4 Oct 2014

கரிச்சட்டி,,,,,




கையைச் சுட்டசுடுநீரின்கோபம்உன்னைநினைவுகொள்ள வைக்கிறதாகவே/

உடலெங்குமாய் கரி அப்பிப்போயிருந்த ஈயச்சட்டி.அதனுள்ளே குடி கொண்டி ருந்த சுடுநீர்.

என் மகன் வைத்துத் தந்தது எனக்காக/முக்கால் வாசி அளவே நிரம்பியிருந்த ப்ளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த பச்சைத் தண்ணீருடன் சட்டியிலிருந்த சுடு தண்ணீரை ஊற்றுகிறேன். போதும்,போதும்,,,,,, எனச்சொன்னமனதின் வார்த் தைக்கு ஆட்ப்பட்டும், கட்டுப்பட்டுமாய் பாதி நீரை மட்டும் ஊற்றி விட்டு மீதி நீரை அப்படியே சட்டியிலேயேவைத்து விடுகிறேன்.

உடல் தேய்த்தசோப்பின்நுரையில்உடலின் அழுக்கும்,அழுப்பும்போய்விட்ட திருப்தியுடன் பச்சைத்தண்ணீரில் மென்மையாய்கலந்துவிட சுடு தண்ணீரை ஊற்றுகிறேன்.தலை, முகம், ஊடல்,கை,கால்,,,,,என நனைத்த நீர் பக்கெட்டில் குறைவாகவே இருக்கிறது, ஆகவே சட்டியில் மிச்சமிருகிற நீரை எடுத்து ஊற்றிவிட்டு பக்கெட்டிலிருக்கிற பச்சைத் தண்ணீரில் கலக்கவும் என செயல் முறை விளக்கமளிக்காத குறையாய் அசரீரி இட்டு சொல்லிச் செல்கிறது மனது,அதுவும் மனம்பிடித்தஅசரீரின்குரல்பல வகைப்பட்டதாமே? அதில் தண்ணீர் சொன்னது எந்த வகையில் சேரும் எனத் தெரியவில்லை. வலது கை தூக்கிப் பிடித்த சட்டியிலிருந்து வழிந்து விழுந்த தண்ணீர் பக்கெட்டுனுள்ளி ருந்த இடது கை தொட்டு நிரம்புகிறது.

கரி பிடித்த சட்டி ,பச்சைத்தண்ணீர்,ஊதா நிற ப்ளாஸ்டிக் பக்கெட், பிங்க் கலர் பூசிக்கொண்டிருந்த பாத்ரூம் சுவர்கள்,இன்னமும் டைல்ஸ் பதிக்கப் பட்டிராத பாத்ரூமின் தரை. பாத் ரூமை ஒட்டியே இருந்த கழிப்பறையின் கதவு, ஆஸ்பெ ஸ்டாஸ் தகடு போர்த்தப்பட்டு/

நான்,வாளி,பாத்ரூம் மற்றும் சுடு தண்ணீர் மற்றும் பச்சைத்தண்ணீர் என மாறிமாறி காட்சிப் பட்டவைகளுடன் நின்றிருந்த என் இடது கையை வலது கரம் ஊற்றிய தண்ணீர் சுட்டு விட்டது சற்றே/சுட்டது தண்ணீர் தானே, ஊற்றியது நான்தானே?என்கிற நினைப்பிருந்த போதும் கூட சூட்டின் கடுமை சிறிது நேரம் மனம் தங்கியதாகவும்,கை சுட்டதாகவுமே/

பள்ளிக்குச்செல்கிறபையன் என்றைக்குமேமுதல்ஆளாககுளித்துகிளம்பி விடு வது வழக்கம். அது போலதான் அன்றும்/அவனுக்கான சுடுநீர் ஸ்டவ்விலிரு ந்து இறக்கப்பட்டதும் மறக்காமல் அதே சட்டியிலேயே இன்னொரு முறை எனக்கான சுடுநீர்தயாராகும். இதில் சுடு நீரை இறக்குபவனும், அதை திரும் பவுமாய்ஸ்டவ்வில்வைத்துஏற்றுபவனும்அவனாகிப்போகிறான்.அதுஅவனின் அனிச்சைசெயலாஅல்லதுவிருப்பச்செயலாத் தெரியவில்லை.

பத்துத் திரிகளை தன்னகத்தே தாங்கிய மண்னெண்ணை ஸ்டவ்வில் சுட்ட நீர்என்கையை சுட்டதாகவே இருக்கிறது சகியே.

சுடட்டும்,சுட்டுவிட்டுப்போகட்டும்.என்னகுறைந்துவிடப்போகிறது.இப்போது ? ஆறிப்போகிறகோபம்போலசுடுநீர்சுட்டவடுவும்ஆறிப்போகும்சீக்கிரம் சகியே எனச்சொல்பவனாய் பாத்ரூமிலிருந்து வெளியேருகிறேன்.

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்
தம 1

vimalanperali said...

வணக்கம் கரந்த ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Kasthuri Rengan said...

அருமை
தம இரண்டு

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்காக சார்/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்காக /

'பரிவை' சே.குமார் said...

வசீகரமாக எழுத உங்களால் மட்டுமே முடியும் அண்ணா...
சுடுநீர் சுனை நீராய்....
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நீங்களும் வசீகர எழுத்துக்கு
சொந்தக்காரர்தானே?
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/