· ஹலோ,ஹாய்.நாங்க..........டீ.வியிலயிருந்து பேசுறோம்.
· வணக்கம் நல்லாயிருக்கீங்களா?
· ஓ/நல்லாயிருக்கேன்.
ஒங்க பேரு?
· ...................................../
· ஓ,ஸ்வீட் நேம்.
வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?
· நல்லாயிருக்காங்க/
· என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
· சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்/
· வெரிகுட்.என்ன சமையல்?
· தோசை சுட்டுக்கிட்டு இருக்கேன்.
· வெறும் தோசையா? ரவா தோசையா?
· வெறும் மாவு தோசைதான்/
· எத்தன சுட்டுருப்பீங்க?
· இப்பத்தான்ரெண்டாவதுதோசையஎடுத்துட்டுஸ்டவ்வ அணைக்கப்போறேன்/
· என்னது ரெண்டு தோசைதானா?ரெண்டு தோசை எப்படிக்காணும் உங்களுக்கு?
· எனக்கில்ல,ஏன் ரெண்டாவது பையனுக்கு/
· அப்ப ஒங்களுக்கெல்லாம்.....?
· அவருக்கு தோச,இட்லி எப்பவுமே ஆகாது.சோறுதான்.என்ன சாப்புட்டாலும் ஒருகை சோறு சாப்புட்டாத்தான் அவருக்கு சாப்புட்ட மாதிரி இருக்கும்.
பெரியவளுக்கு இட்லி,இப்பத்தான் ரெண்டு தட்டு வேக வச்சு யெறக்குனேன்/
· அப்ப ஒங்களுக்கு?
· எனக்குன்னு
பிடிச்சது எதுவும் இல்லன்னு ஆகிப்போச்சு,இட்லியில ரெண்டு மிஞ்சும்.தோசைய
பாதி அப்பிடியே வச்சிருவான் பையன்.அவருக்கு நான் பக்கத்துல ஒக்காந்தாத்தான்
சாப்பாடு யெறங்கும்.அப்பிடியே அதுல ரெண்டு கவளம்.எல்லாம் கலந்த
கதம்பமாத்தான் ஏன் விருப்பம் எப்பயும் விரிஞ்சிருக்கு/
· மணி ஏழரைதான் ஆகுது, அதுக்குள்ள காலை டிபனுக்கு ரெடியாயிட்டீங்களா?
· இல்ல
அதுக்குள்ள எங்க ரெடியாக.......?அவருக்கும்,பிள்ளைகளுக்குமா போட்ட
டீயிலயும்,பால்லயும் கொஞ்சம் மிச்சமிருக்கு.ரெண்டையும் கலந்து ஊத்தி கூடக்
கொஞ்சம் டீத் தூளப்போட்டு கொதிக்கவச்சி குடிக்கப்போறேன்/
· அப்படியா,இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே?
· நான் மட்டும் இல்லைங்க,நம்ம குடும்பங்கள்ல முக்காவாசி பெண்களின் நிலைமையும் இதுதாங்க/
· அப்பிடியா, ரொம்ப சந்தோசம், தினசரி காலையில எத்தனை மணிக்கு
எழுந்திருப்பீங்க?
· அதிகாலை அஞ்சு,அஞ்சேகாலுக்கு/
· அவ்வளவு சீக்கிரம் எந்திருச்சுருவீங்களா?ரொம்ப சுறுசுறுப்பா இருப்பீங்க போலிருக்கே?
· ஹீம்.....அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல.அந்நேரம் எந்திருச்சாத்தான் வீட்ல அவ்வளவு வேலைகளையும் செஞ்சி முடிக்க முடியும்/
· சபாஷ்,நல்ல பதில். அவ்வளவு வேலைன்னா எவ்வளவு வேல?
· காலையில
எந்திரிச்சதும் அடிச்சிப் புடிச்சிப்போயி பால் வாங்கீட்டு வருவேன். அப்பறம்அடுப்பபத்தவச்சிபாலவச்சிட்டு,ரோட்லவர்ரட்ராக்டர்லரெண்டுகொடம் தண்ணிபிடிக்கப்போயிருவேன்.தண்ணி புடிச்சிட்டுவந்துஅதயெறக்கி
வச்சிட்டு ஸ்டவ்வோடஇன்னொருபக்கம்சோறுவச்சிட்டுபக்கத்துல கரண்ட்
ஸ்டவ்வுல இட்லிக்கு ஊத்திவச்சிட்டுவாசலுக்குப்போயி கோலம் போடப்போயிருவேன்/
· என்னது கேஸ் ஸ்டவ்வு பக்கத்துல கரண்ட் ஸ்டவ்வா?அப்பிடி வைக்கக்
கூடாதுன்னு சொல்வாங்களே?
· என்ன
செய்யச்சொல்றீங்க?அப்பிடி வச்சாத்தான் சீக்கிரம் சமையல் முடிச்சி அவுங்கள
ஆபீசுக்கும்,புள்ளைங்கள பள்ளிக்கொடத்துக்கும் அனுப்ப முடியும்.
வாசல்ல கோலம் போட்டு முடிச்ச கையோட வந்து டீ,பாலு கலந்து பிள்ளைகளையும்,அவரையும் எழுப்பி குடுப்பேன்.அப்பிடியே நானும் ஒரு வாயி/
குடிச்சிட்டு
இருக்கும்போதே சட்னிக்கு ஓடிக்கிட்டு இருக்குற மிக்ஸிய ஒரு பார்வ
பாத்துக்கிட்டு மோட்டாரப் போட்டு டேங்குல தண்ணி யேத்தணும். இத்த ன
ஓட்டத்துக்கும் மத்தியில நான் பாத்ரூம், பல்விளக்கல் எல்லாம் முடிக்கணும்/
· ஓ......../இவ்வளவு
செரமமானதா ஒங்களோட காலை நகர்வு.அப்பிடின்னா நீங்க ஒரு இரும்பு
பெண்மணிதான்.வெரிகுட்,வெரிகுட்,,,,,ஒங்க வீட்டுக்காரரு எங்க வேலை
பாக்குறாரு?
· அவரு........................டிபார்ட்மெண்டுல வேலை பாக்குறாரு/
· புள்ளங்க என்ன படிக்குறாங்க?
· மூத்தவ காலேஜ் போறா.சின்னவன் ஏழு படிக்கிறான்.
· ரொம்ப அளவான சந்தோஷமான குடும்பம்னு சொல்லுங்க,ஆமாமாம்/நீங்க வேலை பாக்குறீங்களா?ஹௌஸ்வொய்பா.......?
· நான் ..............................டிபார்ட்மெண்டுல வேலை பாக்குறேன்/
· தப்பாநெனைக்கலைன்னாஒங்ககிட்டஒன்னுகேக்கலாமா மேடம்?
· ம்ம்ம்.......தாராளமா............../
· ஒங்கள விட ஒங்க கணவர் அதிகமா சம்பளம் வாங்குவாரா,இல்ல ஒங்க கணவர விட நீங்க சம்பளம் அதிகமா வாங்குவீங்களா?
· ம்ம்ம்........யாருஅதிகமாவாங்குனாஎன்னங்க,எல்லாம்எங்ககுடும்பத்துக்குதானே
பயன்படுது/
· பாத்தீங்களா,பாத்தீங்களா,,,,சிரிச்சு பேசி மழுப்புறீங்களே,சும்மா சொல்லுங்க, யார் வாங்குறது அதிகம்?
· நீண்ட மெளனத்திற்கும் தயக்கத்திற்கும் பின் பதில் வருகிறது.
· அவரவிட எனக்கு கொஞ்சம் சம்பளம் ஜாஸ்திதான்/
· பாத்தீங்களா,பாத்தீங்களா பேசிக்கிட்டே இருந்ததுல ஒங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு கேக்க மறந்துட்டேன்.
· கொஞ்சம் இருங்க, அடுப்புல ஏதோ தீயிற வாசம் வருது.என்னன்னு பாத்துட்டு வந்துர்ரேன்.
2 comments:
போச்சி...! மறந்தே போச்சி...!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment