1 Apr 2015

பெயர்ப்பலகை,,,,,,,,,

கொஞ்சம் முரடுபட்டுத்தான் தெரிகிறது.நரம்புகள் புடைத்துத்தெறிப்பது போலவும் உருவேறியி ருக்கிற கை எக்குப்போலவுமாய் நீட்டிகொண்டிருக்க கோழியை உறிக்கிறாள்.
 பக்கத்தில் கோழி வெட்டுகிற வட்டக்கட்டை மீது கூர்மை பாய்ந்த கத்தி. கொஞ்சம் பிசகினாலும் கையை பதம் பார்த்து விடக் கூடும்.
 
 RS பிராய்லர்ஸ் என கடையின் பத்தடி செவ்வக அகலத்துடனுமாய் கூரை வேயப்பட்டு கூரை யின் மேல் கடையின் பெயர் தாங்கிய பலகை நின்றதாய்.மஞ்சள் பெயிண்ட் அடிக்கப் பட்டு சிவப்பு நிறம்பொரித்திருந்தஎழுத்துக்கள்.
 
அதென்னதெனத்தெரியவில்லை,சிவப்புக்கு அப்படி ஒரு தனித்த அடையாளம்.?அடர் நிறங்கள் பல கொண்டிருக்கிற அடையாளங்களில் சிவப்பு முதன்மை பெற்று தெரிவதாக அவனுக்கு. பெயர் தாங்கிய பலகை அங்கங்கே பள்ளமும்,மேடுமாகவும்,புள்ளி வைத்தும் நெளிந்துமாய்/பழைய தகரமாய் இருக்க வேண்டும் போல,காற்றுக்கு லேசாக தலை ஆட்டியது.
அவர்கள்பட்ஜெட்டுக்குஇதுதான்முடிந்திருக்கிறதுபோலும்.”ஏதோ ஒரு அடையாளத்திற்கு தானே இது போதும்” என அவர்கள் நினைத்திருக்கலாம்.ஆனால் போர்டு பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.
 
கோழிகள்,கடைக்கான மூலப்பொருட்கள்,கூரை வேய ,,,,,,,,,இத்தியாதி,இத்தியாதி என கணக்குப் போட்டுப் பார்க்கையில் ஏதாவது ஒன்று பெயரளவிற்கு செய்து முடிக்கும் படி ஆகி விடுகிறது தான்.அது புதிதாக திறக்கிற கோழிக்கறி கடையிலிருந்து திருமண வீடுகள்வரைஇப்படி ஆகிப் போகிற இனிய விபத்தாய் மாறிப்போகிறது.
  “,,,,,,,,,,,,,,பிராய்லர்ஸ்”என போர்டு வைக்கப்பட்ட கடையின் முன்பாகத் தான் நிற்கிறேன்.சீக்கிரம் வாருங்கள்.எவ்வளவு நேரமாய் நிற்பது காத்துக்கொண்டு.நான் வந்து ஒரு மணிநேரம் ஆகப்போகிறது.போரடிகிறதே ஏன் சும்மா நிற்பானேன் என இரண்டு டீ குடித்து விட்டேன். அப்படி யே தெரு முக்கிலிருக்கிற பால்ப்பண்னை வரை போய் KSR யும் பார்த்து விட்டு வந்து விட்டேன்.,
 
  அன்பின்மனிதர்அவர் அவரைப்போன்ற மனிதர்களைப் பார்க்கிற போதும்,அவர்களிடம் பேசி விட்டு வருகிற போதுமாய் மனதில் ஒடுகிற சம்பவங்களின் தொகுப்பான கடந்த காலக் கசப்புக ளையும்,இனிப்புகளையும் மறக்க இயலாதவனாக ஆகிப் போகிறோம்தான்”என்கிறஇலக்கணத்தி ற்குஉட்பட்டவனாய் நான் வந்து கொண்டிருந்த வேளையில் உன்நினைவு சுமந்த மனதை உள் தாங்கி  நிற்கிறேன்.வா நண்பா சீக்கிரம்” என எனது முதுகுக்குப் பின்னால் கேட்ட பூங்கொத்து பேச்சின் தூவலை தாங்கியவனாய் நின்ற என முன்னே விரிந்த கடையில் கோழி உரித்த பெண் “லெக் பீஸ் வேணுமா சார்,என இரண்டைப்போடுகிறாள்.
ஒல்லியான உருவத்தில்,புது நிறமாய் அடர்கலரில் உடை அணிந்து கொண்டு நின்ற அவள் வியர் த்துத் தெரிந்தாள்.
 
  இடது ஓரம் உரித்து குவிக்கப்படிருந்த கோழிகள்.அதை வெட்டுவதற்காய் சற்றுதள்ளி  வைக்கப் பட்டிருந்தவட்டக்கட்டை.அதன்மீதுஇருந்தகத்திகள்இரண்டு.மேலேவேயப்பட்டிருந்தகூரை,அதில் முடியிடப்பட்டிருந்தகயிறுகள்.அதில்ஒட்டித்தொங்கிக்கொண்டிருந்தநூலாம்படைபெரிய,பெரிய
ஈயப்பாத்திரங்கள்,அதில்ஒன்றிரண்டில்பாதியளவு நிரப்பட்டிருந்ததண்ணீர்என நிரம்பியிருந்த கடைக்குபின்னால்தான் அவர்களது வீடும் காட்சிப்பட்டுத் தெரிகிறது.
  வீட்டின் முன்னால் சும்மாக்கிடக்கிற வெளியை மடக்கி இப்படி அசைவம் செய்யும் கடையாய் ஆக்கிஇங்கு24மணிநேரமும்கோழிக்கறிகிடைக்கும்என போர்டுதொங்கவிட்டிருந்தார்கள்.
அந்த விட்டிருந்தலை தாங்கி கையில் கண்ணாடிவலையலும்,கத்தியுமாய்நின்ற அவள்எந்நேரம் கடை வேலையை முடித்து விட்டு எந்நேரம் வீட்டு வேலைகளைப் பார்க்கச் செல்வாளோ?

10 comments:

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான நடையழகு அருமை நண்பரே...
தமிழ் மணம் 1

Yarlpavanan said...

"எந்நேரம் கடை வேலையை முடித்து விட்டு எந்நேரம் வீட்டு வேலைகளைப் பார்க்கச் செல்வாளோ?" என்ற முடிவு அவளைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடக்கிய விதமும் முடித்த விதமும் நன்று படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தம +1

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார், நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

அவள்எந்நேரம் கடை வேலையை முடித்து விட்டு எந்நேரம் வீட்டு வேலைகளைப் பார்க்கச் செல்வாளோ?//

இப்படித்தான் பல, வறுமைக் கோட்டிலும் அதன் கீழேயும் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் ....