தப்படி,,,,,,,
காற்றடி காலம் என்பதால் இலைகளின் உதிர்வு அதிகமாய் உள்ளது போலும்..
பிரஷ்ஷைவலதுகையிலும் ,பல்பொடியை இடது கையிலுமாய் தட்டி வைத்துக் கொண்டுஏணிப்படியோரம் நிற்கையில்தான்தோணுகிறது. ஏணிப்படிகளையும் மொட்டை மாடியையும் கூட்டிவிடலாம் என/
சதுரச்செங்கல் மின்னிய மொட்டை மாடியின் தரைப்பகுதியெங்கும் சிதறிக்கிடந்தஇலைகள்புங்கமரத்திதும்,வேப்பமரத்திதுமாய்இருந்தன.
நேற்றுகாலையிலேயே பார்த்துவிட்டேன்.ஏதோ வேலை அல்லது நேரமின்மைக்காரணம்.நினைத்திருந்தவேலைதட்டிப்போய்விட்டது. இத்தனைக்கும்நேற்று லீவு நாள்தான்.முழுநீள லீவு நாள்என்ற போதி லும்கூட.
ஏதோ பிறண்டு விட்ட அல்லது பொறுப்பற்ற தனத்தின் விளைவோ என்னவோ நேற்று மனதில் சூழ்க்கொண்ட அந்த வேலையை இன்று முடிக்கலாம் என விளக்குமாரை கையிலெடுத்துக்கொண்டு ஆயத்த மாகி விடுகிறேன். ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,என தனது நெற்றியில் ரோஸ்க் கலரை பூசிக்கொண்டுசிரித்தபடிக்கட்டுகள் பதினைந்தைக் கடந்துமேலேறுகிறேன்.வழக்கமில்லாதவழக்கமாய்இன்றுஅதிகாலை நான்கு மணிக்கு வந்து விட்ட விழிப்பு ஒரு மணி நேரம் கழித்துக் கொண்டு போய் நிறுத்திய இடம்பெரியவரின்டீக்கடையாகஇருந்தது.
விழிப்பு கொள்ள வைத்து விடுகிற அதிகாலைகள் நேர்கோடிடும் இடம் பெரும்பாலான நாட்களில் அந்த டீக்கடையாகவே இருந்துள் ளது. “சீக்கிரம்தான் எழுந்து விட்டீர்களே, அப்படியே பாலை வாங்கி வந்து விடுங்கள்”,என்கிற மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டவ னாய் தூக்குச் சட்டியை தூக்கிகொண்டு கிளம்பி விடுவான்.அது ஒரு மனோ நிலை.சில நேரம் பால் வாங்கச் சொல்லும் மனைவியை எரிச்சல் மிக பார்க்க வேண்டி இருக்கும். அவளும் புரிந்து கொள்வாள் அல்லது அவளே போய் வாங்கிவந்து விடுவதும் உண்டு. ”இந்நேரம் பெண்கள் அதிகமாகநிற்பார்கள்பால்வாங்க,நான்போய்அங்கு நிற்பது தர்மசங்கடமாய் இருக்கும்,ஆகவே நீயே போய் வாங்கி வந்து விடு” என்பதுவே அவனது சொல்லின் சுருக்கமாய் இருக்கும்.
பெருத்த தொந்தி மீது போர்த்தப்பட்டிருந்த ப்ரெளன்க்கலர் பனியனும் வெள்லைக்கலர் வேஷ்டியுமாக நின்றஅவர் என் தலையைப் பார்த் ததும்டீயை ஆற்றி விடுகிறார்.
எத்தனை பேர் வந்த போதும்சரி.அந்தஅரைலிட்டர் படியில்ஆற்றிய டீயை கேஸ் அடுப்பின் இரண்டாவது பர்னரில்சுடவைத்து விடுவார். மிதமான சூட்டுடன் பக்கத்தில் முதல் பர்னரில் வெந்து கொண்டிருக் கிறஈயச்சட்டியில்நுரைத்துக்கொண்டிருக்கிறபால்அரைலிட்டருக்கு ள் ளிருக்கிற டீயைப் பார்த்து கண் சிமிட்டும்.
பாட்டிலினுள்அடைப்பட்டுக்கிடக்கிறகடலைமிட்டாய்,முறுக்கு,மற்ற மிட்டாய்வகைகள்அவரின்தலைமீதுதொங்குகிறபாக்குகள்அடுக்கப்பட்டி ருக்கிற சிகரெட் பாக்கெட்டுகள் எல்லாம்சேர்த்துஅதைடீக்கடை என உருவகப்படுத்திஅடையாளம்காட்டிவிடும்.வெகுமுக்கியமாய் பால்ச் சட்டியிலிருந்து வருகிற ஆவியையும் சேர்த்து/
டீக்கிளாஸைகையில்வாங்கும்போதுதான்கவனிக்கிறேன்.கடையின் நடையிலிருந்த பக்கவாட்டுச்சுவரில் இங்கு சிறந்த முறையிலும், குறைந்த செலவிலும் UBS வேலைகள் செய்து தரப்படும் என எழுதப் பட்டிருந்தவாக்கியங்களின்கீழ்எலெக்ட்ரீசியனின் பெயரும் அவரது போன்நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.பத்திலக்க எண்னை திரும்பத் திரும்ப மூன்று முறை படித்ததில் ஈஸியாய்மனப்பாடம்ஆகிப்போன து.
கடந்தமூன்றுமாதங்களாய்வேகம் குறைந்து ஒரே வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறமின்விசிறியைரிப்பேர்ப்பார்க்கவும்,போஸ்ட்மரத்திலிரு ந்து வீட்டுக்கு வருகிற மின் வயர்கள் மூன்றில் ஒன்று பிரிந்து தொங் குகிறதை சரிசெய்யவும் ரொம்பநாட்களாய்ஆள் தேடிக் கொண்டிருந் தான்.வருகிறேன்எனச்சொல்லியஎலெக்ட்ரீஷியன்வேறுவேலைஇருப்
பதாகசொல்லிச் சென்றுவிட்டார்.
இப்போதுஇந்தநம்பர்மிகவும்உதவும்போலத்தெரிகிறது.அந்த வேலை க்கு. டீக்கடைக் காரரிடம் அந்த நம்பருக்கு உரியவர் யார், எங்கிருக்கி றார்?என கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறேன்.வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் டீக்கடைசுவரில் தெரிந்த நம்பர்களை மனதில் கொண்டுநம்பர்களைஅழுத்தியபோதுஎதிர்முனையில்எலெக்ட்ரீசியன் சொன்னார். ”இதோ வந்து விடுகிறேன் அரை மணி அல்லது முக்கால் மணியில்”/ என்கிற பேச்சுடன் துண்டிக்கப்பட்ட போன் பேச்சை மன தில் தாங்கியவனாக பலபொடியும்,பிரஷ்சுமாய் படியோரம் நிற்கி றேன்.
கடைசிப்படித் தொட்டதும் விரிந்த மாடிவெளி இலைகளை அதன் மாரில் போட்டு தாலாட்டியவாறாய் காட்சிபடுகிறது. மாடியின் கைபிடிச்சுவரின்நான்கு மூலைகளிலுமாய் காற்றால் குவிக்கப்பட்டி ருந்தஇலைகளும் மாடிப்பரப்பெங்குமாய் சிதறி விரிந்திருந்த இலைக ளுமாய்என்னைப்பார்த்துசிரித்த போது நான் கையிலிருந்த விளக்கு மாரை தரை பதிக்க ஆரம்பிக்கிறவனாய்/
நான்கைந்துதடவைகள்தான்கூட்டியிருப்பேன்.பாட்டுக்கேட்பதற்காய் கையில்கொண்டுபோனசெல்போன்மெல்லச்சிணுங்கஆரம்பிக்கிறது. எடுத்துகாதுகொடுத்தபோது எலெக்ட்ரீசியனே தான்.
”வந்து விட்டேன்.உங்களது வீடு இருக்கிற இடம் நோக்கி,நீங்கள் அடையாளம் சொன்ன இடத்தில்நிற்கிறேன்.என/
கையிலிருந்தவிளக்குமாரையும்,கூட்டியகுப்பையையும்,சட்டையணி யாத எனது வெற்று மேனியில் விழுந்து இதப்படுத்திய வெயிலை யும், சற்றேபுறம்தள்ளியவனாகவும்அல்லது அப்படியே விட்டு விட்ட வனாகவும் செல்கிறேன், அவர் நிற்பதாய்சொன்னஇடம் நோக்கி/
ரொம்பவுமெல்லாம் இல்லை.எனது வீட்டிலிருந்து சிலமீட்டர் தூரத் தில்நின்றிருந்தஅவருக்குகையசைத்தவாறேபடிகளில்இறங்கிவருகி றேன். அவர் நின்றிருந்த இடம் கார்மேகம் டெய்லர் குடியிருந்த சந்து
அந்த சந்துதான் எனது மற்றும் நான் குடியிருந்த தெருக்காரர்கள் அனைவருக்குமானபாதையாய்இருந்தது.எங்கள்அனைவருக்குமான பாதையும் வழியும் அதுவல்ல. சொல்லப்போனால் அது எங்கள் தெரு முட்டுச்சந்து.எங்களது தெருவின் கடைசிவீடு வரை சென்று விட்டு வந்த வழியேதான் திரும்பவேண்டும்.
ஆனால் எங்களது கடந்த வீதியில்தான் அந்த சந்து இருந்தது.அந்த சந்தில் இருக்கிற முதல் வீட்டுக்காரர் நினைத்தால் இப்பொழுது கூட சந்தை சுவர் வைத்து எழுப்பி மறைத்து விடலாம்.ஆனால் அவரின் விசாலமனதோ அல்லது அவரிடம் சுவர் எடுக்க காசில்லையோ தெரியவில்லை.அப்படியேவிட்டு விட்டார். அதுவே தற்பொழுதான் எங்களின் நடைபாதையாகிப்போனது.
“இதுஎதுக்குமில்லுக்காரருவீடுன்னுசொன்னாலேவந்துருப்பேன்ல”,
என்றார். தரையில் கிடந்த சின்னக்கல் ஒன்றை எத்தியவாறே/
“பரவாயில்ல,இப்பஎன்னஅதுக்குவாங்க,நான்எலெக்ட்ரீசியன்னாயாரோ
வந்துநிப்பாரு---ன்னுபாத்தாநீங்கவந்துநிக்குறீங்க,நீங்கநம்மாளுல்ல ,,அப்புறம்பால்யேவாரமெல்லாம்எப்பிடியிருக்குஇப்ப?,,என்றஎன்னை ஏறிட்ட எலெக்ட்ரீசியனின் ஒரிஜினல் முகம் பால்க்காரர் என்பதே / பால்க்காரர்,பால்க்காரர், .,,,,,என பலரால் பெயரானவர் நான் பார்த்த நாளிலிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.மெயின் ரோட்டிலி ருக்கிற கல்யாண விநாயகர் பால்ப்பண்ணையிலிருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பால் வாங்கி வந்து ஊற்றுவார்.
அல்லிதெரு,முல்லைத்தெருமல்லிக்கிட்டங்கிதெரு,நாராயணா நகர், விவேகாந்தா காலனி ,எம்ஜியார்நகர்,,,,,, இன்னும் சிலதெருக்க ளுக்கு ஊற்றுகிறபால்தான்காலையும் மாலையும் காபியும், டீயும், மோரும் தயிருமாய் இருந்தது.
வந்தவர்காலைதாங்கித்தாங்கிவருகிறார்.ரத்தக்கட்டுஎனவும் சென்ற வாரம் சைக்கிளில் இருந்து விழுந்து விட்டதாகவும் சொன்ன அவர், அவ்வளவுகனமானகேன்வைத்துபால் வியாபாரம் செய்த நாட்களில் கூடசைக்கிள்ஒருதப்படிஅக்கம்,பக்கம்சென்றதில்லை.ஆனால்எலெக் ட்ரீசியனாய் திருப்புளி பிடித்த பிறகு சைக்கிள் தடுமாற ஆரம்பிக்கி றது என்றார்.
இடது கால் பாதமது,வீக்கம் கண்டிருந்த பகுதியில்சுண்ணாம்பு தடவி காயவிட்டிருந்தார்.சீனியும்,சுண்ணாம்பும்கலந்துபோட்டபத்துஎன்றார். ரொம்பவும்தான்காலைத்தாங்கினார்.இப்படிகாலைத்தாங்குறவரிடம் எப்படி வேலை சொல்ல என்கிற எண்ணம்வராமல்இல்லைஎன்னில்/
வீட்டினுள் வந்தவர் டேபிள் கேட்டார். நான் ஸ்டூல்தான் இருக்கிறது என எடுத்துக் கொடுக்கிறேன். மின் விசிறியை கழற்றிப்பார்த்தவர் ”கண்டன்சர்”போயிருக்கிறது, புதுசாகத்தான் வாங்கிப் பொருத்த வேண்டும் எனவும் இப்பொழுதே போய் வாங்கி வந்து விடுங்கள், கையோடு மாற்றி விடலாம் என்கிறார்.நான் கடை இருக்குமா இந் நேரம் என பதிலுக்கு கேட்டவுடன் இருங்கள் வருகிறேன் என தனது பையிலிருந்துஒன்றைஎடுத்துகொண்டுவந்துமாட்டுகிறார்,புதுசுதான், வாங்கினேன் தேவையில்லாமல் போய்விட்டது என்றவாறு வந்து மாட்டுகிறார்.
மாட்டிய பொருளுக்கு 35 ரூபாய்.தனக்குக் கூலியாக நீங்கள் பார்த்து ஏதாவது கொடுங்கள் என்கிறார்.
எனக்கு கூலியின் நிதானம் தெரியவில்லை.என்னிடம்சில்லைறை ரூபாய்களும் இல்லை. மனைவியைக்கூப்பிட்டு நூறு ரூபாய் வாங் கிக் கொடுத்தேன்.இன்னும் குறைத்துக் கொடுத்திருக்கலாமோ என் கிற எண்ணத்துடன்/
ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பும் போது அவரிடம் கேட்கிறேன். எப்பிடி காலையில பால் ஊத்தீட்டு மத்த நேரத்துல இந்த வேலையப் பாத்துக்கிறதா/எனக்கேட்ட போது இல்ல சார்,இப்ப பால் ஊத்தல யில்ல,அத வுட்டு ஒரு வருசம் ஆச்சு,இப்ப எலெக்ரிக்கல் வேலௌ யும்,பிளம்பிங் வேலயும்தான் முழுசா,என்றவரிடம்,,,,போன மாசம் பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லைன்னு டாக்டருகிட்ட கூட்டீட்டு வந்தீங்களே, எப்பிடியிருக்கா? என்கிறேன்.
“நல்லாயிருக்காசார்.பத்தாம்வகுப்போடபடிப்பநிறுத்தீட்டேன்,மாப்புள
பாத்துக்கிட்டிருக்கேன் என கிளம்புகிறார்/
2 comments:
படிப்பு முக்கியம் என்று இப்போது தெரியாது...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment