தூரத்திலிருந்து இறங்கி வந்த
எறும்பொன்று ரோட்டோரம் தலை வைத்து காத் திருக்கிறது.புழுதியே
ஆடையாகவும்,மண்ணே உடலாயும் கொண்ட வெற்று வெளியை பிளாட்பாரமாகக்கொண்டு அது
காத்து நிற்கிறது.
ரோட்டின் உயரமும் அது காத்து அமர்ந்திருக்கிற வெளியின் உயரமும் வித்தியாசப்பட்டுத் தெரிய எட்டி,எட்டிப்பார்க்கிறது.
பஸ்கள்,கார்கள்,லாரிகள்,இரு சக்கர வாகனங்கள் சமயத்தில் ஜே,சீ,பீக்களும்,
ட்ராக்டர்களும் இவர்களுடன் அவ்வப்பொழுது பாதசாரிகளும்/
கனத்து உருண்ட அதன்
சக்கரங்களும்,மெலிந்து தெரிந்த அதன் உருளைகளும் தடதடத்து ஓட
தொடர்ச்சியாகவும் சற்று இடைவெளி விட்டுமாய் வருகிற வாகனங்களுக்கு மத்தியில்
புகுந்து அல்லது அவைகளை சிறிது நேரம் நிற்கச் சொல்லி விட்டு நான் சாலையை
கடக்க வேண்டும்.
என்னைப்போல எனது இனத்தைச்சேர்ந்த
நண்பரும் சாலையின் எதிர்புறம் நின்று அமர்ந்து,படுத்திருந்து பார்த்து
சலிப்புற்று தனது இருப்பிடத்திற்கே த்ரும்பிப்போய் விடலாமா என
முடிவெடுக்கும் முன்பாக நான் போய் பார்த்து விட வேண்டும் என காத்து
நிற்கிறது கால்கடுக்க/
எல்லாம் சுமந்து விரிந்து
கிடக்கிற சாலை ஓரம் ஒற்றையாய் ஊர்ந்து செல்கிற எறும்பு எங்கு
போகிறது,அல்லது எதைத் தேடித்தான் அதனது பயணம் எனத்தெரியவில்லை.
கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தன் மீதும் தன் மார்மீதுமாய் தாங்கி பயணிக்கிறசாலையாய்காட்சிப்படுகிறஅதுதேசியநெடுஞ்சாலையின் எந்தப்
பிரிவு அது எனத்தெரியவில்லை தெளிவாக/
பஸ்டாண்ட் ஆரம்பித்து முக்கு ரோடு தொட்டு அருப்புக்கோட்டை வரையும் அதையும் தாண்டியும் பயணப்படுகிற சாலையாய் அது.
கருப்பு உடையால் தன் மேனி
போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை இதுவரை தன் மீது படரவிட்ட
வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக தன்னின் வலது ஓரத்திலும்,இடது ஓரத்திலும்
பிளாட்பாரமாய் விரிந்திருக்கிற வெற்று வெளியின் இரண்டு ஓரங்களிலும்
கடைகள்,மருத்துவமனை,திருமண மண்டபங்கள் மற்றும் வெகு முக்கியமாக டாஸ்மாக் என
தாங்கி உருவெடுத்து நிற்கிறது.
ஈரமானமற்றும்காய்ந்தமண்ணையேதன்மேனிபோர்த்திஅழகு காண்பிக்கிறது.
அப்படி
அழகு காண்பித்துச்செல்கிற வெற்று வெளிக்கு மத்தியிலாக நீள்கிற ,நெளிகிறகறுப்புஅடையாளம்தன்னைதினந்தோறுமாய்ப்புதுப்பித்துக்கொள்கிற சாலையில்
கிடக்கிறதூசிகளுக்கும்,மண்துகள்களுக்கும் மத்தியிலாக இடது பக்கமாய்
இருக்கிற திருமண மண்டபம் ஒன்றில்தான் இன்று காலை ஒரு திருமணம்.
காலை 9.30 to 10.30
முகூர்ததம்.மணி இப்போதே 10.25 ஆகிவிட்டது.முகூர்தத வேளை முடியும் முன்பாக
நான் போய் பூச்சென்றொன்றை தர வேண்டும் புது மணத் தம்பதிகளிடம் என சொல்லி
காத்திருக்கிற எறும்பிற்காய் ஒரு சில நிமிடங்கள் அந்த சாலையில்
போக்குவரத்து நின்று போனது. பஸ்களும்,
லாரிகளும்,கார்களும்
இரு சக்கர வாகனங்களும் ,மிதி வண்டிகள் மற்றும் பாத சாரிகள்இருசாரியிலுமாய்
நிற்க எறும்பொன்று பூச்செண்டேந்தி செல்கிறது, புது மணதம்பதிகளுக்கு
பரிசளிக்க/
8 comments:
வணக்கம்
நன்றாக உள்ளது கற்பனையில் உருவான கதை இறுதியில் அழகாக முடித்துள்ளீர்கள் இந்த காலத்தில் வாயால் சொல்லிய திருமண வீட்டுக்கு போகாத மனிதர்கள் எத்தனை அதில் எறும்புக்கு உள்ளது எவ்வளவு அக்கறை...த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆகா
அருமை
தம +1
அழகு நடை
த.ம.3
அருமை... மிகவும் ரசித்தேன்....
வணக்கம்கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை அருமை அருமை!!!!! என்ன ஒரு கற்பனை வளம்! பிரமித்துப் போய்..ஆஹஹ!
(கீதா: எனக்கு என் மகன் சிறு வயதில் எறும்புகளை ரசித்தது நினைவுக்கு வந்தது......இப்படித்தான் பலதும் யோசிப்பான்...இப்போதும் கூட....நானும் அவனும் பேசிக் கொள்வது பலருக்கும் புரியாது!!! அருமை நண்பரே!)
இதை உங்களால் முடிந்தால் நண்பரே! ஒரு காணொளியாக்குங்களேன்! அருமையாக வரும்! அத்தனைச் சிறப்பாக இருக்கின்றது!
Post a Comment