9 Oct 2014

காலடி மண்,,,,,,,




இதோதிரும்பிவந்துகொண்டிருக்கிறான் சென்றபாதையின்தடம்மாறாமலும் வந்துகொண்டிருக்கிற பாதையின்வரைகோடுகள்பிடித்தும்மண்ணின்மணம் நுகர்ந்தவாறுமாய்/

கெட்டிப்பட்டமண்அல்ல,தூசியாகவே இருந்தாலும் காற்றில் பறந்து கலந்து திரிந்த போதிலும் பயணிக்கிற வேகத்தில் தன் மணம் மாறாமல் அப்படியே வந்து செல்கிறதாய்/

காடுதோட்டம்வீட்டுமனைஎதிலுமாய்பறந்துபாவியிருக்கிறமண்ணின்மணத்தை அன்றாடங்களின்நகர்வில்நுகரக்கொடுத்துவைத்தவனாயும்நுகர்ந்துகொண்டு செல்கிறவனாயும்.

இடது பக்கமாகவே செல்,வலதுபக்கமாகவேதிரும்பிவா,,,,,,,,,அட்டன்ஸனில் நில்,ஸ்டாண்டர்டீஸ் காட்டு,அபர்டெர்ன் அடித்துதிரும்பிசல்யூட் சொல்லிச் செல்என்கிறகுரலிவித்தைக்குள்ளெல்லாம்அடைபட்டுக்கொள்ளாமல்நெளிவு சுளிவாய்தப்பித்தாவிபறந்தஇப்படியாய் வெளியேவந்துபயணித்துக் கொண்டி ருக்கிறான்.

ஒன்றல்லஇரண்டல்ல,நான்கல்ல,ஐந்தல்ல,எத்தனையாகவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அல்லது எத்தனையாவது முறையாக வேண்டுமா னாலும் சொல்லிக்கொள்ளலாம்.

கடைகடையை ஒட்டிய வீடு ,வீட்டிற்குள்ளிருந்த குடும்பம்என நான்கு பேர் இருந்தார்கள்.அதற்கு மேல் இருக்கவாய்ப்பில்லை.

நான்கு பேரைத்தான் அடையாளம் காட்டிச்சொல்கிறது கடை.

கணவன்மனைவிஇரண்டுகுழந்தைகள்ஆணொண்றும்பெண்ணொண்றுமாக/ ஆண் பிள்ளை ஐந்தாவது படிக்கிறான், பெண்பிள்ளை ஏழாவது படிக்கிறாள். பெண்பிள்ளைமூப்புஎன்பதில் கடைக்காரருக்கு எப்போதுமே ஒரு பெருமை இருந்ததுண்டு.இவன்அங்குபோய்டீசாப்பிடப்போகிறபொழுதுகளிலெல்லாம் இவனிடம்சொல்லிபெருமை பட்டுக்கொள்வார்.எனக்கிருந்தாலும்பொம்பளப் புள்ளைங்க தாய் தகப்பன நெனைக்கும்.அதுகஎங்கதான்போனாலும்அதுக்கு எத்தனவயசு ஆனாலும் அதுக நெஞ்சுக்கூட்டுக்குள்ள தாய் தகப்பன் நெனை ப்பு ஈரம்கட்டிகுடியிருக்கும், ஆனாஆம்பளப்பசங்கஅப்பிடியில்ல சார்,அத்து விட்டுட்டுப் போயிருவாங்க என்பார்.

இளமஞ்சளும்கரும் பச்சையுமாய் இலைகள் காட்டிநிற்கிறபுளியமரத்திற்கு வயதுஐம்பதிற்கும்குறையாமல்இருக்கும்எனகண்ணைமூடிக்கொண்டுசொல்லி விடலாம்எனகடைக்கார்சொல்வார்.அண்ணாந்துபார்கையில்தெரிகிறமரத்தின் ஊடுபாவானா சூரிய வெளிச்சம் இலைகள் மீது கிளைகள் மீதுமாய் பட்டு ஜொலிக்கிறஅழகைப்பார்க்கிறசொந்தக்காரராய்அவ்வழியில்செல்கிறஎல்லோ ருமாய்த்தான் தெரிகிறார்கள். 

“சுத்திநின்னுநாலுஆளுகட்டிப்புடிச்சாலும்இதப்புடிக்கமுடியாதுசார்,அவ்வளவு அகலம்” என்பார்.அந்தமரத்தோடபட்டகனத்த வச்சே மரத்தோட வயச நீங்க கணிச்சிறலாம்,இது வரைக்கும்இருதன்னோட வாழ்நாள்ல எவ்வளவு புளிய குடுத்துருகும்ங்குறீங்க/சீசன்லஇது காய்க்கிற பழங்கள உழுப்ப நாலு ஆளா வது வேணும் சார்,கொறஞ்சது,

மத்தமரம்மாதிரிஇதுலகொஞ்சம்ஒயரத்துலஏறிநின்னுக்கிட்டுமரத்தஉலுப்புனா பழங்கவிழுகாது,மேல வரைக்கும் ஏறணும், போகணும் போயி ஊச்சாணி யிலநின்னுக்கிட்டுஉலுப்புனாத்தான்பழங்கள பாக்கமுடியும்,ரோட்டுல போற வார எத்தன பேரு மண்டையபதம்பாத்துருக்குங்குறீங்க,சீசன்ல,அப்பிடியே நெறமாதகர்ப்பிணிபோலவுள்ளஇருக்கும் பாக்குறதுக்கு.கண்ணுக்கு லட்சண மாயும் அடர்ந்து போயும்/

நான்சின்னப்புள்ளயாஇருக்கும்போது எங்கப்பாஏறிபழம்எறக்கிப்போடுவாரு, இப்பம் மரம் ஏறுறவுங்கஅரிதா போனாங்க/ ஏணி வச்சிஏறிப்போயிதான் உளுப்புறாங்க”என்பார் லேசான பெரு மூச்சு கலந்து/

நெடித்து உயர்ந்து தன் ஆகுருதி காட்டி நிற்கிற புளியமரத்தின் மஞ்சள் பச்சை இலைகள் கடைக்கு வெளியே கைகழுவுவதற்காய் வைக்கப்பட்ட தண்ணீர்வாளியில் மிதந்து காட்சிப்படுவதாய் இருக்கும்.நிறை தண்ணீரானா லும் குறை தண்ணீரானாலும் தன் நிறம் காட்டியும்,பருவம் காட்டியும் மரத் தின் கதையை சொல்லிசென்று விடும்.

”மனுசன்சாகுறமாதிரிதான்சார்,மரம்சாகுறதும்அதநாமவெட்றதும்என்பார்கடை க்காரர்.ரோட்டோரக்கடைகளுக்கெனஇருக்கிறஅடையாளங்கள்அவரதுகடை
யில்எப்பொழுதும்பூத்துக்காய்த்துதெரிவுபடுகிறகாலங்களாய்என்றும்இருந்தது உண்டு/

அந்தப்பூப்புஇனிஇருக்குமாஎனத்தெரியவில்லைஎனவுமாய்,கூடியவிரைவில் காணக்கிடைக்காமல்போகப்போகிற இந்தகடையின் அடையாளமிடல், இனி கேள்விக்குறியே என்கிறார் கடைக்காரர்/

சாலையை அகலப்படுத்த குறிக்கும் போது தன் கரம் விரித்துநிற்கிற புளிய மரமும்அதன் நிழலில் தன் அடையாளம் கொண்டு மனிதவாடையுனும், வாஞ்சையுடனுமாய்காட்சிப்பட்டுத்தெரிகிறகடையையும் குறித்துக்கொண்டு போயிருக்கிறார்கள். கூடியவிரைவில்அகற்றப்படவாய்ப்பிருக்கிறதுஎன்றார் கடைக்காரர். 

இட்லி,பூரி,மொச்சை வடைஎப்பொழுதாவது பொங்கல்எனகாட்சிப்படுகிறது கடை இவன் போகிற தினங்களில்/

கை நிறைய காசு இருந்த போதும் புது பஸ்டாண்ட் அல்லது சூலக்கரை போகிறதினங்களில்அங்குஅடையாளமாய்காட்சிப்பட்டுநிற்கிற ஹோட்டல்ப் பக்கம்இவன்போனதில்லை.அது போலானகடைகள்இவன் மனதிற்கு எப்பொ ழுதுமே  அந்நியமானதாக அல்லது  அங்கு போக பிடிக்காதவனாக/

இது போலான ரோட்டோரக்க்கடைகளுக்கு வருவது விலைக்குறைவு என்ப தற்காகமட்டுமல்ல,பெரியகடைகள்எல்லாம்ஒருஆடம்பரமும்,வீண்செலவும், டாம்பீகமும்என்கிறஎண்னமும்,மனத்தாக்கமும்இவனுள்ளாகஎப்பொழுதுமே  இருந்ததுண்டு.

ஒரு தடவை யூனியன் மாநாட்டு தினத்தன்றுகாலையாய்அந்தக்கடையில் டிபன்சாப்பிடவேண்டும்எனகாளியப்பண்ணன்சொன்னபோதுஇவன்அவர்களை யும் அவருடன் வந்தவர்களையுமாய் கடையின் உள்வரை சென்று விட்டு விட்டுஅங்கிருந்தசப்ளையரிடம் அவரை நன்றாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டும் வந்தான்.

சப்ளையர்இவனுக்குதெரிந்தவர்.கீழக்குடிக்காரர்,நல்லமனிதர்,எப்பொழுதுபார்த் தாலும்அன்புடனும்வாஞ்சை பொங்கவுமாய் பேசுவார்.

ஒருநாள்இவனதுநண்பன்அங்கு சாப்பிட்டுவிட்டுபில்கொடுக்கநிற்கிறபோது பில்மாறி நண்பனின் கைக்கு போய்விட பதறிப்போனான் நண்பன்.என்ன நானும்எனதுமனைவியும் குழந்தையும் வந்து உங்களது கடையில் அமர்ந்த ற்கு அபராதமா எனக்கேட்டிருக்கிறான்.இல்லைஇவ்வளவுதான்எனசாதித்து இருக்கிறார் நண்பனின் டேபிளுக்கு சப்பளை பண்ணிய சர்வர்.

இதைபார்த்துக்கொண்டிருந்த கல்லாவில்இருந்தவர்லாஜிக்காய் பார்த்தால் கணவன்மனைவி ஒரு குழந்தை இவ்வளவு சாப்பிட வாய்ப்பில்லை என்று அறிந்திருக்கிறார்.நண்பனின்கையில் இருப்பது வேறு பில்தான், நன்றாகத் தெரியும்தான்,ஆனால்கொடுபடாமல்போய் விட்டவேறு பில்லை யாரிடம் போய்வாங்கமுடியும்?ஆகவேமுடிந்தமட்டுமாய்பார்ப்போம்,,,எனகல்லாவில் இருப்பவரும்முடிவுசெய்துவிட பாவம் நண்பன் நனைந்த கோழியாய் ஆகிப் போனான்.இது தவிர்த்து கடையில் சாப்பிட வந்தவர்கள்,சாப்பிட்டு முடித்து விட்டுப்போனவர்கள் பார்த்தபார்வை ஈட்டியாய் துளைத்தது உடம்பில்/

ஆயிரம்துளைகள்விழுந்தஉடம்பின்வழியாய் ஊராரின் ஏளன பேச்சுக்களும், குத்தல்ப் பார்வைகளுமாய் ஊடுருவிச்சென்று வந்தவையாய்/ 

அவனிடம் பில்லில் குறிப்பிட்டிருந்த தொகையைக்கொடுக்க காசு இல்லை, 850 ரூபாய்க்குஎங்குபோவான் அவன். வீடு பக்கத்தில் இருந்தாலும் போய் எடுத்துக்கொண்டுவந்துகொடுத்துவிடலாம்.இனிகிராமத்திற்குப்போய் ரூபாய் எடுத்துக் கொண்டுவருவதென்பதுசாத்தியமில்லை. 

அவசரத்திற்கு உதவுவதற்கு ரெடியாய் கைக்காசு வைத்திருக்கிற அளவுக்கு தெரிந்தநண்பர்கள்,உறவுகள் தோழமை என யாரும் இல்லை இங்கு அருகா மையாக/

நண்பனின்பழக்கமெல்லாம்அவனைப்போலஉள்ளஎளியவர்களிடம்மட்டுமே தான் இருந்திருக்கிறது,நண்பனும் போன் பண்ணி நிலைமையை விளிக்கிச் சொன்னதும்கூடிவிட்டார்கள் அவனது தோழமைகள் பத்துப்பேர் வரை. கூட வே இவனும்/

பிறகென்னகல்லாவில்இருப்பவர்நிலைமையைஅவதானித்துநண்பரின்டேபிளு க்குசப்ளை செய்தவரை கூப்பிட அவருக்குப்பதிலாய் கீழ்க்குடிக்கார சப்ளை யர் தான் வந்திருக்கிறார் கல்லாவுக்கு. நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கி நண்பனை அனுப்பி வைத்திருக்கிறார்.கூடவே நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.உடன்வேலைபார்ப்பவர் செய்த தவறுக்காய் மன்னிப்புகேட்கிறபெரியமனதுஇவனுக்கு மிகவும்பிடித்துப் போய்விட, நண்ப னையும்,நண்பனுக்காய்வந்துநின்றவர்களையும்பார்த்துவிட்டு கிளம்பியிருக் கிறான்.

பின்வந்தமறு நாளின் மறுநாட்களின்இவனைஅந்தசப்ளையர்பார்க்கநேர்கிற நேரங்களிலும்,இவன்அந்தசப்ளையரைபார்க்க நேர்கிற பொழுதுகளிலுமாய் ஒருவருக்கொருவர்அன்புடனும்வாஞ்சை மிகவுமாய்பேசிக்கொண்டிருப்பது வழக்கமாகிப்போகிறது,

இது நடந்த மறுநாள் அந்தக் கடையில்தான் சாப்பிட்டான்.கடைக்காரர் கூட கேட்டார்.”என்ன சார், நேத்து அந்தக்கடைக்குள்ள போனீங்க,இப்ப நீங்க மட் டும் இங்க வந்துட்டீங்களே” என இவன் கேட்ட பொங்கலை கொண்டு வந்து வைத்தார்,கடைக்காரர்/

“என்னசெய்யண்ணே,இதுமாதிரிதொடர்ச்சியாநாம்அங்கபோயிசாப்புட்டனுன் னாநம்ம சொத்துல ஒரு பகுதிய வித்துக்கொண்டுபோகணும்போலஇருக்கு எனநேற்றுநடந்தசம்பவத்தைச்சொன்னான்,அதற்கு கடைக்காரர்  ”இது புதுசு ல்லசார்,இந்தவாரத்துல மட்டும் ஒங்களோட சேர்த்து இது மாதிரி சொல்லு றது மூணாவது ஆளுஎன்றார்,

ரொம்பபெரிய யெடங்கள்ல போகப்போக இப்பிடித்தான் இருக்கும் போல,,,,, எனமுற்றுப்புள்ளிவைத்தவர் பொங்கலை அள்ளிச்சாப்பிடும் போது சொன்னார்.

”நம்மகடபொங்கல்இப்பிடித்தாண்ணே,கொஞ்சம்பொலுபொலுன்னுஇருக்கும், அதுக்காகவெதவெதையாஇருக்காது.கொழஞ்சுபோயிஇருந்துச்சுன்னா அளவு கம்மியாதெரியும்,அதுக்காகத்தான்இப்பிடி”என்பவர்ஆனாருசிக்குபஞ்சமிருக்காது என்பார்.

அவர் சொன்ன படியேதான் இருக்கும் இட்லியும்,பூரியும்,பொங்கலும்/

காலையில்11மணிவாக்கில்சென்றால்பூரிகொஞ்சம் காய்ந்திருக்கும். இட்லி இருக்காது.இரண்டுபூரிகளைவைத்துசாம்பாரைஊற்றிகொஞ்சநேரம்ஊற வைத்து சாப்பிடுங்கள் என்பார்.அவர் சொன்னது போலவே அந்தடேஸ்ட் கிடைக்கும். 

புதுபஸ்டாண்டைநெருங்கிவருகிறபோதேதென்படுகிற அவரது கடையின் கூரை முகப்பும் புளிய மரத்தின் ஆகுருதியும் கண்படுபவையாக/

மூன்றுமரப்பெஞ்சுகளும்,பத்துபண்ணிரெண்டுபிளாஸ்டிக்ச்சேர்களும்கூடவே கட்டம் போட்ட கைலியுடன் டீக்கடைக்காரரும்,அடர்க்கலர் புடவையுடன் அவரதுமனைவியும்அந்தடீக்கடையின்நிரந்தரச்சொத்தாய்ஆகித்தெரிகிறார்கள்.
இவன்அந்தப்பக்கம்போகும்போதெல்லாம் தவறாமல் கேட்டுவிடுகிறார்கள் கணவனும் மனைவியும்.”என்ன சார் ஒங்க யூனியன் ஆபீஸீக்கா போறீங்க என/

ஒருகுளிர்காலஇரவின்மென்பொழுதொன்றின்இரவுபண்ணிரெண்டுமணிக்கு மேலாயும் தூக்கம் வராத பொழுதாயும் மூட மறுத்த இமைகளும்,இமைக்க மறந்தமனதிற்கும்ஊடாய்நாளையதினம் கூட்டம் என்பது நினைவுக்கு வந்து போகிறது.வந்து போன தின்ம நினைவுகளில் அது பல் பட்டு சுமந்தும் அது அற்றுமாய்/

இருக்கட்டும்,இருக்கட்டும்இருந்துவிட்டுத்தான்போகட்டுமேஅப்படியே என்ன தான்கெட்டு விடப்போகிறது இப்போது? நாளையதினம் விடுமுறைதானே?
என்னநடக்கவிருக்கிறகூட்டத்தில்போய் தூங்கி விடக்கூடாது.என்கிற சொல் தவிர்த்து தினசரியாய் இப்படியாய் நடு இரவில் தூக்கம் கெட்டுப் போவது ஒருபெரும்பிரச்சனையாகவேஇவனுள்ளாய்இன்றுவரைஉருவெடுத்துநிற்பதா யும் பெரும் இடைஞ்சல் காட்டி பயணிப்பதாயும்/

”சுந்தரி கண்ணால் ஒரு சேதியில் நாயகியின்மென்ஏக்கப்பார்வையுடனான ஏறிடலுனான காத்திருப்பும்,புனித்த புருவமுமான இசை கலந்த பரவசம் மனதைதாலாட்டுகிறது.ஒருபடப்பாடலாய் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள் ஏதோ ஒரு இசைச்சேனலில்/

தூக்கம்வரமறுக்கிறஇப்படியான இரவுகளில் இது போலான பாடல்களும், புத்தகங்களும் சமயத்தில் இணையமும் கைகொடுப்பது மிகப்பெரும் வரப் பிரசாதமாகவே/

அணிந்திருந்தவெள்ளைக்கலர்பேண்ட்டும்,அடர்க்கலர்சட்டையுமே இவனது கனவில்வந்துபோனதாய்இருந்தது.அதுபோலவேஇவன்அறியாமல்எப்பொழுது எனத்தெரியாமல்இரவு 12 மணிக்கு மேலாய் வந்து போகிற தூக்கத்தை தூங்கி முடித்துவிட்டுதுடைத்தெழுந்துதூங்கிஎழுந்தபோதுஇவனும்,மனைவி பிள்ளைகளுமாய்தூக்கம்குடிகொண்ட வீட்டிலும் இன்னும் இருள் கலையாத அதிகாலை முன் பொழுதிலுமாய் இன்னும் இன்னுமானநினைவுகளையும் நனவுகளையும்நெசவிட்டஞாபகத்துளிகள்சுமந்துசோம்பல்முறித்து எழுந்தவ னாய் முகம் கழுவி விட்டு மணி பார்த்தபொழுது மணி 4.45 என மணி முன்னறிவித்துச் சென்றது கடிகாரம்.

சின்ன முள்ளையும்,பெரிய முள்ளையுமாய் தன் வட்ட வடிவத்திற்குள்ளாய் உள்ளடக்கி வைத்துக்கொண்டு அவை இரண்டின் துணைக்கு விநாடி முள் ளை ஓயாமல் ஓடி நேரமறிவிக்க உதவி புரியச்சொல்லி சென்ற நேரத்தில் டீக் கடைகள் இவன் குடிகொண்டிருக்கிற ஏரியாவில் எங்கும் திறந்திருக் காதுதான்.

அதெல்லாம்தெரியாது எனக்கு உடனே வேண்டும் எனக்கொரு டீஎனமனம் கூவிச்சொன்ன சொல்லின் நுனி பிடித்துப்போவதென்றால் ரயில்வே கேட்டின் அருகிலிருக்கிற கடைக்குத்தான் போக வேண்டும்./

இந்நேரம் போனால் டீயுடன் மென் நடமாட்ட காலைப் பொழுதையும்,கூடு கலையும் அதிகாலைப்பறவைகளின் கிறீச்சிடல்களையும் கேட்கலாம்.

கையில்சூடானஒருடீயுடன்,பறவைகளின்கிறீச்சிடல்களையும்,மனிதர்களின் மென் நடமாட்டத்தையும் பார்க்கும் போது மனது குளிர்ந்துதான் போகிறது.

இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்றபாதையின் தடம்மாறாம லும் வந்துகொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும்மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் கதை கதையின் நகர்த்தல் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

எல்லொருடைய பதிவுகளையும் படிக்கும் வேகத்தில் உங்கள் பதிவுகளைப் படிக்க முயற்சிப்பேன், ஆனால் முடியாது. கொஞ்சம் விட்டாலும் அர்த்தம் விளங்காது என்பது தான் காரணம்... நல்லதொரு கதை சார்...

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

சென்ற பாதையில் திரும்புதல் அத்தனை எளிதா என்ன???

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

உங்களின் எழுத்து நடையோடு பயணித்துப் படிக்கும் போது வியப்பாய் இருக்கிறது.... அவ்வளவு அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/