பார்க்கம்பி,,,,,
இருந்துவிட்டுதான் போகட்டுமே,என்னதான் கெட்டு விட்டது இப்பொ ழுது?அப்படித்தான்புதிதாகஒன்றைகற்றுத்தெளிகிறவேளையில் அது கைவரப் பெற்று ,அதை தன் வயப்படுத்தி நடைமுறைபடுத்துகையில் தவறு வரும்தான் நண்பா/
அவ்வளவுவலியிலும்,அவ்வளவுரத்தப்போக்கிலும்,அவ்வளவுவேத
னையிலுமாய்ஜனிக்கிறஅழகானகுழந்தைமுதன்முதலாய்நடைபழகும் போது சுவர் பிடித்து எழுந்து நடக்கை யில்பலதடவை விழுகிறதுதா னே?பின் விழுந்த போதேல்லாம் எழுகிறதுதானே? விழுவதெல்லாம் எழுவதற்கே/என்கிற தத்துவஉண்மையைஉள்ளடக்கியசெயலை தன் சின்னக்கைகளை நீட்டி,சின்னஞ்சிறிய விரல்களை அகல விரித்து தன்பூப்பிஞ்சுபாதங்களைதத்தக்கா,பித்தக்கா,,,,எனஎட்டெடுத்து வைத் து சுவர் பிடித்தும்,நடை வண்டி பிடித்தும் இப்போது வாக்கரிலுமாய் நடை பயில்கிற அந்தப்பிஞ்சு கீழே விழுகாமல் இருப்பது எப்படி சாத்தியமாகும் நண்பா?
அவ்வளவு தூரம்ஏன்நண்பா?டவுசரில் தபால்பை ஓட்டையுடனும், தோள்ப்பட்டையில் கிழிந்து தொங்கும் கிழிசலான சட்டையுனும், வார் அறுந்த மஞ்சள்ப்பை சுமந்த புத்தகங்களுட னும், செருப்பில்லா வெறுங்காலில் இரண்டு,மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் பள்ளியில் படித்த நம் இளமைக்காலங்களில் நமக்கு சக மாணவர்க ளிடமிருந்து கிடைக்கிற காக்காய் கடி கடித்த மிட்டாயும்,பள்ளியின் கேட்டோரம்அமர்ந்துபாட்டிவிற்றசூம்பிப்போனஇளந்தைப்பழமும், குச்சி ஐசும்தானே?????என இருந்து விடாமல் விடாப்பிடியாய் அரைமணி,ஒருமணி(ஒரு மணி என்பது வசதியானவர்களின் பேரம்) என வாடகை சைக்கிள் எடுத்து குரங்குபெடல் போட்டு எத்தனை முறை விழுந்திருக்கிறோம்.எத்தனை முறை அடிபட்டிருக்கிறது? கைமுட்டிகளிலும்,கால்முட்டிகளிலும்,தவிரஉடம்பின்இதரப்பகுதிகளி லும்சிராய்ப்பும்,விழுப்புண்ணும்ஏற்படாதஇடமுண்டாநண்பா?சொல்லு ங்கள்/
இப்பொழுதெல்லாம்பிறந்தகுழந்தைக்குக்கூட சைக்கிள் வந்து விட்ட தைப்போல அப்போதெல்லாம் ஏது நண்பா?
பெரியசைக்கிள்,குரங்குப்பெடல்,டக்கடிப்பது,கீழேவிழுந்துகைகாலில்,
விழுப்புண்ணும்,சிராய்ப்பும்/இதுதானேநம்அங்கஅடையாளம்அன்று/
பேனாச்சீனா,மூனா தெருவில் குடியிருந்த கூடப்படித்தசகமாணவன் ஒருவன் இப்படித்தான் சைக்கிள் பழகிய நாட்களில் ஏடாகூடமாய் ஓட்டிக்கொண்டு போய் மரத்தில் மோதிவிட்டான்.
சைக்கிளில் ஏறத்தெரிந்தவனுக்கு இறங்கத்தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வீட்டின் வாசல் படியோரம் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி அமர்ந்து இடுப்பை ஒடித்து, ஒடித்து ஒட்டியவனுக்கு அவனது வீடு இருந்த சந்தின் முனை திரும்பும் போது சைக்கி ளின் வேகத்தை கட்டுபடுத்தவோ அல்லது பிரேக் பிடிக்கவோ தெரியவில் லை இல்லை யெனில் தோணியிருக்கவில்லை.
சந்தின் எதிர் வரிசையில் சற்றுத்தள்ளி தன் ஆகுருதி காட்டி ஓங்கி வளர்ந்து நின்ற புங்க மரத்தின் மீது நிறுத்த முடியா வேகத்தில் சென்று மோதி விடுகிறான்.மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் சிமெண்ட் பூசப்பட்ட சாலையில் விழுந்ததில் உடலெல்லாம் சிராய்ப்பும், தலையில் முன் நெற்றியை ஒட்டி அடியும் விழுந்து விடுகிறது.
பட்ட அடிக்காய்ஒரு மாதம்ஆஸ்பத்திரிக்கட்டும்,சில நாட்கள்பள்ளி விடுமுறையிலுமாய் இருந்தான்.
இப்போது அவன் பெரிய சைக்கிள் வித்தைக்காரனாய்.தன்னுடைய இந்த 45 வது வயதில் கைகள் இரண்டையும் விட்டு விட்டு கால்கள் இரண்டையும் ஹேண்ட் பாரில் வைத்து ஓட்டுகிறான்.இது தவிர இன்னும் இன்னுமாய் நிறைய செய்கிறான்.
ஒருவேளை அவன் அன்று அப்படி விழுந்திருக்கவில்லை என்றால், தலையில் அடிபட்டு கட்டுப்போட்டிருக்கவில்லை என்றால், அதனா ல் அவன் சில நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் இருந்திருப் பானேயானால் இவ்வளவு பெரிய சாகசக்காரனாக ஆகியிருப் பானா? என்பது சந்தேகமே/எல்லாம் காலம் கற்றுத்தந்தது.
நீங்கள் இந்தத் தடவை கம்ப்யூட்ரில் டைப் பண்ணிய எழுத்துக்களில் பிழையொன்றும் அவ்வளவாகஇல்லையே,,,,,,,? எனஎன்னிடம்கேட்ட போது உங்களிடம் சொல்ல நினை த்து சொல்லாமல் விட்டதை எழுத்தில் காண்பித்து விடுகிறேன் நண்பா,
இப்போது என்ன தவறு வந்தால் வந்து விட்டுத்தான் போகட்டுமே? திருத்தித்தான் கொள்வோமே?
விழுவதைப்பற்றி கவலைப்பட்டால் நடை பழகுவது கடினம் என நீங்கள்தானே ஒரு முறை என்னிடம் கூறினீர்கள் ஞாபகமிருக்கி றதா?,,,,,,,,
12 comments:
விழுவதைப்பற்றி கவலைப்பட்டால் நடை பழகுவது கடினம்....
நிதர்சன உண்மை அண்ணா...
அருமையான பகிர்வு அண்ணா...
விழுந்து எழும் போது தான் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.
கவலைப்படாமல் எழுந்து நடை பயில்வது மனத்தின் போக்கைப் பெறுத்து அமைகிறது.
சிலர் எழுவதில்லை...சிலர் விடுவதில்லை...
நல்ல பதிவு
அட!! இதை இப்படி பதிவாக்க முடியுமா?? அருமை அண்ணா!
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்க்கம் உமையாள் காயத்திரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மனம் நினைப்பதுதானே எழுத்து(பதிவு) என்கிறார்கள் தங்களைப்போல் கற்றரிந்த பெரியவர்கள்/
உண்மை... எல்லாம் காலம் கற்றுத் தரும்...
விழுந்தால்தானே எழ முடியும்
அருமை நண்பரே
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
விழுவதைப்பற்றிக் கவலைப்பட்டால்
நடை பழகுவது கடினம் என்பதை
அழகாக உணர்த்தியுள்ளீர்கள்!
வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment