2 Apr 2015

இட்லிக்கொப்பற,,,,,

சூடாகஇருப்பதென்பதுசரிதான்அதற்காகஇவ்வளவுசூடாகவா?ஊதிதின்பதற்குள் ஊர் போய் சேர்ந்து விடலாம் போலிருக்கிறது. 

 நல்லதாய்,கெட்டதாய்நாலும்கலந்து இருக்கிற ஊர்.ஊரென்றாலே அதுதானே? அங்கு போய்சேரத்தான் இவ்வளவு அவசரம். 

ஒன்றோடுஒன்றுஒட்டியும்பிரியாமலும்வட்டமாய்சுற்றிஅடுக்கிவைக்கப்பட்டி
ருந்த இட்லிகளை தொட்டு பிய்த்து எடுக்கக்கூட முடியவில்லை. 

 அதையும் மீறிபிய்த்தெடுத்தவிள்ளலைவாயில்வைக்கக்கூட முடியவில்லை.
ஊற்றிய சாம்பாரும் அதை ஒட்டி கைகோர்த்துக்கொண்டிருந்த சட்னியும் எவ் வளவுகுளிர்வித்தபோதும் கூட தன் பிடிவாதத்தையும் மேல் எட்டிப் பறக்கிற ஆவியையும் விடாது பிடிவாதமாய் சுட்டுக்கொண்டிருந்தது இட்லி. 

 இன்று காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து விட்டான்.கை,கால்,முகம் ,உடல் கழுவி மனைவி கொடுத்த அன்பும்,பிரியமுமான டீயை ஒரு இளம் சண்டையுடன் குடித்துவிட்டு,,,,,,, ("இப்பிடி டம்ளர் நெறைய ஊத்திக் கொடுக் காட்டி கொஞ்சம் கொறயா ஊத்திக்குடுத்தா என்னவாம்"?அவன். 

ஊம்இப்பஎன்னவாம்அதுக்குஇன்னொருடம்ளர் வேணும்ன்னா தர்றேன். அதுல கொஞ்சமா ஊத்தி ஊத்திக் குடிங்க.அவள். 

அதுதெரியாதுஎங்களுக்குகொஞ்சம்கொஞ்சமாஊத்திஊத்திக் குடுக்குறதுக்கு? நீயி குடுக்கும்போதுமுக்காடம்ளராகுடுத்துருக்கணும்.இப்பிடிபொங்கபொங்க
ஊத்திக்குடுத்தாஎங்கிட்டு கையப்புடிச்சி என்னான்னு குடிக்கிறது இப்ப?அவன். 

கடையிலபோயி குடிக்கும் போது இப்படித்தான் நொட்ட சொல்லிக்கிட்டு இருப் பீ ங்களா?அவள். 

 கடையில குடிக்கிறதுக்கும் வீட்ல குடிக்கிறதுக்கும் வித்தியாசம்  இல்லையா? அவன். 

இருக்குதான்இல்லைன்னுசொல்லல,அதுக்காகஇப்பிடியா?எதுக்கெடுத்தாலும்  நொட்ட சொல்லிக்கிட்டு?அவள். 

என்னத்த பெரிசா ஒன்னைய சொல்லீட்டாங்களாம்?என்ன சொல்லி என்ன கொறஞ்சி போச்சாம் இப்ப?எங்க சொட்ட விழுந்து போச்சு ஒடம்புல?-அவன். 

ஆமாம் இப்ப சொட்ட விழுகுறது ஒண்ணுதான் கொற.-அவள். 

விழுந்தா சிமிண்ட வச்சி அடைச்சிகிருவம்.விடு-அவன். 

ஒருநூறுமில்லிடீயைக்குடிக்கிறதுக்குள்ளஇத்தனபேச்சா,இத்தனபஞ்சாயத்தா? 
எவ்வளவுநொட்டசொல்லுஎப்படித்தான்வளத்தாங்களோ ஒங்களஇவ்வளவு
பொறுமையா?எங்க மாமியாரைப் பார்த்துப் பேசணும் ஒரு நா-அவள். 

ஆமாம்கேப்ப,கேப்பகேக்கமாட்டாம.சரி,சரிஎதுக்கும் கேக்குறதுக்கு முன்னால ஏங்கிட்டஒருவார்த்தசொல்லீருஎன்னத்தையாவதுரெண்டுசேத்துசொல்லச்
சொல்றேன்.அவன். 

சரி,சரிடீயக்குடிங்கமொதல்லஇப்படியேபேசிபேசியேஅந்தடீகூட ஆறிப்போயி
ருக்கும்இந்நேரம்கொண்டாங்க,சுடவச்சித்தர்ரேன் அவள்) 

பாத்ரூம்,குளியல்,தலை துவட்டல் என்கிற வரிசை கிரமங்களில் காலை டிபன் சாப்பிடவிட்டுப்போகிறது.உண்மையைச்சொல்லப்போனால்விட்டுவிட்டுவந்து
விடுகிறான்.சாப்பிட்டுக்கொண்டிருந்தால்பிள்ளைக்குசாப்பாடுகொடுக்க தாமத மாகிப்போகும். 

அதனாலேயேஇப்படிபறந்துபறந்துகிளம்பவேண்டியிருக்கிறது.இன்றுகொஞ்சம்
காலைமலர்வைகைபிடித்துக்கொண்டுஎழுந்துவிட்டதால்அந்தஅவஸ்தைஇல்
லை. 

இல்லையென்றால் பெரும் பாடாகப் போய்விடும்.சமயங்களில் குளிக்காமல் கொள்ளாமல் அவளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்து அவன் அலுவலகம் கிளம்புவதற்குள் கொஞ்சம் பெரும் பாடாகவே ஆகிப்போகிறது. 

இவளும் சும்மா இருக்காமல் கிரிக்கெட்,ஹாக்கி என கிளம்பிவிடுகிறாள். ஒன்பதாம்வகுப்புபடிக்கிறாள் P.T  மாஸ்டர்  சொன்னார்  என  ஆரம்பித்ததுதான்.
இப்போதுவெறியாகஅல்லதுலட்சியத்துடன் கிளம்பிவிட்டாள்.”ஸ்போர்ஸ்
கோட்டா”வேலை அது, இது என்கிறாள். 

படிப்பு,படிப்பு என மட்டும் என மட்டுமே உருப்போடுவதிலிருந்தும் டீ.வி சினி மா என்கிறசிந்தனைகளிலிருந்தும்மாறி யோசிக்கிறாளே அதுவரை பரவாயி ல்லை எனவே தோனுகிறது.நல்லது அதுவரை/ 

இந்த14ல்சின்னதான பூஞ்சை உடலில் இவ்வளவா?என ஆச்சரியம் கொள்ள வேண்டியதிருக்கிறது.சமயங்களில்அந்தஅளவுக்குபேசுகிறாள்.அந்தஅளவுக்கு அவளது செயல் இருக்கிறது.அந்த அளவு அவளது உழைக்கிறாள் அவள்மேற் கொண்டபடிப்பிற்கும்அவளாகவிரும்பிஏற்றுக்கொண்டவிளையாட்டிற்குமாய்/ 

அதிகாலை 5.30 மணிக்கு ஒரு நிமிடம் முன்பாக ஒரு பூவின் மென் மலர்வுடன் அதிர்வற்று எழுந்து 7.00 மணிக்கெல்லாம் கிளம்பி விடுகிற அவளுக்கு காலை, மதியம் இரண்டு வேளையும் சேர்த்து சாப்பாடு கொடுத்து விட்டுவரவேண்டும். 8.30 மணிக்குள்ளாக/ 

ஏதோ வாய்ப்பிருக்கிறது முடிந்த அளவிற்கு வசதி கொடுக்கிறோம் அவளுக்கு. மஞ்சள் பையும், தபால் பை டவுசரும் கிழிந்த ஒட்டுப்போட்ட சட்டையுடனு மாய் கழிந்த எங்களது பள்ளி நாட்களைப் போல அல்லாமல் ஏதோ ஓரளவிற்கு அவளுக்கு வாய்த்திருக்கிற வாய்ப்பை,வசதியை வைத்து இவ்வளவு செய்து கொடுத்து விட முடிகிறது அவளுக்கு. 

அவளும்படிப்புவிளையாட்டு,படிப்புவிளையாட்டுஎனஇரட்டைக்குதிரைகளில் சவாரி செய்கிறவளாய் தோற்றம் தர ஆரம்பித்து விட்டாள். 

சவாரிக்கானஅவசர ஆயத்தங்களில்சிலபலசமயங்களில்பலவற்றைதியாகம் செய்தும் விடுகிறாள்.சாப்பாடு,தூக்கம் உட்பட/ 

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் விரைகிற அவளது செயல் பிடித்தும் போகி றது .அலுத்தும் போகிறது சமயங்களில்/ 

அப்படியான நகர்வுகளுடனான நாட்கள் ஒன்றின் காலையில்தான் காலை உணவிற்காய் அமர்ந்திருந்த போது இட்லியிலிருந்து பறந்த ஆவி அவனை இப்படி பேசச்சொல்கிறது. 

தற்செயலாக இலையில் பொதிந்திருந்த பார்வையை பிரித்தெடுத்து பக்கத்தில் பார்த்த போது அவரும் அவனைப்போலவே ஆவி பறக்கிற இட்லியை ஊட்டிக் கொண்டிருக்கிறார்.

7 comments:

 1. இட்லியில் இருந்து பறந்த ஆவி பேசச் செய்த வார்த்தைகள் அருமை நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்க்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/.

   Delete
 2. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. இட்லி கொப்பரை மணக்கின்றது! நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தில்லைக்காத்து சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete