12 Apr 2015

சாயம்,,,,,


சிவப்பு என்றால் அப்படி ஒரு சிவப்பு என்று சொல்லலாம்.அது ஏனோ தெரியவில்லை.சிவப்புநிறத்தின்மேல்இருக்கிறஈர்ப்புதவிர்க்கஇயலா மல் போவ தாக/

ஒன்றுஇரண்டுமூன்று என வரிசை கட்டிஇறங்கிய படிகள் வீட்டின் நடையில் முட்டிசாயம்காட்டிவிரிகிறது.

திரிதியாய்சடைசடையாய்இறங்கிப்போகிறமுடிக்கற்றைகள் போல வாய் அவ்வளவுஅழகாய்த்தெரிந்தது,ராசையாகொத்தனார் தேய்த்த சிவப்பு வீடு கட்டும் போது/

அல்லம்பட்டியிலிருந்துவந்தார்,வீடுகட்டுவதற்கு,இப்பொழுதுகொத்தனார்
வீட்டுப்பிள்ளைகள்என்றால்அடையாளபட்டுத்தெரிவதுஎல்லாம்இல் லை, அப்பொழுது அப்படிஇல்லை,கொத்தனார் வீட்டுப்பிள்ளை கள் என்றால் தனித்துத் தெரிகிற அடையாளம்அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டு/ எண்ணைதேய்க்காதவரண்டதலை முடி, குளிக்காத உடல், பசித்தவயிறு,ஏக்கம் மிகுந்த பார்வை,அழுக்கான கிழிந்த உடை எனத்தனித்துத்தெரிவார்கள்.

அப்படியே காட்சிப்பட்ட அவரது வீட்டுப்பிள்ளைகளையும் இவன் ஓரீருமூறைஅவரதுவீட்டிற்குவேலையாய்போயிருந்தபோதுபார்த்தி ருக்கிறான்,என்ன செய்ய குடிநீரையும் கூத்தியாள் சகவாசத்தையும் அவரால் விட்டுக்கொடுக்க முடிய வில்லை.விளைவுவீடு பஞ்சம் காக்கிறதுஎன்பாள்அவரது மனைவி ஒவ்வொரு முறை போகும் போதும்/

இவன்போனவிஷயம்வீட்டுவேலைதொடங்கிக்கொண்டுஅப்படியே நடுவாலேயே நிற்கிறதே,அடுக்கியசெங்கல் தன்முகம் காட்டி சொர சொரப்பாய்ஏதோவிஷயம்சொல்லிச்செல்கிறதேசீக்கிரம்வந்துமுடித்துக் கொடுங்கள் என, அதை தங்களிடம் சொல்லிப்போக வந்தேன் ,வந்த இடத்தில் இப்படி ஒரு சொல்சேர்ப்புதங்களதுமனைவியிடமிருந்து எதிர்பார்க்கவில்லைஎன ராசையாக் கொத்தனாரிடம் சொன்ன போது ,என்ன செய்ய சார் ,புத்தியக்கடன் கொடுத்து ட்டேன் இப்ப குடுத்த கடன திரும்ப எடுத்துக்கலாம்ன்னு நினைக்கும் போது நம்ம மனசு நம்மகிட்டஇல்ல,ஆயிரம்பிரச்சனைஆயிரம் பஞ்சாயத்துன்னு வருது என்ன செய்ய அதுக்குபேசாமா தண்ணியும் சகவாசமுமே மேல்என தோணுது என்றார்,

அவளதுஅண்ணன்தம்பியும்புருசன்காரனும்வந்துபிரச்சனை பண்ணு கிறார்கள்

விட்டு ஒதுங்குவதாய் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத் து விட்டு போ.இல்லையென்றால் போலீஸ்டேசன் கோர்ட் கேஸ் பஞ்சாயத்து என அசிங்கப்படுத்தி விடுவோம்,குடும்பத்தை இழுத்து நடு ரோட்டில் போட்டு விடுவோம் ஜாக்கிரதை என வந்த மிரட்டல் என்னை நிலைகுலையவேசெய்ய நானும்சரிவேண்டாம் ஒன்றும் என விட்டு விடுகிறேன் எனச்சொல்வார் அவரிடம் பேசநேர்கிற சமய ங்களில் எல்லாம்.

இவனும்அவரதுநிலையை அனுசரித்து கூலியை கொஞ்சம் முன் கூட்டியேயும், முன் பணமாய்ஏதேனும் தந்துகொண்டிருந்தான். வீடு
கட்டிமுடிக்கும் வரையாய்/

ராசையாக்கொத்தனார்தான்சொன்னார்சார்விடுங்ககாண்ராக்ட்காரரை இன்னும்நம்பனுகின்னாவீடுநின்னுபோகும்.நம்பிக்குடுங்கஎங்ககையில, நீங்க ஒன்னும் அப்பிடியேமுழுசாகுடுக்கவேணாம்,. அன்றாடம் செய் யிற வேலைக்கு அன்றாடம் காசுகுடுங்க, சாமான் செட்டெல்லாம் என்னவேணும்ன்னுநாங்கசொல்றோம். நீங்க மட்டும் சொனங்காம வாங்கிக் குடுத்திங்கீன்னா, அந்த காண்ராக்டர விட சூப்பரா கட்டிக் குடுக்குறம் என்றார்.

அவர் சொன்ன படியே செய்தும் கொடுத்தார்,நடுவிலேயே கையை விரித்துவிட்டகாண்ட்ராக்டரைநம்பிஇனிபயன்இல்லைஎனஉறுதியான பிறகு/

ராசையாக்கொத்தனார்தந்தகையைநம்பிக்கைபற்றாமல்இருக்கமுடிய
வில்லை

அன்று பற்றிய கையின் இருக்கம் வீடுகட்டிமுடியும்வரை குறைய வில்லை.

கொஞ்சம்சிமிண்டாசெலவானதுவீடுகட்ட,?சிமிண்ட்டில்வீட்டைக்கட்டி னார்களாஅல்லதுவீட்டைசிமிண்ட்கொண்டுமொழுகினார்களாஎன்றா ர்கள்வீட்டைக்கட்டிமுடித்தபின்பார்க்கவந்தவர்களும்பால்காய்ச்சிக்கு
வந்தவர்களுமாய்ஒன்றுசேர்ந்து கொண்டு/கணக்கு வைத்து பாக்கிய நாதன்சிமிண்ட்க்கடையில் சிமெண்ட் வாங்கிகொண்டிருக்கும் போது இடையில்வந்துஆட்டையைக்கலைத்தஏற்பாடாககொத்துவேலைக்கு வந்தவர்ஒருகடையில்சிமிண்ட்தூக்கிவந்துவிட்டார்.

கடைக்காரரும்அவரைநம்பிக்கொடுத்து விட்டார்.இன்னாருக்குத்தா னே நம்பிக் கொடுக்கலாம்என,ஆனால்உள் கமிஷன் வைத்து விட்டா ர், இவனுக்குத் தெரிந்த போது சிமிண்ட் தூக்கி வந்தவரை சப்தம் போ ட்டுவிட்டுகடைக்காரிடம்பணம்கொடுத்துவிட்டுவந்தான்.கடைக்காரர் தொடந்து என்னிடம்தான் சிமிண்ட்எடுக்க வேண்டும்எனவும்நான் இன்னார் இந்த ஏரியாவில் இந்த மாதிரி என மிரட்டல் தொனியில் சொன்னார்,

இவன் மசியவில்லை.பின்னர் இவன் யார் எனத் தெரிந்ததும் வந்து வருத்தம்தெரிவித்துக்கொண்டார்.இப்படியாய் கட்டப்பட்ட வீடுக்கொ ஞ்சம் சிமிண்டை தூக்கிக்கொண்டிருந்ததில் ஆச்சரியம் இல்லை.

விரிந்தநடைநேரடியாய்இறங்கிவீதிகாண்பிக்கிறது. வீதியின்அகலம் நீளம்பற்றியெல்லாம்பேசஇதுவாநேரம்.குடியிருக்கிறவீதிசுத்தம்சுமந் தும்சாக்கடைஇன்னும் பிறவசதிகளுடன் இருக்கிறதா என மட்டுமே பார்ப்பதை விடுத்து இன்னும் இன்னுமாய் சுற்றிலுமாய் குடிகொண் டிருக் கிற மனிதர்கள் அவர்களின் வீடு குணம் ஆன்மா இவர்களுடன் தொடர்புபடுத்தியே ஒருவீதியைபார்க்கவேண்டி இருக்கிறது நண்பா என்பார் சமீபத்தில் மரணித்துப் போன தோழர் ஒருவர்.

அவரின் வீடு இருக்கிற ஏரியாவும் அதில் குடிகொண்டிருக்கிற மனித ர்களும் இன்னும்பிறபிறவானவைகளுமாய்கொண்டிருக்கிற மனம் பிடித்து ஒன்றிப் போன ஒன்றாகவே இருக்கிறது என்னுள்ளே என்பார் எப்பொழுது பார்க்கும் போதும். காரணம் அவர் குடிகொண்டி ருந்த ஏரியா அன்றாடங்காய்ச்சிகளின் சொர்க்கமானஇருப்பிடம்/

எவ்வளவுதான்சண்டையும்சச்சரவுமாய்அந்தஏரியாபடம்பிடித்துகாண்பிக்
கப்பட்டபோதும்கூடஅங்கிருக்கிறரத்தபந்தமும்மனிதமனப்பரிமாறல் களும் மிகவும் பிரசித்திப்பெற்றஒன்றாகவே/

அப்படியானவீதிகளில் குடியிருக்கவாய்க்கப் பெறுவது மிகவும் பாக் கியம் பெற்ற ஒன்றாகவே என்பது இவன் மட்டுமல்ல நண்பரின் கருத்துமாய் இருந் தது.

காண்பித்தவீதிதார்ச்சாலையாய்விரிந்து காட்சிப்படுகிறது கண்ணின் விழிப்படலங்களுக்கு/கடந்துபோனமூன்றுவருடங்களுக்குமுன்னாய் ஊராட்சியால் விரி த்து விடப்பட்டசாலைபெரியஅளவிலான சேதம் ஏதும் கொள்ளாமல்இன்னும் மிளிர்வாக இருப்பது நன்றாகவே இருக்கிறதுதான்.

ஊர்ந்து செல்கிற எறும்பிலிருந்து நடந்து செல்கிற பாதசாரிகள்வரை ஒற்று மை காட்டியும் நெசவிட்டுமாய் மண் நேசித்து விட்டுச் செல் கிற தெருவாய் இருந்தது அது.

இப்பொழுதான்தெருக்களில்சாலைகளில்எங்குபார்த்தாலும்டிசைன்
கற்களின்அணிவரிசையைப்பார்க்கவாய்த்துப்போகிறதுதானேகண்ணு க்கு அழகாகவும் லட்ணமாகவும்.

இரண்டு பக்கமுமாய் ஒட்டி வைக்கப்பட்டது போல் இருந்த வீடுக ளை வகிந்து உச்சி எடுத்தது போல் சென்ற வீதி இடது பக்க கடைசி முனையில் இவனது வீட்டை நட்டு வைத்து அடையாளப் படுத்தி யிருந்தது.

சிவப்பு,பச்சை,மஞ்சள் எனவும் அதற்கு ஒத்ததுபோலான வர்ணங்க ளைக் கலந்து கட்டிபூசிக்கொண்டிருந்தவீடுகள்இளந்தளிர்மரங்களின் பூத்து நின்ற மலர்களைப் போல்அழகாகவும்மிளிர்ந்துமாய் காட்சிப் பட்டதாய்/

வெறும் செங்கலும்சிமெண்டும்கொண்டதுமட்டுமா வீடு? குழைத்துப் பூசப்பட்டிருக்கிறசிமிண்டும்அடுக்கப்பட்டிருக்கிறகற்களும்மனிதஆன்மா வையும் எண்ண ங்களையுமல்லவா சுமந்து கொண்டிருக்கிறது.கட்டி முடிக்கபட்டவீடுகளுக்குள்மட்டுமல்ல,இழுத்துப்பூசப்பட்டிருக்கிறஅடர் வர்ணத்தின்துளிகளில் கூட வீட்டுச் சொந்தக்காரரின் உள்ளம் கலந்தி ருக்கிறதே ரத்தமும் சதையுமாக. என்பார் நண்பர் ஒருவர்.

அவர்கட்டியிருக்கிறவீட்டில்வீட்டைவிடசெடிகளும்மரங்களும்அடைத்
திருக்கும்பரப்புஅதிகமாய் அடைத்துக்காணப்படும்.சுற்றி அடைத்திரு க்கிறகாம்பவுண்ட்சுவரையும்மீறிகாணப்படுகிறஉயர்ந்துநின்றமரங்க ளின்பூக்களும்இலைகளும் அந்த வழியில் போவோரையும் வருவோ ரையும்சுண்டிஇழுப்பவையாய் இருக்கும்.கொஞ்சம்நின்று என்னை யும் எனதுஅழகையும் பார்த்துவிட்டுச் செல்லு ங்கள். எனது காற்றுப் பட்டாலே தங்களது உடலுக்கும் சுவாசத்திற்குமாய் நல்லதுஎன கை ய சைத்துகூப்பிடுவதுபோல்இருக்கிற அந்தச்சூழலில் இளம் காத லர்களோ அல்லது மனம் முதிர் தம்பதிகளோ நடை பயின்றால் எப்படி இருக்கும்? என யூகிக்கமுடிகிறது எனவும் காதலர்கள் ஒருவ ரின் அருகாமையில் ஒருவர்அமர்ந்துபேசிக்கொள்ளவும் தம்பதிகள் மிச்சமிருக்கிற உணர்வுகளையும் பிரியங்களையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்ளவுமாய் ஏதுவானஇடமாய்ஆகிப் போகிறதுதான் அது எனவுமாய் சிறப்பு செய்து கொள்ளுங்கள் பூரிப்புடனாய்,,,,, என்கிற அடைமொழிதாங்கிஅப்பொழுதுதான்அலுவலகத்திலிருந்துவந்தவன் வீட்டிற்குள்ளாய் போக மனமில்லாமல் அங்கேயே வீட்டு நடை மீது அமர்ந்து விடுகிறான்சிவப்புச்சாயம்தாங்கிய படிகள் மூன்றையும் ,வீட்டிற்கு எதிர்த்தாற் போல் விரிந்துகிடக்கிற வெற்று வெளியையும் வெறித்துப்பார்த்தவனாய்,,,,,,,,,,,/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வண்ணமான வர்ணனையான ரசனையை ரசித்தேன்...

yathavan64@gmail.com said...

வெளுக்காத "சாயம்"
வெகு சிறப்பு

த ம 2
நட்புடன்,
புதுவை வேலு

கரந்தை ஜெயக்குமார் said...

வண்ணமயமான ரசனை அருமை
தம +1

yathavan64@gmail.com said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி அவர்களே,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/