24 Mar 2015

பூக்கொல்லை,,,,,


பூக்கள்சிதறிச்சிரித்தால்,,,,,,,?சிதறும்சரி,சிரிக்குமாஎன்ன?சிதறியிருக்கிறதே,சிரி த்தும் இருக்கிறதே. நீங்கள் எல்லாம் சொல்வதைப் போல அது பார்க்க நன்றா கவும் இருக்கிறதே? சிதறியிருப்பதே இப்படி என்றால் ஒன்றாகவும் சற்றே இடைவெளி விட்டும் தோளோடு தோள் உரசியும் ஓரிடத்தில் கூடி அமர்ந் திருந்தால்?ஒவ்வொரு கலரிலும் ஒவ்வொரு விதத்திலுமாய்,,,,,,,,,/ஆ பார்க்க ரம்மியமாயும்,அழகாயும்தானே?
ரோஸ் கலர் சுடிதார், அதே கலரில் துப்பட்டா, ஊதாக்கலரில் பாவாடை அடர் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட டீ சர்ட்,சிவப்புக்கலரில் புள்ளிகளும் இதழ் விரித்திருந்த சின்னச்சின்ன பூக்களுமாய் ஒட்டியிருந்த சுடிதார்,பச்சைநிறம் காட்டி பளிச்செனவும்,கால்பாதத்தின் ஓரம் நூல தொங்கியதுமான சுடிதார் என நான்கு பேரும் நான்கு விதமாயும் தங்கள் உடைகளையும் 40 விதமாய் தங்க ளது செய்களையும் அறிவித்து அமர்ந்திருந்த இடமாய் அது இருந்தது.
சம்மணமிட்டுஅமர்ந்திந்தஊதாக்கலர்பாவாடையும்அடர்வண்ணடீசர்ட்டுமாய் அணிந்திருந்தவள்குழுத்தலைவிபோலஎல்லோரையும்கட்டுக்குள்வைத்திருப் பதாகஎண்ணிகுரல்கொடுத்தாள்வலதுகாலைதூக்கிமடித்தும்,இடதுகாலைஅரை சம்மணமிட்டுமாய்அமர்ந்திருந்தபச்சைக்கலர்சுடிதார்அணிந்திருந்தவள் சுடிதா ரின்சுருக்கங்களைஇழுத்துவிட்டவாறும்தடவிக்கொடுத்துமாய்எழுந்து அமர்கி றாள்.ரோஸ்கலர்இதையெல்லாம்கண்டுகொள்ளாமல்தன்மேல்துப்பட்டாவை சரிசெய்துகொள்கிறதில்முனைகிறவளாய்.
கால்களிரண்டையும்நீட்டிஅமர்ந்திருந்தசிவப்புக்கலர்சுடிதார்அணிந்திருந்தவள்தனது சுடிதாரின் சின்ன கிழிசலை கைவைத்து மறைத்துக் கொண்டு எழுதினாள்.
இடது புறமிருந்து 1,2,3,4 என அரைவட்டமாய் அமர்ந்திருந்த அவர்கள் கால் பரிட்சைலீவுக்குகொடுக்கப்பட்டிருந்தபாடங்களைஎழுதிக்கொண்டிருந்தார்கள்."ஊரெல்லாம்ஆறு,ஆறுஓடுகிறஊரு,"என்பதுபோலஏதேதோசொல்லிக்கொண்டும்,பேசிக்கொண்டுமாய் பாடங்களைப் பரிமாறிக்கொண்டுமாய்/
அவர்களின்முன்தரையில்விரிக்கப்பட்டிருந்தநோட்டில் குனிந்து எழுதுவதில் முனைந்திருந்தார்கள். எழுதும் போது என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது அவர்களுக்கு?எனநீங்கள்கேட்பது புரிகிறது. ஆனால் பேசிக் கொண்டார்கள். "ஏல இதுக்கு அப்ரிவேஷன் என்னப்பா,நீயா சரியா எழுதிக்கிட்டு இருந்தா எப்பிடி? எங்களுக்கும் சொல்லுப்பா""இதுக்குதான எல்லாரும் ஒண்ணுபோல 
எழுதணும்ங்குறது"
"எப்பிடிப்பா அது ஒண்ணு போல முடியும்?நீயி வேகமா எழுதுவ,நான் பைய எழுதுவேன்,அவ நடுவாந்திரமா எழுதுவா,,,,,,,இதுல எப்பிடி ஒண்ணு போல எழுதுறது.நீயி கொஞ்சம் மெதுவாவே எழுதுப்பா",,,,,,,,, என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தஅவர்களின்பேச்சில்மீனிங்கஸ்,வேர்ட்ஸ்,சென்டென்ஸ்என்கிற இன்னும், இன்னுமுமான பிற பிற வாக்கியங்கள் அமர்ந்திருந்ததைப் போல சீக்கிரம் எழுதுங்கப்பா,இன்னும் மூணு கொஸ்டின் இருக்கு பாக்கி என ஒருவ ரை ஒருவர் செல்லமாக அடித்துக் கொண்டும்,தோள் தட்டியவாறும்,தலை குட்டிக்கொண்டும்,ஸ்கேல்பென்சில்பேனாக்களைதூக்கிஎறிந்துகொண்டுமாய் அவர்கள் அமர்ந்திருந்த சிமிண்டால் போர்த்தப் பட்டிருந்த 
தெருவாய் இருந்தது அது.
மூடிதிரையிடப்பட்டிருந்தகனத்தகதவொன்றை"திறந்திடுசீசே”எனசொல்லாமல் சுட்டுவிரலால்விலக்கினால்காட்சிப்படுகிற தெருவாய் இருந்தது அது.
தெருவை கிறீ அதன் நடுவாய் ஓடுகிற சாக்கடை நீர் ,ஆங்காங்கே உறைந்து நின்றஅதில்இரைதேடுகிறகோழிகள்தெருவின்இரண்டுபக்கமும் வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த சின்னதும்,பெரியதுமான வீடுகள்.அதன் நடுவே இடது புறமாய் நான்காவதாய் இடிந்து கிடந்த மண் வீடு. யாரும் கேட்பாற்றும், சிவப்புக் கலரில்,மண்சுமந்தும், கல் கலரில் கல் சுமந்துமாய்/
தெருவின் இரண்டு ஓரங்களிலுமாய் இருந்த வீடுகள் முன்பாக ஏதாவது ஒரு வீட்டின் முன்பாக காட்சிப்பட்ட இரு சக்கரவாகனகளும்,சைக்கிள்களுமாக/
நீண்டு விரிந்தும் ஒரே நீளமாயும் பல வண்ணங்களில்மனித எண்ணங்களை 
சுமந்து கொண்டிருந்த அந்த வீதியின் வலது ஓரமாய் வெயில் பாதியும்,நிழல் பாதியுமாய் கைகோர்த்து தெரிந்த அந்த ஆறாவது வீட்டை அண்மித்தும்மூடித் தாளிடப்பட்டிருந்த கேட்டின் முன்பாகவும் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த 
அந்த பிஞ்சுகள்  தலைவாரி  பூச்சூடி  என்கிற  வடிவமைக்குள்ளெல்லாம் 
இல்லாமலும் அடையாளப்படாமலும் கசலையாய் அமர்ந்து எழுதிக் கொண்டி ருந்தார்கள் ஒன்றாக அமர்ந்து ஒன்றாகப்படித்து ஒன்றாக எழுதிப் பார்க்க வேறெங்கு போவார்கள் ,கிராமத்தின் இந்த சிமிண்ட் பூசப்பட்ட தெருக்களும், மூடப்பட்ட வீட்டின்முன்புறவெளிகளுமாய் கட்டணமில்லாக்காட்சியிடமாய் தெரிகிறது.வந்தமர்ந்து எழுதுகிறார்கள்.
சிறியதும்,பெரியதுமாய் பிரச்சனைகளை சுமந்துகொண்டு காட்சிப்படுகிற வீடு களில் அவர்கள் எங்கு போய் ஒன்றாக அமர்ந்து எழுத?என்கிற மனோ நிலை யிலும், முடிவிலுமாக இப்படி திறந்தவெளிஅரங்கங்களாய் காட்சிப்படுகிற வீதிகளில் தங்களை இருத்திக் கொள்கிறார்கள்.
விரிக்கப்பட்டிருந்த நோட்டு,அதில் விரைந்து ஓடிக்கொண்டிருந்த அவர்ளது கைகள்அவர்களதுகையிலிருந்தபேனா தலையிலிருந்த பாடங்கள் விரைந்து
இயங்கிக் கொண்டிருந்தஅவர்கள்பூக்களாயும்அவர்களின் செய்கைகள் வெடி சிரிப்பாயும் சிதறித்தெரிகிறது.
பூக்கள் சிதறி அல்ல ஒரேஇடத்தில் ஒன்றாய் கூடி குலுங்கி சிரித்தால்? சிரிக்கிறது தங்கள் இருப்பை அறிவித்தவாறு, வாருங்கள் பார்க்கலாம்/

5 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! நண்பரே! நிஜப் பூக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் காணக் கிடைத்தால் கண்கொள்ளாக் காட்சிதானே! அதே போன்று இந்தச் சின்னஞ் சிறு மொட்டுககள்/அரும்புகள் மலராக விரிந்து வரும் இந்தச் சின்னஞ் சிறு மலர்கள் ஒரே இடத்தில் கூடிக் களித்தால் அந்த இடமே ஒளி நிறைந்ததாய், சங்கீதம் நிறைந்ததாய் தான் இருக்கும்.....பள்ளியில் கிடைக்கும் ஆந்தம் இதுதானே!

இப்போது எல்லா இடங்களும் கான்க்ரீட் காடுகளாய் மாறி வரும் வேளையில் குழந்தைகள் கூடுவதே அரிதாகி விட்டது....வருத்தமான ஒன்று...அருமையான விவரணம்....

Thulasidharan V Thillaiakathu said...

http://businesstoday.intoday.in/story/smartphone-short-film-shoot/1/184451.html நண்பரே இந்தச் சுட்டிக்குச் சென்று பாருங்கள் நண்பரே! சில நல்ல தகவல்கள் நீங்கள் முன்பு எங்களிடம் கேட்டிருந்தமைக்கு இருக்கின்றது. நீங்கள் இத்தனைக் கவித்துவமாக எழுதுவதை ஏன் ஒரு சிறு, 3, 5 நிமிடக் குறும்படமாக எடுக்கக் கூடாது? எடிட் செய்ய வீடியோ பேட் எனும் இலவச எடிட்டர் தரவிறக்கிக் கொள்ளலாம் நண்பரே! அடோப் ப்ரிமியர் நல்ல மென்பொருள் ஆனால் அது நம் பட்ஜெட்டுக்கு வராது. இந்த வீடியோபேடும் நன்றாக இருக்கின்றது என்று அதை உபயோகிப்பவர்கள் சொல்கின்றார்கள். நாங்களும் தரவிறக்கிக் கொண்டுள்ளோம். ஆனால் இன்னும் கற்க ஆரம்பிக்கவில்லை. கற்றுக் கொண்ட பிறகு தங்களிடம் நிச்சயமாகப் பகிர்கின்றோம்....

மிக்க நன்றி! தாங்கள் தங்கள் கவித்துவ விவரணங்களை காணொளியாக்கலாம். உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது பல கவித்துவமான விளம்பரங்கள் நினைவுக்கு வருவதுண்டு......

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி தங்களின் மேலான தகவலுக்கு/

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/