தவறில்லாமல்
வேலைபார்த்து வேண்டும்
நினைப்பில்தான்
தினசரி
அலுவலகம் கிளம்புகிறேன்.
எனது சொந்த ஊரிலிருந்து
ஆறாவது மாவட்டத்திற்கு
மாற்றலாகிவந்த நாளிலிருந்து
இன்றுவரை
பிள்ளைகளின்படிப்பு,
மனைவியின்உடல்நிலை,
சகோதரங்களின் நினைவு,
தாய்,தந்தையின் அந்திமம்,
என்னின் தனிமை,,,,,,,
எல்லாம் ஒன்று சேர
கொஞ்சம் கவனம்
திசை திரும்பிவிடுகிறதுதான்.
என்னையறியாமல் தவறும்
நேர்ந்து விடுகிறதுதான்.
என்ன செய்ய,,,,
அறியாமல் தவறு செய்வதும்
மனித செய்கைகளில் ஒன்றுதானே,,,,,/
5 comments:
சரியே....
அறியாமல் தவறு செய்வதும்
மனித செய்கைகளில் ஒன்றுதானே, ஏற்ற்க்கொள்ளத்தானே வேண்டும்.
ஏற்புடையதே...
வணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
வணக்கம் சசிகலா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment