1 Mar 2015

ஈச்சம்புல்லு,,,                                      
கூட்டி விட்டேன் ஏற்கனவே,இனியென்ன கூட்டப்போகிறீர்கள் நீங்கள் என விளக்குமாறைகையில்எடுத்துகூட்டஆரம்பித்தபோதுசொன்னமனைவியின் சப்தம் தவிர்க்க முடியாததாகிப்போகிறதாய்/

“கண்டோலர்ஆப்ஹவுஸ்”என்கிறசொல்லோட்டத்தைநூலிழைக்கயிற்றில்கட்டி மனைவிக்குமட்டுமேகேட்குமாறுவீட்டினுள்ளாய்அனுப்பிவிட்டுகையிலிருந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு வருகிறான்.

விளக்குமாறைகீழேபோட்டஇடம்சுவரோரமூலையில்சிலிண்டர் பூத்து நின்ற இடமாய் இருக்கிறது.சிவப்புநிறத்தில்சற்றேஅல்ல,நன்றாகஅழுக்குஅப்பியும் அதன்ஊடாய்நீர் வரிக்கோடுகள் வழிந்தோடியது போலவுமாய் தடம் பட்டுத் தெரிந்தது.

ஒன்றாய்இரண்டாய்நேர்நேராய்இழுத்துக்காணப்பட்டகோடுகளின்அருகிலேயே பேசி முடிக்கப்படாத பேச்சாய் இன்னமும்ஒரு கோடுஒழுகி பாதி யிலேயே காட்சிப்பட்டு நின்றதாய்/

நன்றாகவேஇருந்ததுநன்றெல்லாம்நன்றல்லஎன்கிறநிலையைதக்கவைத்துக் கொண்டே/

560ரூபாய்கொடுத்திருக்கிறார்கள்சிலிண்டருக்குமான்யமாய்/அதென்னகணக்கு எனத்தெரியவில்லை.ஆனால்இவன்கணக்குபெரும்கணக்காய் இருந்தது.
போதாததற்குஇவனுக்குஆதார்அட்டையும்கிடையாது.இவனுக்குமட்டும் என இல்லை. இவனதுகுடும்பத்தில்யாருக்கும்அந்தகுடுப்பினை கிடையாது.

இதெற்கெல்லாம்தனிவரம்வாங்கி வர வேண்டும் போலிருக்கிறது. என்றாள் மனைவிஆதார்அட்டைக்காய் போட்டோ எடுக்க ஊர் ஜனமே போன போது அவளும்போய் வரிசையில் நின்றுவிட்டு போன காரியம் முடியாமல் அரை நாள்கழித்துஅலுத்துத்திரும்பிவந்த போது சொன்ன வார்த்தைகளாய் அவை இருந்தன.

என்னசார் இது ஆதார் அட்டை வாங்கலையாஇன்னும்,,,,,,?இன்னுமாஆதார் அட்டைவாங்கல,காலக்கொடுமஒங்களோட,இவனோடுபணிபுரிபவர்முக்கால் தினம்வரிசையில்நின்றுசளைக்காமல்ஆதார்அட்டையைவாங்கிவந்தகதையை
ச்சொன்னார்.

பரவாயில்லைஎனஇருந்துவிடாமல்மனைவியிடம்சொல்லிமுதலில்நீ போய் போட்டோஎடுத்துகொள்,அப்புறமாய்நேரம் வாய்க்கும் போது இந்த அழகான இளமைப்பட்டமுகத்தைபோய்எடுத்துக்கொள்கிறேன்எனஅவளைமுன்அனுப்பி விட்டவெற்றித்தந்திரத்தைநினைத்துப்பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தவேளை
யில்வேண்டாம்இந்தமாதிரிபெருமிதங்களும்ஜம்பங்களும்,நிலைத்தஇடத்தில் நிலையாகநின்றுவிடப்பாருங்கள்.அப்புறம்எல்லாம்தன்னைபோல்சரியாகும் என ஏதோ பெரிய விஷயம் சொன்னது போல் சொன்னாள்/

வாஸ்தவம்தான்அவள்சொன்னதும்.நிலைத்துநிற்கிற இடமே நிலையானது, அதுஅல்லாதுஅங்குமிங்குமாய் நடமிட்டு மூக்கை நுழைப்பதும்வீண்ஜம்பம் காட்டிக்கொள்வதும்தேவையில்லாததுஎன்கிறமுன்னறிவிப்பின்படிதோற்றுப் போய் வந்து ஆதார்அட்டைஇல்லாமல் வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதன் வழி மான்யம் கழித்து வந்த சிலிண்டர்.

இந்தசிலிண்டரைப்பார்க்கும் போது கேஸ்ஏஜென்ஸியில்பார்த்தபெண்ணின் முகம்தான்ஞாபகம்தான்வருகிறது.வங்கியில் கணக்குஆரம்பித்துஅதற்கான ஆதாரங்களைகேஸ்ஏஜென்ஸியில்ஒப்படைத்து இரண்டு மாதங்களாகியும் ஒருபதிலும்இல்லை.மான்யப்பணமும் வரவாகவில்லைவங்கிக்கணக்கில்/

கேட்கலாம்அதன்உள்விபரங்களைதவறாய்வேறேதேனுமாய்நடந்திருக்குமா
னால் நிவர்த்தி பண்ணிக் கொடுத்து விட்டு வந்துவிடலாம்.அதன்பிறகாவது வருமாமான்யப்பணம்எனக்கேட்கலாம் என்று போன ஓர் நாளில் பொரிந்து தள்ளிவிட்டாள்அந்தப்பெண்.வட்டவடிவமானஅவளதுமுகத்தில்சூடானஎண்
ணெய்க் கொதித்துக்கொண்டேஇருந்ததுபோலிருந்தது.அன்றுமட்டும்கையில் கொஞ்சம்அப்பளம்கொண்டுபோயிருந்தால்பொரித்துஎடுத்துவந்திருக்கலாம் போலிருக்கிறது. சாப்பாட்டுக்காவது ஆகியிருக்கும்.

சரிவிடுஎன்ன குறைந்து போனது இப்பொழுது,அங்கு செய்ய நினைத்ததை வீட்டில் செய்து கொள்ளலாம்எனமனைவியிடம்சொல்லிவிட்டு நாம் அங்கு நின்றிருந்தமுக்கால் மணி நேரமும் அவள் யாரிடம் என்ன பேசினாள் என யாருக்காவதுதெரிந்ததாஎனக்கேட்டதற்கு இவனது மனைவி ஆமாம் அவள் கோபமாய்சொன்னஒன்றுமட்டும் புரிந்தது.போயிட்டு இன்னொரு நாளைக்கி வாங்க,கம்ப்யூட்டர்கணக்குலஒங்கபேருஏறும்போது சொல்றோம். மொதல்ல ஒங்கபேருவீட்டுவிலாசம்கணக்குநம்பரெல்லாம்சரியாஇருக்கான்னுபாருங்க, எனச்சொன்னது மட்டுமே புரிந்தது,இது பிராது கொண்டு போகிறவர்களின் மீதேபிராதுவாசிக்கிறதந்திரம் ஆச்சே/எனவுமாய் சேர்த்துச்சொன்ன இவனது மனைவிஅவளால்கட்டமைக்கப்பட்டஇந்தவார்த்தைகளைநான்கேஸ் ஏஜென் ஸிக்கும்வீட்டிற்கும்நடையாய்நடந்த ஒரு மாத காலத்திற்கு முன் சொல்லி யிருக்கலாமே,,,,,,,,எனசலித்துக்கொண்ட நாளொன்றின் ஊடாக ஒரு நல்ல பொழுதில் வரவாகியிருந்தது மான்யம் இவனது வங்கிக்கணக்கில்/

அப்படியானமான்யத்தைஉள்பொதித்துவந்திறங்கிமரப்பலகைமீதாய் வைக்கப் பட்டிருந்தசுவருக்கும்சிலிண்டருக்கும்ஊடானஇடைவெளியில்விளக்குமாரை கீழேபோட்டபோதுஅதுநட்டுக்குத்தலாய் ப்ளாஸ்டிக் கை பிடிகாட்டி நின்றது. இது ஒன்றை கண்டு பிடித்து விட்டார்கள்.இனி பட்டுக் குஞ்சம் ஒன்றுதான் பாக்கி.என்பாள்இவனதுசொந்தக்காரப் பெண். இருக்கட்டுமே என்ன கெட்டுப் போனதுஇப்போது.பட்டுக்குஞ்சங்களும்பிளாஸ்டிக்கைபிடிகளும்உரியவைகளு க்குமட்டும்தானா?என்பான்,பதிலுக்குப் பேசுகிற அவள்சரியாகவாயாடுவாள். என்னஏன்எதற்குஎப்படி,,,எனஆராய்கையில்அவளதுகேள்விகளும்சரிதான்எனப் பட்டிருக்கிறதுசமயத்தில்.சமயத்தில்அதீதமாயும்அர்த்தமற்றுமாய்தெரிந்திருக்க
வும்செய்திருக்கிறது.இப்படியானஅர்த்தங்களையும்அனர்த்தங்களையும் ஒரு சேரசுமந்துபார்க்கிறஇந்தவிளக்குமாரின்கைபிடி இவனுக்கானால் சுத்தமாகப் பிடிப்பதில்லை.

அதுவந்துவிட்டது.இரண்டுவருடங்களுக்குமுன்பாகவேபுழக்கத்தில்/அப்பொழு
தேபூமார்களைமிசினில்போட்டு சீவி விற்க ஆரம்பித்து விட்டார்கள். இவனு க்குதிருமணமான புதிதில்பூமார்களை வாங்கி சைக்கிளில் கட்டிக் கொண்டு வீட்டிற்குப்போயிருக்கிறான்.புதுமாப்பிள்ளைமுறுக்கு காண்பிக்கிற பலரைப் போலஇல்லாமல்விளக்குமாறுமற்றும்மண்ணெண்ணைகேனைசைக்கிளில் கட்டிக்கொண்டுஅலைந்ததில்கொஞ்சம்அசூயையாகக்கூடப்பார்க்கப்பட்டிருக்கி றான்.அல்லதுசற்றேதள்ளிநிற்கவைத்துப்பார்க்கப்பட்டிருக்கிறான்.சொந்தங்களி டையே/

வலது கையில் மண்ணெண்ணைக்கேனும் இடதுகையில்விளக்குமாறுமாய் திரிந்தால்ஹீம்,,,,இவனெல்லாம் தேறி எனபிறர்காதுபடசொன்ன நாட்களில் கூடஇவன்வாங்கிஅந்தவிளக்குமாரின்கைபிடிக்குசைக்கிள் டூயூப்பைஅறுத்து இறுகச்சுற்றிஅழகாக வைத்திருந்தது கண்டு மிகவும் மனம் பிடித்துப் போன பக்கத்துவீட்டு அக்கா இவனது மனைவிடம் சொல்லி எனக்கும் அது போல் செய்து தரச்சொல் என புதிதாக வாங்கிய இரண்டு விளக்குமாறுகளை இவனதுமனைவியிடம் கொடுத்துவிட்டுப்போயிருக்கிறாள். அலுவகம்விட்டு மாலையில்வீடுவந்தஇவன்முன்னேமனைவிவைத்தபேச்சும்காட்டியவிளக்கு மாறுகளும் கண்முன்னேஉறுத்தஎன்ன இது என கொஞ்சம் எரிச்சல் காட்டி யவனாய் கட்டித்தந்தான்.

அப்போதுஇவன்கட்டித்தந்தவிளக்குமாறுநுனிபூராவும்தேய்ந்தபின்னும்கைபிடி மட்டும் அப்படியே இருந்தது.இவன் கட்டித்தந்த கட்டு மாறாமல்/

பின்டவுனுக்குகுடிவந்தநாட்களில் அது போலான விளக்குமார்களைத் தேடி நகரெங்குமாய்அலைந்திருக்கிறான்.கிடைத்தபாடுதான்இல்லை.அதேபூமார்தான். அதேநீளம்தான்,அதேஅகலம்தான்.ஆனாலும்மிசினில்போட்டுத்தான்வைத்திரு ந்தார்கள்.அது ஏன் மிசினில் போட்டு எனக்கேட்ட போதுதான் ஒரு கடைக் காரர்சொன்னார்.தம்பிமுன்னமாதிரிஇல்லதம்பி.இப்பயெல்லாம்,இப்ப வீட்டுத் தரைகபூராம்மார்பிள்டைல்ஸீன்னுவந்திருச்சி.அதுக்குத்தோதாஅந்த தரையக் கூட்றமாதிரிமார்கள்மிஷின்லபோட்டுசீவி ஒருவிரல் கனத்துக்கு இருக்குற ஈச்சயெறகுகளபொடிப்பொடியாஅஞ்சாறாசீவி பூமாறுன்னு பேறெடுத்த அந்த ஈச்சவெளக்கமாரபூமாதிரிபண்ணி விக்க ஆரம்பிச்சிட்டாங்க.கேட்டா நாகரீக காலத்துக்குஏத்தமாதிரிநாகரீகமாஆகிப்போச்சி யேயாவாரம்ன்றாங்க, அதுவு ஞ்சரிதான்னுதோணுது,ஆனாஇன்னொன்னும்சொல்றாங்கதம்பி,நல்லாமழை தண்ணிபேஞ்சிஆத்தாங்கரையோரம்,காடு கரைகள்ன்னு வெளஞ்சி கெடந் தப்ப இந்த ஈச்சம் பயிறு நல்லா இருந்துச்சி.நல்லா தாங்குச்சி,இப்ப அது இல்லைன்னுஆகிப்போச்சி,தேவைக்குபயிரா வெளைவிச்சி இதக் கொண்டு வர்ராங்கன்னும்பேசிக்கிற்ராங்க/அப்பம்இதுக்கும் ஒரம் மருந்துன்னு போடும் போதுதன்னப் போலவே வலுவிழக்கத்தானே செய்யும்என்றார்கடைக்காரர்.

வேணுமின்னாஒண்ணுசெய்யிங்கஒங்கதிருப்திக்காகசொல்றேன்,இந்தமானிக்கி நேராப்போயிவலதுபக்கம்திரும்பினாஒருதெருவரும்.அந்தத்தெருவுல போயி நேராத்திரும்புனாதெருக்கடைசியிலயெடதுமொனையில இருக்குற முக்குல இந்தமாதிரிமிஷின்போட்டுவெளக்கமாரயெல்லாம்சீவி விக்கிறாங்க. அங்க  போனா சீவாத மாரும் வச்சிருக்காங்க.போயி வாங்கிக்கலாம் என அவர் சொன்னமுகவரிதேடி போன போது அது வீடாக இருக்கவில்லை. விளக்கு மாறுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த கோடௌனாக இருந்தது.குச்சி மார் ஒருபக்கம்,ஈச்சமார் ஒருபக்கம்,இன்னும்பெயர்தெரியாத மார்கள் என தனித் தனியாகவைத்திருந்தார்கள்.இதில்மிஷினில்போட்டது,மிஷினில் போடாதது எனத்தனித்தனியாக வைத்திருந்தார்கள்.மிசினில் போடாததாய் ஒரு மார் வேண்டும் எனவாங்கி வந்து வைத்திருந்த சிறிது நாட்களில் தேய் ந்து தூக்கி எறிந்த மாரை விடுத்து புதிதாக வாங்கி வந்தஏதோபெயர்தெரியாத விளக்குமாறைத்தான்சிலிண்டருக்கும்சுவருக்கும்இடையிலாய்போடுகிறான்.

போட்டகையோடுஞாபகம்வந்தவனாய்மோட்டார் சுவிட்சைப் போடுகிறான். நேற்றுமாலையில்இவனும் பெரிய மகளுமாய் பேசிகொண்டிருக்கும்போது மோட்டாரைப்போட்டது.அதற்கபுறமாய்நிறையதண்ணீர்புழங்கியிருக்கிறார்கள், இப்பொழுதுடேங்கில்எவ்வளவு தண்ணீர் இருக்கிறது எனத்தெரியவில்லை. மோட்டாரைப்போட்டுவிட்டுமாடியில்போய்பார்க்கவேண்டும்.ஊரெல்லாம்அடி பம்புஇருந்தவீடுகளில்அடிபம்புபோட்டுவிட்டார்கள்என்பதற்காகஅல்ல.என்னா
லும்முடியவில்லை.ஏறிப்போனவயதைஇனிகீழிறக்கமுடியாது.ஏறியவயது ஏறியதுதான்.அசந்தஉடம்புஅசந்ததுதான்.என்கிறகோரிக்கையின்உள்ளார்த்தம் ஏற்றுவைக்கப்பட்டமோட்டார் இப்பொழுது விசையைத் தட்டியவுடன் தன் வேகம் காட்டியும் இருப்புக்காட்டியுமாய் ஓடப்போகிறதுதான்.

விசையின்சொல்கேட்டுஓடத்தொடங்குகிறமோட்டார்.பிளம்பர்நாகுஅண்ணன் யோசனைப்படிவாங்கியதுதான்.அவர்தான்சொன்னார்,அண்ணேஇல்லைண்ணே, இதுலோக்கல் மோட்டாருதான்.கம்பெனிமோட்டாருக்கும் இதுக்கும் பெருசா வித்தியாசம்ஒண்ணும் இல்ல.,தவுர ரெண்டையும் கம்பேர்ப்பண்ணும் போது இது பெட்டருண்ணே,தவுர வெலையும் கம்மி,என்ன கம்பெனி சரக்க விட இது ஒரு வருசம் ஒழைப்புக்கம்மி.அதுவும் வாச்சிருச்சின்னா வாய்ச்சது தான்.அதுவாட்டுக்குகெடக்கும்பாத்துக்கங்கஎனச்சொன்னபிளம்பரின்சொல்லை ஏற்காமல் இருக்க முடியவில்லை.

டாக்டர்சொக்கையன்தான்இவனுக்குபிளம்பர்நாகுவை அறிமுகப்படுத்தினார். கூடவேஅவர்வேறு யாரும் இல்லை.உங்களுக்கு அடிபம்பு மாட்டிக் கொடுத் தாரே அவரின் மகன்தான் என்றார்.வாரிசு வேலை தொடர்கிறதோ என்கிற எண்ணம்மேலோங்கசம்மதித்துஅழைத்துவந்து மோட்டாரை மாட்டச் சொன் னான்.

அப்படியாய்வந்தஒருநாளில்தான்,நிலையாய்நின்றிருந்தஅடிக்குழாயைப்பார்த் தார்.கொண்டுவந்திருந்த்டேங்க்வைக்கஇடம்தேடினார்.கூடவே மோட்டாரை எங்குவைப்பதுஎன்கிறபேச்சும்/வாங்கிய பூவை வைக்க தலை தேடிய கதை யாகிப் போனது. 

டேங்கைமாடியிலும்மோட்டாரைவீட்டின்வராண்டாவிலும்வைப்பதுஎனவும் அடிபம்பைஅவரேஒருவிலை போட்டு எடுத்துக்கொள்வது எனவும் முடிவா கியபின் அவருக்கும் உடன் வந்திருந்த அவருடைய வேலையாட்கள் ஆறு பேருக்குமாய் லேசாக இறக்கை முளைக்க ஆரம்பித்திருந்தது.

முளைக்க ஆரம்பித்திருந்த இறக்கையின் ஆழகும் வேகமும் வேலையின் வேகம் கூடக் கூடநேரம் சட்டென அதிகரித்துத் தெரிந்தது..டீ,வடை மதியச் சாப்பாடுஎன்கிறவைகளுக்குள்ளெல்லாம்அடைபடாதவர்களாகஇருந்த போது அல்லதுஅதைஒருபிரதானமாய்காட்டிக்கொள்ளாதஅவர்கள்வேலையைமுடித்து மோட்டாரை டெம்ப்ரவரிகனெக்‌ஷன்கொடுத்து ஓட வைத்த போது மாலை முடிந்து இரவு எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

பில்லைமட்டும்கொடுத்துவிட்டுபணத்தைநாளைகம்பெனியில்வந்துகொடுத்து விடுங்கள்.கைவசம்பணம்இல்லைதாமதமாகும்என்றால்கூடபரவாயில்லை. இரண்டு நாள் கழித்துக்கூடக்கொடுங்கள். நான்சாமான் எடுக்கும்கம்பெனி
(கடை)அதைத் தாங்கும்.தவிர எனது வேலையாட்களுக்குஅடுத்தசனியன்று தான்சம்பளம்போடுவேன்.அதற்குள்ளாய் தந்தால் போதுமானது. இல்லையெ ன்றால் டாக்டரிடம் வாங்கிக்கொள்கிறேன் என்றார்.

மூச்சுவிடாமலும்இடைவிடாமலும் பேசிய அவரின் பேச்சுக்கு சிரித்துத்தான் விட்டான்இவன்.சார்சும்மாதான்கொஞ்சம்வெளையாட்டாபேசுவேன். மனசுல கள்ளம்கெடையாது,அதனாலபேச்சுலவஞ்சம்இருக்காது.மனசுல தோணுனத பட்டுன்னுபேசிறதுதான்.அதுவும்எல்லார்கிட்டயும்இப்பிடியெல்லாம்கெடையாது. டாக்டர்சொன்னாரு,ஒங்களப்பத்திஇல்லைன்னா இந்தப் பேச்சுபேசமாட்டேன் சத்தியமாஎனபேசிக்கொண்டேநகன்றபிளம்பர்நாகுஅண்ணன் இவன் போல மனம்திறக்கிறவராய்த்தான்இருக்கிறார்.என்கிறநினைப்புஓடிக்கொண்டிருக்கிற மோட்டாரைப்பார்த்தவுடன்வரகூட்டிவிட்டேன்ஏற்கனவேஇனியென்னகூட்டப் போகிறீர்கள் நீங்கள் என இவன் விளக்குமாறு எடுத்து கூட்ட ஆரம்பித்த போது சொன்ன மனைவியின் சொல் தவிர்க்க இயலாததாகிப் போகிறது.  

8 comments:

 1. ///பிராது கொண்டு போகிறவர்களின் மீதே/பிராது/வாசிக்கிற/தந்திரம் ///
  உண்மை நண்பரே
  பெரும்பாலன இடங்களில் இதுதான் நடக்கிறது
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஈச்சம்புல்லு,,,
  சொல்லுகின்ற சேதி
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. அருமையான தொகப்பு. வாங்கிய பூவை வைக்க தலைதேடியது போல.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete