19 Oct 2014

மணற்கடிகை,,,,,,



     

தொழுகைக்குச் சென்றிருந்த பாய் திரும்பி வர காலதாமதமாகிப் போகிறது சற்றே/

மணியைப் பார்க்கிறேன்.8.10 என்கிறது கைக்கடிகாரம்.

25 வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டிநான்வேலைபார்க்கிற நிறுவனம் கொடுத்தகடிகாரம்.நிறுவனத்தின்லோகோதாங்கிபெரியது,சிரியதுமான முட்க ளில் வட்டவடிமாய் நேரம் காட்டிச்சிரித்தது.

ஒன்றுடன் ஒன்று மோதாமல் விலகி நிற்கிற முட்களை மேலுரசிச்செல்கிற விநாடிமுள்கைதிருப்பிமணிபார்க்கிறநேரம்லேசாககண்சிமிட்டியது போலான தொரு உண ர்வு வியாபித்துப்படர்கிறதாய்/

பத்துவருடங்களாய்கையில்இருக்கிறது,பெரியதாகரிப்பேர்எனஇதுநாள் வரை  வந்த தில்லை.வழக்கமான வார் மாற்றுதல்,பேட்டரிசெல்,,,இது மாதிரியான செலவு தவிர்த்து வேறொன்றுமில்லை.

பையனுக்குவாட்ச்வாங்கிஇரண்டுஆண்டுகள் கூட முழுதாக முடியவில்லை ஒரு வரு டம் ஏழரை மாதம் எனச் சொன்னான் பையன்.அதற்குள்ளாக இரண்டுதடவைரிப்பே ராகிப்போனது.இரண்டு தடவையும் ரூபாய் இருநூறு ரூபாய்க்கும் குறையாத செலவு. கூட்டிப்பார்த்தால் வாங்கிய விலையை எட்டிததொடப்போகிறது.

பிடிவாதம்தான்,வேண்டாம்,வேண்டாம் எனச்சொல்ல குறிப்பிட்ட அந்த மாடல்தான் வேணும் என அடம் பண்ணி வாங்கியது.அவன் மனம் பிடித்ததை அவனே முடிவு பண்ணட்டும்எனஒருமனதுசொன்னாலும்கூட இன்னொரு மனது அப்படியெல்லாம் இல்லைஎன்னதான்பெரியபையன்ஆனாலும் நல்லது, கெட்டது தெரிய வேண்டாமா? இந்த வயதில் தெரியாமல் எந்த வயதில் தெரிய?

ஷோரூமில் இறக்கைக்கட்டித்திரிந்த இளம் பெண் ஒருத்தி அதெல்லாம் தானாகத் தெரியும் நல்லதும்,கெட்டதும்.அவன் சுட்டிக்காட்டிய மாடல் நீங்கள் எடுத்துக் காட்டி யதை விட ஐம்பது ரூபாய் குறைவுதானே?எடுத்துக்கொடுங் கள்,சந்தோஷப் பட்டு மனம்பூத்துத்திரியட்டும்.இதில் போய்என்னமிகவும் யோசித்துக்கொண்டுபெரியதாக என்றாள்.

பில்போட்டுமுடிந்ததும்வாட்சைமகனின்கையில்கட்டிவிட்டாள்.சந்தோஷித்து போகி றான் மகன்.மடித்த இறக்கைகலை திரும்பவுமாய் விரித்துகொண்டு பறக்க ஆரம்பித்து விடுகிறாள்.

ஷோரூமின் வெளியெங்குமாய் பறந்து திரிந்த அவள்நாங்கள் கடையை விட்டு வந்த நேரமாய்ரிஷப்சனில் நின்றிருந்தாள்.வெளிர்க்கலரில் மென்மை பூத்துத் தெரிந்தசுடிதார்அவளுக்குநன்றாகயிருந்தது.குச்சிகுச்சியாய்தெரிந்தகைகால்க ளிலும், உடலிலுமாய் பொருந்தித் தெரிந்தவள் நன்றாகத்தான் இருந்தாள் பார்ப் பதற்கு/

பெண்பிள்ளைகள்இல்லாத ஏக்கம் இப்படிபார்க்கிறபிள்ளைகளையெல்லாம் மகளைப் போலஎண்ணவைத்து விடுகிறதுதான்.

சொரசொரப்பாபான் டைல்ஸ்பதித்தநடைவாசல்பார்ப்பதற்குஅழகாயிருந்தது. நடை யில்கால்வைக்கையில் இறகு முளைத்தவளை திரும்பிப்பார்த்தால் காணோம் ஆளை. மனைவியைக்கூப்பிட்டுச்சொல்கிறேன். அவளும்சிரித்துக் கொண்டேசொல்கிறாள்.

அவர்கள் பறந்து திரிய சிறகு கடைக்குள்ளாக மட்டுமே தரப்படும். வெளியில் திரிய அவர்களுக்குஅனுமதியில்லை.வேண்டுமானால் அவர்களது பறத்தலுட னான நினைவுகளை மட்டும் சுமந்து செல்வோம் வாருங்கள் எனச்சொல்லி விட்டுஅவளின் அருகாமையாய்நடந்துவந்துகொண்டிருந்தமகனைக் காண்பிக் கிறாள்.அவன்கையையும், வாட் சையும் திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டே வருகிறான்.

அன்று திருப்பிப் பார்த்த வாட்ச் இன்று ரிப்பேர் ஆகியும்,வார் இல்லாமலும் என் பையி னுள் ளாய் கிடந்தது.

திரும்பவுமாய் மணியைப்பார்க்கிறேன்.8.15 என்கிறது.

நிறுத்தியிருந்த சைக்கிளின் மேல்இடதுகையையும்,ஹேண்ட்பாரில்வலது கையையும் வைத்தவனாய்நிற்கிறேன்.

கண் பார்வை தொடுகிற தூரத்திலிருந்து தொழுகை முடிந்து எல்லோருமாய் மசூதியிலிருந்துவெளியேறிவந்துகொண்டிருந்தார்கள்.இரவுநேரலைட்வெளிச் சத்தில்சாலையோரமாய்உள்வாங்கித்தெரிந்தமசூதிவாசலைமட்டுமே பார்வை க்கு வைத்தாய்/

கடந்த ஒருவருடம் வரை மிகவும் பரபரப்பாக இருந்த சாலையிது. பாதாளச் சாக்கடைதோண்டப்பட்டநாளிலிருந்து இன்றுவரை இப்படித்தான் இருக்கிறது, கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாகிப்போகிறது.

பஸ்ஸீம்,லாரியும்இருசக்கரவாகனங்களும்சைக்கிள்களுமாய்வேகமாயும் மெது வாயும் சென்ற சாலை இப்போது குண்டும் குழியுமாய்/தொழுகை முடிந்து வந்த ஒருவர் நான் கடைக்கு முன்பாக நிற்பதைப்பார்த்ததும் ”வாட்ச் கடைபாய்தான,இந்தாவந்துக்கிட்டுஇருக்காரு”.எனச்சொன்னவாறே என்னைக் கடக்கிறார்.கணுக்கால் தெரிய அவர் கட்டியிருந்த மூட்டப்பட்ட வெள் ளை வேஷ்டியும்,கலர்ச்சட்டையும்அவருக்கு நன்றாகத்தான் இருந்தது. மெலிதாகச் சிரித்தவாறே என்னை கடந்து சென்ற அவரை எங்கோ பார்த்தாய் ஞாபகம்.

முன்புறமாய் முகம் காட்டி பக்கவாட்டாய் கடந்து பின் புறமாய் தன்னை அடையாளப்படுத்திச்செல்கிறஅவர்கொஞ்சம்பூசினார்ப்போலபொதுபொதுவெனதெரிந்தார்.தொந்திபோட்டிருந்தாராஎன்பதைப்பார்க்கவில்லை.
கண்ணாடிக்கதவுபோட்டிருந்தகடை.நம்பிப்பூட்டிவிட்டுப்போய்விடுவார்போலும்அவ்வப்பொழுது.

இப்பொழுது நிற்கலாமா இல்லை போய்விட்டு இன்னொருநாள் வரலாமா? இன்னொருநாள் என்பது மறதியிலோ அல்லது தாமதத்திலோ கொண்டு விட்டுவிடலாம்.

மணியண்ணன்மிஸ்டுகால்கொடுத்திருந்தார்.பஜார்வழியேவரும்போதுபோனைஎடுக்க முடியவில்லை.ஒரு ஓரத்தில் நின்று பேசியிருக்கலாம்.நேரமாகிப்போகும் என வந்து விட்டேன்.

மணியண்ணன்லைனில்வரவில்லை.தொடர்பிலக்கிற்குஅப்பால்இருக்கிறதாய் பதில் வந்தது.தோழரிடம்தான் பேசினேன்.பேசிக் கொண்டிருக்கையிலேயே பாய் வந்து விட் டார்.வந்து கொண்டிருந்தவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தொடர்கிறேன் பேச்சை. முற்றுப்பெறாப்பேச்சுகளானாலும்கூட ஏதாவதுஒரு புள்ளியில்நிறைவுற்றுத்தானேஆக வேண்டும்.

பேசிமுடித்ததும் கடைக்குள்ளாய்ச் செல்கிறேன். முடிவுற்ற கடைசி வார்த்தை யின் சூழ்க்கொள்ளலும் பாயினது வாங்க என்கிற சொல்லும் மனம் தைக்க சரியாய் இருந் தது.

முண்ணனிவாட்ச்கம்பெனியின்பெயர்கடையின்கதவில்ஒட்டப்பட்டிருந்தது.ஊதாக்கலர் பிண்ணனியில்வெள்ளைக்கலர்எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட ஸ்டிக்கர் பார்க்க  நன்றாகத்தான் இருந்தது.

சின்னதான கடையில் வைக்கப்பட்டிருந்தகண்ணாடிஷோகேஸீக்குபின்னால் நின் றிருந்த பாய் வாட்சை கையில் வாங்கி ரிப்பேர் செலவு பற்றிச்சொன்னார்.

அவர் சொன்னது ஒன்றும் அவ்வளவு மிகையாகப்படவில்லை.நான்கு,ஐந்து மாதங்க ளுக்கு முன்பாக இதே வாட்ச் ரிப்பேர் என கொண்டு சென்ற போது கடைக்காரர் 200 வரை செலவாகும் என்றார்,அன்று பாய் கடை லீவு என வேறொரு கடைக்கு சென் றிருந்தேன். அப்படிப் போனது தப்பு என பிறகுதான் தெரிந்தது. தெரிந்ததை எப்படிச் சொல்லி புரியவைப்பது/

வாட்ச்வாங்கிய அன்றிலிருந்து இன்று வரை செலவழித்த தொகைக்கு ஒரு புதுவாட்சே வாங்கியிருக்கலாம்.ஆனாலும் மகன்ஆசைப்பட்ட காரணத்திற்கா க பாய் சொன்ன செலவுக்கு ஒத்துக்கொண்டு வாட்சை ரிப்பேர் செய்து வாங்கிக்கொண்டு வருகிறேன்.

வாங்கி வருகிற வழியில் சிறகு முளைத்துத்தெரிந்தவனாய் என் மகன் பறந்து திரிகி றான் வான் வெளியெங்கிலுமாய்/

4 comments:

தனிமரம் said...

சில நேரத்தில் இப்படித்தான் மனசு .

vimalanperali said...

வணக்கம் தனிமரம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

மகனின் மகிழ்விற்காக சில நேரங்களில் விட்டுத்தான் கொடுக்க வேண்டியுள்ளது
அருமை நண்பரே
வெளிவந்திருக்கும் ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
தம2

vimalanperali said...

வணக்கம் க்கர்ந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/