21 Mar 2015

பிரிமனை,,,,,,,,

                                                       
  சைவற்றிருந்த கையிலிருந்த ரோமங்கள் சிலிர்த்தும் மடங்கியுமாய்  காட்சிப்படுகின்றன.
   விறைத்து உருண்டு தெரிந்த கையின் தசைகள் முறுக்கி தளர்வற்று மிக,மிக இறுக்கமாகவும் புடைத்துத்தெரிந்ததாகவும்.
 காலிலும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்க வேண்டும்.மூடியிருந்த கைலி அதைகாண்பிக்க மறுக்கிறது.கோணி இருந்த வாய் காண்பித்த முகம் மூன்று ,நான்கு நாட்களின் ரோமத்துடன் வெள்ளையாயும், கருப்பாயும்/
ஊதாக்கலரில்வெள்ளைக்கட்டங்கள்போடப்பட்டிருந்த கைலிகட்டியிருந்தஅவர்ரோமம்நிறைந்த மார்புடனும் ,இளந்தொந்தி சரிந்து தெரியவுமாய் அமர்ந்திருந்தார்.
 அவர் அமர்ந்திருந்த ஊதாக்கலர் ப்ளாஸ்டிக் சேரைப்போலவே ஆஸ்பத்திரியின் சுவரும், தரையும் வெளிர் கலர்காட்டி கண்களை இடறச் செய்யாமல் இருந்தது.
 அருகாமையிலேயே மரச்சேர் ஒன்றும் கிடந்தது.27 ஆம் எண் அறையை கேட்டு விசாரித்துச் சென்ற 6மணிமாலைப்பொழுதில்அவர்வார்ட்டின்வெளியேஅமர்ந்திருக்கிறார்.
அவர் நாரயணசாமி.ஆயிரத்து தொள்ளாயிரத்து சொச்சங்களில் பிறந்து 2012 ல் வாழ்ந்து கொண் டிருப்பதை சொல்லிச்செல்கிறது அவரது வரலாறு.
ஐந்தரைஅடி உயரத்தில்மாநிற மேனிக்கு சொந்தக்காரானஅவரின் பிறப்பு,வளர்ப்பு,படிப்பு, சொந்த ஊர்,,,,,எதுவும் தெரியாது எனக்கு.
 நானும்அவரும்5வருடங்கள்ஒன்றாக பணிபுரிந்தோம் என்கிற அடையாளத்தைத்தவிர வேறெது வும் இல்லை  எங்களுக்குள்.
  நல்ல மனிதர்,நல்ல வேலைக்காரர் என்பதை தவிர்த்து தோற்றத்திலும்,பேச்சிலுமாய் எப்போ தும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்.   நான் கூட ஆச்சரியப்பட்டதுண்டு அவரைப்பார்த்து/ 
 “எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது” அவரால் இப்படிஎன. நான் மட்டும் இல்லை. எங்களது அலுவலகத்தில் பலபேர் எனது காது படவும்,அவரிடம் கேட்கவும் செய்திருக்கிறா ர்கள்.காலையில் ஒரு உடை,மதியம் சாப்பிட்டு வருகையில் வேறொரு உடை என மாறி,மாறி காட்சி தருகிற அவர் திடீரென மீசையை மழித்துக்கொண்டு வருவார்.அதுவும் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும்.
  கண்ணை  உறுத்தாத  கலரில்  உடை,  யார்  மனதையும்  புண்படுத்தாத  பழக்கம்,உண்மையைப் பேசி விடுகிற சில பல வேலைகளில் நாக்கை கடித்துக்கொள்கிற பாங்கு,(சம்பந்தப்பட்டவர்களின் மனம் உண்மையால் சுட்டுவிடும் என்பார்.)
  படபடக்கிறஇறக்கைபோலானஅவரதுபேச்சுஎனஅப்படித்தான் காட்சிப்பட்டுத்தெரிந்தார்அந்த அலுவகத்தில்/
 எப்படி ஒரு மனிதர் எல்லோருக்கும் பிடித்தமானவராயும், எல்லோருக்கும் பிடித்தமற்றவராயும் ஆக முடியாதோ அது மாதிரிதான் அவரும் இருந்தார்,தெரிந்தார்.
 இது தவிர அவருக்கு பணிக்கப்பட்டிருக்கிற வேலை,அவர் பணி செய்யும் விதம் சடுதியில் வேலை முடிக்கிற விரைவு,அடுத்தவர்களின் வேலையை தனது வேலையாய் கருதி முடித்தும், முடிச்சவிழ்த்தும் கொடுக்கிற பாங்கு என நிறைந்து போன இதர இதரவைகளுடனுமாய் நிறைந்து காட்சிப்பட்டுத்தெரிந்த அவரது பாதச்சுவடுகளின் அல்லது அடையாளத்தின் நீட்சி அவர் பதவி உயர்வு பெற்ற நாட்களின் நகர்வுகளில் அங்கு,இங்கு என தொலைதூர ஊர்களுக்கு சென்று பணி புரிந்து திரும்பி தனது சொந்த ஊருக்கே அருகாமையிலேயே கூப்பிடு தொலைவுக்கும் சற்று அதிகமான தூரத்திலுள்ள ஊரில் பதிவாகிறது.அப்படி பதிவாகி பணிபுரிந்து கொண்டி ருந்த நாளின் ஓய்வான இரவுப் பொழுதில்  தூக்கத்திலிருந்த  அவருக்கு  ஒரு பக்கம்   செயல் பாடுஅற்றுப் போகி றது.
 உடலின் வலதுபக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்க ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.
  மடியில்வைத்திருந்தகையைமெதுவாக,மிகமிகமெதுவாகதூக்குகிறார்,பின்இறக்குகிறார்.
கைவிரல்கள் ஐந்தையும் நீட்டி,நீட்டி மடக்குகிறார்.ஒவ்வொருவிரலையும் மடக்கி,மடக்கி பெரு விரல் தொடுகிறார்.அது போலவே காலையும் நீட்டி,நீட்டி மடக்குகிறார்.தரையில் இழுபடுகிற பாதத்தின் உரசலோடு தூக்கிய காலை மடக்கவும்,மடக்கிய காலை தூக்கவுமாய் இருந்த அவரது இயக்கத்திற்கு உடல் முழுவதுமாக ஒத்துழைக்க மறுக்கிறது.
  அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரின் கைபிடியை இறுகப்பற்றியவாறு வலது காலையும்,வலது கையையும் தூக்கி,தூக்கி இப்படி செய்கிறார்.
 பிஸியோதெரபிக்காரர் செய்யச்சொன்ன பயிற்சி என்கிறார்.அவர் இருந்த அறையை நோக்கி கை கூப்பியவாறு சென்ற நான் “எப்படியிருக்கிறதுஉடல்இப்பொழுது” என கேட்க வாய் எழாதவனாய் அவரது கைபிடித்து நிற்கிறேன் மௌனமாக/
 கஷ்டப்பட்டு உடல் அசைத்து வாங்க என தனது அருகில் உள்ள சேரைகாட்டி அமருமாறு பணிக் கிறார்.கரண்ட் இல்லாததால் காற்றோட்டத்துக்காய் வெளியே வந்து அமர்ந்திருப்பதாகவும்உடனி ருந்ததனதுதந்தைகீழேபோயிருப்பதாகவும்திணறித்திணறிசொன்னஅவர்கைக்கும்,காலுக்குமான பயிற்சியை செய்டு கொண்டேயிருக்கிறார்.
 சரியாக இயங்க மறுக்கிற கையையும், காலையும்,தூக்கவும்,மடக்கவுமாய் இருக்கிறார்.எனது பார்வையும்,அவரதுபார்வையுமாய் நேருக்கு நேராகவும்,தரைதொட்டும் சந்தித்துக்கொண்ட மௌனநிமிடங்கள் மனங்கள்பேசியது நிறையவேஎன கனமாகவும்,லேசாகவும் பதிவாகிறது ஆஸ்பத்திரியின் வெற்று வெளியில்/
மனம்கனத்தும்சங்கடமாயும்அங்குஅமர்ந்திருந்தநிமிடங்களை,அந்தஅரைமணி பொழுதை பின் தள்ளிவிட்டுஅவரிடம்கைகூப்பிவிடைபெற்ற போதுசொல்கிறார்.
 புள்ளைங்கள நல்லாப் பாத்துக்கங்க, நல்லாபடிக்க வைங்க, அவுங்க நலன்    
 ரொம்ப முக்கியம்  என்கிறார் திக்கித்திணறியவராக/
கண்களில்நீர்சுற்றஅவரதுபேச்சுக்குதலையசைத்தவனாய்கிளம்பி வருகிறேன்
 அங்கிருந்து/  

4 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. மனம் கனக்கிறது,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete