3 Oct 2014

கண்ணாடித்தாள்,,,,,,



இல்லாதவிட்டில்பூச்சியைஇருப்பதாகநினைத்துமிதித்தபோதுதெறித்ததண்ணீர் துளியின் சப்தமும் அதன் ஓடித் தெரிந்த சிதறல்களும் பார்க்க நன்றாகவேயி ருக்கிறது.

விழிபடர்ந்த பார்வைக்கும்,பார்வை படர்ந்த பரப்பிற்குமாய் நன்றாகத் தானே இருக்கிறதுஎனநினைத்துதுளித்துளியாய்தண்ணீரைவிட்டுவலது பாதத்தாலும் இடதுபாதத்தாலும் மிதித்து,மிதித்துப் பார்க்கிறேன்.

அரையங்குல நீளத்திற்கும் குறைவாய் இருந்த விட்டில் பூச்சி தாவித்தாவி அமர்ந்து கண்ணாமூச்சி காட்டியது.

கழியவறையிலிருந்து இறங்கிபாத்ரூமில்காலடிஎடுத்துவைத்த வேளை முதலாவதாய் ஓரிடத்தில், இரண்டாவதாய் தாவி அமர்ந்தது மற்றோரிடத்தில் மூன்றாவதாய்,நான்காவதாய்வேறோர்,வேறோர்இடம்,,,,,,,,,,,,,எனதாவித்தாவி
அமர்ந்தஇடங்கள்அனைத்தும் நான் நின்றிருந்த இடத்தை அன்மித்தும் எனது காலடியைச் சுற்றியுமே/

அதுவலதா,இடதாஎனசொல்லத்தெரியவில்லை சரியாக. சமயத்தில் இரண்டி ற்கும்மத்தியிலுமாகதாவிப்படர்ந்துஅமர்ந்து கொள்கிறது.

மஞ்சள்கலர்பக்கெட்டிலிருந்த தண்ணீர் என் கையிலிருக்கிற ஊதாக்கலர் கப்பை அரை பாதியாய்நிரப்பிநிற்கிறது.அதைக்கொண்டு கைகளிரண்டையும், பாதங்களையும்நனைத்த வேளையில் பட்டுத்தெரித்ததாகவே இருந்தது அந்த விட்டில் பூச்சி.

அவரசமாக பார்த்த அரைக்கண நேரத்தில் அதன் கலர் அடர் மஞ்சள் என தெரிந்து கொள்ள முடிந்தது.அப்படியே இருக்கட்டுமே பரவாயில்லை.

தண்ணீரின் நிறத்திலிருந்தும்,தண்ணீர் சிந்தியதரையின்நிறத்திலிருந்துமாய் வேறுபட்டு தெரிந்தஅதைஅப்படியே விரைந்து நசுக்கி விடலாம் என விரை வாய் எடுத்து வைத்த மிதியிலிருந்துதப்பித்தப்பி ஒவ்வோர் இடமாய் பறந்த மர்கிறது.

தரை,அதில் பரவி நின்ற தண்ணீர் ,அதன் மீது படர்ந்து நின்ற மென் வெளிச்சம் என்கிற கலவையுடனுமாய் தண்ணீரை துளித்துளியாய் தரையில் விட்டு மிதித்துப் பார்க்கிறேன்.

விட்டில் பறந்து போன பின்புமாக/

இப்போது விட்டில் இருந்த இடத்தில் என் கால்கள் இரண்டும் விளையாட்டை பதிவு செய்கிறது, தாளலயத்துடனும்,சுருதி சேர்த்துமாய்/

எவ்வளவுதான் ஓசையின்றி மிதித்த போதும் கூடடப்,டப்என அது ஒலி எழுப்பி  ஊராரை அழைத்து வந்து காட்டிக்கொடுத்து விடுகிறது.

இரவு 12 மணிக்கு நின்று போன மின்சாரம் திரும்பவுமாய் வருகைதந்த நேரம் ஒன்று ஐந்து.அதென்னஐந்துநிமிடம்அப்படிஒருதாமதம்எனத் தெரியவில்லை. கொஞ்சம்தூக்கமினமையினாலும்,அதீதகொசுக்கடியினாலும்,புழுக்கத்தின்
காரணமாகவும்தூக்கம்திரும்பவும்ஒட்டாமல்போனது.உடலிலும்,விழிகளிலு
மாக சேர்த்து/

சரி வெறுமனே படுத்துக்கொண்டு தூக்கம் வருவது போல பாசாங்காவது செய்யலாம் என நினைத்து பாத்ரூமில் பிரவேசித்த வேளையில் செய்த அதி முக்கியமான பணியாய் இருக்கிறது இது.

“இது நல்லாயிருக்கே என்னடா இது இந்த நேரத்துல டப்பு,டப்புன்னு சத்தம் வருதே சம்மந்தமில்லாமையின்னு பாத்தா நீங்கதானா அது,ஒங்க கை வரிசை யில உருவெடுத்து நிக்கிற சில்மிஷம்தானா அது”? என இடுப்பில் கைவைத்து நிற்கிறாள் மனைவி/

ஊதாக்கலர் புடவையிலும்,கருப்புக்கலர் ஜாக்கெட்டிலுமாய் பார்க்க அழகாய்த் தெரிகிறாள்.அந்த இரவின் ஆழ்ந்த மௌனத்திலும் நிசப்தலுமாக/

“என்னாதிது இந்த 49 வயசில இப்பிடி நடுராத்திரியில லைட்டப்போட்டுட்டு வந்து ரோதன பண்ணிக்கிட்டு நிக்கிறீங்க?ஒங்களோட பெரிய இம்சையப் போச்சே,,ராத்திரிதூங்கப்போறவரைக்கும்நல்லாத்தானேஇருந்தீங்க?இப்பதீடீர்ன்னுஇந்தமாதிரிபண்ணுனாஐயோகொடுமையே விடிஞ்செந்டுரிச்சுமொததவேலையாஎங்கயாவதுபோயி திருநீருபோட்டு மந்தி ரிக்கணும்,இல்லைன்னாநல்லடாக்டராப்பாத்தாவது கூட்டிட்டுப்போகணும். அதுக்கெல்லாம் முன்னாடி மொத வேலையா எங்க அத்தைக்கு போன் பண்ணி கேக்கணும்,இந்த மாதிரி அடிக்கடி நட்டு கழண்டுக்கிறது கல்யாணத்துக்கு முன்னாடியேஇருந்ததுதானா?இல்லஇப்பத்தான்இப்பிடியான்னுகேக்கணும்.
இனிமேயாவதுஇந்தமாதிரிசுழிசேட்டபண்ணாமஒழுக்கமா இருக்கச் சொல்லு ங்க.சின்னப்புள்ளைங்கபாத்தாமேலுக்குசௌள்க்கியமில்லாமபோயிரும்ன்னு சொல்லணும்”

“அடப்பாவி மனுசா,ஆரம்பத்துலேயே ஒன்னைய கழிச்சுக்கட்டீருப்பேனேய் யா?இப்பிடி மாலையப்போட்டு மஞ்சத்தண்ணிய ஊத்துன ஆடு மாதிரி ஒங்க கிட்ட பட்டுக்கிட்டு முழிக்கிறேனே”,என கையைப்பிடித்து இழுத்து என்னை பாத்ரூமிலிருந்து கூட்டி வருகிறாள்.

எரிந்துகொண்டிருந்தட்யூப்லைட்,நிறைந்துதென்பட்டசமயலறை,பொருட்கள் அடங்கி.

மின்விசிறிசுழன்றுகொண்டிருந்தஹால்,விரிக்கப்பட்டிருந்தபாய்,அதில் தூங்கி

கொண்டிருந்தகல்லூரிஇளங்கலைமூண்றாமாண்டுபடிக்கிறமூத்தமகள்.தாழிட ப்பட்டிருக்கிற கதவு.பூக்கள் சிரித்த ஜன்னலின் கம்பிக்க்கிராதிகள்,வீட்டிற்கு வெளியே படர்ந்திருந்த நிசப்ததை கிழித்த கூர்க்காவின் விசில் சப்தம்.உடன் பாத்ருமில் நானே மிதிப்பதற்காய் நான் சொட்டு விட்டு நின்ற துளி நீர், என எனக்காக கைகட்டி காத்து நிற்க என்கரம் பற்றி இழுத்து வந்து என்னை தூங்கிப் போகச்சொன்னவள் பாத்ரூம் சென்றாள்.

அவள் போன சிறிது நேரத்தில் டப்,டப்,டப்,,,,,,,என பாத்ரூமிலிருந்து சப்தம் வருகிறது தாள லயத்துடனும்,சுருதி சேர்த்துமாய்/

7 comments:

Yarlpavanan said...

எழுத்து நடை நன்று
சிறந்த பதிவு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Kasthuri Rengan said...

நடை புதுமை
த.ம இரண்டு

vimalanperali said...

வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி மது சார் வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்/