்ல நண்பன் அவன். அவன் அப்படித்தான் எப்பொழுதும்,கேட்டால்எப்பொழுதுமே அப்படித்தான்என மாற்றி சொல்லுவான் பெரிதாக சிரித்துக்கொண்டே/
 
பொதுவாகவேஅவனதுபழக்கம்அதுவாகிப்போனதில்ஆச்சரியம் இல்லை. டீக் குடிக்கும் முன்பாக ஒரு டீக் குடிப்பான்.டீ குடிக்கும் போது ஒரு டீக்குடிப்பான்.டீ க்குடித்த பின்பு ஒரு டீக் குடிப்பான்.”என்ன இது நண்பா என்றால் நூறு மில்லிக் கும் குறைவாக வரி போட்ட கண்ணாடி கிளாஸில் குடி கொண்டிருக்கிற டீயை,மென் ஆவி பறக்க டீ மாஸ்டரிடமிருந்து வாங்கி வாய்திறந்து குடிக் கையில் உள்ளே போகும் தேநீரின் ஒவ்வொருமிடறும் நாவின்சுவைய றும்புகளில்பட்டுதருகிற ருசி இருக்கிறதே,அதற்கு என்வாழ்நாட்கள் முழுமை யையும் அடகு வைத்து விடலாம்போலும் என்பான்.

 அவனிடம் பேசி முடித்துவிட்டும், டீக்குடித்துவிட்டுமாய் வந்த கணங்களில் நடந்த நிகழ்வாய் இது/
  
நான்,கடைக்காரர், (சின்னதாய் ஒருகாம்ளக்ஸ் கடை) கையிலிருந்த சட்டை இவைகளுடன்நான் நின்றிருந்தபொழுது என்னையையும்,கடையையும் கடந்த நடுத்தர வயது தாய் மகனிடம் சொல்லிக்கொண்டே போகிறாள்.

 நாளைக்கு  ஒரு நாளு பழைய யூனிபார்முல போ,இன்னைக்கி ராத்திரி அப்பா அவரு வேலை பாக்குற ஜவுளிக்கடை மொதலாளிகிட்ட அட்வான்ஸ் வாங்கி ட்டு வர்ரேன்னு சொல்லீருக்காரு.வாங்கிட்டு வரட்டும்,நாளைக்குவந்து இந்த கடையிலயே புது யூனிபார்ம் எடுப்பம்.ம்,,,,,,,,,,,என் ராசால்ல என்றவாறு கடந்த அவர்களின்பேச்சுகாற்றில்கரையாமல்என்னில்அமரவாங்கியசட்டையை பைக்குள் வைத்துக் கொண்டு பயணப்படுகிறேன்.

6 comments:

ezhil said...

நாளைக்கு ஒரு நாள் பழைய யூனிபார்மில் போ என்ற வரிகளில் அந்தச் சின்னப்பையனின் பரிதாப முகம் வந்து போகிறது....

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசிராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Anonymous said...

நிறைய குழந்தைகள் முதல் நாளில் பழைய சட்டைதான் அணிந்து செல்கிறார்கள்...சார் மாறவேண்டும்.. நல்ல பகிர்வு சார்..

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/