30 Nov 2014

பூச்சியண்ணன்,,,,,,

                                                       
ஊர்ந்துசெல்கிறபூச்சியின்ஊர்எதுவெனத்தெரியவில்லைஇதுநாள்வரை.இருக் கட்டுமேஎந்தஊராக வேண்டுமானாலும்/என்ன கெட்டுப்போனது இப்போது?

இவனுமாய்பார்த்துக்கொண்டுதான்வருகிறான்.அடம்பிடித்துஅழுகிறகுழந்தை யைப்போல விடாது பெய்கிற மழைஇங்குநிலை கொண்டநாட்களுக்கு சிறிது நாட்களுக்கு முன்பாய் பார்த்து வளர்ந்தபூச்சியாய்விழிப்படர்வு கொண்ட அதன் பூர்வீகம் எதுவெனத்தெரியவில்லை.எத்தனை கால்கள் அதற்கு இருக்கும் என
எண்ணி ப்பார்த்துவிடத்தோணவில்லை அல்லதுஎண்ணியதில்லை இதுநாள் வரை./

பொடிப்பொடியாய்வளர்ந்துநிற்கிறகால்களைவைத்துஅழகாகவும்மெதுவாகவும் தரை படர்ந்து ஊர்ந்து செல்கிற அது மனிதனிப்போல் குழந்தையாய்ப்பிறந்து மனிதன் என்கிற பெயர் தாங்கி நிற்பது போல் அல்லாமல் பூச்சியாய்ப்பிறந்து பூச்சியாயாகவே வாழ்ந்து பூச்சியாகவே மரணித்துப்போகிற சரித்திரம் கொண் டதாய்/

மேனியெங்கிலும்கருநிறம்பூசிக்கொண்டுவிடாது தன் நிறம் அறிவிக்கும் தார்ச் சாலையின் இடதும் வலதுமாய் வரிசை கட்டியும் இடைவெளி பாவித்து மாய் அடுக்கப்பட்டிருக்கிற வீடுகளின் ஊடாயும் அது தவிர்த்தவெற்று வெளியில் மண்கீறி முளைத்துக்கிடக்கிற செடிகளின் மீதுமாயும்,அதன் அடர்த்தி பிளந்து முளைத்துக்கிடக்கிற சீமைக்கருவேலைச் செடிகளின் மீதேறியுமாய் அதில் படந்துமாய்திரிகிற பூச்சியின் அன்றாடம் என்னவாய்இருக்கமுடியும் என்பதை யும்இந்தஇடத்தில்அறுதியிட்டுசொல்லி விட முடியவில்லைதான்.

இப்போதைக்குஇரைதேடுவதும் தனக்கான ஓரிடத்தில் போய் அடைந்து கொள் வதும் என்கிறதைத்தவிர்த்தும் வேறொன்றுமில்லை எனக்கொள்ளலாம்.

இதில்இடதிலிருந்துவலது பக்கமாயும் வலதிலிருந்து இடது பக்கமாயும், மாறி மாறிச்செல்கையில்அதனுள்ளாய்ஏற்படுகிறமாற்றம்முக்கியமெனதொகுத்துச் சொல்லத்தோணுவதாய்/

சில்லெனபூத்தசிறு நெருஞ்சிக்காடாய் அல்லாமல் மென் மழை பூத்துப் பெய் கிற வார நாட்களின் ஊடாக உருப்பெற்று வந்து விடுகிற பூச்சி எதற்கு தேடி வருகிறது சமயத்தில் என அதனிடம் போய்த்தான் கேட்க வேண்டும்.மெல்ல அருகில் சென்று நிதானமாயும் பதற்றமற்றுமாய்/இதில் அதிமுக்கியம் அதனி டம்கறார்காட்டாமலும்முகத்தைபடுஇருக்கமாய்வைத்துக்கொண்டும்ஆகவே,,,,,,,என ஆரம்பிக்காமலும்பொய் காட்டாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.நல்லதாய் நாலுவார்த்தைஅல்லதுஅதுஅற்று சாதாரணமாகவாவதுபேசிக்கொள்ள வேண் டும்.என்ன,ஏது,எப்படி, பிறப்பு,இறப்பு,,,,,,,(குலம்,கோத்திரமெல்லாம் வேண் டாம்.பூச்சியென்ற ஒற்றைச்சொல்தவிர்த்து அதன் குலம் வேறெதாய் இருந்து விட முடியும்,அப்படி குலம் கோத்திரமற்றுஇருந்து விடுவதும் நல்லதுதான் என அறுதியிட்டுமாய் சொல்லி விடத்தோணுகிறது இந்தக்கணத்தில்/)

தூக்கம் கொள்ளாமல் எழுந்து விடுகிற அதிகாலையின்ஐந்துஅல்லது நாலரை மணியின் மென் பொழுதுக்கு முன்னகர்ந்து செல்கிற வட்டமான கைட்டார்ச் லைட்டின் ஒளி உதவியுடனும் அதன் கைபிடித்துமாய் தேநீர் கடை நோக்கி நடந்து செல்கிற பொழுதுகளில் ஈரம் பூத்திருக்கிற தரை முழுவதுமாயும், சில் லென்ற குளிர்பரவியிருக்கிற வெளியெங்கிலுமாயும் தரை பாவிக் காணப்படு கிறசிறுபுற்களிலும்விடாதுஅதனுடன்ஒட்டி முளைத்துக்கிடக்கிற செடிகளிலு மாய் முன்படர்ந்துதெரிகிற பனிநீரின் துளிகள்காட்சிப்பட்டு விரியத் தெரிகிற அதிகாலையில் இந்தப்பூச்சியை ஒற்றையாய் தனித்தோ அல்லது கூட்டமாக மொத்தமாகவோ பார்க்க முடியவில்லையே,ஏன் என்கிற கேள்விக் குறியாய் நகர்கிற கணங்களில் இருக்கிற ஆசரியம் தேநீர்க்குடித்துவிட்டு வரும் போதும் அடர்த்தியானகோழிக்கூவலின்பின்புமாய்இருப்பதில்லைதான். காரணம் பூச்சி கள் அப்பொழுதுதான் ஈரம் பூத்த தரையில் ஊர்ந்து திரிய ஆரம்பிக்கிறதாய்/

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கீற பன்முகத்தத்துவம் அவைகள் விளைச் சலற்ற விளைநிலங்களின் மீது ஊர்ந்து திரியுமா என இவை என இவன் இது நாள்வரை பார்த்ததாய் ஞாபகம் இல்லை கொஞ்சம் கூட/

ஏன்அப்படிஎதற்காகஇதுஎனஇருந்தாலும்கூடஅங்குபோய்உற்றுப்பார்த்துவிடத் தான் தோணுகிறது.மனம் பிடித்தும் அது அல்லாமலுமாய்/

ஏன் அப்படி என தோணுகிற சமயங்களில் புராணங்களில் அல்லது சினிமாக் களில்வருவதுபோல அல்லாமல் அடன் உண்மை உருகொண்டு பார்த்து விடத் தோணுகிறது.

தற்பொழுதுபெய்துள்ளஅல்லதுஎங்கேனுமாய்பெய்துகொண்டிருக்கும்மழையில் மண் கீறி முளைத்தும் அடர்ந்துமாய் தெரிகிற செடிகளின் ஊடாயும் விளை நிலங்களிலுமாய் விளைந்து கிடக்கிற பயிர்ப்பச்சைகளின் ஊடுபாவாய் நெளி ந்து திரியுமா பூச்சிகள் என பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.தெரிந்து கொள்வோம் விளைச்சலாகிஇருக்கிற விளைநிலங்கள்மீதும்,அதுஅற்று வீட்டு மனைகள் ஆகிப்போன விளை நிலங்கள் மீதுமாய் நடை பயின்று/

ஊர்ந்துசெல்கிறபூச்சியின்ஊர்எதுவெனத்தெரியவில்லைஇதுநாள்வரை.இருக்கட் டுமேஎந்தஊராகவேண்டுமானாலும்/என்னகெட்டுப்போனது இப்போது? யாதும் ஊரே யாவரும் கேளீர் என இருந்துவிட்டும், முன்னறிவித்துச் செல்ல ட்டும் அதன் இருப்பை/

8 comments:

 1. ரசனையை ரசித்தேன் தோழரே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. அருமையான நடை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர்ஜி சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. யாதும் ஊரே யாவரும் கேளீர்..மனிதரைத்தவிர்த்து அனைத்து உயிரிங்களுக்கும் பொருந்தும்போல..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விச்சு சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. இயற்கையைக் கூர்ந்து நோக்கிய தீட்சண்யப் பார்வை.

  ReplyDelete
  Replies
  1. வாணக்கம் சென்னைப்பித்தன் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete