2 Jan 2015

பாவு,,,,,

        
கண்டகனவின்பரிமாணம்எட்டுதிக்கும்நீட்சிபெற்றுநெசவோடித்தெரி வதாக/
நான்,அவன்மற்றும்இன்னும்சிலருமாகஅமர்ந்திருந்தோம்.புற்கள்பூத் திருக்க,செடிகள் முளைத்திருக்க நெடித்தோங்கி நின்ற முள் மரங்கள் மற்றும் சிலவுமாய் காற்றில் உடலைசைத்துஆடிக் கொண்டிருக்க ,,,,,,இவைகளின்ஊடாகவும்,அவைகளைஉரசியவாறுமாய்பறந்துதிரிந் த பட்டாம் பூச்சிகளும்,தரையில் ஊர்ந்த இன்ன பிறவுமாய் தரையில் செடிகளினூடாகவும்அதன்உதிர்ந்தஇலைகளினடிநிழலிலுமாய்ஒதுங் கி ஊர்ந்து கொண்டிருந்த புழு,பூச்சி,எறும்புகளை நலம் விசாரித்தவா றும் அவைகளை நோக்கிநேசமுடன்சிறகசைத்தவாறும், மரங்களின், பூக்களின்செடிகளின்இலையுதிர்வும்,தலையசைவும்எங்களைநோக்கி  இருந்ததாகவும்,எங்களைப்பார்த்து சிரித்ததாகவும்/
ஹாய்நலமாநலம்தான்சாப்டீர்களாசாப்பிட்டோம்தரையிலிருந்தபுரதங்
களே எங்களுக்கு சிறப்புணவு/
குளித்தீர்களா?நேற்றுபெய்தமழையில்தான்குளித்துத்தீர்த்தோம்.இன் றுமழைவரும்போலதெரிகிறது.வந்தால்திரும்பவும்குளிப்போம்ஆசை தீர/மிதமானது முதல் பலமானது வரை என்ன கொஞ்சம் ஜலதோசம் பிடிக்கும்.ஆகவே வர்ண பகவானிடம் சொல்லி மழைக்கு லீவு விடச் சொல்லவேண்டும்.நாங்களும் விண்ணப்பிக்கிறோம்.
முடிந்தால்நீங்களும்பரிந்துரைபண்ணுங்களேன்,தூங்கிவிட்டீர்களா? தூங்கினோம்இரவின் மடியில்.எங்களினடியில் தூங்கி விடுகிற யாரா வது நாங்கள் வெளிவிடுகிற கரிய மில வாயு தாக்கி பாதிப்படைந்து விடக்கூடாதுஎன்கிறவிழிப்புடன்பாதிதூக்கத்துடன்தூங்கியும்தூங்காம லும்இருக்க வேண்டியதாகிப்போகிறது.
மறுநாள் அதுவே தீராத உடல் அசதியாகிப்போக அடிக்கிற காற்றுக்கு எங்களது உடலை அசைக்ககூடபெரும்பிரயணத்தட்டுப் போகிறோம். என்கிறபெருமூச்சுடனும்,ஆதங்களுடனுமாய் சொன்ன அவைகளை நேசிப்புடன் பார்த்தவாறு ஓடை, ஒடப்புகள் ஓடித்தெரிந்த பள்ளமும், மேடுமான சமமற்ற சமவெளியில் எங்களது இருக்கை பாய் விரித்து/
நான் அவன்,மற்றும் இன்னும் சிலருமாக அமர்ந்திருந்த வெளியில் எங்களின் முன்பாக சற்று இடைவெளிவிட்டுஒரு குடில்/
அதனுள் யார் தங்கியிருக்கிறார்கள்?அது அங்கு அங்கு ஏன் அனாவசி யமாய் என்கிறகேள்விகளை பின் தள்ளி விட்டு முன் நின்று காட்சிய ளிப்பதாக/
காட்சியளித்தகாட்சியின்முப்பரிமாணங்கள்அடர்த்தியாகவும்,மிதமற்றுமாய்/
குடிலைவிட்டுதள்ளிகுடிலின்வலதுபக்கமாகநின்றுகொண்டிருந்த,நின்று கொண்டிருந்தஎன்ன,,,,?பாடம்நடத்திகொண்டிருந்தஅவர்என்னையும் எனது நண்பரையும்,பிறரையும் நோக்கிசபதமில்லாமல்ஏதோசொல் கிறார்.
கறுப்பு நிற பேண்டும்,ஊதாக்கலரில் கோடுகள் ஓடிய சட்டையுமாய் தென்பட்ட அவர் என்ன சொன்னார்?அது என்ன வகுப்பு?நாங்கள் ஏன் அங்கு அமர்ந்திருக்கிறோம் என்பது தெரியாமலும்,புரியாமலும்/
தரை தவழும் குழந்தை,தன் பூம்பாதங்கள் தரையில் பதிய வைக்கிற முதல் எட்டு போலான அவரது பேச்சு மிருதுதன்மை வாய்ந்ததாக இருந்த நேரத்தில் எனது நண்பனின் தந்தை வருகிறார்.
அவர்ஒருவிவசாயக்கூலி.தோட்டம்,காடு,வயல்கிணறுவெட்டு,மரவெ ட்டுவேலைகொத்துவேலைஎனஎல்லாவற்றிலும்அவரதுகரங்களும், உழைப்பும்,வேர்வை வாசமும் கலந்து இருக்கும்.
தேடிவந்துநண்பனிடம்பேசிக்கொண்டிருந்தவரைபாடம் நடத்தியவர் பார்த்து விடுகிறார்."என்ன அங்க பேச்சு" எனநெற்றிசுருக்கி இடுங்கி ய கண்களுடன் வந்த அவர் ஆழ்ந்த பார்வையால் எனது நண்பனையும் அவரது தந்தையையும் பார்க்கிறார். கூடவேஎன்னையும்சேர்த்து/
அருகில்அமர்ந்திருந்தவர்களெல்லாம்திரும்பிப்பார்க்கஎனதுநண்பனை பார்த்துயாரது என அதட்டியவராககேட்டபோதுதந்தைஎன்கிறஅடை யா ளத்தை சமர்ப்பித்த அவன் அவரைப்பற்றி சொல்கிறான்.
" பரவாயில்ல,இத்தனகஷ்டத்துலயும் புள்ள இங்க வந்து இலக்கியம் படிக்கனும்னு அனுப்பி வைக்கிறீங்களேரொம்பசந்தோசம் எனஎனது நண்பணினதுதந்தையின்வியர்வைமின்னியவெற்றுடலைகட்டிக் கொள்கிறார்.வாரி அணைத்துக்கொள்கிறார்.புழங்காகிதப்படுகிறார்.
பரஸ்பரம்புழங்காகிதப்பட்டஇருவர்மனதிலிருந்தும்ததும்பியமௌன
வார்த்தைகளையும்,கண்ணீரையும் சுமந்து அங்கு நிறைந்து படர்ந்து காட்சி தருகிறார்கள்.
நான் நண்பனை பார்க்க,நண்பன் என்னை பார்க்க நான் அன்றலர்ந்து விரிந்து நிற்கும் பச்சைகளையும்,மரங்களையும் கண்ணுற்றவனாய் நண்பனின்கரம்பற்றிஅமர்ந்திருகிறேன்.
கண்டகனவின் பரிமாணம் எட்டு திக்கும் நீட்சி பெற்று நெசவோடித்
தெரிவதாக/இது மாதிரியான கனவுகள் அடிக்கடி வரட்டும்.தினசரி வந்தாலும் எனக்கு சம்மதமே/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை சிரமம் என்றாலும் படிப்பு வேண்டும்... கனவுகள் பல வரட்டும்... நனவாகட்டும்...

Yaathoramani.blogspot.com said...

கண்டகனவின் பரிமாணம் எட்டு திக்கும் நீட்சி பெற்று நெசவோடித்
தெரிவதாக/இது மாதிரியான கனவுகள் அடிக்கடி வரட்டும்.தினசரி வந்தாலும் எனக்கு சம்மதமே///

எனக்கும்....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்த்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விச்சு said...

மழை வந்தால்தான் குளியலா..! ஹாஹா.. மழையில் நனைவதே ஏதோ பாவகாரியமாய் மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். நல்ல கனவுகள் வந்தால் சம்மதம்தான்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையாக உள்ளது இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Unknown said...

என்ன ஒரு கஷ்டம் என்றால் ,கனவு வரும்போதுதான் வருகிறது :)
த ம 4

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/