17 Dec 2014

வருடல்,,,,,,

      
            பாடுகிறபாட்டின்சப்தத்திற்குஇடைஞ்சலாய்இருக்கக்கூடாதுஎன்பதற்காக
சற்றேஉள்வாங்கிவீட்டின்வாசற்படியில்வந்துஅமர்ந்துகொள்கிறேன்.
அப்புறமாய் எனது கைபேசியில் பேசுகிறேன்.அல்லது பேசுவதற்காய் நம்பரை அழுத்துகிறேன்.சிறுகுழந்தையின்மேனி தொட்ட சந்தோசம் கிடைக்கிறது பட்டன்களை அமுக்குகிறபோது/
நம்பர்களை அழுத்தி பேசமுற்படுகிற,பேசப்போகிற எதிர்தரப்பு நபர் இந்நேரம்எங்கிருப்பார்?என்னசெய்து கொண்டிருப்பார்? பேசும் மனோ நிலையில் இருப்பாரா அல்லது,,,,,,,,,,,,,,எதுவும் தெரியவில்லை.
சிங்கநாதன்தான்போன்பண்ணியிருந்தார்.எனதுகைபேசியில்அழைப் பொலி வந்ததும் அமர்த்திவிட்டார் சிறிது நேரத்தில்/
அந்த சிறிது நேரஇடைவெளியில் நான் போய்போனைஎடுக்காதது தவறாகிப்போனது.காலம் தப்பிய முக்கிய விஷயம் போல எனது தாமதம் காட்சிப்பட்டு தெரிந்தது.
நல்ல அழகான அழைப்பாய் அது.நல்ல பாடல்களின் முதல் வரிகள் என் காதில் எட்டெடுத்துவைத்துஎன்னைதொட்டநேரம் டக்,,,,அமைந் து விட்டது சப்தம்.
நிசப்தங்களின் எதிர்பதம் சப்தம் என்கிறார்கள்.அதை கண்முன்னே கண்ட மௌன சாட்சியாக நான் கைகட்டி நின்று கொண்டு/
அலை வீசி தொட்டுச்செல்கிற மனம் பிடித்தவர்க்களின் இளம் சிரிப்பு ஒன்றுசட்டென்று காணாமல் போனது போலமின்னலாய்வந்து அமர் ந்து விட்ட அழைப்பின் குரலை யாரென அலசிப்பார்த்தபோது அட நம்ம சிங்கநாதன்தான்.
அவருக்குபோன் பண்ண வெளியில் வந்து அமர்ந்த நேரம்தான் மேற் கண்ட காட்சியின் முகப்பு விரிந்து/
வீட்டின் உள்ளே அமரமுடியவில்லை.அடுப்பு மேல் அமர்ந்திருந்தது போலவும் செங்கல் சூளையில் இருந்தது போலவுமாய் இருந்தது.
வேர்த்து வடிந்த உடலெங்கும் பரவியிருந்த கசகசப்பு கரண்ட் வேறு இல்லாததால் எரிய ஆரம்பித்தது.
ஒருடம்ளர் தண்ணீரில் இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு குடித்தால் உடல் எரிச்சல் போகும் என எங்கோ யாரோ சொன்ன தை கேட்ட ஞாபகம் நினவை உதைக்கிறது.
எப்போதாவதுஒருமுறை போனால் போகிறது என செய்து பார்க்க முடிகிறது.மற்றபடி அதையெல்லாம் கடைபிடிப்பதுஇல்லை.நல்ல பழக்கம் என/
வீட்டினுள் கிடந்த வயர் கட்டிலை வாசல் முன் போட்டு அமர்ந்தி ருந்த நேரமாய் மிதந்து வந்த பாடலின் மென்னியை பிடித்து அழுத்தி விடக்கூடாது எனவும்,அதன் வாயை பொத்தி விடக்கூடாது என்கிற நினைப்புமேலோங்கபடியில்அமர்ந்துபோன்பண்ணுகிறேன். மனதில் லாமனதுடனும்,பாடலைகேட்க முடியாமல் போய் விடுமோ என்கிற ஆதங்கத்துடனுமாய்/
நிலவு பெய்த இரவு 9 மணிப்பொழுதின் அரை ,குறையான நிசப்தம். வெப்பம் வீசிய வெம்மை காற்று.சூடாய் விரிந்திருந்த வீட்டின் முன் வெளி.வீட்டின் பக்கவாட்டு வெளியில் முளைத்துத் தெரிந்த மூன்று வேப்பமரங்கள்,இரண்டு பன்னீர் மரங்கள் மற்றும் இல்லாதிருந்த பூச்செடிகள் இவற்றுடன் வீட்டின் எதிர் சாரியில் வீடு கட்டுவதற்காய் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல், மணல், ஜல்லி,கற்கள் இவற் றைகடந்துகாட்சிப்பட்டுதெரிந்தஎல்லாவறையும்பார்த்தவாறும்அவற்
றுடன் பேசியவாறுமாய் கட்டிலை விரித்து அமர்ந்த போது பக்கத்து வீட்டுக்காரரும் அப்படியே செய்திருந்தார்.
மேற்சொன்னகாட்சிகள்யாவினாலும் பாதிக்கப்பட்ட மனிதராய் இப்ப டிவந்துநொந்துஅமர்ந்திருக்கலாம்போலகாட்சிப்பட்டஅவரதுகைபேசி
யிலிருந்தோ,FM லிருந்தோஒலித்தபாடலின்மென்னியைபிடிக்கவும்,
வாய் பொத்தவும் மனதின்றி வாசல்படியில் அமர்ந்து எனது கை பேசியில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

16 comments:

 1. வீட்டிற்கு முன் கட்டிலைப் போட்டு அமர்ந்திருப்பதுதான்
  எவ்வளவு ஆனந்தம்
  நன்றி நண்பரே
  தம 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
  2. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

   Delete
  3. பின்னிய கட்டிலின் அழகும்,அமர்வின் இதமுமாய் நகர்ந்து செல்கிற பொழுதுகள் இங்கே ரம்யம் மிக்கவையாய்/

   Delete
 2. அழகிய நயம்.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோவி சார்,
   நயம் கலந்து ஓடிச்செல்கிற வாழ்க்கை இதை காட்சிப்படுத்துகிறதுதான் பலரில்/
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 3. நல்ல பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதில்லை என சுட்டிக்காட்டிய விதம் அருமை. ரம்மியமான இரவுப்பொழுதில் நிலவு வீசும் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து செல்போன் பேசுவதை அழகாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விச்சு சார்,பேசிச்செல்கிற வார்த்தை
   பாதியும் பாடல் பாதியுமாய் பதிவாகிச்
   செல்கிற மனம் சுமந்த பொழுதுகள்
   நிறைய நிறையவாய் எல்லோரிலும்/
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 4. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. ரசனையான எழுத்து அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. நண்பரே தங்களை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன் வருகை தரவும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர்ஜி சார்,
   நன்றி வருகைக்கும்,
   வலைச்சர இணைப்பிற்குமாக/

   Delete
 7. நல்லதோர் நினைவோடை ..

  ReplyDelete