28 Jan 2015

டிக்காக்சன்,,,,


ஒருசிங்கிள்டீக்குநாக்கைஇப்படியாஅடகுவைப்பது?“வயிறுநெறைய அல்சர வச்சிக்கிட்டு இப்பிடியா டீ,டீன்னு உசுரவிடுவீங்க”என்கிறாள் மனைவி.
செய்யக்கூடாது என நினைத்து செய்து விடுகிற காரியங்களில் டீக் குடிப்பது முதன்மையாகிப் போகிறது.
நாலு இஞ்ச் உயரமும்,மூன்று இஞ்ச் அகலமுமாய் தன் வாய் அளவு கொண்ட கண்ணாடி கிளாஸில் இருக்கிற கலங்கலான ப்ரவுன் கலர் திரவத்தை குடிக்க இவ்வளவு ஆரவமா?
இரு சக்கரவாகனத்தில் ஏர் செக்ப் பண்ணி ரொம்பவும்தான் நாளாகிப் போகிறதென அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த இன்று பின் மாலைப்பொழுதில் காற்று அடித்துக்கொண்டிருந்த சைக் கிள் கடைக்குப்பக்கத்தில் அதே வரிசையில் அழகாக ஒரு டீக்கடை.
அதென்ன அழகாக? நாவின் சுவையரும்புகள் மீது டீயின் மிடறு பட்டு உள்ளேஇறங்குகையில் இருக்குற சுவைக்கு மயங்கியப்போகிற அல் லதுமனம்பறிகொடுத்துவிடுகிறதருணங்களிலெல்லாம்இப்படித்தான் சொல்லத் தோணிவிடுகிறது. டீக்கடைகள் அழகென.
அதுவும் என்னை மாதிரி டீப் பைத்தியங்களுக்கு,,,,,,,காலை,மதியம் மாலை இரவு எந்த வேளை என கணக்கில்லை.
டீயின்எண்ணிகையும்,அதற்காகஆகும்செலவும்மிகவும்கூடுதலாகிப் போனது. அதை தவிர்க்க நினைக்கிற நேரத்தில்தான் இன்னும் கொஞ் சம் கூடுதலாகிப்போகிற கொடுமை.
அதுஅப்படித்தான்எதுஒன்றைதவிர்க்கநினைக்கிறோமோஅதைமனம்சதா நினைத்து,,,,,இப்படிஆகிவிடுகிறஆபத்துக்கள்நிகழ்ந்துபோகும்என்கிறார் ஹோமி யோபதி மருத்துவர் ஒருவர்.நல்ல மருத்துவர்.
டீக்காக ஆகும் செவைக் குறைத்தால் வீட்டில் மாதாந்திர செலவின ங்களில் ஒன்றை சரிக்கட்டி விடலாம்.
40பின்னாலும்,25 முன்னாலும் காற்று அடித்து விட்டேன் எனக்கூறிய சைக்கிள் கடைக்காரிடம் மீதி சில்லறை வாங்கிக்கொண்டு அவரிடம் சொல்லி விட்டு டீக்கடை நோக்கி நகர்கிறேன்.
டீ சொல்லிவிட்டு கடையை ஏறிட்டால் கடையில்பலசரக்கும்,அழகு சாதனப்பொருட்களும் தவிர்த்து மற்றதெல்லாம் காணப்பட்டதாக/
ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டிலிருந்து 25 ரூபாய்க்கு விற்கிற பா தாம் மில்க்வரை இருந்தது.
வடையில்ஒருநான்கைந்துவகைகள்,பஜ்ஜியில்இரண்டுவகை,சோமாஸ்,
பால்பன்,பேல்பூரி,கடலைமிட்டாய்,முறுக்கு,சேவு,மிக்சர்,நெய்க்கடலை,
பீடி,சிகரெட்,பான்பராக்,,,(அதுஇல்லையென்றால்கடையேஇல்லை.) கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வைத்திருந்தார்கள்.
கடையில்முன்னாலிருந்தடீப்பட்டறையில்ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,காபித் தூள் பாக்கெட் என வரிசையாக தொங்கியது.
அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே நல்ல அலுப்பு.பணிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிற அலுவலகத்திற்கு இன்று இரண்டு முறை போய் திரும்பி வந்ததில் உடல் அலுப்பை அப்பிக்கொண்டு/
அது தவிர இன்று காலை நான்கு மணிக்கே முழிப்புதட்டி விட்டது.
தூக்கம் கப்பிய கண்களும், அலுப்பு அப்பிய உடலுடனுமாக வந்து எனக்கு ஒரு டீ சாப்பிட்டால் ஆயாச போய் விடும் எனத் தோன்றிய எண்ணம் கூட இங்கு கைகாட்டி இருக்கலாம்.
“வாங்க நல்லாயிருக்கீங்களா?”என முதுகுக்குப்பின்னால் கேட்ட சப்தத்தை இழுத்துப்பிடித்து திரும்பிப்பார்த்தால் அட நம்ம ஸ்டேட் பேங்க் நண்பர்.
நீண்ட கால பழக்கம்,மனம் தொட்ட அளவில் இல்லையென்றாலும் கூடபார்த்துக்கொள்கிறபேசிக்கொள்கிறஇடங்களிலெல்லாம்மனதையும்,
நட்பையும்பரிமாறிக்கொள்கிற அளவு என்கிற வரையறையில் இருப் ப வர்.பரஸ்பரம்பேசிசிரித்துக்கொண்டிருக்கிற வேளையில் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
டோக்கன்களைக்கொடுத்துடீயையும்,காபியையும்வாங்கிக்கொண்டிருந்
தார்கள்.மாஸ்டரால் டீஆற்றிமுடியவில்லை.கல்லாவில் இருப்பவ ரால் காசு வாங்கிப்போட்டு மாளவில்லை.
“சாய்ங்காலம் ஒரு மணிநேரத்திற்கு இப்படித்தான் இருக்கும். தவிர இந்த ஏரியாவில் எங்கும் டீக்கடை கிடையாது,இங்கிட்டு பாண்டிய காலனிபோகவேண்டும்.அங்கிட்டுகௌவர்மெண்ட்ஆஸ்பத்திரிபோக வேண்டும்,ருசியும் ஒருகாரணம்.” டீசாப்பிட்டுக்கொண்டும்பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டுமாய் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் மனம் விட்டுபேசுபவர்களாகவும்,பரிமாறிக்கொள்பவர்களாகவும்/
பள்ளிக்கல்லூரிசேர்க்கை,கட்டணம்,வீட்டுப்பாடு,அலுவலகம், வெளி உலகம், நட்பு,தோழமை எனஇழுபட்டது அவர்களது பேச்சு அந்நேரம் அவசரமாக வந்து டீசொல்லிய ஒருவர் “சீக்கிரம் போடுங்க,ப்ரெண்ட் ஒருத்தன்காத்துக்கிட்டுஇருக்கான்,அவனப்பாக்கபோகணும்என்கிறா ர். டீக்கடைகள்எப்போதும்,மனிதக்கூட்டங்களைதன்மாரிலும்,தோளி லுமாய் சுமந்து கொண்டும்,அவர்களுக்குள் உள்ளானநெசவைநெய்து கொண்டும்,தக்கவைத்துக் கொண்டுமாய்/

9 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான விவரணம்...எங்களின் நினைவையும் தூண்டி விட்டது. ஏனென்றால் நாங்களும் டீ குடிப்பது வழக்கம் தோன்றும் போதெல்லாம்...பழகி விட்டது...குறைத்துக் கொள்ள முயற்சியும் ஒரு புறம்....

ஸ்ரீராம். said...

காஃபியை ரசித்துதான் பதிவுகள் படித்திருக்கிறேன். டீக்கு இப்படி ஒரு ரசிகரா? அட!

ஸ்ரீராம். said...

காஃபியை ரசித்துதான் பதிவுகள் படித்திருக்கிறேன். டீக்கு இப்படி ஒரு ரசிகரா? அட!

சென்னை பித்தன் said...

கண்முன் வந்து நிற்கிறது டீக்கடை

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ ராம் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ ராம் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ டீ சுவைத்துக் கொண்டே வாசிக்கிறேன்...