விரட்டப்படுவது ஒன்றாகவும், விரட்டியது நான்காகவும் இருக்கிறது.
தெற்கிலிருந்துவடக்குப் பார்த்ததாய்நீண்டசாலைகருநிறம்பூசி தன்னை அடை யாளப்படுத்திக்கொண்டதாயும்,தன்இருசாரியிலும் இருக்கும் கடைகளையும் வீடுகளையும் சுமந்து காட்சிப்பட்டதாய்/
ஏதோஒரு பெயர்(சரியாகஞாபகமில்லை)சொன்னபிராய்லர்கடையில்நானும் எனது மகனுமாய் நின்றிருந்தோம் ஒண்ணே கால் கிலோ கறிக்கு சொல்லி விட்டு/
ஓட்டிப் போன இரு சக்கர வாகனத்தின் கைபிடித்து நானும் ,பின் இருக்கையில் கை வைத்து கடையையே வெறித்துப்பார்த்தவனாய்எனது மகனும் நின்று கொண்டிருந்தவேலையில்எங்ளைக்கடந்தஇருசக்கரவாகனங்களும்,சைக்கிள் களும் அதுசுமந்தமனிதர்களுமாய் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், அவர்களைநாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுமாய் நின்றிருந்த பொழுதிலு மாய் இரு சக்கர வாகனத்தில் எங்ளைக்கடந்த கொத்தனார் ராதா இந்தப்பக்கம் வேலைஇருப்பதாகசொல்லிச்சென்றார்.
நல்லமனிதர்.அதற்குஅடையாளமாய்வெள்ளைவேஷ்டி,வெள்ளைச்சட்டை,கை யில் கோல்ட்கலர் செயின் போட்ட வாட்ச்,என தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட அவர் அமர்ந்து சென்றது சிவப்புக்கலர் காட்டிய வாகனமாய்/
மெதுவாகவந்தஅவர்என்னைப்பார்த்துநிதானித்தாரா அல்லது எனது சிரிப்பைப் பார்த்துநிதானித்தாரா தெரியவில்லை.வாகனத்தைநிறுத்தி பேசி விட்டுச் சென் றார்.
திரும்பவுமாய் பார்வை பிராய்லர் கடைப்பக்கம் ,எனக்காக வெட்டப்படுகிற கோழியின் முழு உரு பார்த்ததாய்/
வெட்டுப்படுகிற கோழி,அதன் மேல்ஓங்கி இறங்குகிற கத்தி.அதன்முனை பற்றி வலுவாய் இறக்குகிற வளைக்கரமொன்று/
வலது கை கறிவெட்ட,இடதுகைஅதைபிடித்துஒதுக்க,,,நேற்றுவரைஉயிரோடு இருந்தவை இன்று கறியாய் அவளது கைகளில் துண்டுபட்டுக்குவிகிறது.
.,,,,,,,,,,,,பிராய்லர் என பெயர் தரித்திருந்த பெயர் பல்கையில்,,,,,,,,,,,சாமி துணை என எழுதியிருந்தார்கள்.
வாலோடியாய்நீண்டுதெரிந்தசெவ்வகவடிவப்பலகையில்கடையின்பெயர்,சுவா மி துணை என்கிறவாசகங்களுடன்ஒருஓரமாய் சதுரமாய் ஒட்டப்பட்டிருந்த கோழி படங்கள்.24 மணி நேரமும் இங்கு கறி கிடைக்கும் என கூவி அறிவித்த வாசகங்களின் கைபிடித்தவாறு/
இவைஎல்லாவற்றையும்எனக்காகவெட்டப்படுகிறகோழிக்கறியையும்மகனை
யும்சாலையையும்,சாலையின்ஜனங்களையும்மாறி,மாறிப்பார்த்தவனாய்நின்று கொண்டிருந்த வேளையில் வடபுறமிருந்து தென்திசை நோக்கிஓடி வந்த அழுக்குநாயைகோழிக்கறிக்கடையின்முன் படுத்திருந்த நாய் ஒன்று உருமிக் குறைத்து விரட்டுகிறது.
அதுவிரட்டவும் அதன் பின்னால் சேர்ந்து கொண்ட மற்ற மூன்றும் அதை மூர்க் கம் கொண்டு விரட்ட அது திரும்பி வால் தூக்கி முறைத்து,முறைத்த கணத் திலேயே வால் மடக்கி உடல் குறுக்கி ஓடிப்பதுங்குகிறது ஒருசந்தினுள்ளாக/
விரட்டியது நான்காவும் விரட்டுப் பட்டது ஒன்றாகவுமாய் இருந்த காட்சி விழிபடர்ந்த வேளையில் எனக்கான கறி கொடுப்பதற்கு ரெடியாகியிருந்தது.
பையை வாங்கிக் கொண்டு திரும்புகையில் சந்தினுள் நுழைந்த ஒற்றை நாய் நான்கு நாய்களை விரட்டியடித்துத் துரத்துகிறது,
நான்கின் வேகமும் ஒன்றில் குடிகொண்டதைப்போல/
அதுவிரட்டவும் அதன் பின்னால் சேர்ந்து கொண்ட மற்ற மூன்றும் அதை மூர்க் கம் கொண்டு விரட்ட அது திரும்பி வால் தூக்கி முறைத்து,முறைத்த கணத் திலேயே வால் மடக்கி உடல் குறுக்கி ஓடிப்பதுங்குகிறது ஒருசந்தினுள்ளாக/
விரட்டியது நான்காவும் விரட்டுப் பட்டது ஒன்றாகவுமாய் இருந்த காட்சி விழிபடர்ந்த வேளையில் எனக்கான கறி கொடுப்பதற்கு ரெடியாகியிருந்தது.
பையை வாங்கிக் கொண்டு திரும்புகையில் சந்தினுள் நுழைந்த ஒற்றை நாய் நான்கு நாய்களை விரட்டியடித்துத் துரத்துகிறது,
நான்கின் வேகமும் ஒன்றில் குடிகொண்டதைப்போல/
இப்போது விரட்டுப்படுவது நான்காயும்,விரட்டுவது ஒன்றாகவும் ஆகிப் போகி றது.
7 comments:
ஒன்றை நான்கு விரட்டுவதும்
நான்கை ஒன்று விரட்டுவதும்
வாழ்க்கை என்பது இதுதானே நண்பரே
தம 1
த.ம இரண்டு
ஜோரான நாட்குறிப்பு ...
கொஞ்சம் விலை குறைந்த மிதிவண்டி?! ...
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் மது சார்.நன்றி வாக்களிப்பிற்கு/
நான்கின் வேகமும் ஒன்றில் குடிகொண்டதைப்போல/
இப்போது விரட்டுப்படுவது நான்காயும்,விரட்டுவது ஒன்றாகவும் ஆகிப் போகி றது.// யதார்ட்தம் சொல்லிச் சென்ற விதம் அருமை நண்பரே!
வணக்கம் துளசிதரன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment