11 Nov 2014

பூஞ்சுனை,,,,,

 அதுஅவளுள்ளாகஎப்படிகுடிகொண்டதுஎனத்தெரியவில்லை.அல்லதுஅவளின் பிரியப்பட்டஅழைப்பின்பேரில்வந்ததாகவும் இல்லை என்கிறாள்.

 அவள்சித்தாள்.அவளது கணவன் சமையல் வேலைக்குப் போகிறவராம்.
ஒருநாளைக்கு500 ரூபாய் சம்பளமாம்.சமையல் வேலைக்குப்போவதில் இருக் கிற ஒருசின்னசௌகரியம்வேறு எதிலும் இருப்பதில்லை.சாப்பாடு ஓசியாகப்  போய்விடும்.  சாதாரண  சாப்பாட்டிலிருந்து  விதவிதமானஅயிட்டங்கள் வரை/

 என்ன வயிறுதான் வேண்டும் உள்ளே தள்ளுகிறதை ஏற்றுக்கொள்ள என்கிறா ள் கணவனைப்பற்றி கூறுகிறபோது/

 இவளுக்கு200ரூபாய் சம்பளம்.நாள் முழுக்க வெயிலில் காய்கிற பாடு.  மழைக் கும்,வெயிலுக்கும்,காற்றுக்கும்ஆளாகிப்போகிறஅவலம்.சமயத்தில் அதனதன் கோபத்திற்கும்,  எரிச்சலுக்கும்  ஆற்றாமைக்குமாய்/

 அலுவலகம்முடியப்போகிறமுன்மாலைநேரமாய்வந்தாள்.அவள்வரும்போது வேலைகளைமுடித்துவிட்டுகிளம்பலாம்எனமுடிந்துவைத்திருந்தஎண்ணத்தை மனம் அவிழ்க்கப்போகிற நேரம்.

வந்து விட்டாள்.கையில் வைத்திருந்த தங்கச்செயினை காட்டி இதற்கு எவ்வ ளவு பணம் தருவீர்கள் என பார்த்துச்சொல்லுங்கள் அடகு வைக்க வேண்டும் உங்களிடம் எனறாள்.

 நன்றாகயிருந்தால்  28 இருக்கலாம் வயது என சொல்லிச்சென்றது அவளது தோற்றம்.

 அடர் கலரில் சேலை உடுத்தியிருந்தாள்.அதற்கு ஏற்ற  கலரில்   சட்டை.

 கருத்துமெலிந்திருந்தஉருவம்.வாடிக்காணப்பட்டஉடல்.வளித்துச்சீவிஅள்ளிக் கட்டியிருந்த தலைமுடி.அதில்ஒன்று பிரிந்துதவழ்ந்துவந்துஅவளது தோளில் அமர்ந்திருந்தது.இவை எல்லாவற்றையும் மீறி சிரிப்பை அணிந்து கொண்டி ருந்த அவளது முகம்.

  “ஆஸ்பத்திரி  செலவிருக்கு  சார்.அதான்  கொணாந்திருக்கேன்,எனக்குத்தான் ஆபரேசன்.யெடது பக்க மார்ல ஒரு கட்டி இருக்கு சார்.ஏற்கனவே ரெண்டு தடவ ஆபரேசன் பண்ணுனதுதான்.இப்ப திரும்பவும் வந்துட்டு உயிர வாங்குது ,கையதூக்கக்கூட முடியல.நேத்து அப்பிடித்தான் வேல செய்யிற யெடத்துல சாந்துசட்டிய தூக்க மாட்டாம கீழ போட்டுட்டேன்.

வீட்டுக்காரரு கூட சத்தம் போடுறாரு. “பேசாம மண்ணு வெட்டு வேலைக்குப் போகவேண்டியதுதான”இதுலபோயிஎதுக்கு உசிரக்குடுத்துக்கிட்டுங்குறாரு.,
  “நாந்தான் வேணான்னுட்டு கெட்டிக்கிட்டு ஒழப்பீட்டு திரியிறேன். மண்ணு வெட்டு வேலைன்னா ஒரு நாளைக்கு 80 ரூபாதான் சம்பளம்.இதுன்னா 200 ரூபாய்சம்பளம்.200க்கும்80மத்தியிலஇருக்குற120துலதானஎங்கபாடும்அல்லாடிக் கிட்டு இருக்கு சார் என்றாள்.

 என்ன செய்ய அப்பிடி ஒரு பொறப்பா வந்து பொறந்துட்டோம். இது கூட எங்க வீட்டுச்செயின் இல்ல சார்.எங்க மாமியார் வீட்டுக்காரவுங்க குடுத்தது.எங்க அம்மா ஐயாயிரம் ரூபா தர்றேன்னுருக்காங்க.இத அடகு வச்சது போக மேக் கோண்டு உருட்டி பெறட்டி செய்யணும் சார்” எனவும் சொன்னாள்.

  “கௌவர்மெண்டு   ஆஸ்பத்திரியெல்லாம்  சொகப்படாது   சார்.

தனியார்ட்டைன்னாஎன்னத்தையோமுன்னப்பின்னசீக்கிரம்குணப்படுத்திஅனுப் பிச்சுருவாங்க/,

 “நாங்களும்,போனமா,வைத்தியம்பாத்துவந்தமாபொழப்பப்பாத்தமான்னுஇருக் கும்.,

  “நேத்து சாய்ங்காலம்தான் எல்லாம் கேட்டு விசாரிச்சிட்டு வந்தம்.நல்ல வேள கேன்சர் கட்டியில்ல.டாக்டர் ஒண்ணும் பயப்படக்கூடாது.அழுது பொழம்பக் கூடாதுன்னு சொல்லீட்டாரு.டாக்டரு பேரு தெரியல, அவரு அமெரிக்காவுல போயி படிச்சிட்டு வந்தவராம்ல” என அவள் சொல்லவும் எங்களது மேலாளர் ஆஸ்பத்திரிகளில் உள்ள இலவச இன்ஷீரன்ஸ் திட்டம் பற்றி கூறினார்.

 “எங்கனசார்.நீங்கசொல்றதெல்லாம்விவரம் தெரிஞ்ச ஆள்களுக்குத்தான் சார்.

 எங்கள மாதிரி ஒண்ணும் தெரியாத ஆள்க இப்பிடித்தான் பட்டுக்கிட்டு முழிக் கிறோம்.அவுகவசதியா இருந்தாக்கூட இதப்பயன்படுத்தி பலன் அடைஞ்சிர்றா ங்க/ நாங்க இப்பிடியே,,,,,.எங்களுக்குன்னு எதுவும் சொல்றதுக்கு வகையான ஆள் கெடையாது சார்.அதான் இப்பிடி சீப்பட்டு அலையிறோம்” என்றாள்.

“சரி சார் இது எவ்வளவு வருன்னு சொல்லுங்க” என்றாள் அவள் கொண்டு வந்திருந்த நகையைக்காட்டி/

 மேலாளர் அவளிடம் எத்தனை பவுன் என்ன ஏதென கேட்டு அடகு வைத்தால் இவ்வளவுரூபாய்கிடைக்கும்என சொல்லிக்கொண்டிருந்தார்.

 “வீட்டுக்காரருசமையல்வேலையில இருந்தாலும் நாலு பேரப்போல தண்ணி போட்டுட்டு அலும்பு பண்ணவோ ரோட்ல கெடக்கவோ மாட்டாரு சார். அவரும் தண்ணி போடுவாரு இல்லைங்கல.ஆனா வேலைக்குப் போறன்னை க்கு கெடைக்குற பேட்டா காசுலதான் எல்லாம்,எக்காரணம் கொண்டும் வேல சம்பளத்துலகைவைக்கமாட்டாருசார். அத அப்பிடிய்யே முடிஞ்சி கொண்ணாந் துருவாரு.அனாவசியமா எதுவும் கெடையாது.ஒரு பீடி,சிகரெட்டு, தண்ணி, வெத்தல,பாக்கு,,,,,, ம்கூம்/”என அவள் முடிக்கவும் நான் ஒரு மருத்துவரின் பெயரை சொல்லி அவரைப்பார்த்து அவரிடம் ஆலோசனை பெற்று விட்டு பின் அமெரிக்காவில் படித்துவந்த டாக்டரிடம் நீங்கள் போகலாமே என்றேன்.

 அதுஎனதுவாய்க்கொழுப்பா,அல்லதுஇதுமாதிரியானவிஷயங்களும் எனக்குத் தெரியும் என்கிற காட்டிக்கொள்ளலா?சரியாக பிடிபடவில்லை.

 “பெரியவ5வது படிக்கிறா சார்,சின்னவ4வது படிக்கிறா,புள்ளக ரெண்டும் தங்கம் சார்.,

 “ஆனாபாருங்கஇந்தபெரியவபெறந்ததுலயிருந்துதான்இப்பிடிஆகிப்போச்சி.
அவ பெறந்த நேரமா இல்ல ஏங் கெரகசாரமான்னு தெரியல. ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு,ஒரேஆஸ்பத்திரிசெலவாத்தான் வந்துக்கிட்டு இருக்கு .,

 “செலவும்கட்டுக்கடங்காமபோயிக்கிட்டுஇருக்கு. என்னதான் செய்யப்போறம், ஏதுதான்பண்ணப்போரம்ன்னுதெரியல.அப்பிடியேஓடிக்கிட்டு இருக்கு து சார் பொழப்பு.,

  “சரி சார்,நாளைக்கு வர்ரேன்.இந்தப்பொருள அடகு வாங்கீட்டு பணம் குடுங்க சார்”.என போய் விட்டாள்.

 நாங்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வந்தோம்.வானம் சலனம் பூத்திருந்தது.

 ஒற்றையாய் பறந்தபறவைஒன்று தன்திசை தேடித்திரிவதாய் தோனியது/

13 comments:

 1. அருமையான சிறுகதை அண்ணா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. நல்ல சிறுகதை ஐயா.
  வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உமையாள் காயத்திரி அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/.

   Delete
 3. ஏழைகளின் நிலைமையை தெளிவாக சொன்ன பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. தங்கள் கதைகள் சிறப்பாக அமைய
  சூழலை - அப்படியே
  உள்வாங்கும் தன்மை
  தங்களிடம் இருப்பதால் தான்
  சாத்தியமாகின்றது.
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. அருமையான நடை. ஆளமான கதைக்கரு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புனிதா அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. இயல்பான குடும்பச் சூழலில் வாழ்பவரைப் பற்றித் தாங்கள் எழுதியுள்ள விதம் மனதைத் தொட்டது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் பி ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete