வியர்வைத் துளிகள் உடலில் மின்ன உழைப்பவரைப் பார்க்கிற போது மிகவும் பிடித்துப்போகிறது.
உடலெங்கும் வரிவரியாய் இறங்கும் வியர்வையின் கோடுகளிலிருந்து எழுகி ற வாசத்திற்கும்,வலிமைக்கும் இணை வேறெதுவும் இல்லை என சொல்லத் தோணுகிறது அப்படியான காட்சிகளை கண்ணுற நேர்கையில்/
அன்றுகாலைபாலவனத்தம்toமெட்டுக்குண்டுசாலையில்பயணித்துக்கொண்டி ருந்தகாலைநேரத்தில்ஓங்கி வளர்ந்தமுட்சசெடிகளுக்குள் நின்று உருவங்கள் இரண்டு முள் வெட்டி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தது.
சடுதியில் இவைகளை கடந்து வந்து விட்ட நான் கண்ட காட்சிகளை ரீவைண் ட் செய்துபார்க்கையில் அதில் கோட்டையின் முகமும்,வீரநாகுவின் சிரிப்பும்/
ஆகா கனத்த முட்டாள்தனம் செய்து விட்டோமே,இருவரையும் பார்த்து ஒரு வார்த்தை அல்லதுஒருசின்னசிரிப்பாவது சிரித்து விட்டு வந்திருக்கலாமே?
இனி திரும்பிப்போய் பார்த்தும்,பேசியும் விட்டு வருவதற்கு எனது அலுவலக நேரம் என்னை அனுமதிக்காது.காலம் பொன்போன்றது என்கிற பேச்சுகளுக் காகவெல்லாம்இல்லாவிட்டாலும்கூடபிறகுபார்த்துக்கொள்ளலாம்எனகிளம்பி விடுகிறேன்.
இருவரும் சாலைப்பணியாளர்கள்,அன்பின் மனிதர்கள்,வாழ்க்கையின் உக்கிர த் தை தன்னில் தாங்கி வீதிகளின் அடர்ந்த புழுதியிலிருந்து துளைத் தெழுந்து வெளிவந்துதன்னைஇருத்திகொண்ட உருக்கு உள்ளங்கள்.
ஒற்றை விரலின் கனத்தால் தட்டி விடப்பட்ட அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த சங்கத்தின்துணையால்வீறுகொண்டெழுந்தும்,கைதூக்கிநிறுத்தப்பட்டுமாய் தூசிதட்டிக்கொண்டுநிற்கிறவர்கள் வெகு திடமாக.
முன்னவர்தோழர்,பின்னவர்அண்ணன்.என்னவீரநாகுண்ணே நல்லாயிருக்கீங் களா? என அவரைப்பார்த்து கேட்கையில் என்ன கோட்டைத்தோழர் எப்பிடி யிருக்கீங்க? என இவர் தோள் தொடவும் மறப்பதில்லை.
இப்படி தவறாத ,முறைபிரகாரம் நலம் விசாரிக்கிற பொழுதுகளில் என்னில் பிரியமாக உள்நுழைந்துவிட்ட இருவருமாய் இன்று இந்தப்பக்கம் வேலை செய்கிறார்கள்.
மாதாந்திர நாட்களின்நகர்வுகளில்அவர்களை எங்குபோகச்சொல்லிநிர்வாகம் பணிக்கிறதோ,அங்கு சென்றுவேலை செய்கிறார்கள்.
சாலையோரங்களில்அடர்ந்து கிடக்கிற முட்செடிகளை,அவைகளுடன் பிணை ந்து கொண்டிருக்கிற புதர்களை பள்ளம் மேடுகளை சீர்செய்தும், சாலை களில் தெரிகிற பள்ளங்களுக்கு பஞ்சர் ஒட்டுவதும்,சாலை மற்றும் சாலையோரங் களை பராமரிக்கிற பணிஅவர்களு டையதாய் இருக்கிறது.
அந்த வகையில் அவர்கள் பராமரிப் பணியாளர்களாய் உயர்ந்து தெரிகிறார்கள்.
உடலெங்கும்ஓடித்திரிகிறநரம்புகளையும்,எலும்புகளையும்,சதையையும்,ரத்தத் தையும் பராமரிக்கிற ஒரு இனிய மருத்துவராக அல்லது பராமரிப்பாளராக அவர்களது பணி இந்தசாலையிலெங்கும் நிறைந்து,பரவியும்,விரவியுமாய் தெரிகிறது.
கொஞ்சம்உள்ளீடாகநினைத்துப்பார்க்கையில்விஷயத்தின்வீரியம் புரிகிறது. அவர்கள் மட்டும்இல்லாவிட்டால்இந்நேரம்கிராமத்து சாலைகள் முள் மூடிய ல்லவா போயிருக்கும்?
சில வருடங்களுக்கு முன்பாக இதே பாலவனத்தம்toமெட்டுக்குண்டு சாலை யில்பயணித்துக்கொண்டிருந்தேன்.அந்தசாலையில்நான்சென்ற5கிலோமீட்டர் தூரமு ம் முள்ளை பிளந்துகொண்டு போனதாகவே நினைவெனக்கு.
முட்ச்செடிகளின் வளைந்த முனைகள் சாலைகளின் விளிம்புகளில் முத்தமிட் டுக்கொண்டிருந்தது.
முத்தமிட்ட முள்செடிகளின் முனைகளும், அதனூடாகஅடர்ந்துகிடக்கிறபுதர்ச் செடிகளின்தோற்றமும்,சாலையோரங்களில்ஒதுங்கவும்,பயணிக்கவும்,பயமுறு த்தும்.
அப்படிபயமுறுத்தியநாட்களினூடாகத்தான்ரோட்டின்அந்தமுனைக்கும்,இந்த முனைக்கும் சேர்த்து வைத்து தைத்தது போல் ஊர்ந்து போன பாம்பை நான் பார்த்தேன்.
கைத்தண்டியிருக்கும்.நின்று,நிதானித்து,நெளிந்துஏதேனும்அசைவு கேட் டால் கூட படமெடுத்து சீறியபடி சென்ற பாம்பை நானும் எனக்குப் பின்னால் அந்த சாலையில் பயணித்தவர்கள்சிலருமாய்சேர்ந்துநின்றுகொண்டுபார்க்கிறோம்.
வேடிக்கையாக இல்லாவிட்டாலும் கூட பயணம் தொடர வழி வேண்டி நின்று கொண்டிருக்கிறோம்.(மரியாதை காரணமாக அல்ல,உள்ளுள் உதைத்த பயம் காரணமாகவே/)அதுபோனபின்புஎங்களதுபயணத்தை தொடர்கிறோம்.
முட்செடிகளையும் புதர்களையும் பிளந்து வேலை செய்கிறீர்களே, இதுமாதி ரியான தொந்தரவுகள்வராதா எனக்கேட்டபோது “அது இல்லாத யெடத்துலயா நாமஇருக்கோம் தோழர், எல்லாத்தோடயும், எல்லாமும்தான். கலந்து போயிக் கிறவேண்டியதுதான்.வந்துக்குறவேண்டியதுதான்.”என பதில்வரும் அவரிடமி ருந்து.
இப்போது அப்படி உதைக்கிற பயமில்லை.வளைந்து வந்து ரோட்டை முத்தமி டுகிற முட்செடிகளின்,அதனூடாக அடர்ந்து கிடக்கிற புதர்களின் தொந்தரவு ஏதுமற்று பயணிக்கமுடிகிறதுஇதுமாதிரியானகிராமத்து சாலைகளில்/
முட்செடிகளும்,புதர்களும்,பள்ளம்மேடுமாய்இருந்தசாலைகளும்,பாம்புகளு ம், இதரவிஷப்பூச்சிகளும்ஊர்ந்துதிரிந்தஅதன்ஓரங்களும்இப்போதுபார்க்கவும், பயணிக்கவும் நன்றாகஇருக்கிறது.
அப்படியான பார்த்தலுக்கும்,பயணித்தலுக்கும் ஊடாக கிளைத்திருக்கிற உறவு இது. சாலைப் பராமரிப்பாளர்களால் இது சாத்தியம் கொள்கிறது.
அடர்ந்துகிடக்கிறமுட்செட்களைபிளந்தும்,அதனூடாக பிண்ணிப் பிணைந்திரு க்கிறபுதர்களினூடாகவும்,அதனுள்ளேஊர்ந்துதிரிகிறவிஷஜந்துக்களுடனும்
பேசித் திரிந்தவாறும்,சாலைகளின்மேடு,பள்ளங்களைசெப்பனிட்டவாறுமாய்
வியர்வைத்துளிகள்உடலில்மின்னஉழைப்பவர்களைப்பார்க்கமிகவும்பிடித்துப் போகிறது.
(சமர்பணம்: பார்த்த கணத்தில் இந்தபதிவைஎழுதத் தோணியதோழர்கோட்டை அவர்களுக்கும்,அண்ணன் வீரநாகு அவர்களுக்கும்/ )
(சமர்பணம்: பார்த்த கணத்தில் இந்தபதிவைஎழுதத் தோணியதோழர்கோட்டை அவர்களுக்கும்,அண்ணன் வீரநாகு அவர்களுக்கும்/ )
9 comments:
இது ஒரு பயணம்தான் என்றாலும் பொழப்புக்காக மேற்கொள்ளும் கடினமான பயணம்தானே..!
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
தம 1
பயணம் பயத்துடன்...
மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வணக்க்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
அருமை அண்ணா.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/
Post a Comment