29 Apr 2015

இளமை இதோ,இதோ,,,,,

அதுதான்காதலா,சொல்லத்தெரியவில்லைசரியாக/முன்பின்காதலித்தறியா
அனுபவம்காதல்மயக்கத்தில்,சொற்ச்சிலம்பத்தில்பொய் பேசி அறியா தன்மை. மருந்துக்கும் கூட மனம் கட்டு ண்டு கிடக்காத நாட்கள் என இருந்து பழகி விட்டதில் காதலை ப்பற்றி ஒன்றும் தெரியாத ஜீரோவாக.

சரி தலைவரிடம் கேட்டு வைப்போம் இதைப்பற்றி,காதலின் மேன்மை பற்றி யும், புனிதம் பற்றி யுமாய் பேசுகிற,சொல்லிச்செல்கிற நல்ல உள்ளங்களில் தெரிவு பட்டுத் தெரிகிறவராய்/

எனக்கு நினைவு தெரிந்த நாளிருந்து அவர் அப்படித்தான் காட்சிப்பட்டு தெரிவ தாக உணர்கிறேன்நாங்கள்கூட்டமாகவோ அல்லதுநான்கைந்து பேரோ அமர்ந் து உரையாடிக் கொண்டிருக்கிற தனிமையில்அவர் அப்படித்தான் பதிவு செய் வார் அவரது இருப்பை/

காதலின்முதற்சொல்,,,,என ஆரம்பித்துநீளும்அவரதுஉரையில்நாங்கள் கொஞ் சம் அசிரத்தை காட்டினால் அவரது பேண்ட்டில் அவரது பெயரையும் அவரது காதலியின் பெயரையுமாய் எழுத ஆரம்பித்து விடுவார். அந்த அளவில்தான் எனக்கு காதலைப் பற்றித்தெரியுமே தவிர நேரடி அனுபவம் வாயக்கப்பெறாத அபாக்கியவானக நான்.

மாலை ஆறு அல்லது ஆறரையின் அந்திசாய்வில்நான்மற்றும் எனது சக்கடா இருசக்கரவாகனமுமாய்.அதன்மீதுநான்அமர்ந்துவருகிறேனாஅல்லதுஎன்மீது அதுஅமர்ந்து பயணிக்கிற தாஎனபிரித்தறிய முடியா தன்மையில்வந்து கொண் டிருந்தநான்மெயின்ரோடுதாண்டி உள்ளே வீதியில் நுழைகையில் உன் மீது என் பார்வை/

பாலக்காரரிடம்பால்வாங்கிக்கொண்டிருக்கிறாய்நீ.50 வயதின் மூப்பை உடம்பி ல் காட்டி/

சிவப்புக்கலரில் பெரிதுபெரிதாய்வெள்ளைப்பூக்கள் பூத்திருந்தசேலை.ஆரஞ்சு வர்ணத்தில் மேட்சாக சட்டை.நன்றாகவே இருக்கிறது,

அவைகளை விற்ற கடையும்,வாங்கிய இடமும் அப்பு அண்ணன் கடையாக இருந்த போதிலும் அதை நெய்த கைகள்,நூலெடுத்து,பாவு முக்கி பதம் பார்த்து மீட்டெடுத்துஉயிரூட்டியமனிதர்கள்எவர்,எங்கிருக்கிறார்கள் அவர்கள், அவர்க ளது நிலை என்ன? ஏது செய்ய அவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள், தொழில் கருகிப் போய் நிற்கிறஇந்நேரம்,,,,,,,?என்கிறகேள்வியும்,கிடைக்காதபதிலுமாய் உன்னை ஏறிட்ட வாறு நான் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அந்தி சற்றே சற்றே கண் அயர்ந்ததாயய் காட்சிப்பட்ட வேளை/

தன்னில்ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளையும்,பூச்சிகளையும், வண்டுகளை யும் இன்னமும் பிற,பிறஜீவராசிகளின்நடமாட்டத்தையும் தன்னில்தாங்கிபடர விட்டிருக்கிறதாய் இருந்த பூ மலர்கிற வேலையில் மண்விரிந்து சிரித்த முகம் கொள்ளா சிரிப்புடன் கைகோர்த்தவாறாய் வந்து கொண்டிருக்கிறேன்.

என்ன இது அந்தி சாய்கிற வேளையாய் செவியில் வந்து விழுகிற குயிலின் சப்தம். கூவிட்டு த்தான் போகட்டுமே?தன் குரலை சங்கீதமாய் வெளிப்படுத்த அதற்கு ஏது நேரம் காலம் ?நேரமற்று,காலமற்று ஓடோடித்திரிகிற உழைப்பின் மனிதர்களை தன்வயப்படுத்தி மனசாந்தி கொள்ளச்செய்கிற குரலாய்/

என் வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருந்த மரங்கள் வெட்டப்பட்ட பின்பு அது இருந்த இடம் இப்போது பசுமையை மாற்றி இருந்த வெற்றிடமாய்/ வேப்ப மர ங்கள் இரண்டு ,பன்னீர் மரங்கள் மூன்று என அவைகள் அனைத்திலுமாய் பாரபட்சமின்றிகூடுகட்டிகுடிகொண்டிருந்தபறவைகள்இப்போது,,,,?அவைகளில் ஒன்றுதான் இந்தக்குயில் சப்தம் என நினைக்கிறேன்.

வெறுமை பூத்த வெற்று வெளிகளிலில் இருக்கப்பிடிக்காமல் தன் ஒற்றைக் குரல் உயர்த்தி எதிரும், இசைவுமாய் தன் குரலை பதிவு செய்யும் எதிர்ப்பு அது. இப்போது ”ஐ வாண்ட் ட்ரீ”ஐ வாண்ட் ட்ரீ,,,,,,,,என இந்த வெளியெங்கிலும் இன்னும் இன்னமுமான பூமியின் பரப்பெங்கும் பரந்து திரிந்து ஓங்கி ஒலிக்கும் தன் குரலை பதிவு செய்த அந்தகுரல் வந்த திசை நோக்கி பார்வை கழட்டி அனுப்பி விட்டு பயணத்தை தொடர்கிறேன்பயணித்துசென்றபார்வைகுயிலை பார்த்து விட்டு வந்த பின்பாய்/

தொடர்ந்த பார்வை,மண்,மரத்தின் சுவடுகளற்ற வெற்றிடம் இவை எல்லாம் தாண்டி வீடுகள் முளைத்துகிடந்தவீதிகளில் நம் வீடுநோக்கி வருகையில் கண்ட காட்சிதான் என்னை இப்படியெல்லாமுமாய் பேசவும், கேட்கவுமாய் வைத்திருக்கிறது. இந்த 50 திலும்எப்படி இப்படி இளைமைபோர்த்தித்திரிகிறாய் என?

இளமைஉன் உடலிலா,மனதிலா,,,?அகத்தின்அழகு முகத்தில் தெரியும் என்றார் கள். தெரிந்து விட்டுப்போகடுமே,அதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இருந்து விட முடியாது. சிலரானால் அதில் அபிப்ராய பேதம் கொள்கிறார்கள். அகத்தின் அழகு அகத்திலும், முகத்தின் அழகு முகத்திலுமாய் தெரிவு பட்டுத் தெரிந்து விட்டுத்தான்போகட்டுமே,ஏன்இப்படிதோற்றப்பிழைகொள்ளச் செய்கி றீர்கள்,,,, என்கிற சொல் உதிர்ந்த சொல்லை மனம் கட்டி வந்து கொண்டிருந்த வேளை விழியில் பட்டுஇதயம் படர்ந்த நீ பாவித்தெரிகிற அந்தியிலும் அந்த 50 லும் இளமை போர்த்தித் தெரிகிறவளாய்/

6 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் யாதவன் நம்பி அவர்களே ,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. "இளமை உன் உடலிலா, மனதிலா,,,? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். தெரிந்து விட்டுப் போகட்டுமே, அதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இருந்து விட முடியாது." என அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete