1 Oct 2014

லால் சலாம்,,,,,,


இன்னும் இன்னுமாய் இந்த நொடி வரை கூட உங்களது மனஉறுதியையும்,  திடத்தையும் நீங்கள் ஆற்றிச்சென்ற பணியையும் கண்டு வியக்கிறவனா யும்,,,,,,,,,.எட்ட நின்று பார்க்கிறவனாயும்,,,/

ஒருகுளிர்கால அதிகாலைப்பொழுதொன்றின் நகர்வில் மனிதர்களின் மென் நடமாட்டமிருந்தவேளையில்நீங்களும் நானுமாய் போஸ்டர் சுமந்து விருது நகர்வீதிபூராவுமாய்ஒட்டியது இன்னும் என் மனதின் ஊடறுத்துச் செல்கிற நிகழ்வாய்/

ஒட்டிய பசையின்ஈரம் இன்னும் காயவில்லை,கைகளில்/இருக்கி மூடிய கைகளைதிறந்துபார்க்கிறபோதுஉள்ளங்கைகளில்ஓடித்தெரிகிறரேகைகள் சொல்லிச்செல்கிற செய்திகள் பல பலவாயும்,முக்கியம் காட்டியுமாய்/

அப்பொழுதெல்லாம்எனக்குசைக்கிளில்ஒன் ஹேண்ட் டிரைவிங் தெரியாது. ஆனால்நீங்கள்நன்றாகஓட்டுவீர்கள்,ஒருகையில்பசை வாளியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் சைக்கிளை ஓட்டு கிறதங்களின்விரைவான அனாசியம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு அந்தநாட்களில்/

அந்தஅனாசியம் இயக்கப்பணிகளுக்காய் என்பதை பின் நாட்களில் நான் புரிந்து கொண்டேன்/சற்று தாமதமாய் என வைத்துக்கொள்ளுங்களேன்/

அப்பொழுதெல்லாம்கூலிக்குபோஸ்டர்ஒட்டுகிறவர்கள்கிடையாது.அவரவர் இயக்கப்போஸ்டர்களை அவரவரே ஒட்டிக்கொள்கிற ஏற்பாடு தான் இருந்தது. சினிமா போஸ்டர் தவிர்த்து/

இப்பொழுது இருக்கிற புது பஸ்டாண்டும் அப்பொழுதுஇல்லைஎனநினைக் கிறேன்,தெப்பத்தின் இறக்கத்திலிருந்து ஆரம்பித்தால் மேலத் தெருவின் சந்து வழியாய் வந்து பொட்டல் சுற்றிலும்,பஸ்டாண்ட் மற்ற ,மற்ற ஏரியா க்கள் என நகர் நிரப்பி போஸ்டர் ஒட்டிவிட்டி விட்டு கடைசியாய் நாம் போய் சேர்கிற இடம் திரும்பவுமாய் பொட்டலில் இருக்கிற தேர் முட்டி யாய் இருக்கும்.

அங்கு நாம் போகிற வேளைகையிலிருக்கிறபோஸ்டர் எல்லாம் குறைந்து மிஞ்சி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு போஸ்டர்களை தேர்முட்டியை சுற்றிலுமாய் சுவராய் உயர்ந்து நிற்கிற தகரத்தில் ஒட்டி விட்டு அங்கிருக் கிற கடையில் டீ சாப்பிட்டு விட்டு வருவோம்/ கொஞ்சம்வசதிப்பட்டால் ஒருசெட்பூரி கூட கைகோர்க்கும்.

நகரில்இரவுமுழுவதுமாய்விடியவிடியதிறந்திருந்தடீக் கடைகளில் அதுவும் ஒன்றாய்/

எத்தனைதான் இருந்தாலும் நம் ஏரியா முருகன் ஹோட்டலுக்கு இணையா காது.அந்தஹோட்டலின்ஓனர்டீப்பட்டறையின்மாஸ்டர்செல்வம்இருவரும் நமக்காகவும்நம்இயக்கம் சார்ந்த பணிகளுக்காகவும் மட்டுமே அங்கு கடை வைத்திருந்தது போலவும்டீஆற்றியது போலவுமாய் ஒருமாயத் தோற்றம் கிடைக்கும்.அந்நாட்களில்/

புதியவானமும்புதியதொருபூமியும்கைவரப்போவதாய்அல்லதுகைவரப் பெற் றதாய்நீங்கள்,நான்,ஜே.ஜே,எஸ்தீக்கதிர்ராஜேந்திரன்,சந்துரு,கெரோக்கண்ணன், முருகன்,பாண்டியன்,அசட்டுச்சீனிமற்றுமானநண்பர்களுடன்பேசிக்கொண்டும் உறவிட்டுக்கொண்டுமாய்அங்கு கூடிய நாட்களின் நூற்பில் உருப்பெற்றும், பிள்ளையார் சுழியிட்டுமாய் அங்கு சுழியிட்ட இயக்க வேலைகள் பல,பல/

அதில்ஒன்றுதான்கிராமம் தோறுமாய் சென்று சைக்கிள் பிரச்சாரம் செய்து இயக்கத்தின் கொள்கைளை பறை சாற்றுவது, என திட்டமிடுகிறோம். கிளம்பினோம் அதன் படி.

கிட்டத்தட்டஇருபதிற்கும்குறையாதசைக்கிள்கள்இருக்கும்.சைக்கிளின்ஹேண் டில் பாரில் கட்டப்பட்ட கொடியுடனும், கோஷங்கள் தாங்கிய தோழர்களு டனுமாய் சென்று வந்த சைக்கிள் பிரச்சாரப்பயணத்தின் ஊடுபாவான நிகழ் வாய்ஆரம்பிக்கப்பட்டநிஜநாடகக்குழுவில் நீங்கள் பங்கேற்றதாய் நினைவு,

மன்றத்தில்அருகிலுள்ளவீதியில்பயிற்சி முடித்து வடமலைக் குறிச்சி வரை சைக்கிளில் சென்று அந்த குளிர் கால இரவில் விரிந்துக்கிடந்த வீதியில் நாடகம் நடத்திவிட்டு வந்தோம்,

அந்நினைவுகளும்,நிஜமுமாய்மனம்நிறைந்துகிடக்கையில்பணிநிமித்தமாயும், பிழைப்புநிமித்தமாயும்பயணப்பட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பிரிந்து போய் வருடங்கள் கழித்து உங்க ளை திரும்பப்பார்த்தசமயம் நீங்கள் இயக்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருப்பதாய் அறிந்தேன்.

சந்தோஷம்,வாழ்த்துகள்எனகூறிக்கொள்கிறவனாய்ஆனநான்எப்பொழுதாவது, என்றாவதுநான்சார்ந்ததொழிற்சங்கம்சார்ந்தபணிநிமித்தமாய் அல்லது அதன் தாவா சம்பந்த மாய் தங்களைப்பார்க்கிற நேர்ந்ததுண்டு. 

அப்படியானதருணங்களில்ஆழமான தங்களின் பேச்சும் கருத்தும், ஆலோச னையும் என்னை ஈர்த்ததுண்டு. 

அந்தஈர்ப்புடன் பல நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் பல கூட்டங் களில், பலதெரு முனைபிரச்சாரத்தில் தங்களைப்பார்க்கவும் தங்களது பேச்சுகேட்க வுமாய்நேர்ந்ததும் உண்டு,

அந்தப்பேச்சும்தெளிவும்கம்பீரக்குரலும்,கொள்கைமுழக்கமும்,கோஷமும் காதுகளிலும்,மனம் முழுக்கவுமாய்ஆக்ரமித்துக்கொண்டிருந்தவேளை தங்க ளுக்கு உடல் நலமில்லை, மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என செய்தி சொன்னார்கள்தோழர்கள்,செய்தியின்கனம்அறியசொன்னதோழர்களைசற்றே நெருங்கிப்போய்க்கேட்ட போது .ஆமாம் தங்களுக்கு புற்று நோய் என்றும் அதற்கானமருத்துவம் பார்க்கவே நீங்கள்மருத்துவமனை சென்றிப்பதாயும் செய்தியை நிஜப்படுத்தினார்கள்.

அன்றுஒருஅதிகாலைவேலையிலாய்அவர்கள்நிஜப்படுத்தியசெய்தியின்வீரிய த்தை, கனத்தை உடைத்து மருத்துவம் முடிந்து வந்து  வழக்கம் போல் இயக்கப் பணியாற்றிக்கொண்டிருந்தீர்கள் இந்த ஒரு வருடமாய்.

தெரியும்எங்கள்எல்லோருக்கும்,இன்னும்,இன்னுமானபலபேருக்குமாய்.ஆறாத ரணத்தையும் அதன் அழியாத அதன் சுவட்டையும்உடலினுள்ளாய்தாங்கிக் கொண்டு நீங்கள்இயக்கப்பணிய்யாற்றிக் கொண்டிருந்த நாட்கள் ஒன்றின் நகர்வில்தான் தங்களது முகநூல்ப்பதிவில் சாகும் வரைபுத்தகம் படிப்பதே என்னைதெளிவாக்கும்எனச்சொல்லியிருந்தீர்கள், 

அப்பொழுது நெருடியமன நெருடலுடன் சாத்தூர் ஆஸ்பத்திரியில் இருந்த தங்களைவந்துபார்க்கிற மன தைரிமற்று இருந்தநாட்களின் நகர்வொன்றில் தான் தாங்கள் மரணித்துவிட்டதாய் செய்தி வருகிறது.

மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைபரப்பி பூவும் பிஞ்சும்காயும்கனியுமாய் இருந்த மரம் ஒன்று விதைகளை இம்மண்ணின் பரப்பில் ஆழ பதிய னிட்டு விட்டு மரணித்துப்போனது எங்களின் பேரிழப்பே,,,,

இழப்புகள் அனைவரின் வாழ்வில் வருவதுதான் என்றாலும் கூட அதை தாங்கி ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகவே/

தோழர் சேகர் அவர்களே,தங்களுடன் சைக்கிள் பிரச்சாரப் பயணத்திலும், இன்னும் இன்னுமான பிற இயக்கப்பணிகளிலும் கலந்து கொண்டு என்றோ பணியாற்றிய நாட்கள் இன்று ஏனோ நினைவின் ஊடறுத்துப் போகிறதாய்,,, 

இழப்பை எண்ணி கலங்குவது தோழனுக்கு அழகல்ல என்கிற சொல் நினைவு க்கு வருகிற இத்தருணத்தில் தங்கள் மரணத்தை எண்ணி மனம் கலங்காமல் இருந்து விட முடியவில்லை,

சென்றுவாருங்கள்தோழர்,

உங்களது உடல் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு தானமாய் வழங்கப்பட்டிருக் கிறது.மரணித்தபின்னும் பயனுக்குண்டாகிற மனிதராய் நீங்கள் அடையாளப் படுகிறீர்கள்/

லால்சலாம்,,,,,

லால்சலாம்,,,,,

லால் சலாம்,,,,,/

11 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் சேகர் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
அஞ்சலிக்கு தலை வணங்குகிறேன்/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு/

unmaiyanavan said...

தோழர் சேகர் அவர்களுக்கு அஞ்சலிகள்.

vimalanperali said...

வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்,
அஞ்சலிக்கு தலை வணங்குகிறேன்.

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,நன்றி வருகைக்கு/

Kasthuri Rengan said...

செவ் வணக்கங்கள் தோழர் சேகர்...

vimalanperali said...

வணக்கம் மது சார்,
செவ்வணக்கத்திற்கு என் சிரம் தாழ்த்தல்கள்/

'பரிவை' சே.குமார் said...

தோழர் சேகர் அவரைப் பற்றி அறியத் தந்தீர்கள்... அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் அண்ணா....

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
அன்னரின் ஆத்மா சாந்தி அடைய
தங்களோடு சேர்ந்து நானும்
பிரார்த்திக்கிறவனாய்/