18 Jan 2015

வேற்றுச்சொல்,,,,

 அது ஒரு கோழிக்கறிக்கடை.,,,,,,,,,,பிராய்லர்ஸ் என்கிறதான ஒரு பிளக்ஸ் போர்டு தாங்கி புத்தம் புதியதாய் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்த மாமிச சூழ் உலகமாய்/

பூக்கடைக்கு எதற்கு விளம்பரம் என்கிற சொல் உதிர்வைபழையதாக்கிவிட்டு தலை கீழாய்க்கட்டி தொங்க விடப்பட்டிருக்கிற மாமிச கடைகளுக்கும் தேவை விளம்பரம் என்கிறதான் புது அர்த்தம், தாங்கி எழுத்துக்கள் மின்னித்தெரிய அதில்அள்ளித்தெளிக்கப்பட்டிருந்தசந்தனமும்,குங்குமமுமாய்தன்னை அடை யாளம்காட்டிகொண்டிருந்தபோர்ட்பார்க்கநன்றாகவேஇருந்தது.புதுக்கருக்குக் கலை யாத புது மணப்பெண்ணைப்போல/

பூக்களும்இலைகளுமாய்வெடித்துச்சிரிக்கிறமரங்களுக்கிடையேயாய்நடந்தும், கடந்துமாய்வந்துவிட்டபளிச்சிடல்/மண்ணைப்பிளந்துகருநிறமாய்காட்சிப்பட்ட சாலையின் இரு மருங்கிலுமாய் வலது ஓரம் எனது, இடது ஓரம் நான்தான் எனமுன்னறிவிப்புஏதும் செய்யாமல் கட்டிக்கிடந்த புழுதியில் இடது ஓரமாய் வரிசை கட்டி நின்ற காம்ளக்ஸ் கடை ஒன்றின் நீட்சியாய் பந்தல் இழுத்துப் போடப்பட்டு தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்த கடை நன்றாக இருந்தால் திறந்து ஒரு வாரமே இருக்கலாம் போல் இருந்தது.

உரிக்கப்பட்டகோழிகள்இரண்டும்,உயிருடனாய்கம்பிவலையில்அடைக்கப்பட்
டிருந்தகோழிகள்நான்கும்வெட்டுப்பலகைஒன்றும்வெட்டுக்கத்திகள்இரண்டு
மாய் இருந்த கடை இளைஞர்கள் நால்வரை சுமந்து அடையாளம் கொண்டி ருந்தது.

பேன்ஸி ஸ்டோர்க்கடையை முதலாவதாகவும்,லேடீஸ் டெய்லர் கடையை இரண்டாவதாகவும்,செல்போன்ரீசார்ஜ்அண்ட்ரிப்பேர்கடையைமூன்றாவதாவும், பிரவ்ஸிங் சென்டரை நான்காவதாயும் சுமந்து காட்சிப்பட்ட அந்த காம்ளக்ஸ் ஐந்தாவதுகடையாய்அவர்கள்நால்வரும்குடிகொண்டிருந்தகடையைஅடை
யாளப் படுத்தியது.

இளைஞர்கள்நால்வரும் நானூறு விதமான கருத்துக்களை கொண்டிருந்த போதும் நான்கு ஜோடி கண்களையும் நான்கு ஜோடிக்கைகளையும் ஒருமித்த மனதையுமாய்ஒற்றைநூலில்சேர்த்திணைத்துகட்டிஉழைத்துக்கொண்டிருந்தனர். அங்குதான்சென்றிருந் தான் கோழிக்கறி எடுக்க வேண்டி/

தீபாவளியன்று பொங்கல் சாப்பிடலாம், ஆனால் பொங்கலன்று ,,,,,,,,,,,,,என யாரோ ஒருவர் சொன்ன கேலியை விட பொங்கலன்று கோழி சாப்பிடலாம் என்கிற முடிவுடன் செய்து கொண்ட சமரசம்தான் கையில் வயர்க் கூடை யுடனும் பையில் பணத்துடனுமாய் இங்கு வர வைத்திருக்கிறது/

இங்கு வரும் முன்பாய் கடைக்குச்சென்றிருந்தான் டீசாப்பிட,டீ சாப்பிடுவது என்பது பெரிய விஷயமா என்ன டீ தானே இதற்குப் போய் என்கிற வெற்றுச் சொல்லாடல்இவனுக்குச்செல்லாது,ஏனெனில்இவன்டீசாப்பிடுவதற்குமுன்பா ய் ஒருடீசாப்பிடுவான்டீசாப்பிடும்போதுஒருடீசாப்பிடுவான். பின்டீ சாப் பிட்டு முடித்த பின்னாய்ஒருடீசாப்பிடுவான். ஆகவே,,,,,,,,,, இவன் வரையிலும் டீயை ஒரு பாடு பொருளல்லாததாய் விலக்கி வைக்க முடியாதுதான்.

”மெயின்ரோட்டுலஇருக்குறகடையில்மொழையயெடமில்ல”,என்றார்கடையில் டீசாப்பிட்டிக்கொண்டிருந்தஒருவர்.அவ்வளவுகூட்டம்,மொறப்படிபாத்தாஇன்
னைக்கிகறிஎடுக்குறநாளேகெடையாது.கிராமங்கள்லயெல்லாம்நாளைக்கித்
தான் கறி புளிபொழக்கம்/இன்னைக்கிப்போயிஎடுத்துத் திங்கிறதுமகாப்பாவம். சொன்னம்ன்னா ஓட்டல்லஎன்னவெள்ளிக்கெழம கறி புளிபொழங்காமயா இருக்காங்கன்னுபதில்பேசுவாங்க/இதுக்குஎன்னசெய்யச்சொல்றீங்க,இதுக்குத் தான் யார்ட்டயும் எதுவும்சொல்றதில்ல.என்னாத்துக்குநம்மளப் புடிச்சவம்பு ன்னு,,,,,என்றவரையும்அவரின் வார்த்தையை ஆமோதிப்பர்களையும் சேர்த்தெ டுத்துஒருமுகமாய்பார்த்துக்கொண்டிருந்தவேளைதானாய்வந்துகைகோர்த்துச் சேர்ந் த ஞாபகத்தை தவிர்க்க முடியவில்லைதான்.

இன்றிலிருந்துஒருவாரம்முன்பாகவோஅல்லதுபத்துநாட்களுக்குமுன்பாகவோ என நினைக்கிறான். அதிகாலையின் ஐந்தரை மணிக்கு அலாரம் ஏதும் வைக் காமல் வந்து விட்ட முழிப்பை முகம் கழுவி ஏற்றுக்கொண்டு டீக்கடை வந்து நின்ற போது மீசையை முகத்திலும்,ஆசையை மனத்திலுமாய் அரும்ப விட்டி ருந்தஇளந்தாரிகள்ஐந்துபேர் டீக்குடித்துக்கொண்டே கைகோர்த்த கேள்வி  இதுவாய்த்தான் இருந்தது.

”என்ன சார்,சாமிகும்புடாதநீங்க கோயிலு க்குநன்கொடைகேட்டு வந்தப்ப ரூவாகுடுத்தீங்கநல்லதொருதொகையா,திடீர்ன்னுசாமி நம்பிக்கையா,,,,, எனக் கேட்ட போதுஇல்லை இளைஞர்களே அப்படியில்லை அதற்கு அர்த்தம், நான்கைந்து பேர் விரதம் பூண்டதுபோல் ஒருவேலையில்சிரத்தையும், கவன மும் கொண்டு அதை முழுதாய் முடிக்க உடலளவிலும் மனதளவிலும் பாடு கொண்டு வீடு வீடாய் வருகிற போது இந்த உதவிகூட செய்யா விட்டால் நான் உங்களை நிந்திப்பவனாகவும் நீங்கள் முன்னெடுத்துச் செய்கிற வேலையை மனதளவில் புறக்கணிப்பவனாயும் ஆகிப்போகிறேன். ஆகவேதான் அப்படி/

என்னைப்பொறுத்தளவில் நீங்கள் செய்கிற வேலையும் சாமிகும்புடுகிற நீங்களும் கூட சாமிதான் எனக்கு.தவிர நான் சாமி நம்பிக்கை அற்றவன் அல்ல என்கிற பேச்சுடனுமாய் குடித்த டீக்கு காசு கொடுத்து விட்டு நாவின் சுவை யறும்புகளில் டீயின்தித்திப்பு படர்ந்துநிற்ககிளம்புகிறான்.தேவாமிர்தம்என்பது இதுதானோ?வெளுத்த வானம் வெளிச்சத்தை அள்ளி இறைத்திருந்த வேளை இவன் வீடு வந்து சேர்ந்திருந்தான்.

அன்றுமலர்ந்தஎண்ணங்கள் சுமந்து இப்படி கறிகடை முன்பாய் வந்து கறிக்குச் சொல்லிவிட்டு கைகட்டி நிற்பதும் நன்றாகத்தான் இருக்கிறது, 
 

                                                                                                                           தொடரும்,,,,,,,

13 comments:

விச்சு said...

பொங்கலன்று கோழி சாப்பிடலாம். அட..! இது நல்லாயிருக்கே..

திண்டுக்கல் தனபாலன் said...

செய்யும் தொழிலே தெய்வம்...?!

Kasthuri Rengan said...

நல்லதோர் நினைவலை..
காட்சிப் படுத்திய விதம் உங்கள் தோள்பக்கம் இருந்து நகரும் காமிராவில்பார்த்த மாதிரி இருக்கு த ம +

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

balaamagi said...

பொங்கல் கோழி நல்லா இருக்கே. அருமை.பொங்கல் வாழ்த்துகள்,

'பரிவை' சே.குமார் said...

அருமையான எழுத்து நடை அண்ணா....
காட்சிகள் கண் முன்னே விரிகின்றன...
தொடருங்கள்.

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே.... வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

yathavan64@gmail.com said...

தங்களது சிறுகதைகள் யாவும்
சிந்தையை தூண்டும்
விந்தைதான் அழகு!

நன்றியுடன்,
புதுவை வேலு

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/